PDA

View Full Version : உங்கள் சொந்த இணையம் ரூ.90 மட்டுமே

ராசுக்குட்டி
13-03-2007, 02:11 PM
கூட்டாளிகாளே,

இப்போ உங்க பேர்ல இணையதளம் வாங்க செலவு கம்மி,

.info பெயர்கள் ரூ.90 மட்டுமே , அனைத்து நாடுகளிலும் இதே விலைதான் ,

வாங்குறவுங்க ராசுகுட்டி.இன்போ வை எனக்கு பிரீயா தந்தறனும், ஆமா.

பாரதி
13-03-2007, 02:21 PM
...!???

மனோஜ்
13-03-2007, 02:41 PM
அப்படியா:confused: :rolleyes: :rolleyes: :rolleyes:

ஆதவா
13-03-2007, 03:18 PM
இருக்க வாய்ப்பில்லை.. நீங்கள் சொல்வது வெறும் தளமுகவரி (Domain Address) ஆக இருக்கலாம். அல்லது மாதம் 90 வீதமாக இருக்கலாம். Web hosting மற்றும் இன்னபிற அம்சங்களை சேர்த்து எழுதினீர்களேயானால் விபரம் புரியும்.

leomohan
13-03-2007, 08:42 PM

அவர் சொல்வது சரிதான். .info பெயர்கள் மிகவும் சொற்ப விலையில் கிடைக்கின்றன. பல தளங்களில் .com வாங்கும்போது இதை இலவசமாகவும் தருகிறார்கள்.

இதில் கவனிக்க வேண்டியது இரண்டாம் ஆண்டுக்கு எத்தனை விற்கிறார்கள் என்பதை பார்க்கவேண்டியது அவசியம்.

க.கமலக்கண்ணன்
19-03-2007, 02:40 PM
90 ரூபாய் என்பது சரி அதன் இணையதள முகவரி எங்கே?

அறிஞர்
19-03-2007, 03:13 PM
இந்த வருடம் குறைந்த விலை. ஆனால் மோகன் சொல்வது போல் அடுத்த வருடம் விலை உயர்த்தினால் என்ன பண்ணுவது.

எப்படி வாங்குவது.. என தெளிவான தகவல்களை மக்களுக்கு கொடுங்கள்.. தேவைப்பட்டோர் வாங்குவார்கள்.

drjperumal
19-03-2007, 05:28 PM
எனது தளம் 490 + 1500+ 1800 வருடத்திற்க்கு செலுத்தி பயன் படுத்துகிறேன் எப்படி 90 க்கு கிடைக்கும், நான் தளம் பெற்ற இடம் நெட்4இந்தியா,

ஆதவா
19-03-2007, 06:09 PM
அவர் சொல்வது சரிதான். .info பெயர்கள் மிகவும் சொற்ப விலையில் கிடைக்கின்றன. பல தளங்களில் .com வாங்கும்போது இதை இலவசமாகவும் தருகிறார்கள்.

இதில் கவனிக்க வேண்டியது இரண்டாம் ஆண்டுக்கு எத்தனை விற்கிறார்கள் என்பதை பார்க்கவேண்டியது அவசியம்.

அதுவும் சரிதான்... நான் முன்பு சொன்னதை நன்றாக கவனியுங்களேன். வெறும் தள முகவரி மட்டுமே 90 ரூபாயாக இருக்கமுடியும்.. தளத்தில் கோப்புகளை ஏற்றி வைத்துக்கொள்ளும். Web hosting இதில் அடக்கமா?

march
21-03-2007, 07:28 PM
எல்லாரும் சேர்ந்து குழப்புரிங்கிலே சற்று தெலிவாகத்தான் சொல்லுங்கலே

வித் லவ்
மார்ச்

ராசுக்குட்டி
26-03-2007, 10:38 AM
தளமுகவரி மட்டுமே விலைதான் அது , host செய்ய உங்களுக்கு googlyapps இருக்கே , வெறும் முகவரி மட்டும் வாங்குங்கள் , 1000 மெய்ல் வேண்டுமானாலும் (name@company.com) உருவாக்கலாம் , 1 ஜிபி வெப் ஸ்பேஸ் கூட உபயோகிக்கலாம் , கூகுலாண்டவர் வாழ்க

ராஜா
26-03-2007, 05:31 PM
அட பரவாயில்லியே..

இன்னும் கொஞ்சம் தகவல் கொடுங்களேன் ராசுக்குட்டி..

leomohan
26-03-2007, 05:44 PM
அட பரவாயில்லியே..

இன்னும் கொஞ்சம் தகவல் கொடுங்களேன் ராசுக்குட்டி..

முதலில் www.namesecure.com (http://www.namesecure.com) www.net4domains.com (http://www.net4domains.com) போன்ற தளங்களுக்கு சென்று காசு கொடுத்து ஒரு டொமைன் முகவரி பெற வேண்டும்.

பிறகு http://www.google.com/a சென்ற பதிவு செய்தால் தங்கள் டொமைன் முகவரியிலே இலவசமாக 1 ஜிபி இமெயில் வசதி கிடைக்கும். சுமார் 40 கணக்குகள் வைத்துக் கொள்ளலாம்

பிறகு http://www.googlepages.com சென்று இணையபக்கத்தை அமைக்கலாம்.

பிறகு மீண்டும் தங்கள் டொமைன் கட்டுபாட்டு மையத்திற்கு சென்ற தாங்கள் கூகிளின் வசதிகளை பயன்படுத்துவதாக தெரிவித்து கூகிள் கொடுத்த விபரங்களை அமைக்க வேண்டும்.

ஆக டொமைனுக்கு மட்டும் காசு கொடுத்துவிட்டு மற்றவை அனைத்தும் இலவசம்.

ராஜா
26-03-2007, 06:03 PM
நன்றி திரு. மோகன்..!

அறிஞர்
26-03-2007, 07:09 PM
பயனுள்ள தகவல்கள்.. நன்றி மோகன்.

Hayath
28-03-2007, 02:02 PM
தங்கள் டொமைன் கட்டுபாட்டு மையத்திற்கு சென்ற தாங்கள் கூகிளின் வசதிகளை பயன்படுத்துவதாக தெரிவித்து கூகிள் கொடுத்த விபரங்களை அமைக்க வேண்டும்.

விளக்கங்களுக்கு நன்றி நண்பரே .கூகில் கொடுத்த விபரங்களை டொமைன் கட்டுப்பாட்டு மையத்தில் (www.net4domains.com (http://www.net4domains.com/) ) எப்படி தெரிவிப்பது என விளக்கமாக தெரிவித்தால் இன்னும் உபயோகமாக இருக்கும்.

leomohan
28-03-2007, 05:50 PM
விளக்கங்களுக்கு நன்றி நண்பரே .கூகில் கொடுத்த விபரங்களை டொமைன் கட்டுப்பாட்டு மையத்தில் (www.net4domains.com (http://www.net4domains.com/) ) எப்படி தெரிவிப்பது என விளக்கமாக தெரிவித்தால் இன்னும் உபயோகமாக இருக்கும்.

கூகிள் மின்னஞ்சல் வசதியை பயன்படுத்த அவர்களிடம் கணக்கு துவக்கியதும் MX Records தருவார்கள். அதை net4domains தளத்தில் Edit Zone File or Edit DNS Records எனும் இடத்திற்கு சென்று Edit MX Record என்பதை தட்டி கூகிள் கொடுத்த முகவரிகளை தரவேண்டும்.

இதுபோலவே http://hayath.googlepages.com என்ற முகவரி உருவாக்கியதும் Net4domains, Edit URL Forwarding சென்று www.hayath.com (http://www.hayath.com) ஐ http://hayath.googlepages.com (http://hayath.googlepages.com/) எனும் பக்கத்திற்கு Forward செய்யுமாறு கோரவேண்டும்.

Hayath
07-04-2007, 03:36 PM
நீங்கள் மேற்சொன்னது போல அமைத்தவுடன் நமது இணையதளத்தை Google Search-ல் எப்படி தெரியவைப்பது ?

praveen
16-06-2007, 12:07 PM
நீங்கள் மேற்சொன்னது போல அமைத்தவுடன் நமது இணையதளத்தை Google Search-ல் எப்படி தெரியவைப்பது ?

www.humayunms.com

எனது மேற்கண்ட தளம் கூகிலில் தெரியவில்லை.

கூகுளில் சேர்க்க
http://www.google.com/addurl.html

எம்.எஸ்.என் - ல் சேர்க்க
http://search.msn.com/docs/submit.aspx

யாகூவில் சேர்க்க
https://siteexplorer.search.yahoo.com/submit

சேர்த்து விட்டு ஒரு நாள் கழித்து முயற்சி செய்து பாருங்கள்.

மனோஜ்
18-06-2007, 05:33 PM
மிக்க நன்றி ஆசே
தங்களின் சுட்டிகளுக்கு

விகடன்
19-06-2007, 03:41 AM
பயனுள்ள தகவல்களே
இருந்தாலும் அந்த 90 ரூபாவை எப்படி அனுப்புவது. கிரடிட் காட் பயன்படுத்துவதானால் ஏதேனும் விபரீதம் நிகழாதா?
அவை பற்றியும் விளக்கம் தந்தால் இன்னும் வசதியாக இருக்கும்

தங்கவேல்
17-10-2007, 03:11 AM
லியோ, நான் ரெடிப்பில் டொமைன் நேம் வாங்கினேன். அதை எப்படி கூக்லி பேஜில் சேர்ப்பது. எப்படி இணைய தளத்தை அமைப்பது. விளக்குங்கள் பிளீஸ்

praveen
17-10-2007, 06:01 AM
லியோ, நான் ரெடிப்பில் டொமைன் நேம் வாங்கினேன். அதை எப்படி கூக்லி பேஜில் சேர்ப்பது. எப்படி இணைய தளத்தை அமைப்பது. விளக்குங்கள் பிளீஸ்

இதிலே பதில் உள்ளதே, சரியாக இந்த திரியை பார்க்கவில்லையா? நண்பரே, உங்களுக்காக 1 க்கு 3 தந்திருக்கிறேன் பாருங்கள்.

கூகுளில் சேர்க்க
http://www.google.com/addurl.html

எம்.எஸ்.என் - ல் சேர்க்க
http://search.msn.com/docs/submit.aspx

யாகூவில் சேர்க்க
https://siteexplorer.search.yahoo.com/submit

சேர்த்து விட்டு ஒரு நாள் கழித்து முயற்சி செய்து பாருங்கள்.

ஜெயாஸ்தா
17-10-2007, 06:21 AM
தேடுபொறிகளில் எப்படி நம் இணையப்பக்கத்தை வரவழைப்பது என்ற உபயோகமான தகவலை தந்த அன்பு நண்பர் ப்ரவீணுக்கு நன்றி.

தங்கவேல்
18-10-2007, 09:49 AM
பிரவீன், இணையதள முகவரியினை ரெடிப்பில் வாங்கினேன். ஒரு இலவச சர்வரில் இணைய பக்கங்களை வடிவமைத்துள்ளேன். ரெடிப்பில் வாங்கிய இணயதள முகவரியுடன் இலவச சர்வரில் அமைதுள்ள இணைய தளத்தை எப்படி இணைப்பது ?

praveen
18-10-2007, 10:30 AM
பிரவீன், இணையதள முகவரியினை ரெடிப்பில் வாங்கினேன். ஒரு இலவச சர்வரில் இணைய பக்கங்களை வடிவமைத்துள்ளேன். ரெடிப்பில் வாங்கிய இணயதள முகவரியுடன் இலவச சர்வரில் அமைதுள்ள இணைய தளத்தை எப்படி இணைப்பது ?

நீங்கள் உருவாக்கியுள்ள தளம் 20 எம்பிக்குள் இருந்தால், (நீங்கள் ரெட்டிப்-ல் economy 20MB @ Rs.2400/ pa என்ற பிளான் வைத்துள்ளதாக நினைத்து பதில் தருகிறேன்) மொத்தததையும் இங்கே உங்களுக்கு அனுமதிக்கப்பட்ட அளவிற்குள் ஏற்றி விடுங்கள்.

இல்லாவிட்டால், முதல் பக்கத்தில் அந்த இலவச சேவை தரும் உங்கள் அட்ரஸ் உள்ள தள முகவரியை அங்கே இட்டு, அதை கிளிக் செய்து அந்த இலவச தளத்திற்கு அழைத்து செல்லுங்கள்.

நன்பரே, நான் வன்பொறியாளனே அன்றி இம்மாதிரி விசயங்கள் தெரிந்த ஆள் இல்லை, எனக்கு தெரிந்த விசயத்தை கூறி உள்ளேன்.

நமது நண்பர்கள் இன்னும் அறிய தருவார்கள்.

தங்கவேல்
18-10-2007, 10:36 AM
பிரதீப் செய்து விட்டேன்.. அருமையாக வருகிறது.

praveen
18-10-2007, 11:02 AM
பிரதீப் செய்து விட்டேன்.. அருமையாக வருகிறது.

உங்கள் தள முகவரி (ரெட்டிப் வெப் கோஸ்ட் செய்தது) முகவரி தந்தால் நாங்கள் பார்த்து இன்னும் மகிழ்வடைவோமில்லையா?.

பொதுவிலே தர இயலாவிட்டால் தனிமடலில் தாருங்கள்.

reader
08-04-2008, 02:09 PM
மிகவும் உபயோகமான தகவல்கள் தான்.... பின்ன எப்பவாவது வெப் பேஸ் வாங்கினா இது யூஸ் ஆகும்