PDA

View Full Version : ராசுக்குட்டி வந்தாச்சு



ராசுக்குட்டி
13-03-2007, 01:34 PM
வணக்கம்ணே ,

நானும் கோயமுத்தூருதானுங்க,

துணிமணியெல்லாம் செய்யற தொழிலு நம்மளது.

இந்த கவித , கத , கழுதயெல்லாம் வராதுங்கோ,( சண்டைக்கு வராதீங்கப்பு, சும்மா ஒரு விஜயராஜேந்தர் ஸ்டைல்)

எங்க ஊரு ஆளுகள போல கொஞ்சம் கிண்டல் மட்டும் வருமுங்க ,

வேறென்ன சொல்ல ?

pradeepkt
13-03-2007, 01:37 PM
வணக்கம் ராசுக்குட்டி
உங்களுக்கும் கோயமுத்தூரா? பக்கத்துல திருப்பூரில் இருந்தெல்லாம் நம்ம மன்றத்துல ஆளுக இருக்காக...

கலக்குங்க வந்து.

வெற்றி
13-03-2007, 01:37 PM
நான் இந்த தளத்தில் அலையும் செம்புலிங்க...
வாங்க....வாங்க...வந்து உங்களின்(நம்)தாகத்தை தீர்த்து கொள்ளுங்கள்..
உங்களின் பதிவை ஆரம்பியுங்கள்...

ஆதவா
13-03-2007, 01:54 PM
வந்தனம் ராசுக்குட்டி அவர்களே!! சேரநாட்டிலிருந்து மேலுமொரு புலியா? வருக வருக. துணிசெய்யும் துணிச்சலான தொழிலில்தாம் யாமும் இருக்கிறோம். ஆக வந்தனம் சிறப்பாக........
ராசுக்குட்டி மிக அருமையான பெயர்....
மன்றத்தில் சேரநாட்டுப் புலிகள் (வில்) நிறைய ஆகிக்கொண்டு இருக்கிறது.. வாழ்த்துக்கள்.

ராசுக்குட்டி
13-03-2007, 01:59 PM
..
மன்றத்தில் சேரநாட்டுப் புலிகள் (வில்) நிறைய ஆகிக்கொண்டு இருக்கிறது.. வாழ்த்துக்கள்.

ரைட்டுண்ணே , போர் தொடுத்துரவம் . (யார் மேலன்னுதான் தெரியலையே?)

அமரன்
13-03-2007, 03:45 PM
வாங்க ராசுக்குட்டி. கத கவித இல்லாமலே மன்றத்தை கலகலப்பாக்குங்க.

தங்க கம்பி
13-03-2007, 04:13 PM
வாங்க! வாங்க!! நம்ம ஊர்காரரை பார்த்ததில் ரொம்ப சந்தோசமுங்க.

paarthiban
13-03-2007, 04:14 PM
வாருங்கள் ராசுக்குட்டி. வணக்கம்,

மனோஜ்
13-03-2007, 04:33 PM
வணக்கம் ராசுக்குட்டி
வாருங்கள் வாங்க! வாங்க!! வாழ்த்துக்கள்.

pradeepkt
13-03-2007, 06:27 PM
ரைட்டுண்ணே , போர் தொடுத்துரவம் . (யார் மேலன்னுதான் தெரியலையே?)
எங்க எல்லாரு மேலயுந்தேன்.
அன்பால அம்பு தொடுங்க.
உங்க பேச்சு கொங்கு நாடு மாதிரி தெரியலையே ... பாண்டிய நாடு மாதிரி இல்ல தெரியுது.

பென்ஸ்
13-03-2007, 07:27 PM
இந்த கவித , கத , கழுதயெல்லாம் வராதுங்கோ,( சண்டைக்கு வராதீங்கப்பு, சும்மா ஒரு விஜயராஜேந்தர் ஸ்டைல்)

எங்க ஊரு ஆளுகள போல கொஞ்சம் கிண்டல் மட்டும் வருமுங்க ,

வேறென்ன சொல்ல ?

ராசுகுட்டி...

தமிழ்மன்றத்தில் இருக்க கதை, கவிதை வரவேண்டிய அவசியம் இல்லை....

தமிழில் பேசவிரும்பும் மனசு இருந்தால் போதும்... மன்றம் தமிழ் கற்று தரும்.....

தமிழை என் அளவில் பாதி கூட கற்றிராத ஓவியா....
ஆயிரம் பதிவு வரை ஒரு கவிதை எழுதாத ஓவியா...
இன்று நான் மார்தட்டி பெருமைபடும் மன்றத்தின் கவி காவியம்

மன்றம் இங்கு பலரை புலவராக்கியிருக்கிரது என்றால் மிகையில்லை....

மேலும் இங்கு நீங்க கலக்கவேன்று தனி களமே இருக்கிறது....

இளசு
13-03-2007, 07:29 PM
வாருங்கள் ராசுக்குட்டி அவர்களே..

இனிய பெஞ்சமின் கூறியவற்றை வழிமொழிந்து வரவேற்கிறேன்..

இணைந்திருங்கள்.. வாழ்த்துகள்!

leomohan
13-03-2007, 08:33 PM
வாருங்கள் ராசுக்குட்டி, உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

அறிஞர்
13-03-2007, 11:39 PM
கோவை குசும்புடன்... வரும் அன்பருக்கு வாழ்த்துக்கள்...

தங்களின் பதிவுகள் எங்களை மகிழ்விக்கட்டும்.

மன்மதன்
14-03-2007, 07:47 AM
ராசு(க்)குட்டி ரவுசு(க்)குட்டியாக மன்றத்தில் உலா வர அன்புடன் வரவேற்கிறேன்..

மன்மதா... மன்னிக்க!

பிச்சி
15-03-2007, 02:43 PM
உங்களை பூ போட்டு வரவேற்கிறேன்..
______
பிச்சி

lolluvathiyar
15-03-2007, 04:21 PM
வாங்க நம்ம ஊருகாரரே,
துனி வியாமரமா,
உங்கள் வரவு நல்வரவு ஆகட்டும்

ராசுக்குட்டி
16-03-2007, 08:46 AM
வரவேற்ற அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்

ஓவியன்
17-03-2007, 09:53 AM
வருக!
வந்து மன்றத்தில் வளம் சேர்க்க!

ஓவியா
17-03-2007, 03:30 PM
வந்தனம் ராசுக்குட்டி

வருக வருக வருகவே

உங்கள் வரவு நல்வரவாகட்டும். :icon_35:

ஓவியா
17-03-2007, 04:02 PM
ராசுகுட்டி...

தமிழை என் அளவில் பாதி கூட கற்றிராத ஓவியா....
ஆயிரம் பதிவு வரை ஒரு கவிதை எழுதாத ஓவியா...
இன்று நான் மார்தட்டி பெருமைபடும் மன்றத்தின் கவி காவியம்

மன்றம் இங்கு பலரை புலவராக்கியிருக்கிரது என்றால் மிகையில்லை....

மேலும் இங்கு நீங்க கலக்கவேன்று தனி களமே இருக்கிறது....


மிகச்சரி பெஞ்சு. நன்றி

தமிழை என் அளவில் பாதி கூட கற்றிராத ஓவியா....
நான் இதை வண்மையாக கண்டிக்கிறேன்.
நான் இன்னா சொல்ல வாறேனா!!!!
தமிழை உங்க அளவில் பாதியாக்கி, அதையும் ஒரு பாதியாக்கி, மீண்டும் பாதியாக்கி..மீண்டும் ...மீண்டும்......அப்படியே ஒரு கொடி முறை பாதியாக்கி......இப்பதான் நான் என் தமிழ் பொதியை சுமந்துக்கொண்டு உள்ளயே வாறேன்,,....

பேஞ்சு,
தமிழில் தாங்கள் பார்வைக்கு தெரியும் அணுகுண்டு
என் தமிழ் அதில் கண்ணுக்கு புலப்படாத கிருமியே.

மயூ
18-03-2007, 04:04 AM
வாங் அன்பரே உங்கள் வரவு நல்வரவாகட்டும்!!!

விகடன்
24-03-2007, 04:59 PM
வாங்கப்பு ராசுக்குட்டி.
என்ன குடும்பங்கள் சொந்த பந்தமெல்லாம் நலந்தானே?

உங்களின் திறமையில்லாத் திறமையை கொஞம் காட்டுங்கப்பு.