PDA

View Full Version : சுதந்திரம்



Mano.G.
13-03-2007, 03:08 AM
சுதந்திரம்

--------------------------------------------------------------------------------

சுதந்திரம் என்பது எது...?
அடிமையாய் இருந்து விடுதலை பெறுவதா...?
தன்னிச்சையாக தனக்கு வேண்டியதை செய்வதா....?
சுய சிந்தனை வளர்த்துக் கொள்வதா...?
சுய நலவாதியாக இருப்பதா...?

எது சுதந்திரம்..???

மன்றமே நீயே கூறு!!!


மனோ.ஜி

ஆதவா
13-03-2007, 03:46 PM
இவையனைத்தும் கலந்ததுவே சுதந்திரம்...

அடிமையிலிருந்து விடுதலை என்பது பல்வகையில் பொருள் கொள்ளலாம். ஒரு செயலை செய்யமுடியாவண்ணம் தடுப்பதைக் கெடுப்பதும் அடிமையிலிருந்து மீட்பதும் ஒன்றுதான்.. நீ இதைச் செய்யாதே என்றால் நீ அவனுக்கு அடிமை என்று பொருள்.. அதிலிருந்து மீளல் சுதந்திரமே!

தனக்குப் பின் தானம் என்ற மொழிக்கேற்ப அதேசமயம் ஐயமிட்டு உண் என்ற மொழிக்கேற்பவும் வாழவும் வேண்டும். அதைத் தடுப்பதும் அசுதந்திரம் ஆகும்.. அதாவது சுதந்திரத்திற்கு எதிரான நிலை. தன்னிச்சையாக முடிவெடுத்தல் இங்கு பொருந்தும்.

சுய சிந்தனை வளர்ந்தால் மட்டுமே நாம் வளர முடியும். சுய சிந்தனை இல்லா மனிதன் மனிதனே அல்ல.. கைப்பொம்மை.. (இந்தியாவில் ஒருவர் இருக்கிறார்.) கைப்பொம்மை என்பது அடிமை நிலை. அது மீட்டல் சுதந்திரம்.

சுயநலம் எல்லா வகையிலும் கலந்து இருக்கிறது. பிறருக்கு பயன்படும் சுயநலம் என்றுமே நல்லதுதான்.. உதாரணத்திற்கு நான் கவிதை எழுதி இங்கே விடுவது, அல்லது நீளமான விமர்சனம் இட்டு பெயர் வாங்குவதும் சுயநலம்தான்.. சுயநலம் இருந்தால் மட்டுமே உலகில் நிலைத்திருக்கமுடியும்.. மற்றபடி கெட்ட சுயநலம் என்பது வேறு.. ஆக அதுவும் சுதந்திரம்தான்.

விகடன்
07-06-2007, 08:50 PM
எனது செயலில் எதிரான முறையில் தலையிடாமையும் என்செயல் பிறரில் தாக்கத்தை ஏற்படுத்தாமையுமே.