PDA

View Full Version : உலக கோப்பை - 2007



Pages : [1] 2

அறிஞர்
05-03-2007, 02:22 PM
மேற்கு இந்திய தீவுகளின் நடைபெறும்
கிரிக்கெட் உலக கோப்பை - 2007 போட்டி
பற்றிய தகவல்களை இங்கு கொடுக்கலாம்.


உலக கோப்பை போட்டிகள் அட்டவணை...
அனைத்து போட்டிகளும் இந்திய நேரம் மாலை 7 மணிக்கு ஆரம்பமாகும்
(ஜமைக்காவில் நடக்கும் போட்டிகள் மட்டும் 8 மணி)
http://i13.photobucket.com/albums/a282/aringar/rtrsere.jpg


பயிற்சி மோதல்கள் அட்டவணை.
http://i13.photobucket.com/albums/a282/aringar/mfkgkfd.jpg
நன்றி - தினகரன்
----------------------


இலவசமாக இணைய தளத்தில் பார்க்க சில தகவல்கள். சானல் நம்பர் மாறுபடலாம்.
http://www.sooriyanfm.net/wc2007/sooriyan.html

http://www.sinekithan.com/ (http://www.sinekithan.com/)

http://www.tamilsfront.net/tv/ (http://www.tamilsfront.net/tv/)


tvuplayer மூலமாக இலவசமாக பார்க்கலாம்... ஸ்டீரிமிங்க் நன்றாக உள்ளது. சானல் 54256


ப்ளேயர் இறக்குமிடம்..


http://www.tvunetworks.com/downloads/index.htm


பிளேயர் டவுன்லோடு பண்ணாமல் அப்படியே பார்க்க..
http://www.viidoo.com/en/index.php தளம் சானல் 54256

-----------------------------------
சாப்காஸ்ட் மூலம்... சானல் மாறுபடலாம்.

http://www.sopcast.com/player/ (http://www.sopcast.com/player/)

Channel 18709, 15408 and 20538 on sopcast

அறிஞர்
05-03-2007, 02:26 PM
கலந்து கொள்ளும் அணி வீரர்கள் பட்டியல்
http://i13.photobucket.com/albums/a282/aringar/2-0.jpg


http://i13.photobucket.com/albums/a282/aringar/2-2-1.jpg


http://i13.photobucket.com/albums/a282/aringar/2-2.jpg


http://i13.photobucket.com/albums/a282/aringar/2-1-1.jpg
நன்றி- தினகரன்

தங்க கம்பி
05-03-2007, 02:44 PM
நன்றி அறிஞரே! அங்கே என்ன நேரம் விளையாடுகிறார்கள்,இந்தியாவில் என்ன நேரம் என்று தெரிந்தால் முன்னேற்பாடுகள் செய்ய ஏதுவாக இருக்கும்.

அறிஞர்
05-03-2007, 02:46 PM
நன்றி அறிஞரே! அங்கே என்ன நேரம் விளையாடுகிறார்கள்,இந்தியாவில் என்ன நேரம் என்று தெரிந்தால் முன்னேற்பாடுகள் செய்ய ஏதுவாக இருக்கும்.
அவசியம்....
அன்பரே.. இங்கு தொடர்ந்து கொடுக்கப்படும்...

ஷீ-நிசி
05-03-2007, 03:01 PM
http://i128.photobucket.com/albums/p163/shenisi/Slide1-1.jpg

http://i128.photobucket.com/albums/p163/shenisi/Slide2-1.jpg

http://i128.photobucket.com/albums/p163/shenisi/Slide3-1.jpg

http://i128.photobucket.com/albums/p163/shenisi/Slide4-1.jpg


செட்மேக்ஸ் அலைவரிசையில் நாளை இந்தியாவிற்கு warm-up போட்டி நடைபெறுகிறது.. இந்திய நேரப்படி மாலை 7.45 மணி...

அமரன்
05-03-2007, 03:08 PM
நன்றி அறிஞர். நன்றி ஷீ.நிஷி. பலருக்கு இது பயனுள்ளதாக அமையும்.

அறிஞர்
05-03-2007, 03:08 PM
நன்றி ஷீ-நிசி..
பிறகு அட்டவணை தமிழில் கிடைக்கும் பொழுது... பதிக்கிறேன்.

மன்மதன்
05-03-2007, 04:50 PM
நன்றி அறிஞர், ஷீ..

இந்த பதிவிலேயே உலகக்கோப்பை பற்றி விவாதிக்கலாம்.

அறிஞர்
05-03-2007, 08:11 PM
நன்றி அறிஞர், ஷீ..

இந்த பதிவிலேயே உலகக்கோப்பை பற்றி விவாதிக்கலாம்.
ஒவ்வொரு போட்டிக்கு தனித்தனியாக பதிக்காமல்... இதிலேயே.. விமர்சிக்கலாம்...

ஷீ-நிசி
06-03-2007, 03:34 AM
உலக கோப்பை பயிற்சி போட்டி : இலங்கை , இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் , தென் ஆப்ரிக்கா வெற்றி

பிரிட்ஜ்டவுன் : உலக கோப்பை காண பயிற்சி போட்டியில் இலங்கை ,வெஸ்ட் இண்டீஸ்,இங்கிலாந்து,தென் ஆப்ரிக்க அணி கள் வெற்றி பெற்றன.விவரம் வருமாறு,9 வது உலக கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீசில் வரும் 13 ம் தேதி துவங்குகிறது. முதல் சுற்று போட்டிகளுக்கு முன்பாக அனைத்து அணிகளும் பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்றன .

தென் ஆப்ரிக்க அயர்லாந்து :தென் ஆப்ரிக்க அணி அயர்லாந்து அணியை சந்தித்தது, இதில் தென் ஆப்ரிக்க35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.முதலில் பேட் செய்த தென் ஆப்ரிக்கா 192 ரன்கள் எடுத்தது.அடுத்து களமிறங்கிய அயர்லாந்து 157 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இங்கிலாந்து பெர்முடா: முதலில் பேட் செய்த இங்கிலாந்து 286 ரன்கள் எடுத்தது.இதனை சேஸ் செய்த பெர்முடா 45 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.இதனால் இங்கிலாந்து 241 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வெஸ்ட் இண்டீஸ் கென்யா : முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் 268 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய கென்யா 247 ரன்கள் எடுத்தது .இதனால் வெஸ்ட் இண்டீஸ் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இலங்கை ஸ்காட்லாந்து : முதலில் பேட் செய்த இலங்கை 294 ரன்கள் எடுத்தது.அடுத்து களமிறங்கிய ஸ்காட்லாந்து 135 ரன்கள் எடுத்தது .இதனால் இலங்கை 159 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இன்றைய பயிற்சி போட்டியில் இந்தியா நெதர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. சோனி மேக்ஸ் சேனலில் இரவு 8 மணிக்கு போட்டி ஒளிபரப்பாகிறது.

அறிஞர்
06-03-2007, 12:55 PM
ஸ்காட்லாந்து அணி ஆட்டம் சரியில்லை...

மற்றபடி எல்லா அணிகளும் நன்றாக பயிற்சி செய்துள்ளது.

aren
06-03-2007, 01:30 PM
இந்த முறை ஏதாவது ஒரு புதிய டீம்தான் சாம்பியனாகும் என்று நினைக்கிறேன்.

இங்கிலாந்து அல்லது நியூஜிலாந்து அல்லது தென் ஆப்பிரிக்கா ஆகிய் மூன்றில் ஒன்று வரும் என்று நினைக்கிறேன்.

அறிஞர்
06-03-2007, 01:53 PM
நெதர்லாந்து டாஸ் ஜெயித்து...
இந்தியா முதல் பேட்டிங்க்.. 26/0 3 ஓவர்

அறிஞர்
06-03-2007, 02:57 PM
100/3 (18 ஓவர்)... இன்னும் சிறப்பாக விளையாடலாம்... இந்தியா...

டெண்டுல்கர், டிராவிட் விளையாடுகிறார்கள்.

ஜீவா
06-03-2007, 03:14 PM
VLC player அல்லது WINAMP இருந்தால் LIVE Match பாக்கலாம்..


http://38.96.148.25:5612/listen.pls

மனோஜ்
06-03-2007, 07:08 PM
buffer என்று வந்து ஒன்றும் ஓடவில்லையே நண்பா

அறிஞர்
06-03-2007, 07:10 PM
வின் ஆம்பில் இலவசம் தான். முதலில் வருவோருக்கு கிடைப்பது எளிது... எண்ணிக்கை உட்சக்கட்டத்தை எட்டினவுடன்.. சும்மா பஃபர் என வரும்....

கிடைப்பது சற்று கடினம்... பார்ப்பவர் வெளியேறினால்.. தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

மனோஜ்
07-03-2007, 06:55 AM
ஓ குலுக்கல் முறையா முயற்சி செய்திகிட்டே இருக்கனும் போல......
நன்றி அறிஞரே

அமரன்
07-03-2007, 05:05 PM
VLC player அல்லது WINAMP இருந்தால் LIVE Match பாக்கலாம்..


வின் ஆம்பில் இலவசம் தான். முதலில் வருவோருக்கு கிடைப்பது எளிது... எண்ணிக்கை உட்சக்கட்டத்தை எட்டினவுடன்.. சும்மா பஃபர் என வரும்....

கிடைப்பது சற்று கடினம்... பார்ப்பவர் வெளியேறினால்.. தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.


லண்டனில் இருக்கும்போது பார்த்து ரசிக்கலாம் என நினைத்தேன். ஆனால் வேலை நிமிர்த்தம் அடுத்த மூன்று மாதங்கள் ஜேர்மனியில் வாசம். பார்க்க முடியாது என்ற கவலை இப்போ நீங்கிடிச்சு.
நன்றி ஜீவா, அறிஞர்.

aren
08-03-2007, 03:04 AM
..


லண்டனில் இருக்கும்போது பார்த்து ரசிக்கலாம் என நினைத்தேன். ஆனால் வேலை நிமிர்த்தம் அடுத்த மூன்று மாதங்கள் ஜேர்மனியில் வாசம். பார்க்க முடியாது என்ற கவலை இப்போ நீங்கிடிச்சு.
நன்றி ஜீவா, அறிஞர்.

ரொம்பவும் சந்தோஷப்படவேண்டாம். Buffering என்று வந்து உங்களை வாட்டும். அதற்கு பார்க்கமேலேயே இருக்கலாம்.

அறிஞர்
08-03-2007, 02:54 PM
ரொம்பவும் சந்தோஷப்படவேண்டாம். Buffering என்று வந்து உங்களை வாட்டும். அதற்கு பார்க்கமேலேயே இருக்கலாம்.
ஆரென் சொல்லுவது ஏதோ உண்மைதான்.. நானும் அனுபவித்துள்ளேன்.

மனோஜ்
08-03-2007, 03:18 PM
உலக கோப்பை 2007 அட்டவனை எங்கு சரியாக பார்க்களாம் ஆறிஞரே
உடனடி முடிவுகளுடன்

அறிஞர்
08-03-2007, 03:24 PM
இங்கு முதல் பக்கத்தில் அட்டவணை உள்ளதே மனோஜ்..

அதிகார பூர்வ தளம் http://cricketworldcup.indya.com/

ஸ்கோர் பார்க்க சிறந்தது... http://www.cricinfo.com/

Joe
08-03-2007, 03:26 PM
இந்த தளத்திற்கு சென்றால் உங்களுக்குத் தேவையான தகவல்கள் கிடைக்கும்... என நினைக்கிறேன் :)

http://cricketworldcup.indya.com/

ஜோ

Joe
08-03-2007, 03:27 PM
அடடா... கொஞ்சமா டைமிங் மிஸ் ஆயிடுச்சோ.. :D

அறிஞர்
08-03-2007, 03:34 PM
அடடா... கொஞ்சமா டைமிங் மிஸ் ஆயிடுச்சோ.. :D மிஸ்ஸானாலும், மிஸ்ஸஸானாலும் கண்டுக்கூடாது.. தொடர்ந்து.. கொடுங்க..
-------
நியூசிலாந்து.. வங்கதேசத்திடம் எதிர்பாராத தோல்வியடைந்தது வியப்பான செய்தி...

paarthiban
08-03-2007, 04:27 PM
என் சப்போர்ட் இந்தியாவுக்கு. என் யூகம் - நியூசிலாந்து ஜெயிக்கும்னு..
பாக்கலாம்.

அறிஞர்
08-03-2007, 04:44 PM
என் சப்போர்ட் இந்தியாவுக்கு. என் யூகம் - நியூசிலாந்து ஜெயிக்கும்னு..
பாக்கலாம்.
பயிற்சி ஆட்டத்தில் ஜெயிக்கும் அணி சொதப்புவது நியாயமா..

அறிஞர்
09-03-2007, 12:37 PM
பயிற்சி ஆட்டத்தில் இந்தியா-மேற்கு இந்தியா இன்று மோதுகிறது..
ஆஸ்திரேலியா-இங்கிலாந்து...

யாருக்கு வெற்றி வாய்ப்பு என கணிக்க முடியுமா..

அறிஞர்
09-03-2007, 01:51 PM
இங்கிலாந்தும், மேற்கு இந்தியாவும் டாஸ் வெற்றி பெற்று துடுப்பாட்டம் ஆடுகிறார்கள்...

இந்தியா... வெற்றி பெறுமா..

அறிஞர்
09-03-2007, 03:17 PM
இந்தியாவுக்கு எதிராக.. அடிபடுகிறது மேற்கு இந்தியா... 62/8 (20 ஓவர்)

மனோஜ்
09-03-2007, 06:09 PM
இந்தியா மேற்கு இந்தியாதிவு
இந்தியா வெற்றி பெற்றது(India won by 9 wickets) மீதம் 189 பந்துக்கள் இருந்தது

அறிஞர்
09-03-2007, 06:22 PM
படேல் பந்துவீச்சு அபாரம்...

கொடுத்த வேலையை கார்த்திக்கும், ராபின் உத்தப்பாவும் சரியாக செய்தனர். எளிதில் வெற்றி.

ஆஸ்திரேலியாவும் வெற்றியை நோக்கி செல்கிறது.

ஓவியா
09-03-2007, 06:29 PM
இந்தியாவுக்கு வாழ்த்துக்கள்.

வெற்றி
10-03-2007, 10:28 AM
இந்திய அணி வெற்றிபெற வாழ்த்துக்கள்...

ஷீ-நிசி
10-03-2007, 01:18 PM
உலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: வேகமாக வென்றது இந்தியா

ஜமைக்கா:உலக கோப்பை தொடரில் எதிரணிகளுக்கு இந்தியா எச்சரிக்கை மணி அடித்துள்ளது. பயிற்சி போட்டியில் முனாப் படேல், ஜாகிர், அகார்கர் வேகத்தில் துள் கிளப்ப, வெஸ்ட் இண்டீசை 9 விக்கெட் வித்தியாசத்தில் சுலபமாக வீழ்த்தியது.வரும் 13ம் தேதி வெஸ்ட் இண்டீசில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் துவங்குகிறது. அதற்கு முன்னதாக நேற்று ஜமைக்காவில் நடந்த கடைசி பயிற்சி போட்டியில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. டாஸ் வென்றதும் தப்பு கணக்கு போட்ட கேப்டன் லாரா பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய வேகப்புயல்கள் கலக்கினர். துவக்க ஆட்டக்காரர்களாக வந்த சந்தர்பால்(6), கெய்ல்(6) விரைவாக நடையை கட்டினர். கேப்டன் லாரா(22) பதான் பந்தில் வெளியேறினார். இதற்கு பிறகு முனாப் படேல் சூறாவளியாக மாறினார். இவரது அனல் பந்தில் சர்வான்(13), பிராவோ(0), ராம்தின்(3), ஸ்மித்(13) அவுட்டாயினர். படுமட்டமான பேட்டிங் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணி 25. 5 ஓவரில் 85 ரன்களுக்கு சுருண்டது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக முனாப் படேல் 4, பதான் 3 விக்கெட் வீழ்த்தினர். சேவக் டக்:சுலப இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு சேவக் மீண்டும் ஒரு முறை ஏமாற்றம் அளித்தார். பார்மை மீட்க இவர் மேற்கொண்ட தியானப் பயிற்சிகள் எல்லாம் வீணானது. பவல் பந்தில் டக் அவுட்டானார். பின்னர் உத்தப்பா, தினேஷ் கார்த்திக் இணைந்து பொறுப்பாக ஆடினர். இந்திய அணி 18.3 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 86 ரன் எடுத்து வெற்றி பெற்றது. உத்தப்பா(35), தினேஷ் கார்த்திக்(38) அவுட்டாகாமல் இருந்தனர். நியூசி., அபாரம்: கிங்ஸ்டவுனில் நடந்த மற்றொரு பயிற்சி போட்டியில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த இங்கிலாந்து 48. 3 ஓவரில் 197 ரன் எடுத்தது. கேப்டன் மைக்கேல் வான் அதிகபட்சமாக 62 ரன் எடுத்தார். டிரினிடாட்டில் நடந்த போட்டியில் பாகிஸ்தான் அணி, தென் ஆப்ரிக்காவை சந்தித்தது. முதலில் பேட் செய்த தென் ஆப்ரிக்கா 48. 3 ஓவரில் 199 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. போஸ்மேன் அதிகபட்சமாக 53 ரன் எடுத்தார்.பார்படாசில் நடந்த போட்டியில் நியூசிலாந்து அணி, இலங்கையை எதர்கொண்டது. லு வின்சென்ட்(70), கேப்டன் பிளமிங்(65) விளாச, நியசிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 285 ரன் குவித்தது.

நன்றி: தினமலர்

aren
11-03-2007, 12:21 AM
பயிற்சி ஆட்டத்தின் வெற்றியை வைத்து எதையும் கணித்துவிடவேண்டாம்.

பயிற்சி ஆட்டத்தில் தோற்ற குழுக்களில், இங்கிலாந்து, மேற்கு இந்தியத்தீவுகள், தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூஜிலாந்து ஆகிய குழுக்கள் உள்ளன. என்னுடைய கணிப்பு இந்த நான்கு குழுக்களில் ஒன்றே இந்த முறை கோப்பையை வெல்லும்.

இந்தியா முதல் ஆட்டங்களில் நன்றாகவே சோபிப்பார்கள், ஆனால் போகப்போக அவர்களின் ஆட்டம் குறையும்.

நான் இந்த மேட்சை நேரடியாக தொலைகாட்சியில் பார்த்தேன். இர்பாஃன் பத்தானின் பந்துவீச்சு மகா மட்டமாக இருந்தது. ஆனால் போட்டி முடிந்தவுடன் பேசியதில் அவருடைய பந்துவீச்சு அவருக்கு சந்தோஷத்தைக் கொடுத்தது என்றார். இப்படி பந்துவீசீனால் நிச்சயம் இந்தியா வெற்றிபெற வாய்ப்பு குறைவாகவே இருக்கும்.

முதல் ஆட்டத்தில் இந்திய அணி எப்படி இருக்கும். ஷேவாக்கிற்கு சந்தர்பம் கிடைக்குமா?

என்னுடைய கணிப்பு இதோ:

1. கங்குலி
2. ஷேவாக்
3. ராபின் உத்தப்பா அல்லது இர்பாஃன் பத்தான்
4. சச்சின் டெண்டுல்கர்
5. திராவிட்
6. யுவராஜ்சிங்
7. தோனி
8. ஹர்பஜன் அல்லது கும்ளே
9. அகர்கர்
10. ஜாஹீர்கான்
11. முனாஃப் படேல்

இப்பொழுது இந்தியா எந்த சுழற்பந்து வீச்சாளரை களத்தில் இறக்கவேண்டும் என்று பார்க்கவேண்டும். ஷேவாக் ஆட்டத்தில் இருந்தால் என்னுடைய ஓட்டு கும்ளேவிற்கு செல்லும். அதுபோல் ராபின் உத்தப்பா உள்ளே வருவாரா? அப்படி வந்தால் இர்பாஃன் பத்தான் வெளியேறுவார். இந்தியா இர்பாஃன் பத்தானிற்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்கும் என்று நினைக்கிறேன்.

அப்படியானால் வெளியே இருப்பது:
ஸ்ரீசந்த்
கார்த்திக்
ராபின் உத்தப்பா
ஹர்பஜன்சிங்
ஆகிய நால்வரும் வெளியே இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

இது என்னுடைய கணிப்பு. திராவிடும் சாப்பலும் வேறுமாதிரி நினைத்தாலும் நினைக்கலாம்.

அமரன்
12-03-2007, 11:07 AM
உலகக்கிண்ண கிரிக்கட்போட்டியின் முதலாவது மோதல் நாளை மேற்கிந்தியாவின் ஜமைக்காவில் உள்ள சபினா மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் பாகிஸ்தானும் மேற்கிந்தியத்தியாவும் மோதுகின்றன. இதில் ஜெயிக்கப்போவது யாரு?

aren
12-03-2007, 11:10 AM
என்னுடைய ஓட்டு மேற்கிந்திய தீவிற்கே. ஆனால் நாம் நினைப்பது நடப்பதில்லையே.

அமரன்
12-03-2007, 11:12 AM
என்னுடைய ஓட்டு மேற்கிந்திய தீவிற்கே. ஆனால் நாம் நினைப்பது நடப்பதில்லையே


என் ஓட்டுக்கூட அதே. அரென் நீங்க வாக்களிக்கவில்லையே. ஏன்?.

aren
12-03-2007, 11:16 AM
என் ஓட்டுக்கூட அதே. அரென் நீங்க வாக்களிக்கவில்லையே. ஏன்?.

அவ்வளவுதானே, போட்டுவிட்டால் போயிற்று.

அமரன்
12-03-2007, 11:18 AM
அவ்வளவுதானே, போட்டுவிட்டால் போயிற்று


நன்றி அரென். வாக்கைக் கூடக் கேடுத்தான் பெறவேண்டியிருக்கின்றது

அறிஞர்
12-03-2007, 02:06 PM
இப்போதைய நிலையில் பாகிஸ்தானுக்கு வாய்ப்புகள் அதிகம்.

போட்டி மார்ச் 13 தானே.. பங்குனி 13ந்தேதி எங்கிருந்து வந்தது....

அறிஞர்
12-03-2007, 02:09 PM
இந்தியாவின் ஆட்டத்தை... ஹைலட்டாக பார்த்தேன்... பெரிதாக ஒன்றும் ஆடவில்லை......

பேட்டிங்க் பொறுத்தவரை கார்த்திக்கும், உத்தப்பாவும்... சரியான வேலையை செய்தார்கள்...

சேவாக் முதல் 2 போட்டிகளுக்கு உட்கார வைக்கப்பட்டால்... ஒழுங்காக ஆடுவார் என நம்புகிறேன்.

அமரன்
12-03-2007, 02:41 PM
போட்டி மார்ச் 13 தானே.. பங்குனி 13ந்தேதி எங்கிருந்து வந்தது


அறிஞரிடமிருந்து இப்படி ஒரு கேள்வியா. நம்ப முடியவில்லை. மார்ச்சின் தமிழ் என்ன அறிஞரே.

அறிஞர்
12-03-2007, 02:46 PM
அறிஞரிடமிருந்து இப்படி ஒரு கேள்வியா. நம்ப முடியவில்லை. மார்ச்சின் தமிழ் என்ன அறிஞரே.
தமிழ் மாதங்கள்.. வேறு.. ஆங்கில மாதங்கள் வேறு.

ஆங்கில மாதங்களுக்கு ஆங்கிலத்தில் தான் பெயர்.

மார்ச் 13ந்தேதி... தமிழ் மாதப்படி மாசி 29ந்தேதி

http://tamilcalender.hosuronline.com/MarchApril/13032007.jpg

அமரன்
12-03-2007, 02:48 PM
தமிழ் மாதங்கள்.. வேறு.. ஆங்கில மாதங்கள் வேறு.

ஆங்கில மாதங்களுக்கு ஆங்கிலத்தில் தான் பெயர்.

மார்ச் 13ந்தேதி... தமிழ் மாதப்படி மாசி 29ந்தேதி


விளக்கத்துக்கு நன்றி அறிஞரே. இனி வரும் பதிப்புகளில் திருத்தி அமைக்கின்றேன்.

மனோஜ்
12-03-2007, 03:12 PM
மேற்கிந்திய தீவிற்கே எனது ஓட்டு

leomohan
12-03-2007, 04:25 PM
பங்காளி சண்டை. அதனால் பாகிஸ்தானுக்கு ஓட்டு இல்லை. பக்கத்து வீட்டுக்காரனக்கே ஓட்டு.

ஷீ-நிசி
12-03-2007, 04:28 PM
பாகிஸ்தான் தான் வெற்றி பெரும்...

ஆதவா
12-03-2007, 05:59 PM
பங்காளி சண்டை. அதனால் பாகிஸ்தானுக்கு ஓட்டு இல்லை. பக்கத்து வீட்டுக்காரனக்கே ஓட்டு.

இது விளையாட்டு... திறமை அடிப்படையில் ஓட்டு இடலாமே!! :mad:


பாகிஸ்தான் தான் வெற்றி பெரும்...

வெஸ்ட் இண்டீசும் வெற்றிபெற வாய்ப்பிருக்கிறது..

பயிற்சி ஆட்டத்தை வைத்து எதையும் குறைவாக மதிப்பிடமுடியாதே!

முதல் போட்டியே சற்று பெரிய போட்டி என்பதால் விறுவிறுப்பு அதிகமாக இருக்கும்.. பார்ப்போம். வீரர்களின் திறமையை...

அறிஞர்
12-03-2007, 06:12 PM
முதல் போட்டியே சற்று பெரிய போட்டி என்பதால் விறுவிறுப்பு அதிகமாக இருக்கும்.. பார்ப்போம். வீரர்களின் திறமையை...
உள்ளூர் மேற்கு இந்தியா அதிக அழுத்தம் இருக்கும்.. யார் வெற்றி பெறுவார்கள் எனப்பொறுத்திருந்து பார்ப்போம்.

அமரன்
12-03-2007, 06:13 PM
இது விளையாட்டு... திறமை அடிப்படையில் ஓட்டு இடலாமே!!


ஆதவனின் கருத்தொடு நான் ஒத்துப்போகின்றேன்.திறமையின் அடிப்படையில் வாக்களிப்போம்.

pradeepkt
13-03-2007, 04:50 AM
எனக்கும் கிரிக்கெட்டுக்கும் ஏணி என்ன ஏரோப்ளேன் வைத்தும் எட்டாத தூரம்தான்.
ஆனாலும் என்னவோ பாகிஸ்தான் ஜெயிக்கும்னு தோணுது. இல்லைன்னா நாளைக்குக் காலையில நானே சொன்னதை மாத்தி பல்டி அடிச்சிட்டுப் போறேன்... :D

ப்ரியன்
13-03-2007, 10:04 AM
தமிழ் மாதங்கள்.. வேறு.. ஆங்கில மாதங்கள் வேறு.

ஆங்கில மாதங்களுக்கு ஆங்கிலத்தில் தான் பெயர்.

மார்ச் 13ந்தேதி... தமிழ் மாதப்படி மாசி 29ந்தேதி

http://tamilcalender.hosuronline.com/MarchApril/13032007.jpg


:) நானும் இதையே நினைத்தேன்

ஷீ-நிசி
13-03-2007, 11:01 AM
பயிற்சி போட்டியிலேயே தோற்றதனால் தான் மனதளவில் சோர்ந்திருப்பார்க்கள்..சொந்த மண்ணில் விளையாடுவதால் வெற்றி பெற வேண்டும் என்ற அதிகபடியான pressure...பாகிஸ்தான் தென் ஆப்ரிக்காவை வெற்றி பெற்றுள்ளதனால் மிகுந்த தன்னம்பிக்கை.. அதுவுமில்லாமல் உலக கோப்பை வெல்லும் அணியாக அந்த அணி கருதபடாததினால் அவர்களுக்கு எவ்வித pressure -ம் இல்லை.. இந்தக் காரணங்களினாலேயே பாகிஸ்தான் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கருதுகிறேன்..

pradeepkt
13-03-2007, 11:20 AM
:)
நானும் இதையே நினைத்தேன்
சரி ஆனது ஆச்சு,
இன்னைக்கு இன்சமாம் ராசிக்கு என்ன பலன் போட்டிருக்காகன்னு சொல்லீருங்க... நாங்க கணிச்சுக்கிருவம்... :)

பரஞ்சோதி
13-03-2007, 11:30 AM
பாகிஸ்தானிடம் பேட்டிங்க் நன்றாக இருக்குது, ஆனால் பந்து வீச்சு பலம் இல்லை, ஆக மேற்கு இந்திய தீவுகள் இரண்டாவதாக மட்டை பிடித்தால் வெல்ல வாய்ப்பு இருக்கிறது.

ஓவியா
13-03-2007, 11:44 AM
மன்னிக்கவும்

ஏன் ஒட்டேடுப்பை மூடினீர்கள்???/


என் ஒட்டு பாகிஸ்தனுக்கே

அமரன்
13-03-2007, 03:48 PM
மன்னிக்கவும்
ஏன் ஒட்டேடுப்பை மூடினீர்கள்???/
என் ஒட்டு பாகிஸ்தனுக்கே


போட்டி ஆரம்பமாகிவிட்டதால் மூடப்பட்டு விட்டது. இருந்தாலும் உங்க கருத்துக்கு நன்றி
..
.

ஆதவா
13-03-2007, 03:51 PM
நன்றாக போய்க்கொண்டு இருக்கிறது உலகக் கோப்பை திரி.. இன்று பாகிஸ்தான் விண்டீஸ் முதல் சவால். பார்க்கலாம் எப்படி ஆடப்போகிறார்கள் என்று.. எல்லாரும் பாகிஸ்தாந்தான் செயிக்கும் என்று சொன்னாலும் விண்டீஸுக்கு ஒரு வாய்ப்பு இருப்பது மறுக்க முடியாது. விண்டீஸ் பயிற்சியில் தோற்றது ஒரு அனுபவமாக கைகொடுக்கும்.

மன்ற மேற்பார்வையாளர்களுக்கு.... உலகக்கோப்பை வரை கிரிக்கெட் செய்திகள் புது திரி ஆரம்பிக்காமல் இங்கேயே எல்லாரையும் பதிவிட அழைக்குமாறு கூப்பிடச் செய்யுங்களேன்... முடிந்தால் இதை ஸ்டிக்கியாக மாற்றலாம். நிறைய திரி அழைந்தால் கொஞ்சம் சிரமமாகவே இருக்கும்... இது தாழ்மையான வேண்டுகோள்..

அமரன்
13-03-2007, 04:00 PM
உலக கிரிக்கட் வல்லரசுகளின் பலப்பரீட்சை யுத்தம் ஆரம்பமாகிவிட்டது. அந்த வகையில் மார்ச் பதினாறில் சென்ட்.லூசியா மைதானத்தில் நடைபெற இருக்கும் இங்கிலாந்துக்கும் நியூசிலாந்துக்கும் இடையிலான போட்டியில் ஜெயிக்கப்போவது யாரு?


நியூசிலாந்து அணி விபரம்

ஸ்டீபென் பிளெமிங்
ஷேன் பொன்ட்
ஜேமெஸ் பிரங்ளின்
பீட்டர் புல்டொன்
மார்க் கிலெஸ்பி
பிரென்டொன் மக்கலம்
கிரெக் மக்மிலன்
மைக்கெல் மசோன்
ஜக்கப் ஓரம்
ஜீதன் பட்டேல்
ஸ்கொட் ஸ்டைரிஷ்
றோஸ் டைலர்
டார்லி டப்பி
டேனியல் விட்டொரி
லூ வின்சென்ட்

இங்கிலாந்து அணி

மைக்கல் வோகன்
ஜேம்ஸ் ஆன்டர்சன்
இயன் பெல்
றவின்டெர் போபறா
போல் காலிங்வூட்
ஜமி டார்லிம்பிளே
ஆன்றூ ப்லின்டோப்
எட் ஜோய்ஸ்
ஜோன் லூவிஸ்
சாயிட் மொகமட்
போல் நிக்சன்
மொன்டி பனசர்
கெவின் பீட்டர்ஸன்
லியம் பிளங்கட்
ஆன்றூ ஸ்ட்ரோஸ்

இவர்களில் கலக்கப்போவது யாரு?

தங்க கம்பி
13-03-2007, 04:10 PM
நியூசிலாந்துக்கு தான் வாய்ப்பு அதிகம்.

அமரன்
13-03-2007, 04:13 PM
நியூசிலாந்துக்கு தான் வாய்ப்பு அதிகம்.

தங்கக்கம்பி உங்கள் வாக்கைப் பதிவு செய்யுங்கள்.

மன்மதன்
14-03-2007, 08:10 AM
ஆதவரின் ஆலோசனை ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

பாகிஸ்தான் தோல்வியடைந்தது. வெஸ்ட் இண்டீஸ் கை ஓங்கியிருக்கிறது..

மன்மதன்
14-03-2007, 08:12 AM
மன்ற வாக்கெடுப்பு முடிவு வெற்றி தோல்வியை நிர்ணயிக்கிறதே.. அடடே.. வாழ்த்துக்கள் மக்கா..

poo
14-03-2007, 08:25 AM
ஒவ்வொரு பந்துக்கும் ரசிகர்கள் கொடுத்த ஆதரவு அருமை./. இதே வெறி கடைசிவரை இருக்குமானால் மே.இ. நிச்சயம் சாதிக்கும்!!

poo
14-03-2007, 08:38 AM
சேவாக் முதல் 2 போட்டிகளுக்கு உட்கார வைக்கப்பட்டால்... ஒழுங்காக ஆடுவார் என நம்புகிறேன்.

அவர் நம்பியிருப்பதே அந்த முதல் 2 போட்டிகளைத்தானே!!..

குட்டி அணி- தப்பித்தவறி ஒரு 50 அடிச்சிட்டா அப்பால 50 ஆட்டத்துக்கு அசைக்க முடியாதே!

pradeepkt
14-03-2007, 09:53 AM
அதான் சாதிச்சாச்சே...
நான் முன்பே சொல்லியபடி வெ. இ. அணி அபாரமாக ஆடி வெற்றிக் கோப்பையைத் தட்டியதால், மன்றத்தினர் சார்பாக எனக்கு வழங்கப்பட்ட "தீர்க்கதரிசி" என்னும் பட்டத்தை அடக்கத்தோடு ஏற்றுக் கொள்கிறேன்... :D :D :D

Mathu
14-03-2007, 10:33 AM
அதான் சாதிச்சாச்சே...
நான் முன்பே சொல்லியபடி வெ. இ. அணி அபாரமாக ஆடி வெற்றிக் கோப்பையைத் தட்டியதால், மன்றத்தினர் சார்பாக எனக்கு வழங்கப்பட்ட "தீர்க்கதரிசி" என்னும் பட்டத்தை அடக்கத்தோடு ஏற்றுக் கொள்கிறேன்... :D :D :D

நான்கூட முன்பொரு கருத்தில் இதை தான் வலியுறுத்தினேன், ஆனால்
இன்றைய ஆட்டத்தை பார்த்தால் உலககோப்பையை வெல்லும் பலம் இவர்களிடம் இல்லை போல் தெரிகிறது.
:confused: :rolleyes: :confused:
மேற்கு இந்திய தீவுகளின் பந்துவீச்சு பலமாக இருக்கிறது அங்குள்ள ஆடுகளங்களும் பந்துவீச்சாளர்களுக்கு தான் சாதகமானது. ஆனாலும்
அடிப்பவர்கள் கொஞ்சம் சொதப்புவதாக தெரிகிறது.

அறிஞர்
14-03-2007, 12:52 PM
அவர் நம்பியிருப்பதே அந்த முதல் 2 போட்டிகளைத்தானே!!..

குட்டி அணி- தப்பித்தவறி ஒரு 50 அடிச்சிட்டா அப்பால 50 ஆட்டத்துக்கு அசைக்க முடியாதே!
இப்படியே ஆட வைத்து தான்... நாடு உறு(ரு)ப்படாம போகுது... இப்ப பாருங்க.. கங்குலி எவ்வளவு பொறுப்பா ஆடுறாரு..

அமரன்
14-03-2007, 04:29 PM
முதல் போட்டி எமது மன்ற முடிவின்படி வந்திருக்கின்றது. அடுத்தபோட்டியும் அப்படித்தான் இருக்கும் என நினைக்கின்றேன்.

அறிஞர்
14-03-2007, 05:02 PM
கத்துக்குட்டி ஸ்காட்லாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா 253/3 (42 ஓவர்) எடுத்துள்ளது..... 500 ரன்கள் எடுப்பார்கள் என எதிர்பார்த்தனர்...

மழையால் ஆட்டம் தடை...

மற்றொரு ஆட்டத்தில் கென்யாவுக்கு எதிராக கனடா 199

அறிஞர்
15-03-2007, 02:48 PM
இலவசமாக கிரிக்கெட் பார்க்கலாம்... சாப்காஸ்ட் மூலம்...

http://www.sopcast.com/player/ (http://www.sopcast.com/player/)

இலங்கை போட்டியை இப்பொழுது கண்டு களிக்கலாம்.
Channel 18709, 15408 and 20538 on sopcast

அமரன்
15-03-2007, 04:11 PM
கத்துக்குட்டி ஸ்காட்லாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா 253/3 (42 ஓவர்) எடுத்துள்ளது..... 500 ரன்கள் எடுப்பார்கள் என எதிர்பார்த்தனர்...

மழையால் ஆட்டம் தடை...

மற்றொரு ஆட்டத்தில் கென்யாவுக்கு எதிராக கனடா 199


கொட்லண்ட் ஒண்ணும் கத்துக்குட்டி அணி இல்லை அறிஞரே. ஆஸ்திரேலியா சாதிக்கும் என பலர் எதிர்பார்த்தனர். ஆனால்.....

அறிஞர்
15-03-2007, 06:43 PM
இன்று இலங்கை அபாரமாக விளையாடினர்.....
அயர்லாந்தும் நன்றாக மட்டையடித்தார்கள்.

அறிஞர்
15-03-2007, 07:08 PM
tvuplayer மூலமாக இலவசமாக பார்க்கலாம்... இசைத்தமிழ் குழுமத்தினர்... கொடுக்கிறார்கள்...

ஸ்டீரிமிங்க் நன்றாக உள்ளது.

ப்ளேயர் இறக்குமிடம்..

http://www.tvunetworks.com/downloads/index.htm

அமரன்
16-03-2007, 10:14 AM
tvuplayer மூலமாக இலவசமாக பார்க்கலாம்... இசைத்தமிழ் குழுமத்தினர்... கொடுக்கிறார்கள்...

ஸ்டீரிமிங்க் நன்றாக உள்ளது.

ப்ளேயர் இறக்குமிடம்


அறிஞரே பதிவிறக்கம் செய்தபின் எப்படிப் பார்ப்பது என்பதையும் அறியத் தந்தால் நன்றாக இருக்குமே.

அமரன்
16-03-2007, 10:17 AM
இன்று இலங்கை அபாரமாக விளையாடினர்.....
அயர்லாந்தும் நன்றாக மட்டையடித்தார்கள்.


நீண்ட நாட்களின் பின்னர் அணித் தலைவர் ஜயவர்தனா சிறப்பாக விளையாடினார். அத்தப்பத்து விளையாடவில்லையே.

அறிஞர்
16-03-2007, 12:42 PM
அறிஞரே பதிவிறக்கம் செய்தபின் எப்படிப் பார்ப்பது என்பதையும் அறியத் தந்தால் நன்றாக இருக்குமே.
பிளேயரை திறந்து.. சேனல் தேர்ந்தெடுத்து பார்க்க வேண்டியது தான். முயன்று பாருங்கள்... முடியாவிட்டால் கூறுங்கள் உதவுகிறேன். :nature-smiley-008: :nature-smiley-008:

Joe
16-03-2007, 01:14 PM
எந்த சேனலில் வருகிறது அறிஞரே..

ஜோ

அமரன்
16-03-2007, 01:24 PM
தரவிறக்கம் செய்திவிட்டேன் அறிஞரே. எந்தச் சானல் என்றுதான் தெரியவில்லை.

aren
16-03-2007, 01:25 PM
பாகிஸ்தான் தோற்றுவிட்டது. ஜிம்பாப்வேவும் அயர்லாந்தும் ஆட்டம் டையில் முடிந்தால் நன்றாக இருக்கும் என்று நேற்று மதியம் நினைத்தேன், ஆனால் இரவே இப்படி இருக்கும் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

நான் இலங்கை ஆடும் ஆட்டத்தைப் பார்த்துவிட்டு இரவு 12.30 மணியளவில் படுக்க சென்றுவிட்டேன். பின்னர் ஒரு நான்கு மணிநேரம் கழித்து ஜிம்பாப்வே ஆட்டம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம் என்று நினைத்து வந்து தொலைகாட்சியை சுடுக்கினால் ஆட்டம் சுறுசுறுப்பாக இருந்தது. அப்பொழுதும் ஜிம்பாப்வே வெற்றி பெரும் என்றே நினைத்தேன். கடைசி ஓவரில் இருக்கும்பொழுது டை ஆகும் என்று நினைக்கவில்லே. ஆனால் கடைசி பந்தில் டை ஆகி என் மனதில் தோன்றியது அப்படியே நடந்துவிட்டது.

இப்பொழுது பாகிஸ்தான் அடுத்த இரண்டு போட்டியிலும் வென்றே ஆகவேண்டிய கட்டாய நிலையில் இருக்கிறது. அப்படி அவர்கள் அயர்லாந்திடமோ அல்லது ஜிம்பாப்வேவிடமோ தோற்றுவிட்டால் அடுத்த பாகத்திற்கு போகமுடியாமல் ஆகிவிடும் இக்கட்டான நிலையில் பாகிஸ்தான் இருக்கிறது.

ஜிம்பாப்வேயின் ஷான் வில்லயம்ஸோ அல்லது பிரண்டன் டைலரோ சதம் அடித்து சிபாந்தா அல்லது மாட்ஸுகனேரே ஒரு 50 அடித்துவிட்டால் பாகிஸ்தானை வெல்வதற்கு வாய்ப்பிருக்கிறது. பாகிஸ்தான் முதலில் ஆடி 240 அளவில் அவுட் அகிவிட்டால், ஜிம்பாப்வே கொஞ்சம் முயற்சி செய்தால் வெல்வதற்கு வாய்ப்பிருக்கிறது.

இது நடக்குமா? அப்படி நடந்தால் பல பெரிய ஆட்டக்காரர்களான இம்சமாம் போன்றவர்கள் ஒரு நாள் போட்டியிலிருந்து வெளியேறுவார்கள். அதுமாதிரி சோயிப் அக்தரின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்.

பாகிஸ்தான் - ஜிம்பாப்வே ஆட்டம் பார்க்கவேண்டிய ஆட்டமாக அமையுமா?

பொருத்திருந்து பார்க்கலாம்.

இதே நிலமை இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் இருக்கும் பிரிவிற்கும் வரலாம். ஆகையால் இந்தியா இலங்கையை எப்படியாவது வென்றுவிடவேண்டும் என்பதே என் விருப்பம்.

நன்றி வணக்கம்
ஆரென்

அமரன்
16-03-2007, 02:26 PM
நன்ரி அறிஞரே பார்த்துக்கொண்டிருக்கின்றேன். நியூசிலாந்து இங்கிலாந்து ஆட்டம் நடைபெறுகின்றது

அறிஞர்
16-03-2007, 03:00 PM
விளையாண்டு முடிந்தவுடன்.. முழு மேட்சும் பதிவு செய்த தளங்கள் உள்ளது.. நண்பர்களுக்கு வேண்டுமானால் தெரியப்படுத்துங்கள்.

அறிஞர்
16-03-2007, 03:03 PM
நன்ரி அறிஞரே பார்த்துக்கொண்டிருக்கின்றேன். நியூசிலாந்து இங்கிலாந்து ஆட்டம் நடைபெறுகின்றது
என்னால் இயன்ற உதவி.. எஞ்சாய் பண்ணுங்கள்..
இனி பார்க்கும் சானல் நம்பரை இங்கு தெரியப்படுத்துங்கள்.

அறிஞர்
16-03-2007, 03:18 PM
http://www.viidoo.com/en/index.php தளம் மூலமாகவும் பார்க்கலாம்.

சானல் 54256

இங்கிலாந்தின் நிலை... பரிதாபமாக உள்ளது 57/3 (16 ஓவர்)

அமரன்
16-03-2007, 04:00 PM
இப்போது பரவாயில்லை. பீட்டர்சனும் காலிங்வூடும் ஓரளவு நிலைமையை சமாளிக்கின்றார்கள். 95 - 3(28 ஓவர்)

அமரன்
16-03-2007, 04:02 PM
(http://www.viidoo.com/en/index.php)http://www.viidoo.com/en/index.php தளம் மூலமாகவும் பார்க்கலாம்.

சானல் 54256

(http://www.viidoo.com/en/index.php)
TVU player இலும் அதே சானல்தான்.

அமரன்
16-03-2007, 04:32 PM
இங்கிலாந்தின் இன்றைய போட்டியின் நம்பிக்கை நட்சத்திரங்களான காலிங்வூடும் பீட்டர்சனும் ஆட்டமிழந்து சென்றுவிட்டனர். 133/5 என்ற நிலையில் தடுமாறுகின்றது இங்கிலாந்து.

அறிஞர்
16-03-2007, 04:35 PM
133/6 இங்கிலாந்து அவ்வுளவுதான்.. பிளிண்டாப்பும் சென்றுவிட்டார்.

மன்மதன்
16-03-2007, 04:36 PM
விளையாண்டு முடிந்தவுடன்.. முழு மேட்சும் பதிவு செய்த தளங்கள் உள்ளது.. நண்பர்களுக்கு வேண்டுமானால் தெரியப்படுத்துங்கள்.

என்ன அறிஞரே இதையெல்லாம் கேட்டுகிட்டு.. கொடுங்க நண்பரே..

(இது மாதிரி லிங்க் ஒவ்வொரு பதிவின் இடையிலும் கொடுக்கும் போதும், திரியின் முதல் பதிவில் சேர்த்துவிட்டால் உடனே பார்ப்பதற்கு வசதியாக இருக்கும்..)

அமரன்
16-03-2007, 04:37 PM
ஷேன் பான்ட் கலக்கி விட்டார். முக்கியமான இரண்டு முக்கிய வீரர்களை வெளியேற்றிவிட்டார்.

அறிஞர்
16-03-2007, 04:38 PM
என்ன அறிஞரே இதையெல்லாம் கேட்டுகிட்டு.. கொடுங்க நண்பரே..

(இது மாதிரி லிங்க் ஒவ்வொரு பதிவின் இடையிலும் கொடுக்கும் போதும், திரியின் முதல் பதிவில் சேர்த்துவிட்டால் உடனே பார்ப்பதற்கு வசதியாக இருக்கும்..)
மேட்ச் முடிந்தவுடன் 8 மணி நேரம் பதிவு...உள்ளது... நல்ல மேட்ச் என்றால் எல்லாருக்கும் உபயோகமாக இருக்கும். கொடுக்கிறேன்.

இலவசமாக கிரிக்கெட் பார்க்கும் தளங்களை முன்புறம் தெரிவித்துவிடுகிறேன்.

அமரன்
16-03-2007, 04:48 PM
139/7
இங்கிலாந்து தடுமாறுகின்றது.

அறிஞர்
16-03-2007, 04:53 PM
மன்ற உறுப்பினர்களின் முடிவின் படி நியூசிலாந்துதான் வெற்றி பெறும் போல்..

அமரன்
16-03-2007, 04:55 PM
மன்ற உறுப்பினர்களின் முடிவின் படி நியூசிலாந்துதான் வெற்றி பெறும் போல்..


மன்றத்துக்கணிப்பு சரியாக அமைவதில் மகிழ்ச்சி. அடுத்த போட்டிக்கான வாக்கெடுப்பை எப்படி இணைப்பது அறிஞரே இணையுங்கள்..

அமரன்
16-03-2007, 04:58 PM
நாளைய போட்டி இந்தியாவுக்கும் பங்களாதேசுக்கும் இடையில் நடைபெற இருக்கின்றது. அதுபற்றிய உங்கள் கருத்தை தெரிவியுங்கள்

ஆதவா
16-03-2007, 06:40 PM
தென்னாப்பிரிக்கா சாதனை ஆட்டம்:

தென்னாப்பிரிக்கா நெதர்லாந்து இடையேயான ஆட்டம் வெகு வேகமாக சென்று கொண்டிருக்கிறது. பாவம் நெதர்லாந்து.. கொஞ்சம் அடிபடத்தான் வந்திருப்பார்கள் ஆனால் இப்படியா? போட்ட எல்லா பந்துகளும் சிக்ஸர்களாக பறந்துகொண்டு இருக்கிறது..

கிப்ஸ் ஓவரின் ஆறு பந்துகளையும் சிக்ஸருக்கு விளாசி தன்னை வீரன் என்று நிரூபித்திருக்கிறார் ஒரு சின்ன அணியிடம்.

பவுச்சர் அதிவேக அரைசதம் அடித்திருக்கிறார்.... காலீஸ் ஏற்கனவே சதத்தில் இருக்கிறார்.முழுமையாக ஐம்பது ஓவர் பிடித்தால் ஐநூறு ரன்களை எட்டிவிடும் போலத்தான் தெரிகீறது.

இப்போது 353 ரன்களுக்கு 3 விக்கட்கள்
பவுச்சர் 31 பந்துகளுக்கு 71 ரன்கள்
காலிஸ் 109 பந்துகளுக்கு 128 ரன்கள்.. இதை எழுதுவதற்குள் இரண்டு சிக்ஸர்கள் அடிக்கக்கூடும். (இதிலேயே 30 சிக்ஸர்கள் அடக்கம்:icon_shok: )ஆனால் 40 ஓவர்கள் இருந்ததினால் தப்பித்தார்கள்.

இத்தனை சிக்ஸர்கள் இதுவரை எந்த ஒரு ஒருநாள் போட்டியிலும் அடித்திருக்கமாட்டார்கள்.
கத்துக்குட்டி அணியிடம் தன் வீரத்தைக் காண்பிக்கிறது தென் ஆப்பிரிக்கா!!!... ()

இதைப் பார்த்து ஆஸ்திரேலியா சும்மா விடுமா?
இன்னும் ஸ்காட்லாந்து பாக்கி இருக்குதே தெனாப்பிரிக்காவுக்கு...:1:

நாளை தெரியும் நம்மவர்கள் கதி.

அட போங்கப்பா! இவங்க நிறுத்துவாங்கன்னு பாத்தா சிக்ஸ் கிளப்பறாங்க.. எனக்கும் வேற தூக்கம் வருது.. நாளைக்கு சாதனை செய்திதான் போங்க..

மன்மதன்
16-03-2007, 06:53 PM
தென்னாப்பிரிக்கா சாதனை ஆட்டம்:
.


எதில் பார்க்கிறீர்கள் ஆதவா.. நெட்? டிவி?

aren
17-03-2007, 01:33 AM
நான் கிப்ஸ் அடித்த ஆறு சிக்சர்களையும் பார்த்து ரசித்தேன். விளையாடும் மைதானம் மிகவும் சிறியது. அதுபோல் எதிர்த்து ஆடும் அணியும் மிகவும் சிறியது.

ரவி சாஸ்திர்யும், சோபர்ஸீம் இதுவரை ஒரே ஓவரில் ஆறு சிக்சர்கள் அடித்து சாதனை செய்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அடித்தது கிளப் கிரிக்கெட்டில். ரவி சாஸ்திரி திலக்ராஜ் பந்துவீச்சில் ஆறு சிக்சர்கள் அடித்தார். எனக்கென்னவோ கிப்ஸின் இந்த சாதனை பெரியதாக படவில்லை.

இப்படி சின்ன டீமுகள் விளையாடுவதால் நம் மக்களுக்கு சாதனை மழையாக பொழிகிறது. இப்படி சாதனை படைத்தால்தானே முடியும்.

இங்கிலாந்து மிகவும் மோசமாக விளையாடியது. இது நியூஜிலாந்து சிறப்பாக விளையாடியதால் கிடைத்த வெற்றியல்ல. இங்கிலாந்து மோசமாக விளையாடியதால் கிடைத்த வெற்றி. இருந்தாலும் முதல் மூன்று விக்கட்டுக்களை இழந்தவுடன் சோர்ந்துவிடாமல் நிதானமாக ஆடி வெற்றிவாகை சூடியதற்காக நியூஜிலாந்திற்கு என் வாழ்த்துக்கள்.

ஷேன் பாண்டின் அந்த ஒரு ஓவர் மிகவும் அபாரம்.

இன்றைய மாட்ச் எப்படி இருக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

நன்றி வணக்கம்
ஆரென்

அறிஞர்
17-03-2007, 02:55 AM
மக்கள் ரசித்து ஆட்டத்தை பார்த்திருக்கிறீர்கள்....

மற்றவர்கள் ரசிக்க முழு ஆட்டத்திற்கு உரிய லிங்கை தருகிறேன்.

poo
17-03-2007, 04:51 AM
உலககோப்பை தொடங்கிய நாள் முதல் தினமும் இரவு 2 மணிக்குமேல்தான் தூக்கமே...

இரண்டு மேட்ச்களையும் மாற்றி மாற்றி பார்த்தேன்.. அதென்னவோ தெரியல.. ஒரு நல்ல மேட்ச் பார்க்கனும்னே இன்னொரு மேட்ச் மோசமாக இருக்கிறது...

நேற்று இங்கிலாந்து சொதப்பவே கிப்ஸ்,காலிஸ், பவுச்சர் கோஷ்டியின் அடிகளை முழுவதுமாக காண முடிந்தது..

சும்மானா தூக்கி போட்டாக்கூட ஆறையும் ஆறா அடிக்க கொஞ்சம் தில்லு வேணும்ல.. பந்துவீச்சாளர் அந்த 6 -பந்தில் 2 பந்தை நன்றாகத்தான் வீசினார்.. கிப்ஸ் அடிக்க வேண்டுமென அடித்தார்.. 50 ஓவர் முழுவதுமாக ஆடியிருந்தால் நிச்சயமாக 500 - ரன்கள் அடித்திருப்பார்கள்.. இத்தனைக்கும் முதல் 9 -ஓவரில் 38 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.

பொதுவாகவே இதுவரை பவர் பிளேக்களில் எந்த அணியும் அதிக ரன்கள் எடுக்கவில்லை.

ஆரம்பத்தில் இங்கிலாந்து விக்கெட்டுகளை அள்ள.. கொஞ்சம் யோசித்தேன்.. நாம ஓட்டை மாத்திப் போட்டுட்டோமோன்னு..
கடைசியில மன்றத்து நம்பிக்கையை காப்பாத்திட்டாங்க நியுஸி..

இதுவரை இதுதான் சிறந்த அணின்னு யாரையும் சொல்ல முடியல.. அதுதான் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு பலம்.. இது தொடரனும்.. பல அதிசயங்கள் நடக்கனும்..

சூப்பர்-8 -க்கு போகும் அணிகளில் சில வாய்பிளக்க வைக்கப்போகிறது!

கென்யா இங்கிலாந்தை ஜெயிச்சா?!!

வ.தேசம் இந்தியாவை ஜெயிச்சா?! (சொல்ல முடியாதுப்பா.. எதுவும் நடக்கும்..இலங்கையைவிட நாம பவுலிங்கில் வீக்குதானே..)

அயர்லாந்து பாகிஸ்தானை ஜெயிச்சா?!.. (அயர்லாந்தின் பந்துவீச்சு நன்றாக இருக்கிறது.. அப்ரிடி வர்ற வரைக்கும் ஆபத்தில்லை..)

அமரன்
17-03-2007, 09:10 AM
பவுச்சர் அதிவேக அரைசதம் அடித்திருக்கிறார்....


உலகக்கிண்ணப் போட்டிகளில் அதிவேக அரைச்சதம் என்பதுதான் சரியானது. ஒட்டு மொத்த கிரிக்கட்டில் அதிவேக அரைச்சதம் ஜயசூர்யா வசம்.

அமரன்
17-03-2007, 09:14 AM
இப்படி சின்ன டீமுகள் விளையாடுவதால் நம் மக்களுக்கு சாதனை மழையாக பொழிகிறது. இப்படி சாதனை படைத்தால்தானே முடியும்.



உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. வேறு அணி ஏதாவது இப்படி சாதனை புரிந்தால் பரவாயில்லை. ஆனால் தென்னாபிரிக்க அணியினர் ஆஸ்திரேலியாவின் இமாலய இலக்கையே எட்டிப்பிடித்தனர். அவர்கள் இன்றும் பாராட்டப்படவேண்டியவர்கள்.

அமரன்
17-03-2007, 09:18 AM
வாக்களிக்க முடியவில்லையே. இந்தியாவின் துடுப்பாட்ட வரிசை வலுவானதாக இருந்தாலும் வங்கதேசத்தின் பந்திவீச்சும் களத்தடுப்பும் வட்மோரின் நெறிப்படுத்தலில் சிறப்பாக இருக்கின்றது. அதனால் இந்தியா 300 ஐ தாண்டுவது கடினம் என்று நினைக்கின்றேன். விளையாட்டில் எதுவும் நடக்கலாம். அதிஷ்டம் கிரிக்கட்டில் முக்கிய பங்காற்றுகின்றது. இன்று எப்படியோ?

மனோஜ்
17-03-2007, 09:44 AM
http://www.viidoo.com/en/index.php தளம் மூலமாகவும் பார்க்கலாம்.

சானல் 54256

stopped என்று வருகிறது :fragend005: என்ன செய்வது அறிஞரே உதவுங்கள்

அமரன்
17-03-2007, 09:47 AM
stopped என்று வருகிறது :fragend005: என்ன செய்வது அறிஞரே உதவுங்கள்

ஆம். அது நிறுத்தப்பட்டு விட்டதுபோலும். வேறு ஏதாவது இணைப்பு இருந்தால் சொல்லுங்கள் அறிஞரே

அறிஞர்
17-03-2007, 02:14 PM
sopcast ல் 20735

TVU ல் 54256, 55099.

தங்க கம்பி
17-03-2007, 03:38 PM
என்னத்த சொல்ல?75க்கு4 அருமை!அருமை!! விரைவில் பொட்டியை கட்டவேண்டியதுதான்.

saguni
17-03-2007, 03:40 PM
ஆரம்பத்திலேயே தடுமாற்றம். பூஜ்யத்தில் ஆட்டமிழக்கவேண்டிய நம் அதிரடிவீரர்(பெவிலியன் போவதில்) சேவாக் வெற்றிகரமாய் 2 ரன் எடுத்து ஆட்டமிழந்துள்ளார்.

உத்தப்பா ஒற்றையிலக்கம்.

தெண்டுல்கர் ஏமாற்றிவிட்டார்.

டிராவிட் இரட்டை இலக்கம்.

தடுமாறும் இந்தியா..நூறைத் தாண்டுமா?

இல்லையேல் வருணபகவானே வந்து மானம் காப்பாற்றும்

மன்மதன்
17-03-2007, 05:52 PM
இதுவரை இதுதான் சிறந்த அணின்னு யாரையும் சொல்ல முடியல.. அதுதான் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு பலம்.. இது தொடரனும்.. பல அதிசயங்கள் நடக்கனும்..

சூப்பர்-8 -க்கு போகும் அணிகளில் சில வாய்பிளக்க வைக்கப்போகிறது!

கென்யா இங்கிலாந்தை ஜெயிச்சா?!!

வ.தேசம் இந்தியாவை ஜெயிச்சா?! (சொல்ல முடியாதுப்பா.. எதுவும் நடக்கும்..இலங்கையைவிட நாம பவுலிங்கில் வீக்குதானே..)

அயர்லாந்து பாகிஸ்தானை ஜெயிச்சா?!.. (அயர்லாந்தின் பந்துவீச்சு நன்றாக இருக்கிறது.. அப்ரிடி வர்ற வரைக்கும் ஆபத்தில்லை..)


ஓவியா .இங்கே கொஞ்சம் கவனிங்க.. பூவுக்கு கிரிக்கெட் சம்பந்தமா ஏதாவது பட்டம் கொடுங்க....

மனோஜ்
17-03-2007, 05:56 PM
தற்பொழுது இந்தியா நிலவரம் என்ன?
கொஞ்சம் செல்லுங்க நண்பா?

மன்மதன்
17-03-2007, 06:15 PM
பரிதாப நிலையில் இருந்தது. கடைசி விக்கெட் ஜோடி காப்பாற்றியது என்லாம்.. பார்க்கலாம்..
இங்கே ஸ்கோர் (http://content-ind.cricinfo.com/wc2007/engine/current/match/247464.html)

saguni
17-03-2007, 06:40 PM
நமது பந்துவீச்சாளர்கள் கர்ண பரம்பையில் வந்த வள்ளல்கள்

4,4,1,1,4,0 என குவிகிறது ஓட்டங்கள் (நாமல்ல...வங்காள அணி)

மிக வலுவான நிலையில் வங்காளதேசம்..இந்தியா தோல்வியைத்தழுவுவது கிட்டதட்ட உறுதி.

தற்போதைய நிலவரம் 69/ 1 (13 ஓவரில்)

ஒரே ஆறுதலான விசயம் பாகிஸ்தான் நம்மைவிட மோசம் என்பதுதான். அநேகமாய் விரைவில் அவர்கள் உலக கோப்பையில் இருந்து வெளியேறும் செய்தி வரும்.

மனோஜ்
17-03-2007, 06:42 PM
உலககோப்பை இந்தியா?????????????????????

அறிஞர்
17-03-2007, 06:59 PM
79/3.... பங்களாதேஷ்... இன்னும் இரண்டு விக்கெட் வீழ்ந்தால் இந்தியா வெற்றி பற்றி சிந்திக்கலாம்.

பாகிஸ்தான் 132க்கு எல்லா விக்கெட்டுகளையும் இழந்தது..கொஞ்சம் ஆறுதலான செய்தி...

மனோஜ்
17-03-2007, 09:14 PM
இந்தியா இப்படி தேல்வியை கானும் என எதிர்பாக்காதது
இப்படி போனால் இந்தியாவிற்கு தண்ணீ கப்புகூட கிடைக்காது

அறிஞர்
17-03-2007, 10:05 PM
பயிற்சி ஆட்டத்துல... பந்தா பண்ணிட்டு... தினாவெட்டா போனா இப்படிதான்..

போகிற போக்கை பார்த்தால்.. பங்களாதேஷ்.. அடுத்த ரவுண்ட்டுக்கு போய் விடும் போல்.

அடுத்த அணி இலங்கையா.. இந்தியாவா... என யோசிக்க வைக்கிறது..

அறிஞர்
17-03-2007, 10:15 PM
தென்னாப்பிரிக்கா, நெதர்லாந்து ஆட்டம் ஹைலைட்ஸ்

http://www.criki.com/videos/show/944 (http://www.criki.com/videos/show/944)

இந்தியா- பங்களாதேஷ்.

http://www.criki.com/videos/show/956 (http://www.criki.com/videos/show/956)

இளசு
17-03-2007, 10:17 PM
79/3.... பங்களாதேஷ்... இன்னும் இரண்டு விக்கெட் வீழ்ந்தால் இந்தியா வெற்றி பற்றி சிந்திக்கலாம்.

பாகிஸ்தான் 132க்கு எல்லா விக்கெட்டுகளையும் இழந்தது..கொஞ்சம் ஆறுதலான செய்தி...

ஆமாம் அறிஞரே..

நமக்கு இரண்டு கண்ணு போனாலும்....

அயர்லாந்து இன்னும் 29 ரன் ( 6 விக்கெட்;14 ஓவர்) எடுத்தால்
எரிச்சல் கொஞ்சம் தணியும்...:icon_wacko:

இளசு
17-03-2007, 10:24 PM
..

இதுவரை இதுதான் சிறந்த அணின்னு யாரையும் சொல்ல முடியல.. அதுதான் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு பலம்.. இது தொடரனும்.. பல அதிசயங்கள் நடக்கனும்..

சூப்பர்-8 -க்கு போகும் அணிகளில் சில வாய்பிளக்க வைக்கப்போகிறது!

கென்யா இங்கிலாந்தை ஜெயிச்சா?!!

வ.தேசம் இந்தியாவை ஜெயிச்சா?! (சொல்ல முடியாதுப்பா.. எதுவும் நடக்கும்..இலங்கையைவிட நாம பவுலிங்கில் வீக்குதானே..)

அயர்லாந்து பாகிஸ்தானை ஜெயிச்சா?!.. (அயர்லாந்தின் பந்துவீச்சு நன்றாக இருக்கிறது.. அப்ரிடி வர்ற வரைக்கும் ஆபத்தில்லை..)


முதல்ல சொன்னதுக்கு கொத்து வேப்பிலையும்
அடுத்து சொன்னதுக்கு கை சர்க்கரையும்
கலந்து ஊட்டுறேன் பூ-வுக்கு!:innocent0002:

இளசு
17-03-2007, 10:29 PM
அடுத்தடுத்து 2 விக்கெட் இழந்து அயர்லாந்து என் வயிற்றில்
அதிகபட்ச புளியைக் கரைக்குதே...

இளசு
17-03-2007, 10:55 PM
அடுத்தடுத்து 2 விக்கெட் இழந்து அயர்லாந்து என் வயிற்றில்
அதிகபட்ச புளியைக் கரைக்குதே...

புளி இப்போ பால் ஆயிருச்சு

இன்னும் 3 ரன் பாக்கி..!!!:thumbsup:

aren
18-03-2007, 01:01 AM
நான் எதிர்பார்த்தது நடந்துவிட்டது. பங்களாதேஷ் அடுத்த கட்டத்திற்கு செல்ல வாய்ப்புள்ளது ஆகையால் இந்தியா நிச்சயம் இலங்கையை வெல்லவேண்டும் அதுவும் அதிக ரன் வித்யாசத்தில் இருக்கவேண்டும். இந்தியா குறைந்தது 320 - 340 ரன்கள் எடுத்து இலங்கையை 250க்குள் நிறுத்தவேண்டும். அப்பொழுதுதான் இந்தியா அடுத்த கட்டத்திற்கு செல்லமுடியும்.

பாகிஸ்தான் நான் நினைத்ததுமாதிரி இரண்டாவது ஆட்டத்திலும் தோல்வியுற்று இரண்டாவது கட்டத்திற்கு செல்லும் வாய்ப்பை இழந்துவிட்டது. இதுவே இன்சுமானிற்கு கடைசி ஆட்டமாக இருக்கலாம். ஷோயப் அக்தரும், ஆசிஃப்பும் மருந்து சாப்பிட்டதால் உலகப்கோப்பையில் பங்கேற்காமல் போய்விட்டது. ஆகையால் பாகிஸ்தான் போர்டு இவர்கள் இருவர் மேலேயும் ஆக்ஷன் எடுத்தால் ஷோயிப் அக்தரின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். அதுபோல் ஷாஹிட் ஆஃப்ரிடியின் எதிர்காலமும் கேள்விக்குறிதான்.

இந்திய வீரர்கள் ஆட்டத்தைவிட வருமானத்தையே அதிகம் எதிர்பார்க்கிறார்கள். எங்கே இவர்களுக்கு ஆட்டம் வரும்.

பங்களாதேஷின் பந்துவீச்சு அபாரமாக இருந்தது. நம் மக்களை திக்குமுக்காட வைத்துவிட்டார்கள். இவர்கள் தொடர்ந்து இப்படி ஆடினால் இலங்கையையும் மடக்க வாய்ப்பிருக்கிறது.

மயூ
18-03-2007, 03:33 AM
பாக் வெளியே பாக் வெளியே!!!
இந்தியா பங்களாதெஷிடம் கவிண்டது என்ன செய்வது இந்த இந்திய அணியை???
வட் மோர் மாதிரி ஒரு பயிற்றுனரைக் கண்டதே இல்லையப்பா!!!

ஆதவா
18-03-2007, 04:12 AM
ஒரு வழியாக இந்தியா தோற்றுவிட்டது. சிறப்பாக ஆடி வங்காள தேச அணி தன்னை மீண்டும் நிரூபித்து உள்ளது. நம்மவர்களின் பொறுப்பற்ற ஆட்டத்தினால் இன்று பாகிஸ்தானுடன் சேர்ந்து வரும் நிலைக்கு வந்துவிடும் போல இருக்கிறதே!. நம்மவர்கள் சூப்பர் 8 க்கு செல்ல வாய்ப்பிருக்கிறதா?

இலங்கைக்கு வங்காளதேசத்துடன் ஒரு போட்டி
வங்காளதேசத்திற்கு பெர்முடாவுடன் ஒரு போட்டி (ஆக இரண்டு)
இந்தியாவுக்கு பெர்முடா, இலங்கை இடையே இரண்டு போட்டிகள்.

வெற்றியுடன் முன்னணியில் இருப்பவர்கள்
இலங்கை 1 வெற்றியுடன் ரன்விகிதம் +4.860
வங்காளதேசம் 1 வெற்றியுடன் ரன்விகிதம் +0.139

வங்காளதேசம் எப்படியும் பெர்முடாவை ஜெயித்துவிடும். ஆக இரண்டு வெற்றிகளுடன் உள்ளே நுழைய வாய்ப்பு.
இலங்கை வங்காளதேசத்துடன் ஜெயித்துவிட்டால் அவர்களும் உள்ளே நுழைந்துவிடுவார்கள்.
இச்சூழ்நிலையில் இந்தியா பெர்முடாவை எப்படியும் சிரமப்பட்டு ஜெயித்துவிடுவார்கள். மீதமிருக்கும் இலங்கையை ஜெயித்தாலும் ரன்விகிதம் அடிப்படையில் இலங்கையும் வங்காளதேசமும் உள்ளே நுழைந்துவிடும்.

நாம் என்ன செய்யவேண்டும்?

பெர்முடாவுடன் அதிக ரன்வித்தியாசத்திலோ அல்லது விக்கெட் வித்தியாசத்திலோ ஜெயித்தால் மட்டுமே உள்ளே நுழைய முடியும். இலங்கையிடம் அது சாத்தியமா என்று தெரியவில்லை.

ஒருவேளை வங்காளதேசம் இலங்கையை தோற்கடித்துவிட்டால்??/

அது முதல் அணியாக உள்ளே நுழைந்துவிடும். ரன் விகித அடிப்படை தேவையின்றி வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படும்.
இரண்டாவது அணி இந்தியா - இலங்கை போட்டியில் தெரியும். நம்மவர்கள் அதில் தோற்றால் நடையக் கட்ட வேண்டியதுதான்

ஆக மொத்தம் நமக்கு சூப்பர் 8 வாய்ப்பு ரொம்பவே குறைவுதான்..:fragend005:

ஆதவா
18-03-2007, 04:27 AM
மற்ற பிரிவுகளில் எந்த பிரச்சனையிமில்லை..

குழு அ : ஆஸ்திரேலியா தெனாப்பிரிக்கா,

குழு இ : நியுஸிலாந்து , இங்கிலாந்து

குழு ஈ : நிச்சயமாக அயர்லாந்து, மே.இ. தீவுகள்.

பாகிஸ்தான் எப்படியும் ஒரு வெற்றியாவது ருசிக்க பார்க்கும். அதற்கு பலியாகப் போவது ஜிம்பாப்வே ஒன்றுதான். அந்த வெற்றியும் இல்லையென்றால் நான் சொல்லவேண்டியதே இல்லை பாகிஸ்தான் வீரர்களின் கதி...

ஒருவேளை அதிலும் பாகிஸ்தான் தோற்றுவிட்டால் ? :icon_p:

ஜிம்பாப்வேக்கும் அயர்லாந்துக்கும் போட்டிவரும்.. ரன்விகித அடிப்படையில் அயர்லாந்து செல்ல வாய்ப்பு இருக்கிறது. இவர்களின் பந்துவீச்சு சிறப்பாக இருக்கிறது. மே.இ தீவுகளிடம் குறைந்த ரன்விகிதத்தில் தோற்பார்கள்.... மே.இ. தீவு ஒன்று பாகிஸ்தான் அல்ல. எளிதில் தோற்றுவிட......

எது எப்படியோ உ.கோ போட்டியில் சிறு அணிகளின் துடிப்பு நன்றாகத் தெரிகிறது. வருமானத்தில் புரளும் நம்மவர்களின் வேட்கையில்லாத் தனம் நன்றாகத் தெரிகிறது. எல்லாருக்கும் வீட்டு நினைப்பு வந்துவிட்டது போலும்...

உ.கோப்பை இந்தியாவுக்கு??????

வாய்ப்பே இல்லை. ஒரு பக்கம் தென் ஆப்பிரிக்கா மிரட்டுகிறது. மறுபக்கம் சின்ன அணிகள் உருவெடுக்கிறது. நடுவில் நாமெங்கே??

நாளையாவது சேவக் ஆடுவாரா? அல்லது சே என்று நம்மை சொல்ல வைத்து வாக் (நடையக் கட்டு)வாரா? :thumbsup:

ஆரென் அண்ணா ஆரூடம் சொல்லுங்கள். உங்களது கணிப்புகளும் பூவின் கணிப்பும் மிக அருமை.. வியந்தேன் போங்கள்.:shutup:

ஆதவா
18-03-2007, 10:01 AM
பாக் வெளியே பாக் வெளியே!!!






பாகிஸ்தான் 132க்கு எல்லா விக்கெட்டுகளையும் இழந்தது..கொஞ்சம் ஆறுதலான செய்தி...


ஒரே ஆறுதலான விசயம் பாகிஸ்தான் நம்மைவிட மோசம் என்பதுதான். அநேகமாய் விரைவில் அவர்கள் உலக கோப்பையில் இருந்து வெளியேறும் செய்தி வரும்.



ஒரு சந்தோசமான செய்தி பாகிஸ்தான் அணியும் வீட்டுக்கு வந்துகொண்டிருப்பது.

என்ன செய்வது நமக்கு ஒரு கண் போனால்எதிரிக்கு இரண்டு கண்ணும் போகணும் :traurig001:


ஒன்று மட்டும் புரிகிறது... பாகிஸ்தானை மிக மகிழ்ச்சியோடு வரவேற்பது நம் மன்றத்தினர் என்று... பாகிஸ்தான் நம் எதிரி நாடா? எதிரி(எதிர்) அணியா?

விளையாட்டில் ஏன் அரசியலை சேர்க்க வேண்டும். நம் இந்திய ரசிகர்கள் எல்லாருமே இப்படித்தானே நினைக்கிறார்கள்.. விளையாட்டட விளையாட்டாக எடுத்துக்கொள்ளவேண்டுமல்லவா? தன்னொரு கண் போனாலும் தன் எதிரிக்கும் கண்கள் போகக் கூடாது என்று நினைக்கும் ஆன்மீகம் நிறைந்த நாடு நம் இந்தியா.

பாகிஸ்தானில் பள்ளியில் பாடங்கள் எல்லாம் இந்தியாவை எதிரிநாடு என்று வர்ணிக்கும் அளவிற்கு இருக்கிறதாம். அதற்காக நாம் ஏன் அந்த தவறை செய்யவேண்டும்? கிட்டத்தட்ட ஆயிரமாயிரம் வருடங்கள் ஒன்றாக இருந்த நாடுதான் இந்தியாபாகிஸ்தான். வெறூம் 60 வருடங்கள் மட்டுமே இன்று பிரிவு.. மதம் சார்பற்ற நிலை நம்மிடையே இருக்கிறதா? இருந்தால் அவர்களை இப்படி ஒதுக்குவோமா என்று தெரியவில்லை..

தயவு செய்து சந்தோசப்படாதீர்கள்.. ஒரு உலகக் கோப்பை வாங்கிய அணி சாதாரண, டெஸ்ட் அந்தஸ்துகூட பெறாத அயர்லாந்து அணியிடம் தோற்றுவிட்டதே என்று சற்று வருத்தப்படலாமே. நாம் மட்டும் என்ன வலிமையானவர்களா? சமீபகால ஃபார்ம் கவனித்தீர்கள் தானே! நான்கூட இந்தியா அரை இறுதி எட்டும் என்று நினைத்தேன். ஆனால் சூப்பர் 8 க்கே தகுதி பெறாது போலத்தான் தெரிகிறது///

பாகிஸ்தானுடன் கைகோர்த்து இந்தியாவும் நாட்டுக்குத் திரும்பவேண்டும்.. நம் ரசிகர்கள் பூ (?) மாலை போட்டு வரவேற்பார்கள். அணியில் அதிரடி மாற்றம் நிகழவேண்டும். சம்பாதிப்பதை தவிர்த்து போராடும் நிலை வேண்டும்

ஒரு சின்ன ஆறுதல் : உலகக் கோப்பை நடப்பதென்னவோ மே.இ. தீவுகளில்தான். ஆனால் ICC க்கு இந்தியா மிக அதிகப் படியான வருமானம் தீட்டிக் கொடுப்பது அனைவரும் அறிந்ததே! ஆக எப்படியாவது சூப்பர் 8 க்கு துக்கிவிடுவார்கள் என்று நினைக்கிறேன்.. அதையும் பார்ப்போம்... (என்னதான் விளையாட்டு என்றாலும் நம் மண்ணின் பாசம் போகமாட்டேங்குது..:food-smiley-008: )

:nature-smiley-008:

மயூ
18-03-2007, 04:27 PM
ஆதவா உங்கள் கருத்துக்கள் சிந்திக்கத் தூண்டுகின்றன!!!!
சிந்திப்போம் செயற்படுவோம்!

மனோஜ்
18-03-2007, 06:51 PM
ஆதவா நீங்கள் சொல்லும் கருத்து உண்மைதான் ஆனால்
எதிரி நாடு நம்மை எதிரியாக நினைக்கும் பொழுது நாம் அவர்களுடன் கைகோர்த்தால் விளைவது ஆபத்து எனவே நாம் ஜாக்கிரதையாக இருப்பது அவசியம் அவர்களை பகைக்க வேண்டாம் ஆனால் கைகோர்க்காமல் இருப்பது நல்லது என்று நினைக்கிறேன் இது என் கருத்து.
நன்றி மன்மதன்

மன்மதன்
18-03-2007, 07:46 PM
ஆதவா நீங்கள் செல்லும் கருத்து உண்மைதான் ஆனால்
எதிரி நாடு நம்மை எதிரியாக நினைக்கும் பொழது நாம் அவர்களுடன் கைகோர்த்தால் விளைவது ஆபத்து எனவே நாம் ஜாக்கிறதையாக இருப்பது அவசியம் அவர்களை பகைக்க வேன்டாம் ஆனால் கைகோர்க்காமல் இருப்பது நல்லது என்று நினைக்கிறோன் இது என் கருத்து


ஆதவா நீங்கள் செல்லும்(சொல்லும்) கருத்து உண்மைதான். ஆனால்
எதிரி நாடு நம்மை எதிரியாக நினைக்கும் பொழது(பொழுது) நாம் அவர்களுடன் கைகோர்த்தால் விளைவது ஆபத்து. எனவே நாம் ஜாக்கிறதையாக(ஜாக்கிரதை) இருப்பது அவசியம். அவர்களை பகைக்க வேன்டாம்(வேண்டாம்). ஆனால் கைகோர்க்காமல் இருப்பது நல்லது என்று நினைக்கிறோன்(நினைக்கிறேன்). இது என் கருத்து



(700 பதிவை தாண்டியும் 5 வரிக்கு 10 தவறுகள் செய்ய உங்களால் மட்டும் எப்படி முடியுது.. முற்றுப்புள்ளி கூட வைப்பது இல்லை.

இங்கே (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8313)சொன்ன மாதிரி நீங்க செய்யலையே.. ஏன் நண்பரே???)

இளசு
18-03-2007, 08:49 PM
..

தயவு செய்து சந்தோசப்படாதீர்கள்.. ஒரு உலகக் கோப்பை வாங்கிய அணி சாதாரண, டெஸ்ட் அந்தஸ்துகூட பெறாத அயர்லாந்து அணியிடம் தோற்றுவிட்டதே என்று சற்று வருத்தப்படலாமே.


'..........................................

... (என்னதான் விளையாட்டு என்றாலும் நம் மண்ணின் பாசம் போகமாட்டேங்குது..:food-smiley-008: )

:nature-smiley-008:

ஆதவா

அடிவாங்கி 24 மணிநேரம் கழிந்த பின்...... யோசித்தால்
உங்கள் கருத்து புரிகிறது...

நன்றி...

ஓவியன்
19-03-2007, 07:15 AM
இந்திய அணியினரிடம் உள்ள மிகப் பெரிய பிரச்சினை என்னவென்றால், இலகுவில் தங்களது தோல்வியினை ஏற்றுக் கொண்டுவிடுவது தான். வங்க அணியினருடான போட்டியில் வெற்றி பெறும் எண்ணம் அவர்களிடம் இருந்ததாகத் தெரியவில்லை. ஏற்கனவே தோல்வியைத் தீர்மானித்தது போல வேண்டா வெறுப்பாக விளையாடினார்கள்.

யுவராஜ் களத்திற்கு வரும் போது ஏதோ நோய்வாய்ப் பட்டவன் படுக்கையில் இருந்து எழும்மி வருவது போன்று உற்சாகமின்றி வந்தார், ஆரம்பத்திலே பல பந்துகளை விரயம் செய்தார். பின்னர் நித்திரையால் எழும்பியவன் போல திடீரென விளையாடத் தொடங்கினார். இந்த நிலை மாற வேண்டும்.

இலங்கை அணியினரோ அப்படி இல்லை. தோல்வியை இலகுவில் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் மாறாக தம்மால் இயலும் வரை விக்கற்றுகள் இல்லாத போதிலும் வெற்றிக்காக இறுதி வரை போராடுவார்கள்.

எப்போது இந்த பண்பு இந்திய ஆணியினரிடம் வருகின்றதோ,அன்றிலிருந்து அவர்கள் வெற்றிக் கனியைப் பறிக்கத் தொடங்கி விடுவார்கள்.

poo
19-03-2007, 07:46 AM
இன்றும் ஷேவாக் ஆடுவார் (அவரது வழக்கப்படி!). போன ஆட்டத்தில் அனைவருமே சரியாக ஆடாதது ஷேவாக்கிற்குதான் கொண்டாட்டம்.. மேலும் அதிக ரன் ரேட் வரவேண்டும் அதனால் ஷேவாக் ஆடவேண்டுமென டிராவிட் குருட்டு நம்பிக்கையில் வாதாடுவார். பார்க்கலாம்.. கடைசியில் வீரு வீரபாகு கணக்கா "எவ்வளவு மட்டமா விளையாடினாலும் என்னை ரொம்ப நல்ல ஆட்டக்காரன்னு சொல்லிட்டாங்கம்மா-ன்னு அழுதாலும் அழுவார்!!

வங்கதேச அணியை வெறும் பெயரை வைத்து எடை போட்டிருக்கிறார்கள். அதில் இருக்கும் ஒவ்வொரு வீரரும் அருமையாக ஆடுகிறார்கள்.. முன்பு இருந்தவர்கள் 100- பந்தில் 20 ரன்கள் எடுப்பார்கள்.. அதனால் எப்போதும் தோற்கும். ஆனால் இளம் வீரர்கள் பொறுப்பை உணர்ந்து போக்குக்கேற்ப ஆடுகிறார்கள். இவர்களிடம் உள்ள ஒரு குறை இன்னொரு நல்ல வேகப்பந்து வீச்சாளர் இல்லாதது.. ஆனால் அதுவே இவர்களுக்கு இந்த தொடரில் பலமாய் அமைந்தாலும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை.. (மைதானங்கள் அப்படி உள்ளது). இவர்கள் இலங்கையிடம் தோற்கவே வாய்ப்பதிகம்.. முரளி மற்றும் வாஸ் நிச்சயம் விடமாட்டார்கள்.

அயர்லாந்து சாதித்து முடித்துவிட்டது.. இனியும் தாக்குபிடிக்க பேட்டிங்கில் பலம் வேண்டும்.. ஆனால் அது கொஞ்சம் குறைவாகவே உள்ளது.

பாகிஸ்தான் ஜிம்பாப்வேயிடம் !?. (கோச்சின் மரணம். இன்சமாமின் ஓய்வு, ஊரில் அடி.. என மனது ரொம்பவே பாதித்திருக்கும்)

கென்யா நிச்சயமாக இங்கிலாந்துக்கு தண்ணி காட்டும். நேற்றே இங்கிலாந்துக்காரர்கள் அதிகம் பிரகாசிக்க முடியவில்லை. பிளிண்டாப்புக்கு ஆப்பு வைத்தது நல்ல முடிவு. யாராச்சும் நம்ம ஷேவாக்கை குனிய வைச்சு முதுகில் குத்தினா நல்லது.. காயம்னு சொல்லி கௌரவமா உட்கார வைக்கலாம்.

இந்தியாவிற்கு வாய்ப்பு குறைவுதான்.. ஆனால், அடிபட்ட புலியாக பாயுமென நம்பி ஆட்டத்தை எதிர்ப்பார்த்து காத்திருக்கிறேன்..
பவுலிங்கில் என்ன செய்யப் போகிறார்கள் இனி?!..

இன்று ஸ்ரீசாந்த் ஆடலாம் (ஷேவக்கிற்கு பதிலாக. ரெண்டு மூணு ரன்கள்தானே மொத்தத்தில் குறையும்!)

pradeepkt
19-03-2007, 08:27 AM
இன்று ஸ்ரீசாந்த் ஆடலாம் (ஷேவக்கிற்கு பதிலாக. ரெண்டு மூணு ரன்கள்தானே மொத்தத்தில் குறையும்!)
அதாவது இழந்தாலும் ரெண்டு மூணு ரன்கள்தான் குறையும். ஆனால் ஸ்ரீசாந்த் பொங்கி எழுந்து ஒரு நடனம் ஆடுவதற்காவது ஒரு சிக்ஸர் அடித்தால் மூணு நாலு ரன் அதிகமாக் கெடைக்குமே... என்ன பூ சொல்றீங்க???

அமரன்
19-03-2007, 08:55 AM
இந்திய அணியின் சொதப்பல் ஆட்டதின்மத்தியில் கங்குலி மட்டும் ஆறுதல் அளித்துள்ளார். அவரும் இல்லாதிருந்திருந்தால் இந்தியா..........

ஷீ-நிசி
19-03-2007, 09:18 AM
இந்தியா சூப்பர் 8 -க்கு தகுதிபெறும் என்ற என் எண்ணம் தவிடுபொடியாகிவிட்டது... ஒரு ஒரு நாளாக எண்ணிக்கொண்டிருந்தேன்.. உலக கோப்பை வரும் நாளை எதிர்பார்த்து. என் போன்ற இதயங்களை இந்திய வீரர்கள் உடைத்துவிட்டார்கள்.. இந்தியா சூப்பர் 8-க்கு முட்டி மோதி உள்ளே சென்றாலும் மற்ற அணிகளிடம் மரண அடி காத்திருக்கிறது.. இதுவே கங்குலி கேப்டனாக இருந்திருந்தால் இதே 191 ரன்கள் வங்கதேசம் எடுக்கவிடாமல் சிறப்பாக செயல்பட்டிருப்பார்.. டிராவிட்டிடம் சுத்தமாக ஒரு வெறி என்பதே இல்லை.. இதுபோல் சாதாரணமாக இருந்தால் வெற்றி என்பது எல்லாம் இனி ஏட்டளவில்தான் இருக்கும். இந்திய அணி சூப்பர் 8 க்கு தகுதிபெறாமல் வீட்டிறகு வருமானால் டிராவிட் சேப்பல் பதவிகள் காலியாகிவிடும்.. ஷேவாக் அணிக்குள் நுழைய மிக கடினமாக உழைக்கவேண்டும்.. ரசிகர்களை ஆறுதல்படுத்த பாகிஸ்தானும் இல்லை.. பாகிஸ்தானுடன் வெற்றிபெற்று இதுவரை இந்திய அணி நமக்கு லாலிபாப் காட்டிக்கொண்டிருந்தது. இனி அதற்கும் வழியில்லை...

வங்கதேசம், கென்யா, அயர்லாந்து போன்ற minnows என்று அழைக்கபடும் அணிகளிடம் இருக்கும் ஃபீல்டிங் துடிப்பு சுத்தமாக நம்மிடம் இல்லை.


உலககோப்பை - 2007 ஸ்கோர்கார்டு

01. West Indies Vs Pakistan
http://card.cricket.indiatimes.com/default.cms?matchid=356

02 Australia Vs Scotland
http://card.cricket.indiatimes.com/default.cms?matchid=357

03 Canada Vs Kenya
http://card.cricket.indiatimes.com/default.cms?matchid=358

04 Bermuda Vs Srilanka
http://card.cricket.indiatimes.com/default.cms?matchid=359

05 Ireland Vs Zimbabve
http://card.cricket.indiatimes.com/default.cms?matchid=360

06 England Vs Newzealand
http://card.cricket.indiatimes.com/default.cms?matchid=361

07 Netherland Vs South Africa
http://card.cricket.indiatimes.com/default.cms?matchid=362

08 Bangaladesh Vs India
http://card.cricket.indiatimes.com/default.cms?matchid=363

09 Ireland Vs Pakistan
http://card.cricket.indiatimes.com/default.cms?matchid=364


10 Australia Vs Netherland
http://card.cricket.indiatimes.com/default.cms?matchid=365

11 Canada Vs England
http://card.cricket.indiatimes.com/default.cms?matchid=366

தொடரும்

மன்மதன்
19-03-2007, 09:21 AM
இதுவே கங்குலி கேப்டனாக இருந்திருந்தால் இதே 191 ரன்கள் வங்கதேசம் எடுக்கவிடாமல் சிறப்பாக செயல்பட்டிருப்பார்.. டிராவிட்டிடம் சுத்தமாக ஒரு வெறி என்பதே இல்லை..

வங்கதேசம், கென்யா, அயர்லாந்து போன்ற minnows என்று அழைக்கபடும் அணிகளிடம் இருக்கும் ஃபீல்டிங் துடிப்பு சுத்தமாக நம்மிடம் இல்லை.


உண்மைதான்...

அமரன்
19-03-2007, 09:30 AM
இதுவே கங்குலி கேப்டனாக இருந்திருந்தால் இதே 191 ரன்கள் வங்கதேசம் எடுக்கவிடாமல் சிறப்பாக செயல்பட்டிருப்பார்.. டிராவிட்டிடம் சுத்தமாக ஒரு வெறி என்பதே இல்லை

உண்மைதான். கங்குலி ஒரு கட்டளை அதிகாரி போன்ற அதிகார தோரணை மிக்க தலைவர். அவரிடம் ஒரு கடுமை இருக்கு. அதில் ஜெயிக்கணும் என்ற வெறி அதிகம்தான்.

poo
19-03-2007, 10:15 AM
ஆமாம்.. கங்குலி அருகில் இருந்தால் எதேனும் சொல்லிவிடப் போகிறாரென அவரை எல்லைக் கோட்டோரமாய் நிற்க வைத்திருந்தனர்.

அன்புரசிகன்
19-03-2007, 10:52 AM
உண்மைதான். கங்குலி ஒரு கட்டளை அதிகாரி போன்ற அதிகார தோரணை மிக்க தலைவர். அவரிடம் ஒரு கடுமை இருக்கு. அதில் ஜெயிக்கணும் என்ற வெறி அதிகம்தான்.

ஆனால் டிராவிட்டின் தலமையிலும் அணிகள் ஜெயித்திருக்கின்றன. எல்லாவற்றிற்கும் முதல் காரணம் சாதாரணமாக பங்களாதேஷ் ஐ எடைபோட்டதுதான். இந்திய அணிக்கு அதீத நம்பிக்கை இருந்தது. இலகுவில் வீழ்த்திவிடலாம் என்று.

ஷீ-நிசி
19-03-2007, 11:09 AM
ஆனால் டிராவிட்டின் தலமையிலும் அணிகள் ஜெயித்திருக்கின்றன. எல்லாவற்றிற்கும் முதல் காரணம் சாதாரணமாக பங்களாதேஷ் ஐ எடைபோட்டதுதான். இந்திய அணிக்கு அதீத நம்பிக்கை இருந்தது. இலகுவில் வீழ்த்திவிடலாம் என்று.

அதீத நம்பிக்கை எல்லாம் இல்லை. அப்படி இருந்திருந்தாலாவது இந்திய அணி ஒருவேளை வெற்றிபெற்றிருக்கும்.. ஒருவாரகாலமாவே நம் அணிக கேப்டன் பேயறைந்தமாதிரிதான் பேட்டி கொடுத்திருந்தார்.. "பங்களாதேஷ் சாதாரண அணி அல்ல.. அவர்களும் வலிமையான அணிதான் என்று.."
தோல்விபயம் ஏற்கெனவே உண்டானதால்தான் இவ்வகை ஏமாற்றம் நமக்கு.. இதுவே கொஞ்சம் பெரிய அணி என்றால் இந்தியா இந்தளவிற்கு பயந்திருக்காது.. தில்லாக இருந்திருக்கும்.. சின்ன அணிகளுக்கு இழப்பதற்கு ஒன்றும் இல்லை. தங்கள் முழுத்திறமையும் வெளிப்படுத்துவார்கள்.. அதிகபட்ச எதிர்பார்ப்புகள் பெரிய அணிகள் மீது இருப்பதால் இது போன்ற ஏமாற்றங்கள் ஏற்படுகின்றன்.. உதா. அயர்லாந்து பாகிஸ்தான்.. பெரிய அணிகளை வெற்றி பெறுவதற்கு என்ன வியூகம் வகுக்கிறோமோ, சின்ன அணிகளுடன் விளையாடும்போதும் அதற்கென தனி வியூகம் வகுக்க வேண்டும்.. முதல் 10 ஓவர்களில் விளாசி அவர்களின் ரிதமை உடைக்கவேண்டும்... இதை ஆஸ்திரேலியா, சவுத் ஆப்ரிக்கா அணிகளிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டும்..

உதயசூரியன்
19-03-2007, 12:46 PM
அதீத நம்பிக்கை எல்லாம் இல்லை. அப்படி இருந்திருந்தாலாவது இந்திய அணி ஒருவேளை வெற்றிபெற்றிருக்கும்.. ஒருவாரகாலமாவே நம் அணிக கேப்டன் பேயறைந்தமாதிரிதான் பேட்டி கொடுத்திருந்தார்.. "பங்களாதேஷ் சாதாரண அணி அல்ல.. அவர்களும் வலிமையான அணிதான் என்று.."
தோல்விபயம் ஏற்கெனவே உண்டானதால்தான் இவ்வகை ஏமாற்றம் நமக்கு.. இதுவே கொஞ்சம் பெரிய அணி என்றால் இந்தியா இந்தளவிற்கு பயந்திருக்காது.. தில்லாக இருந்திருக்கும்.. சின்ன அணிகளுக்கு இழப்பதற்கு ஒன்றும் இல்லை. தங்கள் முழுத்திறமையும் வெளிப்படுத்துவார்கள்.. அதிகபட்ச எதிர்பார்ப்புகள் பெரிய அணிகள் மீது இருப்பதால் இது போன்ற ஏமாற்றங்கள் ஏற்படுகின்றன்.. உதா. அயர்லாந்து பாகிஸ்தான்.. பெரிய அணிகளை வெற்றி பெறுவதற்கு என்ன வியூகம் வகுக்கிறோமோ, சின்ன அணிகளுடன் விளையாடும்போதும் அதற்கென தனி வியூகம் வகுக்க வேண்டும்.. முதல் 10 ஓவர்களில் விளாசி அவர்களின் ரிதமை உடைக்கவேண்டும்... இதை ஆஸ்திரேலியா, சவுத் ஆப்ரிக்கா அணிகளிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டும்..


உண்மை.......
உண்மை....

அறிஞர்
19-03-2007, 01:28 PM
இந்தியா இன்று பெர்முடாவுக்கு எதிராக முதலில் பேட் செய்கிறது....

பங்களாதேஷுக்கு எதிராக ஆடிய அணிதான் இன்று.. ஒரு மாற்றம் கும்ப்ளே உள்ளே வருகிறார் ஹர்பஜனுக்கு பதில்.

சேவாக், அகர்கர் எதற்காக என யோசிக்க வைக்கிறது.

இன்று சேவாக் விளையாடவிட்டால் வீட்டுக்கு அனுப்பலாம்.

aren
19-03-2007, 01:34 PM
இன்று குறைந்தது இந்தியா 350 ரன்கள் எடுத்தாக வேண்டும். நான் நினைக்கிறேன் இந்தியா ஒரு 380 ரன்கள் எடுக்கும் என்று. பார்க்கலாம். கொஞ்சம் அடித்து ஆடவேண்டும்.

ராபின் உத்தப்பாவும், கங்குலியும் முதலில் இறங்கியிருக்கிறார்கள். ராபின் கொஞ்சம் அடுத்துஆடி முதல் 15 ஓவரில் இந்தியா குறைந்தது 100 ரன்களாவது எடுத்தாக வேண்டும். எடுப்பார்கள் என்றே நினைக்கிறேன்.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
19-03-2007, 01:36 PM
பங்களாதேஷ் பெர்முடாவிடம் தோற்றுவிட்டால் என்ன ஆகும். பெர்முடா பங்களாதேஷை வெல்ல வாய்ப்பிருக்கிறது.

aren
19-03-2007, 01:38 PM
உத்தப்பா காலி. இரண்டாவது ஓவரிலேயே அவுட்.

pradeepkt
19-03-2007, 01:50 PM
அதற்குள் ஆட்டம் ஆரம்பித்து விட்டதா என்ன???

pradeepkt
19-03-2007, 01:55 PM
ஆமாம்... ஊத்தப்பா ஆகிவிட்டார் இந்த ஊத்தையப்பா.
வீட்டுக்குப் போய் ஆட்டத்தைப் பார்க்கலாம் என்றிருந்தேன். நல்ல வேளை... அதைப் பார்ப்பதற்குப் பதில் இனி இங்கேயே இருந்து சாகலாம்... :music-smiley-019:
எனக்கு வர ஆத்திரத்துக்கு... :violent-smiley-010:

அறிஞர்
19-03-2007, 02:07 PM
சேவாக் விளாசுகிறார்... ஆரென் எதில் பார்க்கிறீர்கள்..

அறிஞர்
19-03-2007, 02:08 PM
இந்தியா காலிறுதி போட்டிக்கு செல்லுமா..

Mathu
19-03-2007, 02:18 PM
இந்தியா இன்று பெர்முடாவுக்கு எதிராக முதலில் பேட் செய்கிறது....

பங்களாதேஷுக்கு எதிராக ஆடிய அணிதான் இன்று.. ஒரு மாற்றம் கும்ப்ளே உள்ளே வருகிறார் ஹர்பஜனுக்கு பதில்.

சேவாக், அகர்கர் எதற்காக என யோசிக்க வைக்கிறது.

இன்று சேவாக் விளையாடவிட்டால் வீட்டுக்கு அனுப்பலாம்.

அவரை மட்டுமா மொத்த அணியையுமா?
இன்று டைகர் படுத்து விட்டது போல் தோன்றுகிறது சேவாக் கொஞ்சம் கை கொடுக்கிறார்.
:ohmy: :ohmy:

அறிஞர்
19-03-2007, 02:37 PM
அவரை மட்டுமா மொத்த அணியையுமா?
இன்று டைகர் படுத்து விட்டது போல் தோன்றுகிறது சேவாக் கொஞ்சம் கை கொடுக்கிறார்.
:ohmy: :ohmy:டைகர் கடைசியில் தான் விறுவிறுப்பை காட்டும் பொறுங்கள்.. சேவாக் 50 போட்டு விட்டார்... இனி எல்லா ஆட்டங்களில் இடம் உண்டு,

அறிஞர்
19-03-2007, 02:55 PM
இன்று,. சேவாக் 200 ரன் அடித்து உலக சாதனை படைக்கலாம்.

Mathu
19-03-2007, 03:03 PM
இன்று,. சேவாக் 200 ரன் அடித்து உலக சாதனை படைக்கலாம்.

ஆகா அப்போ அடுத்த 4 உலக கோப்பைக்கு சேவாக்கிற்கு அணியில் இடம் உண்டு என்று சொல்லுங்க......

:ohmy: :sprachlos020: :ohmy:

அறிஞர்
19-03-2007, 03:06 PM
ஆகா அப்போ அடுத்த 4 உலக கோப்பைக்கு சேவாக்கிற்கு அணியில் இடம் உண்டு என்று சொல்லுங்க......

:ohmy: :sprachlos020: :ohmy:
அதே அதே... பார்க்கலாம்...இலங்கைக்கு எதிராக.. சேவாக்கின் திறமையை

ஓவியா
19-03-2007, 03:32 PM
இன்று,. சேவாக் 200 ரன் அடித்து உலக சாதனை படைக்கலாம்.

இதுவரை 99 அடிச்சுடாரே...........:musik010:

அமரன்
19-03-2007, 03:34 PM
பங்களாதேஷுக்கு எதிராக ஆடிய அணிதான் இன்று.. ஒரு மாற்றம் கும்ப்ளே உள்ளே வருகிறார் ஹர்பஜனுக்கு பதில்


தாமதமான மாற்றம். இதை முதலிலேயே செய்திருந்தால் பங்களாதேசினுடனான முடிவு மாறியிருக்கலாம்.

அமரன்
19-03-2007, 03:36 PM
சேவாக், அகர்கர் எதற்காக என யோசிக்க வைக்கிறது.



அறிஞரே. உங்க கேள்விக்கான பதிலை சேவாக்கே சொல்லுகின்றாரே

ஓவியா
19-03-2007, 03:37 PM
தாமதமான மாற்றம். இதை முதலிலேயே செய்திருந்தால் பங்களாதேசினுடனான முடிவு மாறியிருக்கலாம்.

இன்று :violent-smiley-010: பயத்திலே பின்னீயெடுப்பாங்க பாருங்களேன். புலியாட்டந்தான் :musik010:

அமரன்
19-03-2007, 03:38 PM
இன்று,. சேவாக் 200 ரன் அடித்து உலக சாதனை படைக்கலாம்.


சேவாக் 100 அடித்து விட்டார். 200 அடிப்பாரான்னு பார்ப்போம்.

ஓவியா
19-03-2007, 03:40 PM
சேவாக் 100 அடித்து விட்டார்

நக்கீரன் இப்ப 105 அடித்துவிட்டார்..................எனக்கு ஒரே குஷியாக இருக்கு. :sport-smiley-002:

அமரன்
19-03-2007, 03:41 PM
சிம்பாவே 43/3 மேற்கிந்தியாவின் சுப்பர் 8 இடம் உறுதிபோலும்.

ஓவியா
19-03-2007, 03:42 PM
சிம்பாவே 43/3 மேற்கிந்தியாவின் சுப்பர் 8 இடம் உறுதிபோலும்.

கண்டிப்பாக

இப்ப ஆரேன் அண்ணா பதிவு போட உள்ளே வந்துட்டார்.......:sport009:


ஆரேன் அண்ணா நம்மை பார்த்து சென்று விட்டார்போல்,
நாளை வந்து பதிவு போடுவார் போலும்.

அமரன்
19-03-2007, 03:42 PM
அட ஆமா இந்த ஆட்டத்தை இலங்கையுடனும் காட்டினால் ............

அமரன்
19-03-2007, 03:50 PM
ஷேவாக் போய்விட்டார். 87 பந்துகளில் 17 பவுன்டரிகள் 3 சிக்சர்களுடன் 114 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்துள்ளார்

அமரன்
19-03-2007, 03:53 PM
http://www.sinekithan.com/ (http://www.sinekithan.com/)

http://www.tamilsfront.net/tv/ (http://www.tamilsfront.net/tv/)
உலகக்கோப்பையைப் பார்க்க இன்னும் இரண்டு லிங்க்.

அறிஞர்
19-03-2007, 04:26 PM
அடுத்த இரண்டு லிங்கிற்கு நன்றி... வேறு சில ஹிந்தி தளங்களும் இவ்வாறு கொடுக்கின்றன..

உலக கோப்பை போட்டி முடியும் வரை இந்த ஒளிபரப்பு நீடித்தால் நல்லதே..

தோனி அடிக்க ஆரம்பித்தார்... ஆனால் அவுட்டாகி விட்டார்.

பென்ஸ்
19-03-2007, 04:46 PM
இன்று :violent-smiley-010: பயத்திலே பின்னீயெடுப்பாங்க பாருங்களேன். புலியாட்டந்தான் :musik010:

புலியை மட்டும் நியாபக படுத்தாதே.....
ஏற்கனவே "ஒரு நிக்கர் பாவாடையாகி இருக்கு"....

சரி மட்ச்சு பாத்தேன்...
ராபின் உத்தபா வெளியேறியதும், அலுவலகம் வந்துட்டேன்...

அறிஞர்
19-03-2007, 04:58 PM
ராபின் உத்தபா வெளியேறியதும், அலுவலகம் வந்துட்டேன்... என்ன இரவு வேலையா... யாரும் இல்லையென்றால் அலுவலகத்திலும் பார்க்கலாமே..

ஓவியா
19-03-2007, 05:06 PM
புலியை மட்டும் நியாபக படுத்தாதே.....
ஏற்கனவே "ஒரு நிக்கர் பாவாடையாகி இருக்கு"....

சரி மட்ச்சு பாத்தேன்...
ராபின் உத்தபா வெளியேறியதும், அலுவலகம் வந்துட்டேன்...

ஒரு நிக்கர் பாவாடையாகி இருக்கு"....

யாராவது கிரிக்கேட் பிரியரை வைத்து சினிமா படம் எடுத்தால் இந்த பெயர் வைக்கலாமே.
நல்லாதான் இருக்கு. ஒரு ஊதாப் பூ கண்சிமிட்டியது போல் ஒரு நிக்கர் பாவாடையாகி இருக்கு".... :medium-smiley-089:


இன்று அருமையான ஆட்டம் :aktion033:

அறிஞர்
19-03-2007, 05:15 PM
உலக கோப்பை போட்டி சாதனை ஓட்டங்கள் 413/5 இந்தியா

ஓவியா
19-03-2007, 05:18 PM
உலக கோப்பை போட்டி சாதனை ஓட்டங்கள் 413/5 இந்தியா

நாந்தான் முதலில் வாழ்த்துவேன் சூப்ப்ப்பர் ஆட்டம்..

வாழ்த்துக்கள்


மோகன் கிருஷ்ணமூர்த்தி சார்,
எங்களுக்கு டிரீட் கொடுக்க தயாராகுங்கள். :food-smiley-011:

aren
19-03-2007, 05:22 PM
110க்குள் பெர்முடாவை சுருட்டவேண்டும். நம் மக்கள் எப்படி பந்து வீசுகிறார்கள் என்று பார்க்கலாம்.

ஆதவா
19-03-2007, 05:25 PM
நாந்தான் முதலில் வாழ்த்துவேன் சூப்ப்ப்பர் ஆட்டம்..

வாழ்த்துக்கள்


மோகன் கிருஷ்ணமூர்த்தி சார்,
எங்களுக்கு டிரீட் கொடுக்க தயாராகுங்கள். :food-smiley-011:

சாதனை புரிந்த இந்தியாவுக்கு என் வாழ்த்துக்கள்...:aktion033:

அதுசரி ஓவி... இந்த பக்கமே அவர் வரலியே! நியாயப்படி அறிஞர் அல்லவா ட்ரீட் கொடுக்கனும் :icon_hmm:

ஓவியா
19-03-2007, 05:30 PM
சாதனை புரிந்த இந்தியாவுக்கு என் வாழ்த்துக்கள்...:aktion033:

அதுசரி ஓவி... இந்த பக்கமே அவர் வரலியே! நியாயப்படி அறிஞர் அல்லவா ட்ரீட் கொடுக்கனும் :icon_hmm:

(மோகன்) அவர்தான் என் ஒட்டு என் பாசமிகு இந்தியக்குனு சொல்லிட்டாறே..
தோழ்வியோ வெற்றியோ நான் மண் விசுவாசினு சொன்னாறே......
இப்ப பாக்கெட் கலிலே.....:food-smiley-002:

சர் நேம் போட்டு சொல்லிட்டேன், ஆள் மாறாட்டம்கூட நக்காதுலே

ஆதவா
19-03-2007, 05:36 PM
:food-smiley-002:

ஓ!! எனக்கு அது தெரியாது.. அதுக்கு எதுக்கு ஆப்பம் போடறீங்க?:grin:

மன்மதன்
19-03-2007, 07:18 PM
இன்று :violent-smiley-010: பயத்திலே பின்னீயெடுப்பாங்க பாருங்களேன். புலியாட்டந்தான் :musik010:

ஆருடம் பலித்து விட்டது போல..:food-smiley-004:

அன்புரசிகன்
19-03-2007, 08:01 PM
அதிகபட்ச எதிர்பார்ப்புகள் பெரிய அணிகள் மீது இருப்பதால் இது போன்ற ஏமாற்றங்கள் ஏற்படுகின்றன்..
இதைதான் நான் சொன்னேன்.



உதா. அயர்லாந்து பாகிஸ்தான்.. பெரிய அணிகளை வெற்றி பெறுவதற்கு என்ன வியூகம் வகுக்கிறோமோ, சின்ன அணிகளுடன் விளையாடும்போதும் அதற்கென தனி வியூகம் வகுக்க வேண்டும்.. முதல் 10 ஓவர்களில் விளாசி அவர்களின் ரிதமை உடைக்கவேண்டும்... இதை ஆஸ்திரேலியா, சவுத் ஆப்ரிக்கா அணிகளிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டும்..

மறுக்கமுடியாத உண்மை. என்னும் ஒன்றை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். பங்களாதெஷ் அணிக்கும் திறமை உண்டு. சிறிய அணி என்று உதாசீனப்படுத்த முடியாது. அவர்கள் அனைத்து அணிகளையும் வெற்றி கொண்டவர்கள்.

அறிஞர்
19-03-2007, 08:26 PM
110க்குள் பெர்முடாவை சுருட்டவேண்டும். நம் மக்கள் எப்படி பந்து வீசுகிறார்கள் என்று பார்க்கலாம். 125யும் தாண்டி செல்லுகிறார்கள்.. இலங்கை அணிக்கு கொடுத்த வித்தியாசத்தை விட அதிகம் வித்தியாசம் கொடுக்கவேண்டும்.

poo
20-03-2007, 05:43 AM
மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.. 18-முறை என் மகள்கள் இருவரும் பயங்கரமாக சந்தோஷப்பட்டார்கள்.. (செட் மேக்ஸ் ஓஓஓஓஓஓஓஓஓஓ..டன் டண்டன்,, பொம்மையைக் கண்டு.கூடவே இவர்களும் ஓ போட்டு... ஒரே ஜாலிதான்..)

எப்பவுமே இந்த மாதிரி பெரிய தொடர்களில் இந்தியா ஆரம்பத்தில் கொஞ்சம் சறுக்கி பிறகுதான் பொங்கும்.. (இதுக்குதான் பயிற்சி ஆட்டத்திலேயே அடி வாங்கனும்!!). அதே நிலை இந்த தொடரிலும் தொடருமென நம்புகிறேன்..

இன்னமும் பவுலிங் கொஞ்சம் வீக்காகத்தான் இருக்கிறது... என்ன செய்வது!?.

வங்கதேசத்திற்கு பெர்முடா கொஞ்சம் ஆட்டம் காட்டினால் நன்றாக இருக்கும்.. நம்ம உத்தப்பா கேட்சை பிடிச்சி அவங்க போட்ட ஆட்டம்..உணர்ச்சிவசப்பட்டு கண்ணீரே வந்துடுச்சி அந்த பவுலருக்கு!.. அவங்க இன்னும் வளரனும்.. (உடலை மட்டும் குறைக்கனும்.)

வங்கதேசம் இலங்கையிடம் படு மோசமாக தோற்று, நாம் இலங்கையை சாதாரணமாக ஜெயித்தாலே வாய்ப்புதான்! (அந்த பெர்முடா -வ.தேசம் மேட்ச் மழையால் தடையாகக்கடவ...)

மன்மதன்.. மன்னிக்கனும்.. இரவு பேலன்ஸ் இல்லை.. (செல்லுல தாங்கோ..) அதான் ரிப்ளை பண்ணமுடியல.. ஆனாலும் உங்க சந்தேகத்தை மழையை நிறுத்தி தீர்த்துட்டேன்...

aren
20-03-2007, 06:37 AM
எனக்கு என்னவோ பங்களாதேஷ் பெர்முடாவிடம் தோற்றுவிடும் என்றே தோன்றுகிறது.

ஷீ-நிசி
20-03-2007, 07:51 AM
எனக்கு என்னவோ பங்களாதேஷ் பெர்முடாவிடம் தோற்றுவிடும் என்றே தோன்றுகிறது.

இதுமட்டும் நடந்துட்டா, உங்க வீட்டு சமையலைறையிலருந்து ரெண்டு தேக்கரண்டி சர்க்கரை அள்ளி என் சார்பா உங்க வாயில நீங்களே போட்டுக்கங்க நண்பரே!

poo
20-03-2007, 08:56 AM
பெர்முடாவில் நிறைய பேர் மெதுவாக பந்து வீசுகிறார்கள்... பிட்ச் கொஞ்சம் ஒத்துழைத்தால் நன்றாக இருக்கும். அதே சமயம் வங்கதேசத்தில் பலமாக வெளியே அடிக்கக்கூடியவர்கள் அதிகம் இருக்கிறார்கள். கிடைக்கும் கேட்ச் வாய்ப்புகளை தவறவிடாமல் இருக்க வேண்டும். ரஃபீக் இந்த ஆட்டத்தில் முக்கிய பங்கு வகிப்பார்.

அமரன்
20-03-2007, 09:02 AM
உலக கோப்பை போட்டி சாதனை ஓட்டங்கள் 413/5 இந்தியா


இந்தியா அணிக்கு என் வாழ்த்துக்கள். மேலும் பல வெற்றிகளை குவித்து கிண்ணத்தைத் தட்டிச்செல்வார்கள் என்று நம்புவோம்.

அறிஞர்
20-03-2007, 12:45 PM
இலங்கை போட்டியில் இந்தியர்களின் நிலை எப்படி இருக்கும் என நிதானிக்கவேண்டும்.

மேற்கு இந்தியாவில் இலங்கை நன்றாக விளையாடுகிறது....

Mathu
20-03-2007, 12:49 PM
வங்கதேசத்திற்கு பெர்முடா கொஞ்சம் ஆட்டம் காட்டினால் நன்றாக இருக்கும்.. நம்ம உத்தப்பா கேட்சை பிடிச்சி அவங்க போட்ட ஆட்டம்..உணர்ச்சிவசப்பட்டு கண்ணீரே வந்துடுச்சி அந்த பவுலருக்கு!.. அவங்க இன்னும் வளரனும்.. (உடலை மட்டும் குறைக்கனும்.)


தனது முதலாவது உலக கோப்பை போட்டியில் முதல் ஓவரில் முதல் பந்துக்கு விக்கட் கிடைத்தால் யார் தான் உணர்ச்சிவசபட மாட்டார்கள்.
:sport-smiley-013:

அறிஞர்
20-03-2007, 12:50 PM
தனது முதலாவது உலக கோப்பை போட்டியில் முதல் ஓவரில் முதல் பந்துக்கு விக்கட் கிடைத்தால் யார் தான் உணர்ச்சிவசபட மாட்டார்கள்.
:sport-smiley-013:
முந்தின போட்டியில் அவர் விளையாடவில்லையா...

அறிஞர்
20-03-2007, 12:51 PM
தினகரனில் கார்டூன்
----------
கிரிக்கெட் பேட்டுடன் மனிதன் : எலி வேட்டை முடிஞ்சிடுச்சு.. இனி புலிவேட்டைதான்...

மன்மதன்
20-03-2007, 01:01 PM
மன்மதன்.. மன்னிக்கனும்.. இரவு பேலன்ஸ் இல்லை.. (செல்லுல தாங்கோ..) அதான் ரிப்ளை பண்ணமுடியல.. ஆனாலும் உங்க சந்தேகத்தை மழையை நிறுத்தி தீர்த்துட்டேன்...


ஆமாமா இவ்ளோ பெரிய ரிப்ளை எப்படி செல்லிலிருந்து கொடுக்க முடியும்..:ohmy: :ohmy:

ஓவியா
20-03-2007, 01:05 PM
ஆமாமா இவ்ளோ பெரிய ரிப்ளை எப்படி செல்லிலிருந்து கொடுக்க முடியும்..:ohmy: :ohmy:

இதான் டைமிங் கடியா??? :musik010:

பாவம் பூ,


பூ
தங்களின் விமர்சனம் அருமை. :icon_give_rose:

அறிஞர்
20-03-2007, 01:06 PM
கடைசியாக விளையாண்ட இந்தியர்களின் ஆட்டம் (பெர்முடாவுக்கு எதிராக) இங்கு உள்ளது.

http://www.criki.com/videos/recent

leomohan
20-03-2007, 01:16 PM
பெருமுடாவை அடித்து நொறுக்கி இன்னொரு ஆட்டம் பார்க்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளிவிட்டார்கள்.

10,000 போட்டு டிஷ் போட்டது தண்டமோ என்று நினைத்தேன். நேற்றைய ஆட்டம் அந்த நஷ்டத்தை ஈடு செய்துவிட்டது :party009:

அறிஞர்
20-03-2007, 01:19 PM
பெருமுடாவை அடித்து நொறுக்கி இன்னொரு ஆட்டம் பார்க்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளிவிட்டார்கள்.

10,000 போட்டு டிஷ் போட்டது தண்டமோ என்று நினைத்தேன். நேற்றைய ஆட்டம் அந்த நஷ்டத்தை ஈடு செய்துவிட்டது :party009:நீங்க செல்வழித்து பார்த்து ரசிக்கிறீர்கள்.. நாங்க ஓசியிலே ரசித்தோம்... :icon_give_rose: :icon_give_rose: :icon_give_rose:

leomohan
20-03-2007, 02:22 PM
நீங்க செல்வழித்து பார்த்து ரசிக்கிறீர்கள்.. நாங்க ஓசியிலே ரசித்தோம்... :icon_give_rose: :icon_give_rose: :icon_give_rose:

ஓசியில் பார்ப்பது தானே நம் தனித்துவமே. அனைத்து ஓசி வழிகளையும் முயற்சி செய்துவிட்டு முடியாததால் இந்த நிலைமை.

இங்கு மாலை 5.30 மணியிலிருந்து இரவு 12.30 மணி வரை வருகிறது.

என்ன கொடுமைடா சரவணா?

அமரன்
20-03-2007, 03:47 PM
இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற தென்னாபிரிக்கா பீல்டிங்கைத் தெரிவுசெய்து இன்னொரு சாதனைக்கான வாய்ப்பைத் தவற விட்டு விட்டார்களே.

அறிஞர்
20-03-2007, 04:54 PM
இங்கு மாலை 5.30 மணியிலிருந்து இரவு 12.30 மணி வரை வருகிறது.

என்ன கொடுமைடா சரவணா?பரவாயில்லையே.. மாலை அலுவலகம் முடிந்து வந்து பார்க்கலாம். இந்தியாவில் இருப்பவர்களுக்கு முக்கால் வாசி நேரம் தூக்கம் தொலைகிறதே..

அறிஞர்
20-03-2007, 04:55 PM
இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற தென்னாபிரிக்கா பீல்டிங்கைத் தெரிவுசெய்து இன்னொரு சாதனைக்கான வாய்ப்பைத் தவற விட்டு விட்டார்களே.
ஆம்... முதலில், இரண்டாவது இரண்டிலும் பேட் செய்ய பயிற்சி எடுக்கிறார்களோ என்னவோ..

ஷீ-நிசி
21-03-2007, 04:00 AM
உலககோப்பை - 2007 ஸ்கோர்கார்டு

01. West Indies Vs Pakistan
http://card.cricket.indiatimes.com/default.cms?matchid=356

02 Australia Vs Scotland
http://card.cricket.indiatimes.com/default.cms?matchid=357

03 Canada Vs Kenya
http://card.cricket.indiatimes.com/default.cms?matchid=358

04 Bermuda Vs Srilanka
http://card.cricket.indiatimes.com/default.cms?matchid=359

05 Ireland Vs Zimbabve
http://card.cricket.indiatimes.com/default.cms?matchid=360

06 England Vs Newzealand
http://card.cricket.indiatimes.com/default.cms?matchid=361

07 Netherland Vs South Africa
http://card.cricket.indiatimes.com/default.cms?matchid=362

08 Bangaladesh Vs India
http://card.cricket.indiatimes.com/default.cms?matchid=363

09 Ireland Vs Pakistan
http://card.cricket.indiatimes.com/default.cms?matchid=364


10 Australia Vs Netherland
http://card.cricket.indiatimes.com/default.cms?matchid=365

11 Canada Vs England
http://card.cricket.indiatimes.com/default.cms?matchid=366


12 Bermuda Vs India
http://card.cricket.indiatimes.com/default.cms?matchid=367

13 West Indies Vs Zimbabwe
http://card.cricket.indiatimes.com/default.cms?matchid=368

14 Kenya Vs NewZealand
http://card.cricket.indiatimes.com/default.cms?matchid=369

15 Scotland Vs South Africa
http://card.cricket.indiatimes.com/default.cms?matchid=370

pradeepkt
21-03-2007, 05:38 AM
அடடா... அடடா...
என்ன ஆட்டம் என்ன ஆட்டம்
வெறுப்போடு வீட்டுக்குள் நுழைந்த என் போன்ற கிரிக்கெட் மேதாவிகளையுமே கட்டிப் போட்ட ஆட்டம்..
கங்குலி, ஷேவாக், சச்சின், யுவராஜ் கட்டக் கடைசியாக திராவிட் என பின்னியெடுத்த மட்டையாளர்கள் ... சொல்ல வார்த்தை இல்லை...

மன்மதன்
21-03-2007, 07:00 AM
அடடா... அடடா...
என்ன ஆட்டம் என்ன ஆட்டம்
வெறுப்போடு வீட்டுக்குள் நுழைந்த என் போன்ற கிரிக்கெட் மேதாவிகளையுமே கட்டிப் போட்ட ஆட்டம்..
கங்குலி, ஷேவாக், சச்சின், யுவராஜ் கட்டக் கடைசியாக திராவிட் என பின்னியெடுத்த மட்டையாளர்கள் ... சொல்ல வார்த்தை இல்லை...

பெர்முடாஸ் போட்ட பெர்முடாவுக்கு எதிராக என்பதை சேர்த்துக்கொள்ளவும்..:huh: :D

pradeepkt
21-03-2007, 07:30 AM
பெர்முடாஸ் போட்ட பெர்முடாவுக்கு எதிராக என்பதை சேர்த்துக்கொள்ளவும்..:huh: :D
பெர்முடாஸ் போட்டால்தான் என்ன???
கொஞ்ச நாளைக்கு முன்னாடி நம்ம பங்களாவாசிகளைப் பங்களாக்காரர்கள் புரட்டி எடுத்த கதை மறந்துவிட்டதா என்ன??? அந்த:music-smiley-019: -ஐ என்னால் இன்னும் மறக்க இயலவில்லை... இன்னேரம் நம்ம சூப்பர் 8-ல் ஜம்முன்னு இருந்திருப்போமே...

virumaandi
21-03-2007, 12:01 PM
எல்லாம் மாலை 7 மணிக்கு மேல் தான்(இந்திய நேரப்படி)

அறிஞர்
21-03-2007, 01:00 PM
இன்று நல்ல ஆட்டம் இலங்கை- வங்காளதேசம்...

இலங்கைக்கு வாய்ப்புக்கள் அதிகம்.. பார்க்கலாம் என்ன நடக்கிறது என...

உதயசூரியன்
21-03-2007, 02:19 PM
வங்காள தேசம் இந்தியாவிடம் ஆடியதை வைத்து நல்ல ஆட்டம் என்று சொல்லுகிறீர்..
உண்மையில் இன்று வலுவான ஆட்டம் இருக்காது...என்று நினைக்கிறேன்...
வாழ்க தமிழ்

மயூ
21-03-2007, 04:04 PM
இன்று இலங்கை உசாராகவே ஆடும் என்று நினைக்கின்றேன்.!!!
ஒரு தபா ஸ்கோர் பார்த்துட்டு வாறேன்... கொஞ்சம் பொறுங்க!

ஷீ-நிசி
21-03-2007, 04:26 PM
Bangladesh v Sri Lanka 182/1 *

Pakistan 157/2 * v Zimbabwe

மயூ
21-03-2007, 04:32 PM
Bangladesh v Sri Lanka 182/1 *

Pakistan 157/2 * v Zimbabwe
இலங்கை இந்தியாவைப் பார்த்து கவனமாக ஆடுவதாக விளங்குது!!!!

ஷீ-நிசி
21-03-2007, 04:33 PM
வீணா பங்களாதேஷ நாமளே உசுப்பிவிட்டு பலியாகிட்டோம்....

ஷீ-நிசி
21-03-2007, 04:34 PM
உலக கோப்பை... இந்தியா வெல்லும் ஆருடம்...


1981

1. இளவரசர் சார்லசுக்கு திருமணம்
2. லிவர் பூல் யூரோப்பிய சாம்பியனாக முடிசூடியது
3. ஆஸ்திரேலியா ஆசஸ் தொடரை இழந்தது
4. போப் மரணம்

1 வருடத்திற்கு பிறகு
1982
உலக கோப்பை கால்பந்தில் இத்தாலி வெற்றிகொடி நாட்டியது


1 வருடத்திற்கு பிறகு

1983

இந்தியா கிரிக்கெட் உலக கோப்பையை வென்றது

இப்போ......


2005



1. இளவரசர் சார்லசுக்கு திருமணம்

2. லிவர் பூல் யூரோப்பிய சாம்பியனாக முடிசூடியது
3. ஆஸ்திரேலியா ஆசஸ் தொடரை இழந்தது
4. போப் மரணம்

1 வருடத்திற்கு பிறகு

2006

உலக கோப்பை கால்பந்தில் இத்தாலி வெற்றிகொடி நாட்டியது


1 வருடத்திற்கு பிறகு.....

2007

2007 Cricket World Cup: இந்தியா ????


1983 -ல் முதல் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது

2007-ல் முதல் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது
அப்படின்னா?

மயூ
21-03-2007, 04:37 PM
வீணா பங்களாதேஷ நாமளே உசுப்பிவிட்டு பலியாகிட்டோம்....
பங்களா தேசை உசுப்பி விட்டதை விட இலங்கையை உசார் படுத்தி விட்டார்கள் நம்ம இந்திய அணியினர்!!!

அறிஞர்
21-03-2007, 04:38 PM
ஆஹா இந்த கணக்கு கொஞ்சம் ஓவராயில்ல இருக்கு......

கணக்கு படி ஜெயித்தால்.... 110 கோடி மக்களுக்கு சந்தோசம் தான்..

அறிஞர்
21-03-2007, 04:39 PM
இலங்கை புரட்டி எடுக்கிறார்கள்.. 203/2

aren
21-03-2007, 06:07 PM
இலங்கை ஆடியதைப் பார்த்தால் நிச்சயம் அவர்கள் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று விடுவார்கள் என்றே தோன்றுகிறது.

ஆனால் அவர்களுடைய ஆட்டம் கதி கலங்க வைக்கிறது. இந்தமாதிரியான ஆட்டத்தை இந்தியாவுடன் ஆடும்பொழுது மூட்டைகட்டி வைத்துவிடவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்த வயதிலும் ஜெயசூரியாவின் ஆட்டம் வியக்க வைக்கிறது.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
21-03-2007, 06:13 PM
உலக கோப்பை... இந்தியா வெல்லும் ஆருடம்...


2007 Cricket World Cup: இந்தியா ????


1983 -ல் முதல் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது

2007-ல் முதல் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது
அப்படின்னா?

உங்கள் ஆருடம் சரியோ தவறோ என்று வாதாடவில்லை.

நம் மக்கள் தங்கள் மேல் நம்பிக்கை கொண்டு விளையாடி இலங்கையை முதலில் வென்று அடுத்த கட்டத்திற்கு போகவேண்டும். அதற்கே ததுகினத்தமாக இருக்கிறது இப்பொழுது, நீங்கள் அதற்குள் கப் இந்தியாவிற்கே என்கிற ரீதியில் நினைக்கிறீர்கள்.

முதலில் அடுத்த ஆட்டம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
21-03-2007, 06:16 PM
திரும்பிய பக்கமெல்லாம் நம் இந்திய வீரர்களின் விளம்பரங்கள். தொலைகாட்சியில் ஒரு ஓவர் போட்டு முடிப்பதற்கு முன்பாகவே விளம்பரங்கள் வந்து கடுப்படிக்கின்றன. இந்தியா மட்டும் அடுத்த கட்டத்திற்கு போகவில்லையென்றால் அந்த விளம்பரங்கலில் வந்த பொருட்கள் அனைத்தையும் இந்தியர்கள் நிராகரிப்பார்கள் என்று நம்புகிறேன்.

நம் வீரர்கள் எவ்வளவு சம்பாதிக்கலாம் என்றே நினைக்கிறார்கள். அப்படி ஜெயித்து கோப்பையை கைப்பற்றுவது என்று நினைப்பதேயில்லை.


நன்றி வணக்கம்
ஆரென்

மனோஜ்
21-03-2007, 07:22 PM
திரும்பிய பக்கமெல்லாம் நம் இந்திய வீரர்களின் விளம்பரங்கள். தொலைகாட்சியில் ஒரு ஓவர் போட்டு முடிப்பதற்கு முன்பாகவே விளம்பரங்கள் வந்து கடுப்படிக்கின்றன. இந்தியா மட்டும் அடுத்த கட்டத்திற்கு போகவில்லையென்றால் அந்த விளம்பரங்கலில் வந்த பொருட்கள் அனைத்தையும் இந்தியர்கள் நிராகரிப்பார்கள் என்று நம்புகிறேன்.

நம் வீரர்கள் எவ்வளவு சம்பாதிக்கலாம் என்றே நினைக்கிறார்கள். அப்படி ஜெயித்து கோப்பையை கைப்பற்றுவது என்று நினைப்பதேயில்லை.
நன்றி வணக்கம்
ஆரென்
100 ற்க்கு 100 உண்மை :aktion033:

leomohan
21-03-2007, 08:26 PM
எப்படி ஷீ இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க. பலே

அறிஞர்
21-03-2007, 08:39 PM
எப்படி ஷீ இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க. பலே
ஷீக்கு நண்பர்கள் கொடுத்திருக்கிறார்கள்... ஹிஹி...

இலங்கை அழகாக விளையாடுகிறது இன்று... இந்தியாவுக்கு வெள்ளிக்கிழமை ஆப்புதான் என்ற பாணியில் இருக்கிறது அவர்கள் ஆட்டம்.

மட்டை, பந்துவீச்சில் ஜொலிக்கிறார்கள்.

ஆதவா
21-03-2007, 08:39 PM
எப்படி ஷீ இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க. பலே

அந்த யோசனையெல்லாம் ரசிகர்களை மட்டுப்படுத்த........... திறமை இல்லையேல் எதுவுமில்லை.

ஷீ-நிசி
22-03-2007, 01:40 AM
இது என்னுடைய ஆருடம் இல்லை நண்பர்களே! இப்படி பல கணிப்புகள், மெயிலிலும், செல்பேசியிலும் சுற்றி வந்துக்கொண்டிருக்கிறது..

உதயா
22-03-2007, 04:20 AM
வெள்ளிக்கிழமை பாருங்க்கள்... நாங்களும் பட்டைய கிளப்புவோம்...

poo
22-03-2007, 05:22 AM
இலங்கை நேற்று ஜெயித்திருப்பது நல்லதுதான்.. அதுவும் அதிக ரன் வித்தியாசத்தில் ஜெயித்திருப்பதால் நம்முடனான ஆட்டத்தில் அவர்களுக்கு நெருக்கடி இருக்காது..
(அதைப் பயன்படுத்தி......பயன்படுத்தி.... நம்.. நம்.. சூதாட்ட புக்கிகள் நன்றாக ஆடினால் நாமும் இலங்கையும் உள்ளே போய்விடலாம்.. ஹிஹி.. நாட்டுப்பற்று எப்படியெல்லாம் மூளையை மழுக்குது!!)

பங்காளிக்கு(1996 வேர்ல்டு கப் இறுதியில்) நாம பண்ணின சப்போர்ட்டையெல்லாம் மறக்காம கொஞ்சம் மனசு வைச்சு கருணையோட ஆடனும்..

ஜெயசூர்யா கால் தசைபிடிப்பில் வெளியேற கொஞ்சம் மனசுக்கு ஆறுதலா இருந்துச்சி... ஆனா மறுபடியும் வந்து கலக்கிட்டாரு..நம்ம வயித்தையும்.

நாளை ஹர்பஜன் ஆடுவார்.. ஜெயசூர்யா , சங்ககரா இருவரும்தான் நமக்கு பெரிய சவால் கொடுப்பவர்கள்.. நம்ம அகர்கரு , ஜாகிரு கொஞ்சம் அடக்கி வாசிக்கனும்.. அகர்கர் ஆர்வமா ஆஃப் சைடுல வெளியில போட்டாலும், ஜாகிரு ஆக்ரோஷமா உடம்புல போட்டாலும் கோட்டுக்கு வெளியில போய்டும்.. ரொம்ப கட்டுக்கோப்பா வீசினாதான் கோப்பை கனவு பலிக்கும்!!

முதல் பேட்டிங் என்றால் கண்டிப்பாக 300-ஐ தாண்டனும்.. இரண்டாவது பேட்டிங்-னா டிராவிட் மூன்றாவது வீரரா வரனும் !!.. (அப்பால யாரு கட்டையை போடறது?)

pradeepkt
22-03-2007, 06:06 AM
2007-ல் முதல் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது
அப்படின்னா?
இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியேதானே ஏற்கனவே ரணகளமாக் கெடக்குது...
பயலுவளக் கொஞ்சம் நிம்மதியா விளையாட விடுங்க சாமி... :icon_wink1:

அமரன்
22-03-2007, 08:11 AM
இலங்கை வங்களாதேஸை 112 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தியுள்ளனர். அவர்கள் பந்துவீச்சிலும் துடுப்பாட்டத்திலும் சிறந்து விளங்குகுன்றார்கள். இந்தியா துடுப்பாட்டத்தில் காட்டும் திறமையை பந்துவீச்சில் காட்டுவதில்லையே.

ஷீ-நிசி
22-03-2007, 09:52 AM
இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியேதானே ஏற்கனவே ரணகளமாக் கெடக்குது...
பயலுவளக் கொஞ்சம் நிம்மதியா விளையாட விடுங்க சாமி... :icon_wink1:


விளையாட்டுல இதெல்லாம் சகஜமப்பா..

ஷேவாக் டிராவிட்டிடம் கேட்கிறார்..

அண்ணே! அண்ணே! அடுத்த தடவையும் பெர்முடா கூடவே
விளையாடுவோம்னே?

pradeepkt
22-03-2007, 10:06 AM
ம்ம்ம்...

இன்சமாம் நேற்றுக் கிளம்பும் முன் திராவிடிடம் பேசியதை நேற்று டூப் டி.வி. யில் பார்த்தேன்

இன்சி: சரிங்க பங்காளி... ஏதோ வந்தோம்.. ஊரச் சுத்திப் பாத்தோம்... வெளையாண்டோம்... அப்ப நாங்க போயிட்டு வாரோம்..

திராவிட்: அட... என்ன பங்காளி அதுக்குள்ள கெளம்பிக்கிட்டு... ஒண்ணு மண்ணாப் பழகிட்டு இப்படிச் செய்யலாமா? இன்னும் ரெண்டு நாள் இருந்தா நாங்களும் வந்துருவம்ல... பேசிக்கிட்டே போயிருவம்...

poo
22-03-2007, 10:29 AM
ஷேவாக்கை பெர்முடாவிலயே இறக்கிவிட்டுட்டு வந்துடலாமே....

pradeepkt
22-03-2007, 11:00 AM
ஷேவாக்கை பெர்முடாவிலயே இறக்கிவிட்டுட்டு வந்துடலாமே....ஆமாமா, அங்க அவரு பெரிய ஆட்டக்காரரா ஆயிருவாரு... :thumbsup:

அன்புரசிகன்
22-03-2007, 11:14 AM
பங்காளிக்கு(1996 வேர்ல்டு கப் இறுதியில்) நாம பண்ணின சப்போர்ட்டையெல்லாம் மறக்காம கொஞ்சம் மனசு வைச்சு கருணையோட ஆடனும்..

வைட் போடட்டு சாதூர்யமாக சனத் ஜெய சூரியாவை (169 ஓட்டங்களுடன்) அவுட்பண்ணியதை.....????



ஜெயசூர்யா கால் தசைபிடிப்பில் வெளியேற கொஞ்சம் மனசுக்கு ஆறுதலா இருந்துச்சி... ஆனா மறுபடியும் வந்து கலக்கிட்டாரு..நம்ம வயித்தையும்.


அவர் மீண்டும் வந்தது 100 அடிக்க அல்ல. 2 ரன்கள் ஓடியது தன்னால் ஓட முடியும் என காட்ட. 97 ஓட்டங்களுடன் 6 ஓட்டம் அடித்தது தான் வழமையான பாணியிலே உள்ளேனென காட்ட.

ஆட்டமிழந்து வெளியேறும் போது ஓடி சென்றது மீண்டும் தனது ஓட்டத்திறமையை காட்டுவதற்கு.



ஜெயசூர்யா , சங்ககரா இருவரும்தான் நமக்கு பெரிய சவால் கொடுப்பவர்கள்..

சாமர ஜெயவர்த்தன தறங்க இன்னமும் திடமாகத்தான் உள்ளனர்.
விஷேடமாக சாமர.



முதல் பேட்டிங் என்றால் கண்டிப்பாக 300-ஐ தாண்டனும்.. இரண்டாவது பேட்டிங்-னா டிராவிட் மூன்றாவது வீரரா வரனும் !!.. (அப்பால யாரு கட்டையை போடறது?)
ஏதோ வெல்லனும். அதுவும் சும்மா இல்ல...... பேர்முடாவுடன் பங்களாதேசம் சிறப்பாக விளையாடிவிட்டால்.... டிஜிட்டல் ஆப்புத்தான். பிறிவிஜு பாக்கமுடியும். (ஆப்பின்)

ஓவியன்
22-03-2007, 12:36 PM
பங்காளிக்கு(1996 வேர்ல்டு கப் இறுதியில்) நாம பண்ணின சப்போர்ட்டையெல்லாம் மறக்காம கொஞ்சம் மனசு வைச்சு கருணையோட ஆடனும்..


1996 ம் ஆண்டு அரை இறுதியில் கல்கத்தாவிலே வைத்து கல்லாலே அடிச்சதைச் சொல்லுறீங்களே!!!
:icon_03: :icon_03: :icon_03:

அறிஞர்
22-03-2007, 12:41 PM
எப்படியோ.. மன்றத்தில் வெள்ளிக்கிழமை... விவாதம் சூப்பரா போகும் போல....

ஓவியன்
22-03-2007, 12:48 PM
அதிரடிக்கு சனத்
அஸ்திவாரமாக சங்க
மத்திய வரிசைக்கு சாமர மற்றும் டில்சான்
பந்து வீச்சிலே முரளியுடன் வாஸ் மற்றும் துடிப்பான மலிங்க!
இவர்களை வழி நடத்த ஆர்வமிக்க அணித் தலைவர் மகேலா

என்று இலங்கை அணியினர் பலமாகவே உள்ளனர். இவர்களை இந்தியா வெல்ல முடியும் என்று நான் நினைக்கவில்லை

அறிஞர்
22-03-2007, 12:52 PM
பார்க்கலாம்..

இந்தியர்களை அவர்களாலே நம்ப முடியாது.எப்ப விளையாடுவாங்க... எப்ப சொதப்புவாங்க...

வீறு கொண்டு எழுந்தால் புலி.....
பதுங்கி.. படுத்துக்கொண்டாலும் புலி.....

அன்புரசிகன்
22-03-2007, 01:01 PM
பார்க்கலாம்..

இந்தியர்களை அவர்களாலே நம்ப முடியாது.எப்ப விளையாடுவாங்க... எப்ப சொதப்புவாங்க...

வீறு கொண்டு எழுந்தால் புலி.....
பதுங்கி.. படுத்துக்கொண்டாலும் புலி.....

புலி பதுங்குவது பாயத்தான். (நமக்கே.......) வேண்டுமானால் ஆண்சிங்கம் எனலாம். அட்டகாசமாக கர்ச்சிக்கும். ஆனால் இரைக்கு வேட்டையாட பெண்சிங்கம் தான் தேவை.

அறிஞர்
22-03-2007, 01:24 PM
இந்திய அணியில் 3 மாற்றங்கள் இருக்கலாம்.

தினேஷ் கார்த்திக் - உத்தப்பாவுக்கு பதில்
இர்பான் பதான் - அகர்கருக்கு பதில்
ஹர்பஜன் சிங் - கும்ப்ளேக்கு பதில்

aren
22-03-2007, 02:17 PM
எனக்குத் தெரிந்து இந்திய அணி இதுவாகத்தான் இருக்கும்:

1. சவ்ரவ் கங்குலி
2. சேவாக்
3. இர்பாஃன் பத்தான்
4. சச்சின் டெண்டுல்கர்
5. யுவராஜ் சிங்
6. திராவிட்
7. தோனி
8. கும்ளே
9. ஜாஹீர் கான்
10. அகர்கர்
11. முனாஃப் படேல்

அகர்கருக்கு பதில் ஸ்ரீசந்த் உள்ளே வர வாய்ப்பிருக்கிறது. ஆனால் அதற்கு சந்தர்பம் கிடைக்காது என்றே நினைக்கிறேன். மாட்ச் பிராக்டிஸ் இல்லாததால் ஸ்ரீசந்திற்கு சான்ஸ் கிடைக்காது. அகர்கருக்கு இன்னொரு சந்தர்பம் கிடைக்கும்.

கார்த்திக் உள்ளே வருவதற்கு சான்ஸ் கிடையாது.

நம் மக்கள் இடதுகை, வலதுகை ஆட்டக்காரர்களாக உள்ளே அனுப்புவார்கள் என்றே நினைக்கிறேன்.

முதலில் களத்தில் இறங்குவது ஷேவாக்கும் கங்குலியுமாக இருக்கும். அதில் ஷேவாக் முதலில் அவுட் ஆகிவிட்டால் திராவிட் அல்லது தோனி களத்தில் இறங்குவார்கள். அப்படி கங்குலி முதலில் அவுட் ஆகிவிட்டால் இர்பாஃன் பத்தான் களத்தில் இறங்குவார் என்று நினைக்கிறேன். முதல் 20 ஓவர்களுக்கு இப்படித்தான் முடிவு எடுப்பார்கள் என்று நினைக்கிறேன்.

அதுமாதிரி கும்ளேயை ஆட்டத்தில் இறக்குவார்கள். ஹர்பஜனுக்கு மறுபடியும் பெஞ்ச் தான். ஷேவாக் ஆஃப் ஸ்பின் பந்து வீசுவதால் கும்ளேவிற்கு ஆட்டத்தில் இடம் நிச்சயமாக இருக்கும். அதுபோல் இலங்கை அணிக்கு கும்ளேயிடம் ஒரு மரியாதை கலந்த பயம் இருக்கிறது. அதை இந்திய அணி உபயோகப்படுத்திக் கொள்ளும் என்றே நினைக்கிறேன்.

நம் இந்தியா முதலில் ஆடினால், முதல் 20 ஓவர் கவனமாக ஆடவேண்டும். ஆனால் கங்குலி பங்களாதேஷிடம் ஆடியதுபோல் லொட் வைக்கக்கூடாது. ரன்கள் வேகமாக எடுக்கவேண்டும். குறைந்தது ஒரு ரன் மாதிரி எடுத்து ரொடேட் செய்யவேண்டும். அப்படி செய்தால் முதல் 20 ஓவர்கள் குறைந்தது 100 - 110 ரன்களும், 50 ஓவர்களில் 260 - 275 ரன்களும் எடுக்கமுடியும்.

அப்படியல்லாமல் இந்திய பந்து வீசினால் முதல் 20 ஓவர்களில் குறைந்தது மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்து 70 - 80 ரன்களுக்குள் இலங்கையை நிறுத்தவேண்டும். அவர்கள் அடுத்த கட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுவிட்டதால் அவர்கள் கொஞ்சம் ரிலாக்ஸாக ஆடுவார்கள். அதனால் எளிதாக இரண்டு அல்லது மூன்று விக்கெட்டுக்களை முதல் 20 ஓவர்களில் எடுக்க வாய்ப்பிருக்கிறது.

தொடங்க பந்து வீச்சாளர்களாக ஜாஹீர் கானும், முனாஃப் படேலும் பந்து வீசினால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். அதுதான் செய்வார்கள் என்றும் நம்புகிறேன்.

அகர்கரும், இர்பாஃன் பத்தானும் அடுத்த சேஞ்ச் பந்து வீச்சாளர்களாக வருவார்கள்.

கும்ளே, ஷேவாக், யுவராஜ், டெண்டுல்கர் ஆகியோர் பந்து வீச்சில் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்றும் எனக்குத் தோன்றுகிறது.

இந்தியா முதலில் பந்து வீசினால் இந்தியா வெல்வதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆகையால் டாஸ் வென்றால் இந்தியா முதலில் பந்துவீசுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

நாளை இந்தியாவிற்கு மிகவும் முக்கியமான ஆட்டம். வெற்றி பெற வேண்டும். வெல்வார்கள் என்றே நினைக்கிறேன். இல்லையேல் தொலக்காட்சி காண்டிராக்ட் எடுத்தவர்கள் தலையில் துணி போட்டுக்க்கொண்டுதான் போவார்கள். அதுபோல் அட்வர்டைஸ்மெண்ட் கம்பெனிகளும், மற்றவர்களும் பல ஆயிரம் கோடிகள் நஷ்டம் அடைவார்கள் என்று நினைக்கிறேன். ஆகையால் இந்தியா உயிர்கொடுத்து ஆடி வெற்றி பெருவார்கள் என்றே நினைக்கிறேன்.

நாளை பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று.

நன்றி வணக்கம்
ஆரென்


நன்றி வணக்கம்
ஆரென்


நன்றி வணக்கம்
ஆரென்

அமரன்
22-03-2007, 03:51 PM
எப்படி என்றாலும் நமக்கு நாளை நல்ல வேட்டைதான்.

அறிஞர்
22-03-2007, 06:23 PM
ஆரென் கும்ப்ளேயின் விளையாட்டு.. இலங்கை எதிராக சிறந்ததாக இல்லை.

4 வேக பந்து வீச்சாளர்கள் சந்தேகமே... உத்தப்பாவுக்கு பதில்... தினேஷ் கார்த்திக் என்பது சரியாக இருக்கும்.

பார்க்கலாம்.. உங்கள் கணிப்பை...

அறிஞர்
22-03-2007, 06:24 PM
கனடா நியூசிலாந்துக்கு எதிராக நன்றாக விளையாடுகிறது. 71/0 8 ஓவரில்

ஓவியன்
22-03-2007, 08:55 PM
கனடா நியூசிலாந்துக்கு எதிராக நன்றாக விளையாடுகிறது. 71/0 8 ஓவரில்

ஆமாம் நன்றாக விளையாடுகிறார்கள், இருவர் அரைச்சதம் அடித்துள்ளனர்!

ஓவியன்
22-03-2007, 09:13 PM
இந்திய அணியில் 3 மாற்றங்கள் இருக்கலாம்.

தினேஷ் கார்த்திக் - உத்தப்பாவுக்கு பதில்
இர்பான் பதான் - அகர்கருக்கு பதில்
ஹர்பஜன் சிங் - கும்ப்ளேக்கு பதில்


தினேஷ் கார்த்திக் - பிரயோசனம் மிக்க மாற்றமாக அமையலாம்!
இர்பான் பதான் - துடுப்பாட்டத்திற்கும் வன்மை சேர்க்க வல்ல மாற்றமாக அமையலாம்.
ஹர்பஜன் சிங் - எனக்கென்னவோ இது பயன் தருமென்று தெரியவில்லை, நம்மவர்களை ஹர்பஜனால் கட்டு படுத்த முடியுமென்று நான் நினைக்கவில்லை. அவரைவிட அனுபவம் மிக்க கும்ளேயே பெட்டர்.

அறிஞர்
22-03-2007, 09:32 PM
ஹர்பஜன் சிங் - எனக்கென்னவோ இது பயன் தருமென்று தெரியவில்லை, நம்மவர்களை ஹர்பஜனால் கட்டு படுத்த முடியுமென்று நான் நினைக்கவில்லை. அவரைவிட அனுபவம் மிக்க கும்ளேயே பெட்டர்.
இலங்கைக்கு எதிராக பெரிதாக அவர் சாதித்தது இல்லை.. ஆனால் முந்தின போட்டியில் 3 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

aren
23-03-2007, 02:40 AM
இலங்கை அணியில் இரண்டு மாற்றங்கள் வந்தாலும் வரலாம். ரோனால்ட் மற்றும் முஷாராப்பிற்கு பதில் அட்டாபட்டுவும், பெஃர்ணாண்டோவும் உள்ளே வரலாம்.

aren
23-03-2007, 02:40 AM
டாஸ் ஜெயிக்கும் குழு முதலில் பந்து வீச்சும் என்று நினைக்கிறேன்.

ஆதவா
23-03-2007, 04:18 AM
ஆரென் ஒருவேளை விளையாட்டுத்துறையில் இருக்கிறாரோ?

ஷீ-நிசி
23-03-2007, 04:21 AM
இலங்கைக்கு எதிராக கும்ளே ஜொலித்தது இல்லை. ஹர்பஜன் சிங் உள்ளே வந்தால் நல்லது..

தினேஷ் கார்த்திக் இப்போதைக்கு தேவை இல்லை..

கங்குலியும் உத்தப்பாவுமே தொடக்கம் தரலாம்...

அகார்கருக்கு பதிலாக இர்ஃபானை மாற்றிக்கொள்ளலாம்..

கும்ப்ளே பதில் ஹர்பஜன்
அகார்கர் பதில் இர்ஃபான்..

இந்த இரண்டு மாற்றங்கள் மட்டும் போதும்...

இந்தியா டாஸ் ஜெயித்தால் பேட்டிங் எடுக்கவேண்டும்.. 300, 320 எடுத்தாலொழிய வெற்றியை பற்றி கனவு காணக்கூடாது...

ஒருவேளை இலங்கை டாஸ் வெற்றிபெற்று பேட்டிங் எடுத்தால் 200, 220 க்குள் மூட்டைக் கட்டவேண்டும் இலங்கையை.

இல்லையென்றால் சூப்பர் 8-க்குள் நுழைய வாய்ப்பில்லை.

சேஸிங் செய்வது என்பது அவ்வளவு சுலபமில்லை, முரளி, வாஸின் பவுலிங்கில்.

இன்றைய போட்டியின் வெற்றி யுவ்ராஜ், தோனியின் கையில் தான் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

ஷீ-நிசி
23-03-2007, 04:23 AM
உலககோப்பை - 2007 ஸ்கோர்கார்டு

01. West Indies Vs Pakistan
http://card.cricket.indiatimes.com/d...ms?matchid=356

02 Australia Vs Scotland
http://card.cricket.indiatimes.com/d...ms?matchid=357

03 Canada Vs Kenya
http://card.cricket.indiatimes.com/d...ms?matchid=358

04 Bermuda Vs Srilanka
http://card.cricket.indiatimes.com/d...ms?matchid=359

05 Ireland Vs Zimbabve
http://card.cricket.indiatimes.com/d...ms?matchid=360

06 England Vs Newzealand
http://card.cricket.indiatimes.com/d...ms?matchid=361

07 Netherland Vs South Africa
http://card.cricket.indiatimes.com/d...ms?matchid=362

08 Bangaladesh Vs India
http://card.cricket.indiatimes.com/d...ms?matchid=363

09 Ireland Vs Pakistan
http://card.cricket.indiatimes.com/d...ms?matchid=364

10 Australia Vs Netherland
http://card.cricket.indiatimes.com/d...ms?matchid=365

11 Canada Vs England
http://card.cricket.indiatimes.com/d...ms?matchid=366

12 Bermuda Vs India
http://card.cricket.indiatimes.com/default.cms?matchid=367

13 West Indies Vs Zimbabwe
http://card.cricket.indiatimes.com/default.cms?matchid=368

14 Kenya Vs NewZealand
http://card.cricket.indiatimes.com/default.cms?matchid=369

15 Scotland Vs South Africa
http://card.cricket.indiatimes.com/default.cms?matchid=370

16 Bangaladesh Vs Srilanka
http://card.cricket.indiatimes.com/default.cms?matchid=371

17 Pakistan Vs Zimbabwe
http://card.cricket.indiatimes.com/default.cms?matchid=372

18 Canada Vs NewZealand
http://card.cricket.indiatimes.com/default.cms?matchid=373

19 Netherland Vs Scotland
http://card.cricket.indiatimes.com/default.cms?matchid=374

poo
23-03-2007, 04:33 AM
உத்தப்பா அணியில் ஆடுவது நல்லது. தொடக்க வீரராக வந்து ஒரு நாலு அடி அடித்துவிட்டால் ஆட்டம் நம் கைக்கு வந்துவிடும். ஒருவேளை கார்த்திக் அவருக்கு பதில் சேர்க்கப்பட்டால் கார்த்திக் முதலில் களமிறங்கிவிட வேண்டும். நடுவில் அவர் இறங்கி பெரிய ஷாட்கள் அடிக்க முடியாது.. ஆனால் அதற்கு வாய்ப்பு குறைவு.

அகர்கர் நிச்சயம் உள்ளே ஆடுவார். பதான் சேர்க்கப்பட்டால் உத்தப்பா வெளியேறுவார். கும்ளே -ஆடுவது நல்லது. ஷேவக், யுவராஜ், சச்சின் என்று சுழலுக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது. மேலும் ஹர்பஜன் வந்துதான் பேட்டிங் செய்து அணியை காப்பாற்ற வேண்டுமெனில் அப்படிப்பட்ட வெற்றி எதற்கு?!

கூடுமானவரை சச்சின் பின் வரிசையில் களமிறங்க வேண்டும்.. முரளியை யுவராஜ் சமாளிப்பாரா என்பதே கேள்வி.

இலங்கை அணியில் அட்டப்பட்டு ஆடுவார். பந்துவீச்சாளர் மாற்றம் இருக்க வாய்ப்பில்லை.