PDA

View Full Version : சலிப்பு..



rambal
05-05-2003, 12:00 PM
சலிப்பு..

கடிகார முள்ளோடு
வாள் சண்டை
போட்டு சலித்து...

நீண்டு..
சுருங்கி
நீண்டு..
பின் மறைந்து
போன நிழல்
காணச் சகியாமல்..

புரட்டி புரட்டியே
புத்தகங்களின்
பக்கங்களுக்கும்
வலி வந்து
என் ரேகை கூட
கொஞ்சம் தேய்ந்து..

எலி பிடித்து
வலையில்
விளையாடி
ஓய்ந்து..

வண்ணங்கள்
குழைத்து
காகிதங்களில் வாரி
இறைத்து...

போதும்..
இவைகளெல்லாம்
என்று
சலித்துப் போய்..

பொழுதை
வெட்டியாக
போக்கவேண்டுமென்று
உன்னை விளையாட்டாய்
காதலிக்கப் போய்...

தூக்கம் போய்...
கண்களில் கனவுகள்
குடியேறி..
வானத்திற்கு
வீடு மாற்றி..
வீட்டிற்கு
வெள்ளை அடிக்க
சுண்ணாம்பு
தேடி சலித்துப் போய்...

poo
05-05-2003, 12:40 PM
சலிப்பைக்கூட நளினமாய் சொல்லிய ராம்... அருமை..

Narathar
06-05-2003, 05:22 AM
ம்ம்ம்
இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கின்றதோ..........?
நல்ல ஒரு கவிதை!!