PDA

View Full Version : இடையினக் காதல்!!..



poo
15-03-2007, 11:06 AM
உன் வீதி
என் நிலா
உள் நுழைகையிலே
ஆறிலொன்றாகிறேன்.. போதுமெனக்கு
இன்னொரு உலகுக்குள்
இழுபட்டுக் கொண்டிருக்குமென்னை
அறிந்துகொள்ள அதுமட்டில்
போதுமெனக்கு..
அறிவித்துக்கொள்ள..?

எல்லை தொலைத்து
பயணிக்கத் துணிந்தயென்
எண்ணப் பறவைகளை
எப்படிச் சிறைப்படுத்த நான்..?

ஊற்றெடுக்குமென்
உள்மன விருப்பங்களை
உள்ளிழுத்துக் கொள்ளென
உனையழைக்க உள்வருகிறேன்..
ஆறறிவு உயிரான யென்
அடையாளமிழந்து
அவமானத்தால் வெளியேறுகிறேன்..

மலரும் வண்டும்
பேசும்போதெல்லாம்
மொழி இழந்துவிடுகிறேன்..
தொடர்ந்தெழும் மௌனமோ
தன் வலுவிழந்தழுகிறது -
என் நிஜத்தின் முன் நிழலிருப்பதால்....

ஆதவா
15-03-2007, 12:14 PM
ம்ஹீம்..... புரியவில்லை பூ அவர்களே!! விளக்குங்கள் தயவு கூர்ந்து..

poo
16-03-2007, 08:16 AM
ஓர் அரவாணிக்குள் காதல் உணர்வுகள்!

- இப்போது படித்துப் பாருங்கள் ஆதவன்.

(விளக்கம் சொல்லுமளவு இதில் பீடிகையிருக்கிறதா என்ன?!..)

(பொதுவாகவே நான் கவிதைகளை வேகமாக எழுதி முடித்துவிடுவேன்.. ஆனால் தலைப்பு வைக்கத்தான் பெரிதும் தவிக்கிறேன்.. அப்படி தவித்து வைக்கும் தலைப்புகளால் சில நேரம் கவிதையே வேறுமாதிரி அர்த்தப்படுத்திக் கொள்ள வாய்ப்பாக அமைந்துவிடுகிறது.. எப்படி சரிசெய்வது இதையென தெரியவில்லை.)

ஷீ-நிசி
16-03-2007, 09:09 AM
தலைப்பு வைக்கத் தெரியவில்லை என்று சொல்கிறீர்கள்.. ஆனால் 'இடையினக் காதல்' தலைப்பு மிக பிரமாதமாயிருக்கிறது பூ..

poo
16-03-2007, 09:14 AM
நன்றி ஷீ-நிசி..

கவிதையைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லையே?!..
பொதுவாக அரவாணிகளை நம்மவர்கள் காமத்தில் மட்டுமே துணைக்கழைப்பர்.. அவர்களுக்குள் காதல் வராதா என யோசித்தேன்..மனிதராய் எங்கே மதிக்கிறோம்..பின் மனதினை அறிய?!!..

அந்த வீதியிலிருப்பவர் ஆணாக இருக்கலாம்..பெண்ணாக இருக்கலாம்..எப்படியாகினும் பொருந்துமல்லவா?.

ஷீ-நிசி
16-03-2007, 09:20 AM
நன்றி ஷீ-நிசி..

கவிதையைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லையே?!..
பொதுவாக அரவாணிகளை நம்மவர்கள் காமத்தில் மட்டுமே துணைக்கழைப்பர்.. அவர்களுக்குள் காதல் வராதா என யோசித்தேன்..மனிதராய் எங்கே மதிக்கிறோம்..பின் மனதினை அறிய?!!..

அந்த வீதியிலிருப்பவர் ஆணாக இருக்கலாம்..பெண்ணாக இருக்கலாம்..எப்படியாகினும் பொருந்துமல்லவா?.

அரவாணிகளின் மனதிற்குள் அமர்ந்து எழுதியதுபோல் உள்ளது கவிதை...


ஊற்றெடுக்குமென்
உள்மன விருப்பங்களை
உள்ளிழுத்துக் கொள்ளென
உனையழைக்க உள்வருகிறேன்..
ஆறறிவு உயிரான யென்
அடையாளமிழந்து
அவமானத்தால் வெளியேறுகிறேன்..

அதிலும் இந்த வரிகள்... அவர்களின் வேதனையை நன்றாகவே பறைசாற்றுகிறது....

நன்றாக புரிந்துகொள்ள பலமுறை படிக்கவேண்டும்.. ஒருமுறை மட்டும் படித்துவிட்டு சென்றால் பல கவிதைகளின் உன்னதம் அறியாமலே போய்விடும்.. அப்படிப்பட்ட கவிதைகளில் இதுவும் ஒன்று...

ஆதவா
16-03-2007, 09:22 AM
நன்றி பூ அவர்களே! வித்தியாசமான சிந்தனை..

எனக்கு புரிவதில் மட்டும் கொஞ்சம் சிரமமாக இருந்துவிட்டது.. ஒருவேளை நீங்கள் சொன்னமாதிரி தலைப்பு மட்டும் புரியுமளவிற்கு (அதாவது எனக்கு) வைத்திருந்தால் போதுமானதே!

ஒரு அரவாணியின் உணர்வுகளை படம் பிடித்து கவிதையாக படிக்கிறேன். இங்கே ஏற்கனவே சில அரவாணி கவிதைகள் உலவுவதைக் கண்டிருக்கிறேன் என்றாலும் உங்களுடையது சற்று வித்தியாசமாகத் தான் இருக்கிறது. ஆனால் எந்த கோணத்திலும் என்னால் யோசிக்கமுடியாமல் போனது உண்மை.. நீங்கள் நம்ப மாட்டீர்கள். இந்த கவிதையை கிட்டத்தட்ட ஐம்பது தடவைக்கும் மேல் படித்துவிட்டேன். எனக்கு இன்னும் பண்பட்ட பக்குவம் வேண்டுமென நினைக்கிறேன்.

அதிலும் உங்கள் கவிதையில் நான் தெரிந்து கொள்ளவேண்டியது நிறைய இருக்கிறது. சாதாரணக் கவிஞனான (?) எனக்கு இந்த கவி அசாதாரணம் தான். நான் சற்றே முயன்று எழுதிய கவிதை (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8211) ஒன்று படித்துப் பாருங்களேன்.. உங்கள் அளவு இல்லை என்றாலும் ஏதோ!!!!...

இளசு
16-03-2007, 10:33 PM
இடையினக் காதல்..

இதைவிட பொருத்தமான தலைப்பு வேறென்ன வைத்துவிட முடியும் பூ?

ஒடுக்கப்பட்டவர்கள்..ஒதுக்கப்பட்டவர்களின் குரலை
ஓங்கி கவிதையாய் உணர்ச்சிகரமாய் வடிக்க
உன்னிடம் கற்கவேண்டும் நான்..

ஆண், பெண் என்ற இருகரைகளின் நடுவே விழுந்து
வாழ்க்கை நதியில் மிதந்து , நதி வழி ஓடும் இலைகளை
இந்தப்பார்வையில் வடித்த விதத்துக்குப் பாராட்டுகள்..!

poo
21-03-2007, 05:34 AM
அண்ணா.. நீங்கள் சொல்லாமல் சொல்லிக் கொடுக்கிறீர்கள் நிறைய எனக்கு..

இன்னும் நிறைய எழுத உங்கள் அனைவரின் ஊக்கமும் என்றும் இருக்குமென்ற நம்பிக்கையே என்னை மயங்கவைக்கிறது.

ஓவியா
21-03-2007, 01:47 PM
பூ தங்களுடைய அனைத்து கவிதைகளிலும் அழகான கருக்கள் பொதிந்துல்லன். கவிதை மிகவும் நன்று.

பாராட்டுக்கள்

அறிஞர்
21-03-2007, 03:27 PM
மனிதராய் பிறந்த அனைவருக்கும் உணர்வுகள் உண்டு...
காதல் உணர்வுகளும் தான்.

பூவின் வரிகள்...
அரவாணிகளின் உள்ளுணர்வுகளுக்கு
உயிர் கொடுக்கிறது...

poo
22-03-2007, 04:36 AM
நன்றி அறிஞரே....

நன்றி ஓவியா...