PDA

View Full Version : ப்ளூடூத் பிரச்சினை....



ஷீ-நிசி
14-03-2007, 11:13 AM
நண்பர்களே!

ஆங்கில வார்த்தைகளுக்காக மன்னிக்கவும்

நான் i-mate sp3 செல்பேசி உபயோகிக்கிறேன்.. என்னுடைய ப்ளுடூத் toggle IVT BlueSoleil..
என் பிரச்சினையை படங்களுடன் விளக்கியுள்ளேன்.. என்னுடைய செல்பேசியை detect செய்கிறது pairing பன்ன முடிகிறது.. ஆனால் கோப்பை trasnsfer செய்யமுடியவில்லை.

படம் 1: என் செல்பேசி காணமுடிகிறது.. வசதிகள் இரண்டுமட்டுமே enable ஆக உள்ளது.. (மஞ்சள் நிறத்தில் கட்டம் கட்டப்பட்டு) மற்ற வசதிகள் enable ஆகவில்லை.. அதில் ஒன்று file transfer service.. இதுவும் enable ஆகவில்லை.

http://i128.photobucket.com/albums/p163/shenisi/BluetoothProblem.jpg

படம் 2: நான் ஏதாவது கோப்பை bluetoothu வழியாக அனுப்ப முயற்சித்தால் என்னுடைய செல்பேசியை detect செய்ய முடியவில்லை..

http://i128.photobucket.com/albums/p163/shenisi/BluetoothProblem1.jpg

உதவுங்கள் நண்பர்களே.......

அறிஞர்
14-03-2007, 12:47 PM
ப்ளூ டூத்தை பேச, கேட்க மாத்திரமே உபயோகித்து இருக்கிறேன்.

பாக்கெட் பிஸியில் எனக்கு கோப்பை மாற்றுவதில் எந்த பிரச்சனையும் இருந்தது இல்லை.

இது பற்றி பாரதி, ஆதவா, மோகன், சுபன் பதில் சொல்லுவார்கள் என எதிர்பார்க்கிறேன்.

பாரதி
15-03-2007, 02:54 PM
அன்பு நண்பரே,

நீங்கள் கூறியதில் இருந்து

1. உங்கள் கைபேசியில் புளுடூத் வழிகள் சரியாக தேர்வு செய்யப்பட வில்லையோ என்று எண்ணுகிறேன். கைபேசியில் உள்ள புளுடூத் மேனேஜரில் - Accessability - ல், பிற கருவிகளை இணைப்பதற்காக உள்ள வாய்ப்பு தேர்வு செய்யப்பட்டு இருக்கிறதா என்பதை உறுதி செய்யுங்கள். அதிலேயே பிற சாதனங்கள் கைபேசி கண்டுபிடிக்கட்டும் என்பதற்கான வாய்ப்பும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறதா என்பதையும் உறுதி செய்து கொள்ளுங்கள். (நான் ஐமேட் -பிடிஏ2 அடிப்படையில் இதை கூறுகிறேன்.)

2. ஐவிடியில், மை சர்வீஸஸ் - ப்ராபர்ட்டீஸ் - ஃபைல் ட்ரான்ஸ்ஃபர் - ல், உள்ள வாய்ப்புகளில் சரியானவை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறதா என்பதையும் உறுதி செய்யுங்கள். ஷேர் பெர்மிஸனில் - ரீட் அண்ட் ரைட் - எனபது தேர்வாகியிருக்கிறதா என்பதையும் கவனியுங்கள்.
3.நீங்கள் அனுப்ப வேண்டிய கோப்பை சரியான ஷேர் ஃபோல்டரில் இடுகிறீர்களா என்பதையும் கவனியுங்கள்.

உங்கள் பதிவைக் கண்ட பிறகுதான் இதை சோதித்தேன். எந்த பிரச்சினைகளும் இன்றி கோப்புகளை பரிமாற்றம் செய்ய முடிகிறது.

மனோஜ்
17-03-2007, 09:01 AM
உங்கள் கைபேசியில் தான் பிரச்சனை ஷீ நிசி
கைபேசியில் உள்ள ப்ளுடூத்தேர்வுகளை சரி பார்க்கவும்

விகடன்
19-03-2007, 02:18 PM
நீங்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தலையை பிய்த்துக்கொள்ளத்தான் உங்கள் மனந்தூண்டும்.

ஆனால் இதை வெறுமனே ஒரே பந்தியில் கூறி தீர்வுகாண முடியாது. கணிணியின் முன்னே இருந்து செய்தால்த்தான் சரியாக செய்ய முடியும். சில முடிவுகள் நேரில் பார்க்கும்போதுதான் சரியாக எடுக்க முடியும்.

தங்களின் விளக்கம் எனக்கு முழுமையான தெளிவைத் தரவில்லை. இன்னொரு தடவை இன்றிரவு மீண்டும் வாசித்துப் பார்க்கிறேன். ஏதாவது சிறந்த யுத்தி தோன்றினால் கட்டாயம் அறியத்தருவேன்.

அன்புரசிகன்
20-03-2007, 11:40 AM
உங்கள் கையடக்கதொலைபேசியில் paired devices பகுதியில் உங்கள் கணணியின் பெயர் உள்ளதா என சரிபார்த்துவிடுங்கள்.

மீண்டும் பிரச்சனை என்றால் உங்கள் கையடக்க தொலைபேசியில் இருந்து உங்கள் கணணிக்கு அழைப்பை மேற்கொண்டு இணைப்பை மேற்கொள்ளுங்கள்.

நினைவில் வைத்திருங்கள். சில கையடக்க தொலைபேசிகள் அந்தந்த கோப்புக்கான வகைகளை அறிந்துகொள்ள முடியாவிட்டால் (unknown file format) அனுப்ப விடாது.

ஆனால் உங்கள் பிரச்சனை கணணி தேடும்போதே கையடக்க தொலைபேசியை கண்டுகொள்ளவில்லை என்பதால் உங்கள் கணணி மற்றும் கையடக்க தொலைபேசியை சரிபார்த்துவிடுங்கள்.