PDA

View Full Version : கொடி கண்டேன்



ஆதவா
14-03-2007, 07:36 PM
எனக்கு சின்ன வயதில் :) பா வகையில் கவிதை எழுதவேண்டும் என்ற துடிப்பு இருந்தது.. அன்றியும் எழுதினேன்.. ஆனால் அவை எந்த பாவகையிலும் சேரவில்லை. அதனால் ஒரு முடிவெடுத்து இலக்கண புத்தகத்தை கையில் வைத்து அழித்து அழித்து வார்த்தைகளை இட்டு ரொம்ப கஸ்டப்பட்டு ஒரு மணிநேரம் கழித்து எழுதிய பா இது... (என் பழைய கவிதை... இப்போது எழுதப்பட்டதல்ல.)

இது அறுசீர்கழிநெடிலடியாசிரியப்பா விருத்தம் (யாரும் அடிக்க வராதீங்கோ:D )

கொடி கண்டனை கொடியவளே!
......கோடி இன்பங் கொண்டவளே!
கொடி கொண்டா தாலாட்ட
......கோதும் என்முடி விடுத்துக்கேள்
கொடியெனக் கண்டதவ் விடத்தே
......நின்றன்கோ லங்கள் கண்டனன்
கொடியு மாங்கேகோ லமிடுமோ
......எனக்கண்டு தவித்தேனே கொடியவளே!

அர்த்தம் எளிதுதான்.. ஆனால் கண்டுபிடியுங்கோ!!! :D :D :D


(ஆசிரியப்பாவில் ஏதேனும் தவறு இருந்தால் மன்னிக்க... இருக்க வாய்ப்பில்லை. இருப்பினும்... )

இளசு
14-03-2007, 09:28 PM
பாராட்டுகள் பா-வலர் ஆதவாவுக்கு..

கொடி- அவள்
கொடியவள்
கொடி செய்யா செயல்கள்-
கோதுவது, கோலமிடுவது செய்பவள்..
அவளுக்காக ஆதவா படைத்த
அறுசீர் கழிநெடிலடி ஆசிரியப்பா..
அளவில் சரியப்பா..
எழுதிய வயதை எண்ணினால்
ஆசிரியரின் அறிவு பெரிதப்பா..

leomohan
15-03-2007, 08:52 PM
பலே நன்றாக இருக்கிறது ஆதவா. நான் தமிழ் இலக்கணம் கற்றவனில்லை. கற்க மிகவும் ஆர்வம். ஒரு தமிழ் தளத்தில் ஒரிரு வெண்பா எழுத முயன்றேன். அவர்களும் தயவு கூர்ந்து திருத்தி தந்தார்கள்.

இளசு மனம் வைத்தால் இங்கும் புதியவர்கள் எழுதி மூத்தவர்கள் திருத்தி எம்போன்றவர்களும் இலக்கணத்துடன் பா எழுத கற்கலாம்.

அறிஞர்
15-03-2007, 09:06 PM
அருமை ஆதவா...
கொடியவளை பற்றிய... பா..

பல பாவலர்கள் இணைந்து எழுதினால் நானும் படித்து மகிழ்வேன்...

இளசு
15-03-2007, 11:01 PM
இளசு மனம் வைத்தால் இங்கும் புதியவர்கள் எழுதி மூத்தவர்கள் திருத்தி எம்போன்றவர்களும் இலக்கணத்துடன் பா எழுத கற்கலாம்.

என்ன இப்படி சொல்லிட்டீங்க மோகன்..
நீங்கள் எல்லாம் மனது வைத்தால் போதும்..
என் ஊக்கம் எப்போதும் இருக்கும்..




. நான் தமிழ் இலக்கணம் கற்றவனில்லை. .

நானும்தான்.. திருத்த நமக்கு நாமே உதவலாம்..

ஆதவா, கவிதா போன்றவர்கள் இதில் மேற்பார்வை செய்யத் தக்கவர்கள்..

ஷீ-நிசி
16-03-2007, 04:28 AM
இலக்கணக்கவிதை நன்றாக இருக்கிறது ஆதவா!

poo
16-03-2007, 05:54 AM
முயற்சியுடையார்...

மேலும் மேலும் வெற்றிபெற வாழ்த்துகிறேன் ஆதவன்!!

leomohan
16-03-2007, 08:20 AM
என்ன இப்படி சொல்லிட்டீங்க மோகன்..
நீங்கள் எல்லாம் மனது வைத்தால் போதும்..
என் ஊக்கம் எப்போதும் இருக்கும்..





நானும்தான்.. திருத்த நமக்கு நாமே உதவலாம்..

ஆதவா, கவிதா போன்றவர்கள் இதில் மேற்பார்வை செய்யத் தக்கவர்கள்..

நன்றி இளசு. வாங்க கவிதா, ஆதவா, வெண்பா கற்போம் திரியை ஆரம்பிக்கலாம்.

poo
16-03-2007, 08:22 AM
முன்பே ஒருமுறை கவிதா இதுபோன்றதொரு திரியை ஆரம்பித்த ஞாபகம்!?

raj6272
16-03-2007, 08:44 AM
கொடியெனக் கண்டதவ் விடத்தே
......நின்றன்கோ லங்கள் கண்டனன்
கொடியு மாங்கேகோ லமிடுமோ
......எனக்கண்டு தவித்தேனே கொடியவளே!


இந்த இரண்டு வரிகள் உங்கள் புலமையை பறை சாற்றுகின்றன. இன்னும் படைக்க வாழ்த்துக்கள்

இளசு
17-03-2007, 12:47 AM
முன்பே ஒருமுறை கவிதா இதுபோன்றதொரு திரியை ஆரம்பித்த ஞாபகம்!?

ஆமாம் பூ..

திஸ்கி மன்றத்தில் உள்ளது.

(இன்று திஸ்கி படிக்க முடியவில்லை..

விரைவில் தேடி இங்கே தருகிறேன்..)

ஆதவா
19-03-2007, 05:29 PM
அனைவருக்கும் நன்றி. விரைவில் இன்னுமொரு பா' வோடு சந்திக்கிறேன்.

ஓவியா
11-04-2007, 12:30 AM
கொடி கண்டனை கொடியவளே!
......கோடி இன்பங் கொண்டவளே!
கொடி கொண்டா தாலாட்ட
......கோதும் என்முடி விடுத்துக்கேள்
கொடியெனக் கண்டதவ் விடத்தே
......நின்றன்கோ லங்கள் கண்டனன்
கொடியு மாங்கேகோ லமிடுமோ
......எனக்கண்டு தவித்தேனே கொடியவளே!


கொடியிடையாளின் அருமை ஆதவரின் புலம்பல்.

புலவராக வாய்ப்புகள் மிக பிரகாசமாக இருகின்றது ஆதவா.

புலவருக்கு வாழ்த்துக்கள்.