PDA

View Full Version : வாழ்க்கைத் துணை.



Mano.G.
13-03-2007, 03:01 AM
வாழ்க்கைத் துணை


வயது வந்ததும்
பெற்றோர்களின் வற்புறுத்தல்
கல்யாணம் கல்யாணம் கல்யாணம்
ஆனால் எனக்கு கல்யாண வயது வந்ததா?

கனவு கற்பனை
கையில் பணம் சேர்ந்தவுடன்,
வசதி வந்தவுடன் கல்யாணம்,
அதோடு நல்ல பெண்ணும்......
ஆனால் பணமும் வசதியும் வரவில்லை
பெண் மட்டும் வந்தது,

கல்யாணமும் ஆனது
வந்தது பெண்ணோடு வறுமையும்,
ஒருவருடையதை இருவராக பங்கிட்டு கொள்ள,
நூற்றில் ஒருத்தி ஆயிரத்தில் ஒருத்தி
என்பது போல வந்தாள் இல்லக் கிழத்தி
தோள்கொடுத்தாள் தூக்கி நிறுத்த
சாயும் இல்லறத்தை,

நிதி மந்திரியாய், மதிமந்திரியாய்
செயல்பட்டாள் அவள் வேலைக்கிடையிலும்
இன்பத்தோடு சோகத்திலும்
பங்கு கொண்டாள்,

நீதானோ வாழ்க்கைத் துணை.

மனோ.ஜி

RRaja
23-04-2007, 04:21 AM
அருமையான கவிதை.. இல்லாதபோதும் தோள்தருபவளே இல்லாள் என்பதை உணர்த்திவிட்டீர்கள்

ஓவியா
24-04-2007, 03:12 AM
அருமையான கவிதை. இது உங்கள் அனுபவமோ!!!

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.

நல்ல இல்லத்தரசி கிடைக்க அனைவருக்கும் வாழ்த்துக்கள். :medium-smiley-065:

சக்தி
30-04-2007, 06:44 PM
இல்லாள் என்றால் ஒன்றும் இல்லாமல் வந்து எல்லாம் தருபவள்

ஓவியா
01-05-2007, 10:29 PM
இல்லாள் என்றால் ஒன்றும் இல்லாமல் வந்து எல்லாம் தருபவள்

நல்ல வசனம்.

இப்பதான் வரும் பொழுதே கூடை கூடையாய் கூடவே (எல்லாம்) எடுத்துட்டு வந்து தருபவள் என்று ஆகிவிட்டதே!!!!!

சக்தி
02-05-2007, 12:22 PM
நல்ல வசனம்.

இப்பதான் வரும் பொழுதே கூடை கூடையாய் கூடவே (எல்லாம்) எடுத்துட்டு வந்து தருபவள் என்று ஆகிவிட்டதே!!!!!


அது
இச்சமுதாயத்தின்
சங்கடம்.
மற்றோர்க்கென்றால்
தடுக்க நினைக்கும் மனம்
தனக்கென்றால்
தேடிக்கொள்ளும் குணம்
ஜாதி,மதங்களைப் போல்
அதுவும்
ரத்தத்தில்
ஊரிய வியாதி.

மனோஜ்
08-05-2007, 09:35 AM
கவிதை அருமை அண்ணா
இவ்வாறு அமைய இறைவனை பிரத்திகிறோன்

அறிஞர்
11-05-2007, 04:38 AM
கல்யாணமும் ஆனது
வந்தது பெண்ணோடு வறுமையும்,
ஒருவருடையதை இருவராக பங்கிட்டு கொள்ள,
நூற்றில் ஒருத்தி ஆயிரத்தில் ஒருத்தி
என்பது போல வந்தாள் இல்லக் கிழத்தி
தோள்கொடுத்தாள் தூக்கி நிறுத்த
சாயும் இல்லறத்தை,

நிதி மந்திரியாய், மதிமந்திரியாய்
செயல்பட்டாள் அவள் வேலைக்கிடையிலும்
இன்பத்தோடு சோகத்திலும்
பங்கு கொண்டாள்,

நீதானோ வாழ்க்கைத் துணை.

மனோ.ஜி
நல்லதொரு வாழ்க்கை துணை கிடைக்க பாக்கியம் செய்து இருக்க வேண்டும்....
மனோஜி.. புதிய கவிதைகளையும் கொடுங்கள்.

ஆதவா
11-05-2007, 04:56 AM
அருமையான கருத்து...

வாழ்க்கைத் துணை..... என்ன ஒரு அருமையான வார்த்தை... நீங்கள் சுட்டியதுபோல ஒவ்வொரு குடும்பமும் நிச்சயம் இருக்கவேண்டும்.... அதில் என் குடும்பம் முதன்மையாக இருக்கவேண்டும்... இவை பழைய திஸ்கி கவிதைகளா?.... மேலும் புதிய கவிதை கொடுங்கள் அண்ணா.... நாங்கள் இளங்காளையர் கவிதைகளை போட்டி போட்டு கொடுக்கும்போது , அனுபவக்காளையரான நீங்கள் இடையிடையே வந்து கொடுத்தால் எமக்கும் திருப்தியாக இருக்கும்...