PDA

View Full Version : திராவிடனின் (அறியாதவனின்) அறிமுகம்....திராவிடன்
16-03-2007, 12:28 AM
எனது இனிய புதிய தமிழ் நண்பர்களே.

நான் திராவிடன் என்னை உங்களுள் அறிமுகம் செய்து கொள்ள விழைகிறேன்.

நான் இத்தளத்தில் இனைந்து சில நாட்கள் கடந்து விட்டன.என்னால் இங்கு அறிமுகம் செய்து கொள்ள மனம் ஒப்பவில்லை.ஏனெனில் இங்கு பலவற்றில் நான் சுற்றித்திரிந்தேன் அழகிய தமிழ் மனம் கமழும் எழுத்துக்கள் தமிழ் பெயரை கொண்ட நண்பர்கள், கவிதைகள்,கவிஞர்கள்,புலவர்கள் இவையெல்லாம் பார்க்கும்பொழுது என்னால் இங்கு பங்கு கொள்ள தகுதியில்லையோ நான் தகுதியற்றவனோ என என்னுள் ஓர் அச்சம்...

என்னால் எழுத இயலாவிட்டாலும் எழுதியதை படித்து விட்டு அதற்க்கு பின்னூட்டம் எழுதலாமல்லவா அந்த நம்பிக்கையில்...

உங்களுடன் நானும் தூணாகவிடிலும் ஓர் துரும்பாக ஓர் ஓரத்தில் இருந்துவிட்டு போகிறேனே.நெற்கதிர்களோடு விளையும் புற்களாய் என்னையும் வளர்த்து விடுங்களேன் சிரமம் பாராமல்...

என்றும்

அன்புடன்


திராவிடன்...

ஆதவா
16-03-2007, 12:55 AM
வரவேற்புகள் திராவிடன்.. உங்களை நான் உலாவுவதைப் பார்த்திருக்கிறேன்...

தகுதி என்பது நாமாக வளர்த்திக்கொள்வது. தானாய் வாராது.. இன்றைய தேதிக்கு இங்கு இணைந்தவர்கள் தகுதியற்றவற்றவர்களாக இருந்து பல கற்று தகுதியுடையவர்களாக மாறிய பலர் உண்டு, நம் உள்ளத்தின் எழுத்துக்களை பலர் படிக்க பொறிக்கும் போதுதான் நம் தகுதியின் வெளிச்சம் அனலாக கக்க ஆரம்பிக்கும்.

கண்டிப்பாக ஏதாவது எழுதுங்கள்.. இது ஒரு பாடசாலை போலத்தான்..

உங்களை முதல் ஆளாக நின்று வரவேற்பதில் பெருமை அடைகிறேன்.

மீண்டும்.. வரவேற்புகள் :icon_clap:

ஓவியா
16-03-2007, 12:59 AM
காலை வணக்கம் திராவிடன்.

உங்களை இரு கரங்கூப்பி வரவேற்கிறேன். தங்கள் வரவு நல்வரவாகுக
(இதுதான் எங்கள் கொட்டுமுரசு) :music-smiley-008:

அழகிய தமிழில் அறிமுகம் மிகவும் அசத்தலாக இருகின்றது.:medium-smiley-029:


தமிழ் மன்றம் ஒரு அழகிய குடும்பம்.

நாங்கள் (நாம்) அனைவரும் தமிழ் தாயின் குழந்தைகள்.

இங்கு அனைவரும் சமமே கவலை வேண்டாம். ஜாலியா ஜமாய்க்கலாம்.

முதலில் முத்த பதிவாளர்களின் பதிவினை பார்வையிடுங்கள். முடிந்தால் அவசியம் பின்னூட்டம் இடுங்கள். பின் தங்களின் பதிவுகளை தாருங்கள். நாங்கள் (நாம்) விமர்சனம் எழுதுவோம்......

மன்ற விதிமுறைகளை படித்து அறிந்துக் கொள்ளுங்கள். அது மிகவும் அவசியமான ஒன்று. எதேனும் உதவி (பணமில்லை) வேண்டுமென்றால் கேளுங்கள். நண்பர்கள் உதவுவார்கள்

கவலை வேண்டாம் ................ஜாலியா தமிழை வாழ வைப்போம்.

திராவிடன்
16-03-2007, 01:30 AM
சகோதரர் ஆதவா மற்றும் சகோதரி ஓவியா இருவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.தங்களின் ஊக்கத்திற்காகவும் வரவேட்பிற்கும்.
தள நிர்வாகிகள் பனத்தைதானே இங்கு தந்துயிருக்கிறார்கள் (இலவசமாய்)தமிழர்களுக்காக..
இதைவிட வேறு என்ன வேண்டும்.

அறிஞர்
16-03-2007, 01:33 AM
வாருங்கள் திராவிடன்....
தங்களின் கருத்துக்களை துணிந்து கொடுங்கள்...
படைப்பாளிகளின் படைப்புக்களை மகிழ்ந்து படியுங்கள்.
பின்னூட்டம் இட்டு அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துங்கள்...

leomohan
16-03-2007, 08:13 AM
உங்கள் வரவு நல்வரவாகட்டும் திராவிடன். கவலை வேண்டாம், நாங்களெல்லாம் தத்தி தவழ்ந்து இந்த மன்றத்து உறுப்பினர்களின் அன்பாலும் ஊக்கத்தாலுமே எழுத்தாளர் என்று சொல்லித்திரியும் தைரியம் வந்துள்ளது.

வாருங்கள். படியுங்கள், எழுதுங்கள், மகிழுங்கள்.

poo
16-03-2007, 08:26 AM
வரவேற்கிறோம் நண்பரே...

இங்கு வந்துவிட்டீர்கள் அல்லவா.. இனி நீங்கள் பேசப்படுவீர்கள் பெரிய அளவில்!

அமரன்
16-03-2007, 10:06 AM
வணக்கம் திராவிடன். நீங்கள் மன்றத்தில் உலா வருவதை பார்த்திருக்கின்றேன். திராவிடன் என்ற அருமையான பெயருள்ள இவர் ஏன் தன்னை அறிமுகம் செய்யவில்லை என்று எண்ணியிருக்கின்றேன். இப்போதுதான் காரணம் புரிகின்றது. உங்கள் அறிமுகமே இவ்வளவு தரமானதாக இருக்கின்றது. உங்களால் எழுத முடியாதா. முடியும். வாருங்கள் எழுதுங்கள்.

மன்மதன்
16-03-2007, 05:54 PM
அச்சம் தவிர் என்று சும்மாவா சொன்னாங்க.. நன்றாக எழுதுகிறீர்கள்.. மன்றத்தில் உங்கள் பதிவுகள் அவசியம் திராவிடன்.. அன்பு வரவேற்புகள்..

மனோஜ்
16-03-2007, 07:44 PM
வருக வருக
திராவிடன் அச்சம் கொள்ளார்கள் நீங்களும் தான்
பதியூங்கள் உங்கள் பதிப்புகளை வாழ்த்துக்கள்:music-smiley-010:

இளசு
16-03-2007, 10:13 PM
வாருங்கள் திராவிடன்..

நான்கு ஆண்டுகளுக்கு முன் உங்கள் மனநிலையிலேயே நானும் இருந்தேன்..

மன்றம் வந்தேன்.. தமிழ் வந்தது..தமிழ் நண்பர்கள் வந்தனர்..

நீந்தும் நேரம் வந்தால் உடல் நீச்சல் அங்கே வரும் ..

மன்றம் உலா வந்தால், நல்ல தமிழ் நம்மில் வரும்..


அன்போடு வரவேற்கிறேன்.. தயங்காமல் பதிவுகள் தாருங்கள்..
வாழ்த்துகள்!

ஓவியன்
17-03-2007, 09:47 AM
ஆதவனின் கூற்றுப்படி உங்களது தகுதியினை மெருகேற்றிக் கொள்ள இத்தளம் ஒரு சரியான இடமாக அமையும் என்று உங்களை அன்புடன் வரவேற்கின்றேன்!!!

pradeepkt
17-03-2007, 04:34 PM
தகுதியாவது???
என்ன ஐயா சொல்கிறீர்? இங்கே அன்பும் தமிழும் மட்டுமே பிரதானம்.
வரவேற்புகள்...

மயூ
18-03-2007, 04:02 AM
வாங்க நண்பரே!!!
உங்கள் அச்சம் தேவையற்றது...

விகடன்
24-03-2007, 05:21 PM
அழகிய தமிழ் மனம் கமழும் எழுத்துக்கள் தமிழ் பெயரை கொண்ட நண்பர்கள், கவிதைகள்,கவிஞர்கள்,புலவர்கள் இவையெல்லாம் பார்க்கும்பொழுது என்னால் இங்கு பங்கு கொள்ள தகுதியில்லையோ நான் தகுதியற்றவனோ என என்னுள் ஓர் அச்சம்...உங்களை மாதிரி எண்ணியிருந்தால் இந்தப்பக்கம் தலை வச்சுக்கூட நான் பார்த்திருக்கக்கூடது.

படைப்புக்களை உருவாக்கத்தான் தெரியாவிட்டாலும் ஊக்குவிக்க முடியும் என்ற நம்பிக்கையில் நானே வந்திருக்கும்போது உங்களுக்கென்ன.

ம்ம்ம்...
முயற்சியுங்கள். எனது ஊக்குவிப்பு உங்களுக்கும் உண்டு.....

திராவிடன்
30-03-2007, 12:56 AM
உங்களை மாதிரி எண்ணியிருந்தால் இந்தப்பக்கம் தலை வச்சுக்கூட நான் பார்த்திருக்கக்கூடது.

படைப்புக்களை உருவாக்கத்தான் தெரியாவிட்டாலும் ஊக்குவிக்க முடியும் என்ற நம்பிக்கையில் நானே வந்திருக்கும்போது உங்களுக்கென்ன.

ம்ம்ம்...
முயற்சியுங்கள். எனது ஊக்குவிப்பு உங்களுக்கும் உண்டு.....

தங்களைப் போன்றவர்களின் ஊக்குவிப்பே என்னை போன்றவர்களுக்கு ஊக்கமருந்தாய் இருக்கும்.தங்களுக்கும் மற்ற அனைத்து நன்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

பிச்சி
05-04-2007, 10:12 AM
வரவேற்புகள் ! உங்கள் வரவு நல்வரவாகட்டும்