PDA

View Full Version : இரண்டு கணினிகள்

leomohan
14-03-2007, 07:47 AM
என்னிடம் இரண்டு கணினிகள் உள்ளன. ஒன்று அலுவலகத்தில், மற்றொன்று வீட்டில்.

அலுவலக கணினியில் தேனீ எழுத்துரு தெரிகிறது - மன்றத்தில். அழகாக இருக்கிறது.

ஆனால் வீட்டுக் கணினியில் வெறும் லதா யூனிகோடில் மட்டுமே தெரிகிறது.

இதற்காக தேனீ யூனிகோட் எழுத்துரு ஏற்ற வேண்டுமா?

குறிப்பு-அப்படி ஏற்றி பார்த்த பிறகும் தெரியவில்லையே?

pradeepkt
14-03-2007, 09:44 AM
தேனீயூனி எழுத்துரு இகலப்பையுடனேயே வருகிறதே...
நீங்க இரு கணினிகளிலும் இகலப்பை நிறுவியுள்ளீர்களா?

leomohan
14-03-2007, 01:13 PM
தேனீயூனி எழுத்துரு இகலப்பையுடனேயே வருகிறதே...
நீங்க இரு கணினிகளிலும் இகலப்பை நிறுவியுள்ளீர்களா?

இல்லை. நான் windows XPல் உள்ள லதா எழுத்தருவையே பயன்படுத்துகிறேன்.

அமரன்
14-03-2007, 04:09 PM
இதோ ஒரு சுட்டி. இதனை இணையம் துண்டிக்கப்பட்டிருக்கும்போதும் (off line) பயன்படுத்தலாம். இதை நிறுவி அல்லது இதனை பயன்படுத்தி தட்டச்சினாலேயே உங்கள் பிரச்சினை சுமுகமாகும் என நினைக்கின்றேன்.

http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm (http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm)

பாரதி
15-03-2007, 03:03 PM
அன்பு மோகன்,

உங்கள் கணினியில் தேனீயுனிடிஎக்ஸ் எழுத்துரு நிறுவப்பட்டிருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். லதா எழுத்துருவை எழுத்துருக்கள் கோப்பிலிருந்து (ஃபாண்ட்ஸ் ஃபோல்டரில் இருந்து) வேறு எங்காவது மாற்றி வைத்துக்கொள்ளுங்கள். கணினியின் இயக்கத்தை நிறுத்தி, மறுபடியும் இயக்கிப்பாருங்கள்.

leomohan
15-03-2007, 08:24 PM

நன்றி பாரதி.

leomohan
15-03-2007, 08:25 PM
இதோ ஒரு சுட்டி. இதனை இணையம் துண்டிக்கப்பட்டிருக்கும்போதும் (off line) பயன்படுத்தலாம். இதை நிறுவி அல்லது இதனை பயன்படுத்தி தட்டச்சினாலேயே உங்கள் பிரச்சினை சுமுகமாகும் என நினைக்கின்றேன்.

http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm (http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm)

நன்றி நக்கீரன். ஆனால் என் பிரச்சனை அதுவல்ல.

நான் தமிழ் யூனிகோட் விசைபலகை பயன்படுத்துகிறேன். Phonetic முறையி்ல் அல்ல. லதா யூனிகோடும் தேனீ யூனிகோடும் விசைபலகையில் ஒன்று தான். ஆனால் கணினியில் தேனீ எழுத்துரு நிறுவாமலேயே மன்றத்தில் உள்ள .eot கொண்டு தேனீயில் தட்டச்சு செய்ய முடியுமா என்பது தான் சந்தேகம்.

விகடன்
05-08-2007, 06:19 PM
எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை. விராடன் ஜூட்