PDA

View Full Version : நீ ஹாவ்...!! ஐ யாம் சாரி....!! பாகம்-3



рокрпЖройрпНро╕рпН
13-03-2007, 07:17 PM
கடவுசீட்டை காணாவில்லைЕ. (தமிழ் வார்த்தை உதவிக்கு நன்றி: இளசு)
சில வினாடிகள் இதயம் நின்று அப்புறம் வேகமாக அடிக்க ஆரம்பித்தது, தொலைந்ததின் விளைவுகள் மனதில் வர இன்னும் பயம் அதிகரிக்க, இதயம் அடிப்பது வேகமானதுЕ

சுற்றி இருப்பவர்களை அவர்களிடம் என் கடவு சீட்டு தவறி இருக்கிறதா என்று கேட்டு கொண்டேன்Е
சிலர் நக்கல் சிரிப்போடு நகர்ந்தனர்,
சிலர் பரிதாபமாக பார்த்து நகர்ந்தனர்.
ஆனால், அனைவரும் அவரவர் கடவு சீட்டு சரியாக இருக்கிறதா என்று பார்த்து கொண்டனர்.

பக்கத்தில் இருந்த இருக்கையில் என்னை அமர்த்தி கொண்டு மீண்டும் ஒருமுறை எல்லா ஆவணங்களையும் சோதனை செய்ய ஆரம்பித்தேன்Е
எல்லாம் இருந்தது, கடவுச்சீட்டை தவிரЕ.

பயப்படுவதால் எந்த பயனும் இல்லை என்பது தெரிந்து கொண்டதான் என்னை நானே அமைதிபடுத்திகொள்ள வழக்கம்போல் கண்களைமூடி ஒரு சின்ன ஜெபம் செய்து கொண்டேன்.
அடுத்து என்னЕ
மணியை பார்த்தேன்Е அதிகாலை 1:30
இப்போ இந்தியாவில் உள்ளவர்களையும் தொடர்பு கொள்ள முடியாது, சீனாவில் உள்ளவர்களையும் தொடர்பு கொள்ளமுடியாதுЕ. ஒரே வழி விடியும் வரை காத்திருந்து சீன அலுவலகத்தில் உள்ளவர்கள் வழியாக எதாவது செய்யவேண்டும்Е இந்திய மேலாளர்களுக்கு தகவல் சொல்லனும்Е ஆனால் எதுவானாலும் விடியும் வரை காத்திருக்கனும்Е. அப்படியே அதுகுள்ள கடவு சீட்டு கிடைத்துவிட்டாலும் நல்லதேЕ.

காத்திருக்க பிரச்சினைவராமல் இருக்க முதலில் இங்க உள்ள போலிஸ் கிட்ட சொல்லிடலாம் என்று அங்கிருந்த ஒரு போலிஸ்கரரிடம் போயி எனது கடவுசீட்டு கானாமல் போயிருப்பதை சொன்னேன்Е.
Уஒரு கம்பிளையண்ட் கொடுங்களேன்..Ф
Уகொடுக்கிறென்Е அதுக்கு முன்னால் சிறிது தேட வேண்டும், சிறிது அவகாசம் தேவைФ
СசரிФ

நான் நகர்ந்து ஒரு காப்பிகடையின் நாற்காலியில் அமர்ந்து கொண்டேன்Е கொஞ்சம் கொஞ்சமாக விமான நிலையம் காலியாக ஆரம்பித்திருந்தது. அடுத்த விமானம் காலை 6:00 மணிக்குதானாம்.
எவ்வளவுதான் மனசு பயப்படாதது போல் காண்பித்து கொண்டாலும், பேச்சில் காண்பித்து கொள்ளாமல் இருந்தாலும் ஒரு பயம்Е
சீன சிறைசாலைகள் எவ்வாறு இருக்கும்???
என்ன உணவாயிருக்கும்????
எத்தனை நாள் இங்க மாட்ட வேண்டியிருக்கும்..???
என் அலுவலக நிலை??

எத்தனை, எத்தனையோ கேள்விகள்Е
பயத்தை குறைத்துகொள்ள பல பல யுக்திகள் கையாண்டாலும், கடைசியாக என்னுடைய ஜெபமாலைதான் கைகொடுத்தது Е எடுத்து உருட்ட ஆரம்பித்தேன்Е
அதை எப்போதும் கையில் வைத்திருந்தாலும், வழக்கம்போல் பயம், தேவை வரும்போது மட்டும் பக்தியில் ஓங்கிபோயிருந்தேன்Е நானும் மனுசந்தானேЕ

கொஞ்சம் பயம்விட மறுபடியும் சுற்றுமுற்றதை ஆராய ஆரம்பித்தேன்Е. இரவு நேரம் ஆதலால் ஆட்களின் ஓட்டம் குறைவாக இருந்தது. சர்வதேச விமானநிலயங்களுடம் போட்டி போடவேண்டும் என்றே எல்லாவற்றையும் ஆடம்பரமாக வைத்திருந்தது தெரிந்தது. தூரத்தில் ஒரு பணமாற்றும் இயந்திரம் இருப்பதை பார்த்து அதில் ஒரு 100 அமெரிக்க டாலரை போட்டு அதற்கான சீன பணத்தை எடுத்து கொண்டேன். சுமார் 760 யுவான் கிடைத்ததுЕ அதில் 50 யுவான் தரவு காசாக எடுத்து கொண்டது அந்த இயந்திரம். கையில் கிடைத்த பணத்தில் 6 யுவான் கொடுத்து ஒரு காப்பி வாங்கி கொண்டேன். அந்த நிமிடத்திலும் காப்பி ருசிக்கதான் செய்ததுЕ

கையில் கடிகாரம் கட்டும் பழக்கம் எனக்கு இல்லை. அதனால் அலைபேசியில் நேரத்தை பார்த்து கரைந்து கொண்டிருந்தேன். சுமார் 2:15 மணிக்கு ஒரு இந்தியன் விமான நிலையத்தினுள் வந்து அங்கும் இங்குமாக யாரையோ தேடி கொண்டிருந்தான். நானும் எதுவும் விசாரிக்காமல் அவனை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்Е. அவன் அவன் கையில் இருக்கும் கடவி சீட்டை விரித்து பார்த்து என்னிடம்..
Уநீங்க பெஞ்சமின்..Ф
УஆமாФ
Уசாரி, சார், உங்க கடவு சீட்டை என்னுடையது என்று எடுத்துட்டு போயிட்டேன்Ф
Уபரவாயில்லை, நன்றிФ
У கோபமில்லையே..Ф
Уதிரும்ப வந்து கொடுத்திங்களே Е அதுக்கு நன்றிФ
Уசரி.. பார்க்கலாம்Е
УЕЕ..Ф நான் பதில் எதுவும் சொல்லவில்லைЕ
அவனும் கண்டு கொள்ளவில்லை, அவன் பெயரை கூட நானும் தெரிந்து கொள்ள விரும்பவில்லை. அந்த நேரத்தில் நான் கொஞ்சம் நாகரிகமாக அவனிட நடந்து கொண்டதே அவன் திரும்ப வந்து அந்த கடவுச்சீட்டை தந்தமைக்கு, ஆனாலும் என்னை அத்தனை நேரம் கஷ்டபடுத்தியத்ற்கு கோபம் இருந்தது.
நான் முதலில் பேசிய போலிஸ்காரரிடம் என்னுடைய கடவு சீட்டு கிடைத்ததை கூறி விட்டை, கஸ்டம்ஸ் பகுதியும் ஆவணக்களை கொடுத்துவிட்டு மீண்டும் பணமாற்றி இயந்திரத்தை அணுகி மேலும் 100 டாலர்களை யுவான்களாக மாற்றி கொண்டு விமான நிலையத்தின் வேளியே வந்தேன்Е அலைபேசியில் மணி 2:30 என்று காட்டியது, சுற்றி பார்த்தேன் ஒரு போலிஸ்காரரை தவிர வேறு எதுவும் இல்லைЕ.

அவரிடம் போயி
Уடாக்ஸிФ என்று வாயால் சொல்லி, கையால் Уஎங்கே?Ф என்று கேக்கЕ அவ்ர் வலதும் இடதுமாக தலையாட்டினார்Е

அடுத்தவிமானம் காலை 6:00 மணிக்குதான் என்று அவர்கள் சொன்னது நியாபகம் வரЕ.

அட அப்ப அதுவரைக்கும் பிளாட்பார தூக்கம்தானாЕ!!!!!
ஒரு நப்பாசையில் மீண்டும் ஒருமுறை சுற்றிபார்த்தேன்Е தெருவிளக்குகளையும் விமான நிலைய காவலர்களையும்தவிர எதுவும் என் கண்ணுக்கு தென்படவில்லைЕ..

роЗро│роЪрпБ
13-03-2007, 07:23 PM
அப்பாடா.. இப்பத்தான் நிம்மதி பென்ஸ்..

(அவருடையது என அவர் எடுக்கும் அளவுக்கு உன் கடவுச்சீட்டை அலட்சியமாய்க் கையாண்டதுக்கு திட்டு எப்படியும் உண்டு..)

பயம் வரும்போது மட்டும் ஜெபமாலை
பயம் வந்தாலும் ருசிக்கும் காபி
50 யுவான் தரகுக்கூலி அடித்த சீன இயந்திரம்..


சுவையாய் எதையும் சொல்லும் வல்லமை உள்ள பென்ஸ் வாழ்க!

சஸ்பென்ஸ் தொடர்கிறது..( அடுத்து எதும் வில்லங்கம் வராது இருக்கணுமில்ல..)

рокрпЖройрпНро╕рпН
13-03-2007, 07:33 PM
அப்பாடா.. இப்பத்தான் நிம்மதி பென்ஸ்..

(அவருடையது என அவர் எடுக்கும் அளவுக்கு உன் கடவுச்சீட்டை அலட்சியமாய்க் கையாண்டதுக்கு திட்டு எப்படியும் உண்டு..)

பயம் வரும்போது மட்டும் ஜெபமாலை
பயம் வந்தாலும் ருசிக்கும் காபி
50 யுவான் தரகுக்கூலி அடித்த சீன இயந்திரம்..


சுவையாய் எதையும் சொல்லும் வல்லமை உள்ள பென்ஸ் வாழ்க!

சஸ்பென்ஸ் தொடர்கிறது..( அடுத்து எதும் வில்லங்கம் வராது இருக்கணுமில்ல..)


பதிவை கொடுத்துவிட்டு உறங்க செல்லவேண்டும் என்று இருந்தேன்...
நீங்கள் இந்த பதிவை வாசிப்பதை கண்டு... இளசு என்ன சொல்லுறார் பார்த்து செல்லலாம் என்று காத்திருப்பு....
இந்த மந்திர காந்த சக்தியின் ரகசியம் ஏதோ இளசு???

ஏங்கும் அன்பான கண்டிப்புகளுக்கு நன்றி....

роЗро│роЪрпБ
13-03-2007, 07:57 PM
ஒரே உருவம் உள்ள பலர் இருக்காங்களோ என்னவோ
ஒரே ரசனை, எண்ண அலைவரிசை உள்ளவர்கள் உலகில் இருக்காங்க பென்ஸ்..

அன்பை விட மந்திரம் ஏதும் உண்டா என்ன?

роородро┐
14-03-2007, 03:37 AM
ஒரு வழியா கிடைச்சுடுச்சு....
அடுத்தவர் மாற்றி எடுத்துட்டு போற மாதிரியா உங்க கடவுசீட்ட வச்சிருந்தீங்க...நீங்களாவது பரவாயில்ல...
எனக்கு இது மாதிரி ஆயிருந்துச்சுன்னா....ஓஓஓஓஓன்னு அழுதிருப்பேன்...

ஹ்ம்ம்..தொடருங்கள் உங்கள் பாணியில்..!

pradeepkt
14-03-2007, 05:17 AM
ம்ம்ம்... உங்க ஜெபமாலைதாங்க காப்பாத்தி இருக்கு.
ஒரு கடவுச் சீட்டை பத்திரமாப் பாத்துக்க முடியாதா உங்களுக்கு.. ???
இது ஒரு நல்ல பாடம், உங்களுக்கு!

சரி சரி, இன்னும் திட்டு வாங்காம, அடுத்த பாகத்தைப் போடுங்க.

рооройрпНроородройрпН
14-03-2007, 07:35 AM
அய்யோ அய்யோ கடைசில கிடைச்சுட்டதா.. அப்ப நீங்க கண்ட அந்த சீன ஜெயில் கனவெல்லாம்..:D :D ஒரு நாவல் அளவுக்கு சஸ்பென்ஸா கொண்டு செல்வதற்கு பாராட்டுகள் பென்ஸ்..

рооройрпЛроЬрпН
11-04-2007, 09:41 AM
ஆகா கிடைத்து விட்டதா வாழ்த்துக்கள் இனியாவது நான் ஜாக்கிரதையாக இருக்கனு

pradeepkt
11-04-2007, 09:46 AM
இன்னும் அடுத்த பாகம் போடலையா...
பென்ஸூ இதெல்லாம் நல்லால்லை...

рокрпЖройрпНро╕рпН
11-04-2007, 12:07 PM
யோவ்...
வீட்டில சொந்தமா ஒரு கணிணி இல்லை... எப்படி கதை எழுதுறதாம்.... ஆபிஸுல வந்து இந்த பதிவு போடுறதுக்கே பயமா இருக்கு...

рооройрпЛроЬрпН
11-04-2007, 03:21 PM
பென்ஸ் தாங்கள் முதலில் கை கணிணி வாங்க வாழ்த்துக்கள்
காசு நம்ம இளசு அண்ணா மற்றும் அறிஞர் மன்றத்தின் சார்ப்பா தருவாங்க

роУро╡ро┐ропро╛
11-04-2007, 03:30 PM
யோவ்...
வீட்டில சொந்தமா ஒரு கணிணி இல்லை... எப்படி கதை எழுதுறதாம்.... ஆபிஸுல வந்து இந்த பதிவு போடுறதுக்கே பயமா இருக்கு...

ஆச்சர்யம்
அபாரம்
ஆனால் உண்மை. :icon_wink1:

பென்ச பயமுருத்த ஒருவன் உலகத்தில் பிறந்து இருக்கானா!!!!!!!!!!!!!!!!!!:starwars006: :starwars006:


வாய்ப்பு இருக்கும் பொழுது தொடருங்கள்.

роУро╡ро┐ропро╛
11-04-2007, 03:31 PM
பென்ஸ் தாங்கள் முதலில் கை கணிணி வாங்க வாழ்த்துக்கள்
காசு நம்ம இளசு அண்ணா மற்றும் அறிஞர் மன்றத்தின் சார்ப்பா தருவாங்க


அடடே அடடே...........
இதற்க்கு ராஜா அண்ணா அறிஞர் சாருக்கு போட்ட மொட்டையே தேவலாம் மக்கா!!!

ஹி ஹி ஹி ஹி

mukilan
11-04-2007, 03:43 PM
நீங்க இந்தப் பதிவை எப்பொழுதோ போட்டிருக்கிறீர்கள், நான் இப்பொழுதுதான் பார்க்கிறேன். சீனா விமான நிலையத்திலேயே இம்புட்டுப் பிரச்சினைனா, இன்னமும் சக மொழி தெரியாத அந்த மனிதர்களிடம் என்ன பாடு படப் போறீங்களோ பென்ஸ். ஸ்ஸப்பா! இப்போவே கண்ணைக் கட்டுதே!!!!!!!

ஆனால் இது போல கஷ்டங்கள் (அனுபவங்கள்) நிறையக் கற்றுத்தருகின்றன. சமாளித்து முடித்ததும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். "Men in distress pray" என்ற ஆங்கில பழமொழிக்கு ஒரு உதாரணமா நீங்க மட்டும் இல்லை எல்லோரும் இருக்கிறோம்.

роородро┐
12-04-2007, 03:39 AM
சாக்கு போக்கெல்லாம் சொல்றது இருக்கட்டும்.சீக்கிரமே ஒரு கைக்கணினி வாங்கவும். அப்பயாச்சும் எழுதறீங்களா பாக்கலாம்... எல்லோரையும் காக்க வைக்கறதுக்குள்ள அப்படி ஒரு சந்தோஷம்..ஹ்ம்ம்..

роЗро│роЪрпБ
12-04-2007, 07:35 AM
பென்ஸ் தாங்கள் முதலில் கைக் கணினி வாங்க வாழ்த்துக்கள்
காசு நம்ம இளசு அண்ணா மற்றும் அறிஞர் மன்றத்தின் சார்பா தருவாங்க


மனோஜ்

என்ன எழுத்துரு இது? படிக்கவே முடியலையே...:aetsch013:

рооройрпЛроЬрпН
12-04-2007, 07:38 AM
மனோஜ்

என்ன எழுத்துரு இது? படிக்கவே முடியலையே...:aetsch013:
எப்படி அண்ணா படிக்கமுடியூம் அது கண்ணுக்கெல்லாம் தெரியாது மனசுக்கு மட்டும் தெரியூம் இப்ப பாருங்க தெரியூம்:icon_dance:

роЗро│роЪрпБ
12-04-2007, 07:41 AM
எப்படி அண்ணா படிக்கமுடியூம் அது கண்ணுக்கெல்லாம் தெரியாது மனசுக்கு மட்டும் தெரியூம் இப்ப பாருங்க தெரியூம்:icon_dance:

கிரெடிட் கார்டில் பங்கு கேட்காத எல்லாருக்கும்
என் மனதில் இடம் இருக்கிறது...:music-smiley-012:

-இளசு

рооройрпЛроЬрпН
12-04-2007, 07:46 AM
அண்ணா பணம் பத்தும் பன்னும் அப்படினு செல்லுவங்களே அது இது தானா
அண்ணணின் மனதில் என்றும் இடம் எனக்கு வேன்டும் :sport-smiley-019: தவறுதலுக்கு மன்னியூங்கள்

роУро╡ро┐ропро╛
12-04-2007, 03:27 PM
சாக்கு போக்கெல்லாம் சொல்றது இருக்கட்டும்.சீக்கிரமே ஒரு கைக்கணினி வாங்கவும். அப்பயாச்சும் எழுதறீங்களா பாக்கலாம்... எல்லோரையும் காக்க வைக்கறதுக்குள்ள அப்படி ஒரு சந்தோஷம்..ஹ்ம்ம்..

ஆமாமா

இந்த ஃபெங்களூர் கூட்டமே இப்படிதான் காக்க வைக்கருதுலே ரோம்ப ரொம்ப சந்தோஷம்.......:sport-smiley-017:

роородро┐
13-04-2007, 03:21 AM
ஆமாமா

இந்த ஃபெங்களூர் கூட்டமே இப்படிதான் காக்க வைக்கருதுலே ரோம்ப ரொம்ப சந்தோஷம்.......:sport-smiley-017:
இப்படி பொதுவா சொல்லப்படாது..
எல்லோருமே காக்க வச்சாங்கன்னா..யாரு தான் காத்துருக்கறது..?:music-smiley-010:

роЗро│роЪрпБ
13-04-2007, 06:14 AM
அண்ணா பணம் பத்தும் பன்னும் அப்படினு செல்லுவங்களே அது இது தானா
அண்ணணின் மனதில் என்றும் இடம் எனக்கு வேன்டும் :sport-smiley-019: தவறுதலுக்கு மன்னியுங்கள்

மனோஜ்

அன்பாய்ச் செல்லமாய் நமக்குள் நடந்த உரையாடலில்
அண்ணனிடம் மன்னிப்பு கேட்க என்ன வந்தது?

என் அன்பு என்றும் உனக்குண்டு...