PDA

View Full Version : நானும் ஒரு கதைச்சொல்லி 2 - நான் கண்ட கடவுள்க&பரஞ்சோதி
14-03-2007, 10:01 AM
நானும் ஒரு கதைச்சொல்லி (2) - நான் கண்ட கடவுள்கள்

நானும், தம்பியும் சென்னையில் பிறந்தோம், எனக்கு 2 வயது இருக்கும் போது அப்பா எங்களை ஹைதராபாத் அழைத்துச் சென்று அங்கே கடலை மிட்டாய் தயாரித்து, விற்பனை செய்யும் தொழில் தொடங்கினார்கள். 1978ல் ஹைதராபாத்தில் வைத்து ஒரு விபத்தில் அப்பா மரணம் அடைந்த போது எனக்கு வயது 5 இருக்கும், அப்பாவின் பிணத்தை வீட்டில் வைத்து எல்லோரும் அழ, நானும் தம்பியும் இனிவரும் விபரீதங்கள் தெரியாமல் நண்பர்களோடு விளையாடிக் கொண்டிருந்தோம்.

கடவுளே எங்களை கைவிட்ட பின்னர் அங்கே எங்களுக்கு கடவுளுக்கும் மேலாக உதவ ஒருவரைத் தவிர யாரும் இல்லை, அந்த ஒருவர் தான் மொகமது மைதீன், ஹைரதாபாத்தை சேர்ந்தவர், அவரும் சின்னப்பையன் மாதிரி தான், எங்க அப்பாவுக்கு வலதுக்கரம், நாங்க மைதீன் மாமா, மாமா என்று அன்போடு அழைப்போம். அவர் வீட்டில் தான் தங்கியிருந்தோம், சாப்பாடும் போட்டார்.

அவர் தான் எங்களுக்கு எல்லாவிதமான உதவிகளையும் செய்தார், அப்பாவுக்கு பணம் தரவேண்டியவர்கள் எல்லாம் எங்களை கடனாளியாக்கி விட்டார்கள். அம்மாவுக்கோ எழுத படிக்கத் தெரியாது, வெளியுலகம் தெரியாது.

அந்த நிலையில் மலேசியாவில் இருக்கும் எங்க பெரியப்பா தான் கடவுள் மாதிரி எங்களுக்கு உதவ முன் வந்தார்கள், எங்களை எங்க கிராமத்திற்கே வரச் சொன்னார்கள். எப்படி ஊருக்கு செல்வது என்று புரியாமல் இருந்த போது, நாங்க தங்கியிருந்த இடத்தை மிகவும் கஷ்டப்பட்டு கண்டுபிடித்து, எங்களை ஊருக்கு அழைத்த வந்தவர் எங்க தூத்துக்குடி மாமா இராமசாமி. பெயரை போலவே அவர் இன்றும் எங்களுக்கு சாமி தான்.

மைதீன் மாமா அப்பாவின் தொழிலை தொடர்ந்து நடத்திய அவருக்கே எல்லா பொருட்களையும் அம்மா கொடுத்திட்டாங்க.

மலேசியா பெரியப்பா, நாங்க தங்குவதற்கு அவரது வீட்டையும், சாப்பாட்டுக்கு அவரது தோட்டத்திலிருந்து கிடைக்கும் நெல்லையும் கொடுத்தார்கள், மாதா மாதம் செலவுக்கு பணமும் அனுப்பி வைத்தார்கள்.

எனக்கு சுத்தமாக தமிழ் பேசவே தெரியாது, அப்பாவை நைனா என்றே அழைப்பேன், அம்மா என்ற ஒரு வார்த்தையை தான் தமிழிலில் பேசுவேன். என் தம்பிக்கு தமிழ் அத்துப்படி. இந்நிலையில் தூத்துக்குடி வந்த இறங்கினோம், அங்கே எங்க அத்தை (அப்பாவின் தங்கை) எங்களை பார்த்து கண்ணீர் விட்டு அழுது, எங்களை கண்மணி போல் பார்த்துக் கொண்டார்.

இரண்டு வாரங்களுக்கு பின்னர் எங்க கிராமத்து வீட்டில் விட்டு விட்டு தூத்துக்குடி செல்ல இருந்த அத்தையை நான் போக விடாமல் காலை கட்டிபிடித்து அழ, அத்தை சொன்னார்கள் நான் மட்டும் அத்தை அல்ல, உனக்கு இங்கே நிறைய அத்தைகள் இருக்காங்க, எனவே அழாதே என்று சொல்லி, எங்க தெருவில் இருந்தவர்களை எனக்கு அத்தைகளாக்கி சென்றார்கள். இன்றும் கூட நானும் என் தம்பியும் எங்க தெருவில் வசிக்கும் அனைவரையும் அத்தை, மாமா என்ற உறவு சொல்லி தான் அழைத்து வருகிறோம். அவர்களும் எங்களை சொந்த மருமகன்கள் போல் பார்த்துக் கொள்வார்கள்.

எங்க வெள்ளத்தாய் ஆச்சிக்கு கண் தெரியாது, எங்க மீது ரொம்ப பாசம் உண்டு. அந்த பாசமே எங்களுக்கு அம்மாவிடம் பலமுறை அடி வாங்கி கொடுத்திருக்கிறது. அடிவாங்கி கொடுப்பவரும் அவரே! சில சமயம் அவர் பின்னால் ஒளிந்து கொண்டு, நான் அடிவாங்காமல் நைசாக தப்பிக்க அடி வாங்குபவரும் அவரே!, பின்னர் சப்தம் போட்டு ஊரையே கூப்பிட்டு எங்களை காப்பாற்றுபவரும் அவரே!.

ஊர் பெரிய மனிதர்களுக்கு (??) அடங்காத, குடும்பத்தில் இருப்பவர்களுக்கு பிடிக்காத பிள்ளையாக இருந்த என் அப்பாவின் பிள்ளைகளான எங்களையும் அதே போல் நினைத்து நடத்தியவர்கள் பலர். எங்க அம்மாவிடம் பார்க்கிறவர்கள் எல்லாம் சொல்வது உன் புருஷன் மாதிரி உன் பிள்ளைகள் கெட்டு போகாமல் பார்த்துக் கொள், இப்படி தினம் தினம் மனதைக் கொல்லும் படியான வார்த்தைகளை எங்க அம்மா கேட்பார்கள். அன்று எல்லாம் எங்களுக்கு ஒன்று அடி கிடைக்கும் அல்லது நல்ல நல்ல கதைகள் கிடைக்கும். அதிலும் என் தம்பி என் அப்பாவை போல் உரிச்சி வைத்திருப்பதால் அதிக விமர்சனம் அவன் மேல் தான் வரும், ஒவ்வொரு செய்கையும், பேச்சும் அப்பாவையே போல் இருக்கும். அப்படி ஒரு இமேஜ் அவன் மேல் விழ, இன்றும் அதனால் பாதிக்கப்டுகிறான், பாவம்.

வீட்டில் நான் அம்மாவுடன் தெலுங்கில் தான் பேசுவேன், அதை எல்லோரும் கிண்டல் செய்வாங்க, வெளியே யார் வீட்டுக்காவது போனால், உட்கார்ந்த இடத்தை விட்டு அசையக்கூடாது, சாப்பிட ஏதாவது கொடுத்தால் ஒரு முறை தான் எடுக்கணும், அடுத்தவர் வீட்டு பொருட்களை தொடக்கூடாது இப்படியான ரகசியக்கட்டளைகளை தெலுங்கில் அம்மா சொல்ல, நான் கடைப்பிடிப்பேன். என் தம்பிக்கு மட்டும் விதிவிலக்கு உண்டு ???

கருப்பட்டியின் சுவை பிடிக்காததால் காப்பியை குடிக்க மறுக்க, அதுவே எனக்கு ஒரு நல்ல இமேஜ் உருவாக்கி கொடுத்து விட்டது, அந்த இமேஜை காப்பாற்றவே காப்பி, டீ, பால் குடிப்பதை நிறுத்திட்டேன் :). தமிழிலில் பேசத் தெரியாமல் அமைதியாக மற்றவர்கள் பேசுவதை கூர்ந்து கவனித்ததால் என்னை பெரிய அறிவாளி போல் நினைத்து ரொம்ப நல்லவன் என்ற இமேஜ் உருவாக்கிட்டாங்க, அதனால இப்போ கூட பல இடங்களில் அடக்கி வாசிக்க வேண்டியிருக்குது :) .

தமிழ் பாசை புரியாமல் தெலுங்கில் அம்மாவிடம் பேசுவதை எங்க உறவினர்கள் எல்லோரும் கிண்டல் செய்த காலத்தில் என்னை ஊக்கப்படுத்தியவர் ஒருவர் மட்டுமே, அவர் தான் என் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை உருவாக்கி, நன்றிக்கடன் செலுத்த முடியாத உதவி செய்து, இன்றைய வாழ்க்கை பாதைக்கு திருப்பி விட்டவர், அவர் என் அப்பாவின் சித்தப்பா பையனான குவைத்தில் இருக்கும் என் சித்தப்பா.

நான் தெலுங்கு பேசுவதை தெருப்பசங்க யாராவது கிண்டல் செய்தால் அடித்தோ, அடிபட்டோ வந்துடுவேன். யாராவது என்னை அடித்தால் எத்தனை பெரிய ஆளாக இருந்தாலும் என் தம்பி போய் அடித்து நொறுக்கிட்டு வந்துடுவான்.

என் தம்பி ஆள் ரொம்பவும் மெலிந்து போய் இருப்பான், அவன் பட்டப்பெயரே நரம்பன், நரம்பு மாதிரி ஒல்லியாக இருப்பான். ஒருமுறை எங்க பக்கத்து தெரு அத்தை என்னை விட பெரியவானான அவங்க பையனை அழைத்து வந்து அக்கா! பாருங்க உங்க பையன் என் மகனை அடிச்சி வந்துட்டான், என்னான்னு கேளுங்க என்றார்.

அம்மாவுக்கு கடும் கோபம், தயாராக வைத்திருந்த கொய்யா குச்சியை கையில் எடுத்து, டேய் சுரேஷ்! வா இங்கே, தெருவில் போய் விளையாடாதே, சண்டை போடாதேன்னு எத்தனை வாட்டி சொல்றது, உன் தோலை உரிக்கிறேன் என்று கையில் கம்பை எடுத்து அழைத்தார்.
--
--
--
--
--
--
--
--
--
--
--
--
--
--
--
என் தோல் உரிந்ததா? தெரிஞ்சுக்கனுமுன்னு நிறைய பேர் ஆசைப்படுறீங்க போலிருக்குதே! :).

(தொடரும்)

மனோஜ்
14-03-2007, 10:26 AM
பரம்ஸ் அண்ணா உன்(ண்)மையில் கண்ணில் கண்ணீர் தேங்கி நிர்(ற்)கிறது
உண்மையில் நே(நெ)கிழ்ந்து போனேன் தொடருங்கள்

pradeepkt
14-03-2007, 11:17 AM
அண்ணா,

பல சமயங்களில் நீங்கள் சிறிது சிறிதாகச் சொன்ன கதைதான்.
என்னைப் போன்றே பலருக்கும் உங்கள் வாழ்வின் ஒரு பகுதியோடு ஒட்டிப் போக முடிவது ஒன்றே நாங்கள் ஒரேயடியாக ஒன்றிப் போகப் போதுமானது. எவ்வித கனமான கருவை நீங்கள் சுமந்து எழுதும்போது மட்டும் அவை உங்களுக்கு மட்டுமே முழு வலியையும் எங்களுக்கு பாதிப்பையும் தரும் காரணமென்ன?

குடும்பத்தில் தலைவன் தவறுவது என்பது ஒரு சோக முடிவு என்றால், தலைவி பாரத்தை ஏற்றுச் சிறப்பாக வழிநடத்துவது என்பது அனைவருக்கும் கிடைக்காத ஒரு பெரும் பேறு. அம்மாவுக்கு அது இயல்பாகவே இருந்தது புரிய வருகிறது. நீங்கள் அடுத்து ஹைதராபாத் வரும்போது உங்களோடு அந்த நினைவுத் தடங்களை நானும் வந்து பகிர்வேன் - உறுதி!

நான் மன்றத்தைக் காதலிக்கும் காரணங்களில் முக்கியமானது உங்கள் அனைவரின் உறவுக்கான, நட்புக்கான பாலமாக இது அமைந்தது என்பதுதான்!

தொடருங்கள் உங்கள் கதைகளை! வெகுநாட்களுக்குப் பிறகு சக்திக்கு நாங்கள் அனைவரும் வரிசையாக வந்து சொல்லுவோம்.

paarthiban
14-03-2007, 05:38 PM
நெஞ்சை உருக்கும் தொடர், நன்றி பரம்ஸ் அண்ணா

மன்மதன்
14-03-2007, 07:09 PM
பரம்ஸ் நண்பா.. வாழ்க்கை படகு எப்படியெல்லாம் போகும் என்பது கடவுளுக்கே வெளிச்சம். உனக்கு தமிழ்மன்றம் மூலம் என்னை போல ஏராளமான உறவுகள் இருக்கு.

இளசு
14-03-2007, 08:04 PM
சோதனை நெருப்பில்
பிளாஸ்டிக் உறவுகள்
உருகி கருகிவிடும்...

பொன்னான உறவுகள்
பொலிந்து மின்னிவிடும்..

அப்பா மறைந்த ஊழித்தீ..
அதனால் வெளிப்பட்ட உண்மை உறவுகள்..

அப்பாவைப்போலவே தம்பி..
அம்மாவுடன் பரிபாஷிக்க தெலுங்கு..

தொடரட்டும் பரம்ஸ்..
இந்த நெஞ்சுக்கு நெருக்கமான தொடர்..

பரஞ்சோதி
25-03-2007, 10:10 AM
பரம்ஸ் அண்ணா உன்(ண்)மையில் கண்ணில் கண்ணீர் தேங்கி நிர்(ற்)கிறது
உண்மையில் நே(நெ)கிழ்ந்து போனேன் தொடருங்கள்

நன்றி மனோஜ்.

இன்னும் எத்தனையோ நிகழ்ச்சிகள் இருக்கின்றன, கண் கலங்காமல் சொல்லும் தைரியம் இருக்குமான்னு தெரியலை.

பரஞ்சோதி
25-03-2007, 10:12 AM
அண்ணா,

பல சமயங்களில் நீங்கள் சிறிது சிறிதாகச் சொன்ன கதைதான்.
என்னைப் போன்றே பலருக்கும் உங்கள் வாழ்வின் ஒரு பகுதியோடு ஒட்டிப் போக முடிவது ஒன்றே நாங்கள் ஒரேயடியாக ஒன்றிப் போகப் போதுமானது. எவ்வித கனமான கருவை நீங்கள் சுமந்து எழுதும்போது மட்டும் அவை உங்களுக்கு மட்டுமே முழு வலியையும் எங்களுக்கு பாதிப்பையும் தரும் காரணமென்ன?

குடும்பத்தில் தலைவன் தவறுவது என்பது ஒரு சோக முடிவு என்றால், தலைவி பாரத்தை ஏற்றுச் சிறப்பாக வழிநடத்துவது என்பது அனைவருக்கும் கிடைக்காத ஒரு பெரும் பேறு. அம்மாவுக்கு அது இயல்பாகவே இருந்தது புரிய வருகிறது. நீங்கள் அடுத்து ஹைதராபாத் வரும்போது உங்களோடு அந்த நினைவுத் தடங்களை நானும் வந்து பகிர்வேன் - உறுதி!

நான் மன்றத்தைக் காதலிக்கும் காரணங்களில் முக்கியமானது உங்கள் அனைவரின் உறவுக்கான, நட்புக்கான பாலமாக இது அமைந்தது என்பதுதான்!

தொடருங்கள் உங்கள் கதைகளை! வெகுநாட்களுக்குப் பிறகு சக்திக்கு நாங்கள் அனைவரும் வரிசையாக வந்து சொல்லுவோம்.

கட்டாயம் தம்பி, நாம் இருவரும் சந்திப்போம், அம்மாவையும் ஹைதராபாத் அழைத்து வருகிறேன், என் தந்தை உடல் அடக்கம் செய்த இடம் தெரியுமான்னு கூட தெரியலை.

பரஞ்சோதி
25-03-2007, 10:13 AM
நெஞ்சை உருக்கும் தொடர், நன்றி பரம்ஸ் அண்ணா

உண்மை தான் இனி வரும் நிகழ்ச்சிகள் நெஞ்சை உருக்கும் வகையில் இருக்கும்.

பரஞ்சோதி
25-03-2007, 10:14 AM
பரம்ஸ் நண்பா.. வாழ்க்கை படகு எப்படியெல்லாம் போகும் என்பது கடவுளுக்கே வெளிச்சம். உனக்கு தமிழ்மன்றம் மூலம் என்னை போல ஏராளமான உறவுகள் இருக்கு.

ஆமாம், நண்பா. உறவுகள் மூலமாக நல்ல, நல்ல மைதீன் கடை பிரியாணிகள் கூட கிடைக்கும் தானே :)

பரஞ்சோதி
25-03-2007, 10:16 AM
சோதனை நெருப்பில்
பிளாஸ்டிக் உறவுகள்
உருகி கருகிவிடும்...

பொன்னான உறவுகள்
பொலிந்து மின்னிவிடும்..

அப்பா மறைந்த ஊழித்தீ..
அதனால் வெளிப்பட்ட உண்மை உறவுகள்..

அப்பாவைப்போலவே தம்பி..
அம்மாவுடன் பரிபாஷிக்க தெலுங்கு..

தொடரட்டும் பரம்ஸ்..
இந்த நெஞ்சுக்கு நெருக்கமான தொடர்..


ஆமாம் அண்ணா!

பிளாஸ்டிக் உறவுகள் இன்று தங்க உறவுகளாக வலம் வருகின்றன :)

பொன் என்றுமே பொன் தான். அதனால் தான் பொன்னில் இறைவனை செய்து கும்பிடுகிறோம், இன்றும் அவர்களை வணங்கி வருகிறேன்.

march
25-03-2007, 12:54 PM
நன்றாக வனங்குங்கள் நல்லது

லவ் வித்
மார்ஷ்

மன்மதன்
25-03-2007, 05:07 PM
ஆமாம், நண்பா. உறவுகள் மூலமாக நல்ல, நல்ல மைதீன் கடை பிரியாணிகள் கூட கிடைக்கும் தானே :)

வூட்ல பண்ணியிருந்தா அதைவிட ஜோரா இருந்திருக்கும்தான்..:icon_ush:

ஓவியா
25-03-2007, 07:14 PM
பரம்ஸ் அண்ணா

அருமையான பதிவு,

கொஞ்சம் ரணம், ரொம்ப சோகம், கொஞ்சம் மகிழ்ச்சி, கொஞ்சம் அன்புனு கலந்து பதிவு அசத்தலலா இருக்கு.

நன்றி

தொடரவும்.

பரஞ்சோதி
26-03-2007, 08:20 AM
வூட்ல பண்ணியிருந்தா அதைவிட ஜோரா இருந்திருக்கும்தான்..:icon_ush:

யாரு, நீயா?

தப்பிச்சோமுன்னு சக்தி சொல்கிறார்.

பரஞ்சோதி
26-03-2007, 08:22 AM
பரம்ஸ் அண்ணா

அருமையான பதிவு,

கொஞ்சம் ரணம், ரொம்ப சோகம், கொஞ்சம் மகிழ்ச்சி, கொஞ்சம் அன்புனு கலந்து பதிவு அசத்தலலா இருக்கு.

நன்றி

தொடரவும்.


நன்றி சகோதரி.

அனைவரின் வாழ்விலும் நீங்க சொன்னவை கட்டாயம் இருக்கும்.

என்னுடைய வரலாற்றை என் மகள் பிற்காலத்தில் தெரிந்து கொள்ள தமிழ்மன்றம் உதவும் என்ற வகையில் எழுத ஆர்வம் கூடுகிறது, கூடவே உங்களை போன்ற உறவுகளின் ஊக்கமும், என் பதிவில் கிடைக்கும் நல்ல கருத்துகள் மற்றவர்களின் வாழ்க்கைக்கு உதவும் வககயில் அமையும் என்ற நம்பிக்கையிலும் தொடர்கிறேன்.

ஆதவா
08-04-2007, 06:07 PM
அடா!!! தெலுகு பேசினா குத்தமா? இதென்ன இது?,,

அனுபவங்கள் அருமை அண்ணா! சோகம் நிறைந்த வாழ்க்கைதான் எல்லாருடையதும்... நிரம்ப ஒளி வீசக் காரணமும் அதுவேதான்.....

பரஞ்சோதி
26-04-2007, 09:07 AM
அடா!!! தெலுகு பேசினா குத்தமா? இதென்ன இது?,,

அனுபவங்கள் அருமை அண்ணா! சோகம் நிறைந்த வாழ்க்கைதான் எல்லாருடையதும்... நிரம்ப ஒளி வீசக் காரணமும் அதுவேதான்.....

அருமையாக சொன்னீங்க தம்பி.

ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகமாக சொல்லியிருக்கீங்க.