PDA

View Full Version : முயற்சிப்போமே..!பாரதி
13-03-2007, 02:19 PM
அன்பு நண்பர்களே,

இந்தப்பதிவை அதிகமான உறவுகள் விரும்பப்போவதில்லை என்றாலும் பதிக்கிறேன். மன்றத்தில் இணைய வரும் புதிய உறவுகளுக்கு இந்தப்பதிவின் கருத்துக்கள் பொருந்தாது.

ஆங்கிலத்தில் மட்டுமே தட்டச்சு செய்து பழகியவர்கள் தமிழைக்கண்டதும் ஆர்வம் கொண்டு, தட்டச்சு செய்வது சாதாரணமான ஒன்று. அவ்விதம் செய்யும் போது எழுத்துப்பிழைகளும், கருத்துப்பிழைகளும் வருவதும் சாதாரணமான ஒன்றுதான். அதே போல் ஆங்கில வார்த்தைகள் அல்லது எழுத்துக்களை சில இடங்களில் உபயோகிக்கவும் செய்கிறோம். தமிங்கிலம் என்ற புதிய வார்த்தைக்கே உரித்தான வகையிலும், தட்டச்சு செய்கிறோம்.

ஆரம்பத்தில் தமிழில் தட்டச்சு செய்வதில் சற்று சிரமம் இருந்தாலும், காலப்போக்கில் தட்டச்சு சுலபமாகிவிடும் என்பதுதான் உண்மை. எனக்கும் அடிப்படையிலேயே ஆங்கில தட்டசோ, தமிழ் தட்டச்சோ தெரியாது. மன்றத்தில் இணைந்த பின்னர் ஆங்கிலத்தில் தட்டச்சுவதை விட தமிழில் தட்டச்சுவதுதான் எளிது என்கிற நிலைமைதான் இப்போது இருக்கிறது.

இயன்றவரையில் தமிழில் பதிவுகள் இடுவது, பிற மொழிச்சொற்களை தவிர்ப்பது, புதிய தமிழ் சொற்களை கண்டுபிடித்து அறிமுகப்படுத்துவது ஆகியவை நன்று. மன்றத்தில் உறவுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதும், கவிதைகள், கதைகள் உட்பட எல்லாப்பகுதிகளிலும் பதிவுகளின் எண்ணிக்கை அதிகரிப்பதும் அளவில்லா இன்பத்தைத் தருகிறது.

கவிதை, உரைநடை, கட்டுரை, பேச்சு, வழக்கு - என பல வகைகளிலும் வரும் தமிழ்ப்பதிவுகள் ஓவ்வொரு வகையில் இன்பத்தைத் தரும். வட்டார மொழிக்கும், வழக்குத்தமிழுக்கும், கணினித்தமிழுக்கும் இலக்கணம் அவ்வளவாக பொருந்தாது என்றே நான் தனிப்பட்ட முறையில் எண்ணுகிறேன். ஆனால் அங்கும் எழுத்துப்பிழைகள் நம்மை மிகவும் சங்கடப்படுத்தக்கூடியவை.

புதிய பதிவுகளை பதிப்பதிலும், கருத்துக்களை பதிவு செய்வதிலும், நண்பர்களை உரிமையுடனும், நகைச்சுவை உணர்வுடனும் கிண்டல் செய்வதிலும் நமக்கு இருக்கும் ஆர்வம், அதை பிழையின்றி எவ்விதம் செய்வது என்பதில் சற்றும் இல்லை என்பதை நாம் வருத்தத்துடன் ஒத்துக்கொண்டுதான் ஆக வேண்டும்.

சாப்பாட்டில் ஒரே ஒரு கல் இருந்தாலும், வாய்க்குள் வைத்து மெல்லும் போது நாம் படும் இன்னலை சொல்லத்தேவையில்லை. அப்படி இருக்க இப்போது தினமும் படிக்கும் பல பதிவுகளில், கற்களுக்கு நடுவே, ஆங்காங்கே சோற்றுப்பருக்கைக்கள் கண்களுக்கு தென்படுகின்றன என்ற சொல்ல வேண்டிய நிலைமையில் இருக்கிறேன். சில பிழைகள் நம் கண்களுக்குத் தெரியாமல் போகும் என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். எனினும் உதாரணமாக - ஒற்றுப்பிழைகள் குறித்து இலக்கணம் தெரியாது என்றாலும், குறைந்த பட்சம் எழுத்துப்பிழைகளை தவிர்க்கலாமே?

சில மன்ற உறவுகளின் பதிவுகளில் வேண்டுமென்றே தமிங்கிலம் நடமாடுவதையும் காண முடிகிறது. முன்பெல்லாம் பிழைகளை சுட்டிக்காட்டும் விதமாக வர்ணத்தில் மேற்பார்வையாளர்கள் திருத்திக்காட்டுவார்கள். படிப்பவர்களுக்கு பதிவாளர்கள் செய்த பிழைகள் தெளிவாக தெரியும். நமது பதிவில் அப்படி எதுவும் வந்து விடக்கூடாது என்கிற பதற்றம் அனைவருக்கும் ஓரளவுக்கு இருக்கும். உறுப்பினர்களின் எண்ணிக்கை கட்டுக்குள் இருக்கும் போது இது சாத்தியமானதாக இருந்தது. இப்போது இருக்கும் நிலைமையில் மேற்பார்வையாளர்களால் அவ்விதம் செய்வது மிகமிகக் கடினம்.

எனவே தயவு செய்து அனைவரும் இயன்ற வரையில் பிழையின்றி தமிழில் தட்டச்சு செய்வது என்பதை ஒரு உறுதியாக ஏற்று, நடைமுறைப்படுத்துவது அவசியமானதாகும்.

மன்றத்தின் பெயரைக் காப்பாற்றுவதற்காவது நாம் அனைவரும் பிழையில்லாத் தமிழை தட்டச்சு செய்ய வேண்டும்; குறைந்த பட்சம் முயற்சியாவது செய்ய வேண்டும் என்கிற வேண்டுகோளை அன்புடன் உங்கள் முன் வைக்கிறேன்.

மனோஜ்
13-03-2007, 02:48 PM
நீங்கள் கூறுவது 100 ற்க்("")கு 100 உண்மை
முடிந்த வரை முயல்கிறேன் பாரதி அவர்களே...
நன்றி

pradeepkt
13-03-2007, 03:05 PM
அண்ணா,
சரியான சமயத்தில் சுட்டிக் காட்டினீர்கள். நானும் இதைக் கவனித்துக் கொண்டுதான் இருந்தேன். ஆனால் நீங்கள் சொல்லியது போல் பல பதிவுகளில் இருந்ததனால் கடினமாக இருக்கிறது.

எனினும் என்னால் இயன்ற அளவு இதனைச் சரி செய்கிறேன்...

ஆதவா
13-03-2007, 03:32 PM
அருமையான பதிவு,. நான் முடிந்த வரையில் பிழைகள் தவிர்த்து வருகிறேன் என்றாலும் என்னை அறியாமல் பிழைகள் நேர்வதை தவிர்க்க முடியவில்லை. இங்கு தட்டச்சு பயிலும் காரணத்தினாலும் வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்கள் சிலர் தவறு நேர தட்டுவதும்தான் பிழைக்கு முக்கியக் காரணமாக அமைந்துவிடும்.

தமிங்கிலீஸ் வார்த்தைகள் கலப்பு அதிகமில்லை என்றாலும் சில இடங்களில் சுற்றுவது நானும் கண்டிருக்கிறேன். ஆனால் அவை கிண்டல், நக்கல், நையாண்டி, சீண்டல் போன்றவைகளுக்கு மட்டுமே உபயோகிக்கிறார்கள் என்பதால் கவலை வேண்டாமே! இருப்பினும் அதை சற்று குறைத்தால் நலம்.

மேற்பார்வையாளர்கள் இருக்கிறார்கள் என்றாலும் அவர்களும் ஒரு வேலையில் இருந்துகொண்டு நம்மை கவனிக்கிறார்கள் என்பதை ஒத்துக்கொள்ளவேண்டும். கூடுமானவரையில் திருத்த முயற்சிக்கலாம். அல்லது எழுதியவர்களே அதை மீண்டும் படித்து பிழையிருக்கக்காணின் திருத்தலாம்.

சிலர் தம் பதிவை திருத்துகிறார்களே என்று சங்கடப் படுவார்கள் (அப்படி மன்றத்தில் இருக்கமாட்டார்கள் என்று நினைக்கிறேன்.)
என் பதிவில் ஏதாவது பிழையிருந்தால் திருத்துவதில் சங்கடப்பட மாட்டேன். பிழை நீக்குவது என்பது சுத்தம் செய்வதுபோல.. சுத்தம் செய்ய வந்தால் விருப்பப்படாமல் போவது அழகல்லவே!

கூடுமானவரையில் பிழையின்றி ஆங்கிலக் கலப்பின்றி எழுதுங்கள் மக்களே! அன்றைய பாரதி மெல்லச் சாவும் என்றார். இன்றைய பாரதி பிழையாவது நீக்குவோம் என்கிறார்.

முயற்சி செய்வோம்..... முயன்று காட்டுவோம்

ஆதவன்

(பிழையின்றி எழுதச் சொன்ன இந்த கட்டுரையில் நான் கண்டு பிடித்தது ஒரே ஒரு பிழை... சரி செய்யவும் பாரதி அவர்களே! :) )

இளசு
13-03-2007, 08:21 PM
பூனைக்கு மணி கட்டினாய் என வீர ஆசாமியாய்ப்
பாராட்டினால் (நீதி)மன்ற அவமதிப்புக்கு ஆளாக நேரலாம் என்பதால்:)
தமிழ்ப் பூசைக்கு மணி ஒலித்தாய் எனப் பாராட்டுகிறேன் பாரதி..

--------------------------------------------------------

புதியவர்கள், பள்ளித் தமிழ்க்கல்வி அதிகம் இல்லாதவர்கள்
எந்த அளவுக்குத் தட்டச்சினாலும் மகிழ்ச்சியே..

மெல்ல மெல்ல மொழி நன்கு பழகி
பிழை குறைத்து அவர்கள் வளர்வதைப் பார்ப்பதே
ஒரு சுகானுபவம்..

அதற்காகவே அவர்கள் அறிமுகப்பதிவை திருத்தாமல் விட்டுவைக்கணும்..

( சொக்காய் போடாத குழந்தை படம் அதன் கல்யாண வயதில் சபைக்கு
வரும் சங்கட சுகம் அது..)

அந்தத் தமிழ்க் குழந்தைகளுக்கு ஒரு பா(ரா)ட்டு -

அன்பால் குழந்தை கடிக்கின்றது
அதுவும் கொஞ்சம் வலிக்கின்றது
தடவிப்பார்த்தால் இனிக்கின்றது - தமிழ்த்
தாயின் உள்ளம் துடிக்கின்றது..


------------------------------------------------------

ஆனால், இந்தச் சலுகைகள் தமிழில் வளர்ந்துவிட்ட
(தடிக்)குழந்தைகளுக்கு அல்ல..
நீங்கள் கடித்தால் நம் தாய் அழுவாள்...:angry: கடிவாள்..!

1) சூடாக பதில் அளிக்கும் உரையாடல் திரிகளில் பிழைகள் வர வாய்ப்பு அதிகம்.
பதித்தபின் ஒரு முறை நீங்களே படியுங்கள்..
பிழை கண்டால் எடிட்டுங்கள்..

2) கதை,கவிதை போன்றவை பிழைகளால் படிப்பவரின் இதயம் சேராமல், சேதாரமாகும்.

ஓவியா பரிசு பெற்ற கவிதைகள் நம் நண்பர்களால்
பிழை களையப்பட்டு, பின் பதிக்கப்பட்டன..

தனிமடலில் நம் நண்பர்களை அணுகுங்கள்..
நேரமிருந்தால் நிச்சயம் செய்வார்கள்..

3) கண்காணிப்பாளர்களும் அவ்வப்போது நேரமிருப்பின்
மற்றவர் பதிவுகளில் உள்ள முக்கிய பிழைகளைத் திருத்துங்கள்.

பதிவாளர்களுக்கு நீங்கள் எடிட்டியது தெரியும்..புரியும்.


4) ஒற்றுப்பிழைகள், சந்திப்பிழைகளை கணினித் தமிழ் அங்கீகரிக்கும்
என மொழியியலாளர்கள் கருதுகிறார்கள்..
(நானும் இவ்வகைப் பிழைகள் என் பதிவுகளில் ஊடுருவ அனுமதிக்கிறேன்..)


-------------------------------------------------

பொதுவாய் அனைவருக்கும்,

கணினித் தமிழும் கைவிரல் பழக்கம்!

தவறாகவேனும் தட்டச்சி பதியுங்க மக்கா..
தட்டச்சாமலே இருப்பதுதான் பெரிய தவறு..

நம் பின்னூட்டங்களை மட்டுமே எதிர்பார்த்து
பொன்னான நேரமிட்டு நம் நண்பர்கள் தரும் ஆக்கங்களுக்கு
வேறென்ன நாம் செய்ய கைம்மாறு???


நன்றி..

leomohan
13-03-2007, 08:31 PM
நல்ல விஷயத்தை முன்வைத்திருக்கிறீர்கள் பாரதி.

நான் 17 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுடன் உறவை புதுப்பித்திருக்கிறேன். 17 ஆண்டுகளுக்கு முன் படித்ததையே நினைவில் கொண்டு முடிந்த அளவில் தமிழில் எழுதுகிறேன். சொற்பிழை வரவாய்ப்பிருக்கிறது.

யாராவது கண்டால் அவசியம் திருத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

அநேகமாக ண, ன மற்றும் ர, ற வில் தவறு வர வாய்ப்பிருக்கிறது. மேலும் ப்ப, க்க, போன்ற புள்ளி வைத்த எழுத்துக்கள் சேர்க்கும் போது தவறு வரவாய்ப்பிருக்கிறது.

தவறாமல் சுட்டிக்காட்டுங்கள், திருத்திக் கொள்கிறேன்.

நன்றி.

அறிஞர்
14-03-2007, 12:39 AM
பாரதி கூறுவது அனைவருக்கும் ஒரு எச்சரிக்கையின் செய்திதான்..

தூயத்தமிழில் நாம் எழுத வேண்டும் என்பது அனைவரின் விருப்பம்.
------
சிலருக்கு மோகன் சொல்வது.. எந்த ந,ன போடுவது.. ர, ற போடுவது என சந்தேகம் வரும்....

சரியான வார்த்தை - தவறான வார்த்தை என பெட்டி வடிவில் பட்டியல் அமைத்து... முல்லை மன்றத்தில் கொடுக்கலாம். புதியவர்கள் சரியாக தமிழ் எழுத வசதியாக இருக்கும்.

உதாரணத்திற்கு..

அருமை----அறுமை
உள்ளது----உல்லது
அநேகம்----அனேகம்.

ஷீ-நிசி
14-03-2007, 03:46 AM
இதைப் பற்றி நானும் சிந்தித்தாலும் இந்த தவறை நானும் செய்திருக்கிறேன். தக்க சமயத்தில் பதமாகவும், இதமாகவும் அறிவுறுத்திய பாரதி அவர்களுக்கு நன்றி..

பதிவர்களுக்கு தங்களுக்கே தாங்கள் எழுதியதில் இந்த வார்த்தையில் எழுத்துப்பிழை இருக்கும் என்று கருதுவீர்களானால், உதா.. இந்த 'ற' போட வேண்டுமா அல்லது 'ர' போட வேண்டுமா என்று சந்தேகம் இருந்தால் சிகப்பு கலரில் அந்த வார்த்தையை நிறப்படுத்தி காட்டுங்கள்... மேற்பார்வையாளர்கள் அதை சரி செய்துவிடுவார்கள்.. சிகப்பு நிறத்தை நாம் பிழைகளுக்கு மட்டும் உபயோகிக்கலாம்...

leomohan
14-03-2007, 07:19 AM
இதைப் பற்றி நானும் சிந்தித்தாலும் இந்த தவறை நானும் செய்திருக்கிறேன். தக்க சமயத்தில் பதமாகவும், இதமாகவும் அறிவுறுத்திய பாரதி அவர்களுக்கு நன்றி..

பதிவர்களுக்கு தங்களுக்கே தாங்கள் எழுதியதில் இந்த வார்த்தையில் எழுத்துப்பிழை இருக்கும் என்று கருதுவீர்களானால், உதா.. இந்த 'ற' போட வேண்டுமா அல்லது 'ர' போட வேண்டுமா என்று சந்தேகம் இருந்தால் சிகப்பு கலரில் அந்த வார்த்தையை நிறப்படுத்தி காட்டுங்கள்... மேற்பார்வையாளர்கள் அதை சரி செய்துவிடுவார்கள்.. சிகப்பு நிறத்தை நாம் பிழைகளுக்கு மட்டும் உபயோகிக்கலாம்...

நல்ல யோசனை அற்புதராஜ். நன்றி.

leomohan
14-03-2007, 07:19 AM
பாரதி கூறுவது அனைவருக்கும் ஒரு எச்சரிக்கையின் செய்திதான்..

தூயத்தமிழில் நாம் எழுத வேண்டும் என்பது அனைவரின் விருப்பம்.
------
சிலருக்கு மோகன் சொல்வது.. எந்த ந,ன போடுவது.. ர, ற போடுவது என சந்தேகம் வரும்....

சரியான வார்த்தை - தவறான வார்த்தை என பெட்டி வடிவில் பட்டியல் அமைத்து... முல்லை மன்றத்தில் கொடுக்கலாம். புதியவர்கள் சரியாக தமிழ் எழுத வசதியாக இருக்கும்.

உதாரணத்திற்கு..

அருமை----அறுமை
உள்ளது----உல்லது
அநேகம்----அனேகம்.

நன்றி அறிஞரே. திருத்திக் கொண்டேன்.

மன்மதன்
14-03-2007, 07:29 AM
தலையில் கொட்டாமல் தடவி தரும் அறிவுரை பாரதி வழங்கியிருக்கிறார். ஒன்றிரண்டு எழுத்துக்கள் பிழையானால் பரவாயில்லை. புரிந்துக்கொள்ளப்படும்.. ஆனால்அப்படி இருக்க இப்போது தினமும் படிக்கும் பல பதிவுகளில், கற்களுக்கு நடுவே, ஆங்காங்கே சோற்றுப்பருக்கைக்கள் கண்களுக்கு தென்படுகின்றன என்ற சொல்ல வேண்டிய நிலைமையில் இருக்கிறேன்


சில பதிவுகளில் இது காணப்படுகிறது. இனி பதிவுகளை மேற்பார்வையாளர்கள் எடிட் செய்து மாற்றுகிறோம்.

இளசு அண்ணா சொன்னதைப்போல தவறு இருந்தாலும் பின்னூட்டம் பதியுங்கள். சுட்டிக்காட்ட நாங்க இருக்கிறோம். கவலைப்படாதிங்க மக்கா..

வெற்றி
14-03-2007, 12:28 PM
உங்களின் பட்டியலில் அடியேனும் ஒருவன்..
இனி தவறில்லாமல் பதிக்க முயற்சிக்கிறேன்.

பிரசாத்
26-03-2007, 06:19 AM
நன்றி பாரதி,

உங்களின் எண்ணம் சரியானதே. எழுத்து பிழையின்றி படிக்கும் போது நாம் சொல்ல வரும் கருத்து படிப்பவரிடத்தில் 100 சதவிகிதம் முழுமையாக சென்றடையும். அதே போல் படிப்பவர்களிடத்தில் நம்மை பற்றி நன்மதிப்பை ஏற்ப்படுத்தும்.

கூடுமான வரை என் பதிப்புகளில் எழுத்துப்பிழை ஏற்ப்படாமல் பார்த்துக்கொள்கிறேன்.

உங்களின் தமிழ் பற்றிற்க்கும் உயர்ந்த கருத்துக்களுக்கும் என் நன்றிகள் பல.

பிரசாத்

ஓவியா
26-03-2007, 10:39 AM
பாரதி அண்ணாவுக்கு வந்தனம்.

தங்களின் மொழி பற்று என்னை வியக்க வைகின்றது. மனம் மகிழ்ந்தேன்.

தங்களின் இப்பதிவு எனக்கு மிகவும் முக்கியம்மான ஒன்றே.
சுட்டி (அன்பாய் குட்டி) காட்டியமைக்கு மிக்க நன்றி.

இனி முடிந்த அளவு தமிழ் பதிப்பில் தவறு இல்லாமல் பார்த்துக் கொள்கிறேன். மன்னிக்கவும் அண்ணா.

படிப்பு முடிந்த்ததும் முறைப்படி தமிழ் கற்க்க முயற்ச்சிக்கிறேன்.

வாழ்க தமிழ். வளர்க தங்கள் தமிழ்த் தொண்டு.

ஓவியன்
26-03-2007, 11:18 AM
பாரதி அண்ணா!
உங்கள் கருத்தினை முற்று முழுவதாக ஏற்றுக் கொள்கின்றேன். இயலுமானவரை பிழைகளைத் தவிர்த்தே வருகின்றேன் ஆனால் அவ்வப்போது ழகர லகர வேறுபாடுகள் வந்துவிடுவதுண்டு. அதனை மீளவும் செம்மை பார்ப்பதன் மூலம் சரி செய்து வருகின்றேன்.

புதிய தமிழ் சொற்களை பயன்படுத்துவதிலே அடியேனுக்கும் கொஞ்சம் ஆர்வமுண்டு.
ஆனால் இதில் உள்ள பெரிய பிரச்சினை என்னவென்றால் புதிய தமிழ் சொற்களைப் பாவிக்கும் போது அந்த செய்தி எல்லோரையும் சரி வரச் சென்றடைவதில்லை என்பதேயாகும். இதற்கு என்ன செய்யலாம் என்று நினைக்கின்றீர்கள்?

பாரதி
26-03-2007, 07:38 PM
கருத்தளித்த அனைவருக்கும் நன்றி. நல்ல பதிவுகளைக் கூட படிக்க இயலாத வண்ணம் சில வேளைகளில் பிழைகள் இடையூறு செய்யும். பிழைகளை முற்றிலும் தவிர்ப்பது அரிதான காரியம் என்றாலும், அதை நோக்கியே நமது குறிக்கோள் இருக்க வேண்டும்; பதிவுகளும் அமைய வேண்டும்.

அன்பு ஓவியன், புதிய தமிழ்சொற்கள் குறித்து - இது குறித்து முன்பு ஒரு முறை பெரிய அளவில் விவாதம் நடந்தது; ஆனால் சரியான தீர்வு எட்டப்படவில்லை.

மொழியின் அவசியம் - சொல்ல வந்ததை பிழையின்றி மற்றவருக்கு புரிய வைப்பதே. ஆனால் அது மட்டுமே மேலோங்கி, மொழியின் வளர்ச்சியும் தடைபட்டு விடக்கூடாது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். ஆரம்பத்தில் புரிய வைப்பதற்காக புதிய தமிழ்சொற்களுடன் ஆங்கிலம் போன்ற பிறமொழிச்சொற்களை குறிப்பிடுவதில் தவறில்லை. காலப்போக்கில் தனித்தமிழ் பதிவுகளில் இடம்பெறுமாயின் அனைவருக்கும் சிறப்பு. நன்றி.

aren
26-03-2007, 08:04 PM
பாரதி அவர்கள் சொல்லிய கருத்து நிச்சயம் ஏற்றுக்கொள்ளக் கூடியது. ஆனால் நான் என்னைப் பற்றி திரும்பிப் பார்க்கிறேன். முதலில் நான் தமிழில் தட்டச்சு செய்தபொழுது, பப்பி அவர்கள் ஏன் இப்படி தவறுதலாக தமிழில் தட்டச்சு செய்கிறீர்கள். முதலில் எப்படி தட்டச்சு செய்வது என்று தெரிந்துகொண்டு பின்னர் இங்கே உங்கள் பதிவுகளை அளியுங்கள் என்றார். இன்று என்னாலும் தமிழில் சரளமாக தட்டச்சு செய்ய முடியும் என்பது தெரிகிறது. ஆனால் பிழையில்லாமல் தட்டச்சு செய்கிறேனா என்றால் இல்லை என்றே சொல்லவேண்டும். இதற்குக் காரணம் நான் எழுதியதை மீண்டும் படித்துவிட்டு பதிவு செய்தால் சிறிதளவு பிழைகளை நிவர்த்தி செய்யலாம். அது சில சமயங்களில் நடக்கிறது பல சமயங்களில் நடக்கமாட்டேன் என்கிறது, காரணம் நேரம்தான். கிடைக்கும் சில நொடிகளில் மன்றத்திற்கு ஒரு விஜயம் செய்யலாம் என்ற எண்ணத்தில் வரும்பொழுது ஒரு சில பதிவுகளாவது செய்யவேண்டும் என்ற ஆவலில் ஏற்படும் தவறு. நம் மன்ற உறவுகள் இதை பெரிதாக பொருட்படுத்த மாட்டார்கள் என்றே நான் நம்புகிறேன்.

புதிதாக மன்றத்தில் சேருபவர்களுக்கு அதிகமாக தமிழில் தட்டச்சு செய்த பழக்கம் இருக்காது. ஆகையால் அவர்கள் முதலில் தமிழில் தட்டச்சு செய்யும்பொழுது தவறுகள் வரலாம். ஆனால் போகப்போக அவர்களுக்கு சரளமாக தட்டச்சு செய்யவரும்பொழுது இந்த தவறுகள் தாமாகவே குறைந்துவிடும். தவறில்லாமல் தட்டச்சு செய்ய ஒரே வழி அதிகமாக பதிவுகள் செய்வதுதான். அப்பொழுதுதான் நன்றாக பழகி தமிழில் தட்டச்சு செய்வது எளிதாகிவிடும்.

முயற்சி அடையால் இகழ்சி அடையார் என்ற பழமொழி இங்கே பொருந்தும் என்று நினைக்கிறேன்.

நன்றி வணக்கம்
ஆரென்

இராசகுமாரன்
28-03-2007, 06:05 AM
பாரதியின் பதிப்பில் உள்ள ஆதங்கம் நியாயமானதே.. நமது மன்றத்தில் தேவையான ஒன்று.

ஆரன் கூறுவது போல, படித்துப் பார்த்தால் பிழைகளை திருத்த வாய்ப்புள்ளது, ஆனால் அதற்கு செலவிட நேரம் கிடைப்பது தான் அரிது.

இளசுவின் கருத்து அப்படியே நான் என்ன கூற நினைத்தேனோ அதையே பிரதிபலித்துள்ளது, இதைவிட அழகாக நான் எனது கருத்தைக் கூற முடியாது அதனால், அவரது கருத்தையே கீழே மேற்கோளாகப் பதிக்கிறேன்.


புதியவர்கள், பள்ளித் தமிழ்க்கல்வி அதிகம் இல்லாதவர்கள்
எந்த அளவுக்குத் தட்டச்சினாலும் மகிழ்ச்சியே..

மெல்ல மெல்ல மொழி நன்கு பழகி
பிழை குறைத்து அவர்கள் வளர்வதைப் பார்ப்பதே
ஒரு சுகானுபவம்..

அதற்காகவே அவர்கள் அறிமுகப்பதிவை திருத்தாமல் விட்டுவைக்கணும்..

( சொக்காய் போடாத குழந்தை படம் அதன் கல்யாண வயதில் சபைக்கு
வரும் சங்கட சுகம் அது..)

அந்தத் தமிழ்க் குழந்தைகளுக்கு ஒரு பா(ரா)ட்டு -

அன்பால் குழந்தை கடிக்கின்றது
அதுவும் கொஞ்சம் வலிக்கின்றது
தடவிப்பார்த்தால் இனிக்கின்றது - தமிழ்த்
தாயின் உள்ளம் துடிக்கின்றது..

------------------------------------------------------

ஆனால், இந்தச் சலுகைகள் தமிழில் வளர்ந்துவிட்ட
(தடிக்)குழந்தைகளுக்கு அல்ல..
நீங்கள் கடித்தால் நம் தாய் அழுவாள்...:angry: கடிவாள்..!

அமரன்
20-08-2007, 06:44 PM
அருமையான கருத்துக்களை உள்ளட்டகமாகக்கொண்ட திரி. இத்தனை நாட்கள் இதை படிக்காததையிட்டு வருந்துகின்றேன். ஆரம்பித்து வைத்த பாரதி அண்ணாவின் எழுத்திலிருந்து தொடர்ந்து வந்த அனைத்து எழுத்துக்களும் முத்துக்களாகத் தெரிகிறது. எழுத்துப்பிழை இல்லாது எழுதவேண்டும் என்ற எனது ஆசைக்கு என்னை அறியாமலே நானே தடைபோட்ட சந்தர்ப்பங்கள் அதிகம். அதற்குக் காரணம் தட்டச்சு வேகமும் அதீத கவனம் செலுத்தாததும் ஆகும். இவ்விழையை படித்ததுமே இக்காரணங்கள் எனக்குப் புரிந்தது. என்னைப்போல ஒருவராவது நினைப்பார்கள் என்ற எண்ணத்தில் இத்திரியை ஒட்டி வைக்கின்றேன். நன்றி பாரதி அண்ணா.

பூமகள்
21-08-2007, 08:46 AM
ஆழமான தமிழ் பற்று பாரதி அண்ணாவிற்கு. தங்கள் வழியில் இனி தங்கையும். இந்த திரிக்கு வ*ழிகாட்டிய* அம*ர் அண்ணாவிற்கு ந*ன்றிக*ள்.

"செய்வன திருந்தச் செய்" என்ற சொல்லாடல் உண்டு.

நாம் படைப்பவற்றை திருந்தச் செய்வோம் பிழையேதும் இன்றி.

ஓவியன்
21-08-2007, 12:24 PM
நாம் படைப்பவற்றை திருந்தச் செய்வோம் பிழையேதும் இன்றி.

இல்லையெனின் மீளத் திருத்திச் செய்வோம் இந்த http://img39.picoodle.com/img/img39/9/8/21/f_editm_e9ab4ff.gif அடையாளமிட்ட செயன்முறை மூலம்........:)

பூமகள்
21-08-2007, 03:54 PM
இல்லையெனின் மீளத் திருத்திச் செய்வோம் இந்த http://img39.picoodle.com/img/img39/9/8/21/f_editm_e9ab4ff.gif அடையாளமிட்ட செயன்முறை மூலம்........:)


ஆம்..சரியாகச் சொன்னீர்கள் ஓவியரே... அவரவர் திருத்தலாம்.. முடியா பட்சத்தில் மன்றத்தின் மூத்தோர் அப்பணியைச் செய்வர்..!:thumbsup:

தளபதி
25-08-2007, 03:38 AM
நண்பரே! பாரதி!! பெயருக்கு ஏற்ப முழங்கியுள்ளீர்கள்!!. நிச்சயம் அழகான தவறு இல்லாத தமிழில் எழுதுவோம். நன்றி.

என்னவன் விஜய்
20-09-2007, 11:46 PM
நண்பர் பாரதி
எனக்கு நெடுநாளாக ஒரு சந்தேகம்
ஆங்கில கலைச்சொற்களை தமிழ்ழில் மொழிபெயர்த்துதான் பாவிக்கவேண்டும் என்பதில் எனக்கு மறு கருத்து இல்லை,ஆனால் சில பொருட்சொற்களை குறிப்பாக நவீன கண்டுபிடிப்புகளுக்கு அவர்கள் இடும் பெயரை நாம் மாற்றத்தான் வேண்டுமா?அதுவும் காலத்துக்கு காலம் மாறுகிறது
உதாரனமாக
நான் சிறிய வயதில் புகைவண்டி என்றேன்,இன்று தொடர் ஊர்ந்து என்கிறார்கள்,நாளை?
ஏன் நாம் அதனை அவர்கள் வைத்த பெயர் ஆனா Rail(trainnn) என்று அழைக்க கூடாது??

பாரதி
23-09-2007, 05:09 PM
நண்பர் பாரதி
எனக்கு நெடுநாளாக ஒரு சந்தேகம். ஆங்கில கலைச்சொற்களை தமிழில் மொழிபெயர்த்துதான் பாவிக்கவேண்டும் என்பதில் எனக்கு மறு கருத்து இல்லை,ஆனால் சில பொருட்சொற்களை குறிப்பாக நவீன கண்டுபிடிப்புகளுக்கு அவர்கள் இடும் பெயரை நாம் மாற்றத்தான் வேண்டுமா?அதுவும் காலத்துக்கு காலம் மாறுகிறது. உதாரணமாக
நான் சிறிய வயதில் புகைவண்டி என்றேன்,இன்று தொடர் ஊர்ந்து என்கிறார்கள்,நாளை? ஏன் நாம் அதனை அவர்கள் வைத்த பெயர் ஆனா Rail(train) என்று அழைக்க கூடாது??

அன்பு விஜய்,

மாற்றம் என்பது மாறாத தத்துவம். விஞ்ஞானம் வளர்ச்சி அடையும் போது அதற்கேற்ப மொழியும் வளர்ச்சி அடைய வேண்டும். பிற நாட்டவர் கண்டுபிடிப்புகளின் பெயரை அப்படியே ஏற்றுக்கொள்வதில் எனக்கு உடன்பாடில்லை. உரிய கலைச்சொல் கண்டுபிடிக்கும் வரை வேண்டுமென்றால், தற்காலிகமாக அயற்சொல்லை பயன்படுத்தலாம்.

நீங்கள் குறிப்பிட்ட படியே முதலில் பயன்பாட்டிற்கு வந்த புகைவண்டி, கரி மற்றும் நிலக்கரியால் இயங்கியது. பின்னர் மண்ணில் இருந்து கிடைக்கும் எண்ணெயை (டீசலுக்கு தமிழில் என்ன?) உபயோகப்படுத்தினார்கள். இப்போது மின்சாரத்திலும், மின்காந்தத்திலும் உபயோகிக்கும் வகையில் புதிய முறைகளை கண்டறிந்து விட்டார்கள். இப்படியாக மாற்றம் அடையும் போது மொழியும் அதற்கேற்ப வளர்ச்சி அடைய வேண்டும்.

மேலும் வெறும் அடையாளத்திற்கு பெயர் என்பதை விட, பெயரைக்கொண்டே அது என்ன என்பதை அறிந்து கொள்வதற்கு உதவுவது போல பெயரிடுவதுதான் சாலச்சிறந்தது.

புகைவண்டி, தொடர்வண்டி, மின்தொடர்வண்டி - இவை எல்லாமே மிக நன்றாகத்தானே இருக்கின்றன. மேலும் காலம் காலமாக பிழையாக (rail - தண்டவாளத்தைத்தான் குறிக்கிறது, வண்டியை அல்ல) உபயோகித்தாலும், கொஞ்சம் கொஞ்சமாக நாம் அறிந்த வகையிலாவது சரியான சொல்லை தேர்ந்தெடுந்து பயன்படுத்துவதில் தவறொன்றுமில்லை.

மகிழ்வுந்து - பிளசர் கார்
பேருந்து - பஸ்
சிற்றுந்து - கார்
சுமையுந்து - லாரி
தானி - ஆட்டோ

(நன்றி : மக்கள் தொலைக்காட்சி!)

karikaalan
23-09-2007, 05:40 PM
இன்றுதான் இத்திரியைக் கண்டேன். அநேகமாக அடியேனது பதிவுகளில் தட்டச்சுத் தவறு இருக்காது... பொருட்குற்றம் காணப்படலாம்!!

தப்பும் தவறுமாக பதிவுகளைப் படிக்கும்போது சில சமயம் எரிச்சல் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. தட்டச்சு கம்பசித்திரம் இல்லை.

முன்னொரு காலத்தில் தட்டச்சு பயிலும்போது அங்கே எழுதி வைத்திருப்பார்கள்.. "தவறில்லாமல் இருப்பதே எமது குறிக்கோள்".. இதனை நாமும் கொள்ளலாமே!

===க*ரிகால*ன்

பாரதி
24-09-2007, 07:05 PM
இன்றுதான் இத்திரியைக் கண்டேன். அநேகமாக அடியேனது பதிவுகளில் தட்டச்சுத் தவறு இருக்காது... பொருட்குற்றம் காணப்படலாம்!!

தப்பும் தவறுமாக பதிவுகளைப் படிக்கும்போது சில சமயம் எரிச்சல் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. தட்டச்சு கம்பசித்திரம் இல்லை.

முன்னொரு காலத்தில் தட்டச்சு பயிலும்போது அங்கே எழுதி வைத்திருப்பார்கள்.. "தவறில்லாமல் இருப்பதே எமது குறிக்கோள்".. இதனை நாமும் கொள்ளலாமே!

===கரிகாலன்

அன்பு அண்ணலே, உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி. உங்கள் குறிக்கோளை அனைவரும் ஏற்றுக்கொண்டாலே பெரும்பாலான பிழைகள் நீங்க வாய்ப்பு இருக்கிறது.

நாகரா
14-02-2008, 08:04 AM
எனவே தயவு செய்து அனைவரும் இயன்ற வரையில் பிழையின்றி தமிழில் தட்டச்சு செய்வது என்பதை ஒரு உறுதியாக ஏற்று, நடைமுறைப்படுத்துவது அவசியமானதாகும்.

மன்றத்தின் பெயரைக் காப்பாற்றுவதற்காவது நாம் அனைவரும் பிழையில்லாத் தமிழை தட்டச்சு செய்ய வேண்டும்; குறைந்த பட்சம் முயற்சியாவது செய்ய வேண்டும் என்கிற வேண்டுகோளை அன்புடன் உங்கள் முன் வைக்கிறேன்.

முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்

பாரதி அவர்களின் வேண்டுகோளுக்கு செவி சாய்த்துப் பிழையில்லாத் தமிழை தட்டச்சு செய்ய அனைவரும் முயற்சி செய்வோம். தமிழ் மன்றத்தில் அழகு தமிழ் வளர்ப்போம்.

praveen
15-02-2008, 02:52 AM
இதுவரை இந்த திரியை நான் கண்ணுற்றிருக்கவில்லை. அதனால் இது எனது தாமதமான பதிவு. நான் ஆரம்பத்தில் இருந்தே இந்த வழிமுறைப்படி தான் பிழையில்லாமல் பதிவுகள் செய்து கொண்டிருக்கிறேன்.

ஏற்கெனவே பதிந்ததில் பிழை இருந்தால், அதை கண்டவுடன் திருத்தம் அழுத்தி பிழை நீக்கினால் கூட போதும். ஏனென்றால் ஒரே முறையில் பிழை இல்லாமால் பதிப்பது என்பது எல்லாரோலும் முடியாத செயல்.

ஆனால் நண்பர்கள் சிலர் பதிவுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் பழைய பிழைகளை திருத்தும் நேரத்தில் புதிதாக இன்னும் சில பதிவுகள் இடலாமே என்று நினைக்கின்றனர்.

பிழையில்லாத பதிவுகள் போலவே, நமது மன்றத்தில் இன்னும் சில விதிமுறைகள் கடைபிடிக்க வேண்டும். இதை விதிமுறையாக நினைக்காமல் நமது மனமாற்றமாக இருக்க வேண்டும்.

1)ஒருவரே ஒரே திரியில் அடுத்தவர் பதியும் முன் பதிக்க நேர்ந்தால் முதலில் பதிந்ததை திருத்தம் செய்து தான் கூடுதல் கருத்து பதிக்க வேண்டும்.

2)திரியின் தலைப்பு, மையக்கருத்துக்கு துளி கூட சம்பந்தமில்லாமல் திரியில் பதிவுகள் இடுவது (அதாவது வெட்டி அரட்டை) கூடாது.

3)திரியில் அடுத்தவர் பதிவை மேற்கோள் ஒரு முழம் நீழத்திற்கு காட்டி பின் தனது கருத்தாக ஒரு வரியில் பதில் பதிதல் கூடாது.

4)தளத்தில் ஒரே பகுதி திரிகளில் மட்டும் கவனம் செலுத்தாமல் நேரம் கிடைக்கும் போது மற்ற பகுதிகளில் உள்ளவற்றிலும் சென்று பார்த்து சில பதிவுகள் இட்டு திரி (உண்மையிலே சொந்த தட்டச்சில் செய்திருப்பவரை)பதிந்தவரை ஊக்குவிக்க வேண்டும்.

அக்னி
15-02-2008, 03:17 AM
அனைவரது குறிப்புக்களும் கடைப்பிடிக்க வேண்டியவையே.
முயற்சிப்போம். செம்மையாவோம்.
மிக முக்கியமாக,
எழுத்துப் பிழை, தேவையற்ற மேற்கோள் என்பவற்றைத் தவிர்த்தல்,
என்பன மன்றத்தை மிகவும் அழகுள்ளதாக்கும்...

சிவா.ஜி
15-02-2008, 05:32 AM
பிரவீனின் கருத்துக்கள்..கவனத்தில் கொள்ளப்படவேண்டும்.மிகவும் அவசியமானவை.முக்கியமாக...அவர் சொன்னதைப்போல பதித்த பிறகு பிழையை கண்டால்..உடனே திருத்திவிட வேண்டும்.
அனவரும் பின்பற்றுவோம்.மன்றத்தின் தரமுயர்த்துவோம்.

இளசு
15-02-2008, 06:34 AM
ப்ரவீணின் கருத்துகள் பொன்னானவை..

பதிவாளர்கள் கவனத்துக்கு என்ற கீழ்க்கண்ட திரியில் ப்ரவீண் கருத்துகளையும் இணைக்க என் ஆலோசனை.
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7309

அமரன்
15-02-2008, 08:18 AM
அருமையான, அவசியமான கருத்துகள் பிரவீண். மிக்க நன்றி.
அன்பு அண்ணா.. இணைத்தாகிவிட்டது.

அனுராகவன்
17-02-2008, 03:25 AM
ம்ம் நல்ல விதிமுறைதான்..
அனைவரும் கடைப்பிடிப்போம்..
மிக்க நன்றி

sarathecreator
17-02-2008, 11:03 AM
நானும் என்னால் இயன்றவரையில் இந்த விதிமுறைகளைக் கடைபிடிப்பேன் என்று உளப்பிரமாணம் மேற்கொள்கிறேன்.
மேலும் என்னால் இவற்றைப் பின்பற்றமுடியாமை என்னும் நிலை வந்தால் மேலாளர்களுக்கு தனி மின்னஞ்சல் அனுப்பி சந்தேகங்களை பூர்த்தி செய்து கொள்வேன் என உறுதியளிக்கிறேன்.
யாருடைய மனத்தையும் என்னுடைய பழைய பதிவுகளில் புண்படுத்தியிருந்தால் என்னை மன்னித்தருளும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
என்னுடைய பங்களிப்புகள் தொடரும் என்று உத்திரவாதத்தையும் இத்துடன் வைக்கிறேன்.
நன்றி

ஷண்முகம்
13-12-2008, 12:54 AM
குழந்தைகள் ஆடை அணியாதது இயல்பு. பின்னர் வளர வளர ஆடை அணிவதுதான் சிறப்பு.

நிரன்
13-12-2008, 01:46 PM
நல்ல சிந்தனை பாரதி அண்ணா
ஆனால் என் மனதில் எழும் ஒரு சிறிய கருத்தை இத்தருனத்தில் கூற விரும்புகிறேன்
நீங்கள் கூறுவது சரியான தகவல்தான்
ஆனால் சிறு வயதிலிருந்தே தமிழில்
கல்வி கற்றவர்கள் பலர் மன்றத்தில் உள்ளனர்
ஆனால் சிறு வயதிலிருந்து வேற்று மெழியில்
கல்வி கற்றவர்களுக்கு (மேலத்தைய நாட்டில் உள்ளவர்கள்)
தமிழ் இலக்கனமென்பது மிகவும் ஒரு கடினமானதொன்றாகும்
சிலருக்கு சிலதிற்கு தமிழில் அர்த்தமே தெரியாது
(ஏன் சிலர் எனக்கே சிலவற்றிற்கு தமிழ் தெரியாது.)
இந்நிலையில் இலக்கனத்தை பாவிப்பதென்பது மிகவும்
ஒரு கடினமான விடயமாகும். மிக எளிது என்று தோன்றவில்லை. ஆனால் நாம் தமிழர்தானே ...
முயற்சிக்கிறேன் பாரதி அண்ணா
துயா தமிழிற்கு

தமிழநம்பி
01-09-2009, 03:40 PM
பாரதி,

இதைப் படித்ததும், எப்படிச்சொல்வது என்று தடுமாறிக்கொண்டிருந்த எனக்கு ஒரு வழி தெரிந்துள்ளது.

பிழை இயல்பாக எல்லாரும் செய்யக் கூடியதே. ஆனாலும் பிழையைப் பிழையென்று அறிந்து திருத்திக்கொள்ள வழியிருக்க வேண்டும் என்று எண்ணுகின்றேன்.

எடுத்துக்காட்டாக, என் எழுத்துக்களில் யாராவது பிழை கண்டுபிடித்திருக்கலாம். அதை தெரிவித்தால் எனக்குத் திருத்திக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.

அவ்வாறே, நான் மன்றத்தில் இணைந்த இந்தச் சில நாள்களில் நான் பார்த்த பிழைகளை யார் எழுதியது என்ற குறிப்பில்லாமல் தொகுப்பாக எழுதி வைத்திருக்கின்றேன்.

அவற்றை நான் எழுதித் தெரிவிக்கலாமா?
எங்கு எழுதுவது?
மன்றத்தைச் செப்பமுறுத்த இதை எப்படிச் செய்யலாம் என்று கூறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.
நன்றி.

இளசு
01-09-2009, 08:53 PM
அன்பு தமிழநம்பி


பாரதி சார்பாக என் கருத்தைச் சொல்கிறேன் -

தனியாய்த் திரி தொடங்குங்கள்..

பிழைகளும் தீர்வும் என்பதுபோல் தலைப்பு தாருங்கள்.


பிழையானது - சரியானது எனப் பட்டியலாய்த் தாருங்கள்.

அவ்வப்போது கண்ட - தொகுத்த நம் பிழைகளைச் சுட்டி, தீர்வும் சொல்லுங்கள்.

எழுதியவர் இன்னார் என்பது தேவையில்லை ( என நினைக்கிறேன்).

நீங்கள் விரும்பினால் மற்றவரும் பிழைகளைச் சுட்டிப் பதிக்க அனுமதிக்கலாம்.

நற்பணிக்கு என் வாழ்த்துகள்!

அறிஞர்
01-09-2009, 09:28 PM
பாரதி கூறுவது அனைவருக்கும் ஒரு எச்சரிக்கையின் செய்திதான்..

தூயத்தமிழில் நாம் எழுத வேண்டும் என்பது அனைவரின் விருப்பம்.
------
சிலருக்கு மோகன் சொல்வது.. எந்த ந,ன போடுவது.. ர, ற போடுவது என சந்தேகம் வரும்....

சரியான வார்த்தை - தவறான வார்த்தை என பெட்டி வடிவில் பட்டியல் அமைத்து... முல்லை மன்றத்தில் கொடுக்கலாம். புதியவர்கள் சரியாக தமிழ் எழுத வசதியாக இருக்கும்.

உதாரணத்திற்கு..

அருமை----அறுமை
உள்ளது----உல்லது
அநேகம்----அனேகம்.


பாரதி,

இதைப் படித்ததும், எப்படிச்சொல்வது என்று தடுமாறிக்கொண்டிருந்த எனக்கு ஒரு வழி தெரிந்துள்ளது.

பிழை இயல்பாக எல்லாரும் செய்யக் கூடியதே. ஆனாலும் பிழையைப் பிழையென்று அறிந்து திருத்திக்கொள்ள வழியிருக்க வேண்டும் என்று எண்ணுகின்றேன்.

எடுத்துக்காட்டாக, என் எழுத்துக்களில் யாராவது பிழை கண்டுபிடித்திருக்கலாம். அதை தெரிவித்தால் எனக்குத் திருத்திக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.

அவ்வாறே, நான் மன்றத்தில் இணைந்த இந்தச் சில நாள்களில் நான் பார்த்த பிழைகளை யார் எழுதியது என்ற குறிப்பில்லாமல் தொகுப்பாக எழுதி வைத்திருக்கின்றேன்.

அவற்றை நான் எழுதித் தெரிவிக்கலாமா?
எங்கு எழுதுவது?
மன்றத்தைச் செப்பமுறுத்த இதை எப்படிச் செய்யலாம் என்று கூறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.
நன்றி.
அன்பரே.. தொகுத்துக் கொடுத்தால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்..

தமிழநம்பி
02-09-2009, 07:18 AM
நன்றி இளசு.

நன்றி அறிஞர்.

பாரதி
02-09-2009, 03:04 PM
இளசு அண்ணாவின் வார்த்தைகளை ஏற்கிறேன்.
பொறுப்பாளர்களின் அனுமதியுடன், யார் எழுதியது என்று குறிப்பிடாமல் பிழையையும் திருத்தத்தையும் பதிந்தால், பிழையின்றி எழுத முற்படுவோர்களுக்கு உதவியாக இருக்கும் நண்பரே.

கௌதமன்
13-12-2010, 01:31 PM
பாரதியின் கருத்து மிகவும் சரியானது.


ஆங்கிலத்தில் ஒருக் கருத்தைக் கூறும்போது மிகுந்தக் கவனத்துடன் எழுத்துப்பிழைகளோ, இலக்கணப் பிழைகளோ இல்லாதவாறுப் பார்த்துக் கொள்ளும் அல்லது அதற்காக முய்ற்சிக்கும் நாம் தமிழ் என வரும்போது சற்று அலட்சியமாக இருக்கிறோமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

எழுதும் கருத்துகளில் எழுத்துப் பிழையோ, இலக்கணப் பிழையோ பிறமொழிக் கலப்போ இருக்கக்கூடாது என்னும் எண்ணயுறுதியை நாம் ஒவ்வொருவரும் மனதில் கொள்ள வேண்டும் அதை நம் செயலிலும் காட்ட வேண்டும்.

அறியாமல் அங்ஙனம் நேரும் வேளையில் பாரதி போன்றவர்கள் ஓங்கித் தலையில் குட்ட வேண்டும். (குறைந்தபட்சம் இந்த வன்முறையை மன்றத்தார் தமிழின் நன்மைக் கருதி அனுமதியளிக்க வேண்டும்).
மீண்டும் தவறிழைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

தமிழ்க் கற்றறிந்தோரின் அமைதி தமிழ் கற்க விரும்பும் ஒரு இளைய சமுதாயத்தை தவறாக வழிநடத்திடலாகாது.

பாலகன்
13-12-2010, 02:14 PM
இன்று நியூ. இந்தியா ஒன்டே - இது மாலைமலர் செய்தி

ஒருநாள் போட்டி என்றும் சொல்லலாம்.

நான் எழுதும்போது மிகுந்த கவனத்துடன் இருப்பேன். இனி நண்பர்களின் தவறுகளையும் சுட்டிக்காட்டி அவர்களுக்கும் இனிய தெளிந்தத்தமிழ் வழங்க உறுதியேற்கிறேன்.

அதே போல எனது தவறுகளையும் யாராவது சுட்டிக்காட்டினால் நானும் எனது பிழைகளில் இருந்து திருந்திக்கொள்வேன்.

நல்ல கருத்துக்களுக்கு நன்றி கெளதமன்

வாழ்க தமிழ்

Hega
13-12-2010, 02:23 PM
அனைவரின் கருத்தும் சிந்திக்க வைக்கிறது..

என்னைப்போல் தமிழ் மொழியை முழுமையாக பயிலாதோர், அதிலும் வெளிநாட்டில் வேற்று மொழியில் படித்தோர் தமிழை தவறாக எழுதினால் மன்னித்து திருத்தி விடலாம்.

தமிழ் நாட்டில் பிறந்து தமிழ்த்தாய் மடியில் தவழ்ந்து வளர்ந்தோரும் அத்தவறை செய்யலாமோ......

நாஞ்சில் த.க.ஜெய்
13-12-2010, 07:27 PM
தவறுகள் சுட்டிகாட்டபட்டால் பிரிவுகள் கூடுமோ என்ற எண்ணத்தில் நானும் பதிவுகளில் தவறுகள் இருந்தாலும் சுட்டி காட்ட நான் நினைக்க வில்லை .இந்த பதிவினை கண்ட போது நானும் தவறுகள் கண்டால் சுட்டுகிறேன் அது போல் மற்றவர்களும் என் பதிவில் தவறிருந்தால் சுட்டி காட்டுங்கள்.மேலும் நண்பர் மகா பிரபு கூறிய கருத்துகள் நானும் ஆமோதிக்கிறேன் ...மேலும் கணினி மற்றும் அலைபேசி தொடர்பாக கேட்கும் சந்தேகங்கள் முழுவதும் தமிழில் எழுதுவது என்பது அதன் உண்மையான ஆக்கங்களை பாதிக்கும் இந்த இடங்களில் மட்டும் தமிங் லீசில் எழுதலாம் என நினைகிறேன் ....
என்றும் அன்புடன்
த.க.ஜெய்

சிறி சங்கர்
08-06-2011, 08:09 AM
உங்கள் அன்பான வேண்டுகோளை கண்டிப்பாக கடைபிடிப்பேன் என்று உங்களுக்கு உறுதி அளிக்கிறேன்.

rasan
14-12-2011, 08:46 AM
நாம் தட்டச்சு செய்ததை மீண்டும் ஒரு முறை வாசித்து பார்த்து தவறிருந்தால் மீண்டும் திருத்தி, நாம் திருப்தியான பிறகு பின்னர் பதிந்தால் தவறுகள் இருக்க வாய்ப்பிருக்காது.

Mano60
20-11-2016, 04:26 AM
சொல்ல வரும் கருத்தினை நன்கு சிந்தித்து பயனுள்ள
சொல்லின் மூலம் தமிழின் வளமை குன்றாது பிழையின்றி
நல்ல தமிழில் எழுதும் ஆலோசனை தரும் இந்த திரி கசக்குமா?
இல்லை ஐயா மன்றம் மேம்பட்டு வளர வாழ்த்துக்கள்.

சொ.ஞானசம்பந்தன்
13-05-2017, 06:39 AM
பிழைகள் நிறைய இடம் பெறுகின்றன . பாரதி அவர்களின் தலைப்பு முயல்வோமே ! என்றிருக்க வேண்டும் . இச் சொல்லின் வேர் : முயல் . இதிலிருந்து பிறப்பன : முயல்கிறேன் , முயல்வேன் , முயன்றேன் , முயற்சி , முயலலாம் , முயல்வது , முயன்றது , முயலும் , முயல , முயன்று முதலானவை . சரி தப்பு பற்றி ஒரு பட்டியல் பதியலாம் என எண்ணுகிறேன் . வரவேற்பு இருக்குமா ?