PDA

View Full Version : நானும் ஒரு கதைச்சொல்லி தான்.

பரஞ்சோதி
12-03-2007, 10:04 AM
கதை கேட்பது என்பது அனைவருக்கும் பிரியமான ஒன்று, அக்கதைகளை சொல்லுபவர்கள் சொல்லும் போது இன்னும் இன்னும் சுவையாக இருக்கும். அது ஒரு தனிக்கலை.

http://www.scottishmultimedia.co.uk/BeverleyMathias/storytelling1.jpg

சின்ன வயசில் வில்லுப்பாட்டு என்றால் உயிர், ஆஹா! என்னமாய், அருமையாய் வில்லை அடித்து, நல்ல குரல்வளத்தோடு, கடம், மற்றும் இசைக்கருவிகளோடு அவர்கள் சொல்லும் கதைகளை வாயில் ஈ புகும் அளவுக்கு பிளந்து கொண்டு கேட்டு ரசித்திருக்கிறேன். இப்போ கூட ஆன்மீக சொற்பொழிவு என்றால் முழுவதும் அமர்ந்து கேட்பேன்.

http://www.digitalopportunity.org/ezimagecatalogue/catalogue/17350.jpg

சின்ன வயசில் எனக்கு கதைகள் சொல்ல நிறைய பேர் இருந்தார்கள் என்பது எனக்கு கிடைத்த அற்புதமான பரிசு. எங்க பாட்டி, என் அம்மா, அத்தைகள், தெருப் பாட்டிகள், என் வயதை ஒட்டிய அத்தை மகன் சிவா, எங்க வீட்டுக்கு வேலைக்கு வருபவர்கள், வருடத்தில் 3 மாதங்கள் எங்கள் வீட்டில் தங்கியிருக்கும் நாடோடி பாட்டி இப்படி பெரிய பட்டியலே இருக்குது.

முதலில் எங்க அம்மா! அவங்க கதை சொன்னா இரவு முழுவதும் கேட்டுகிட்டே இருக்கலாம், அத்தனை அருமையாக கதை சொல்வாங்க. அதிலும் அப்பா இல்லாமல் வளர்ந்த எங்களை நல்ல வழியில் நடத்த, நல்ல நல்ல அறிவுரைகள் கொண்ட கதைகள் சொல்லுவாங்க, நிறைய மாயாஜாலக்கதைகள் அவர்களிடம் உண்டு, பால நாகம்மா, மகாபாரதம், விட்டலாச்சாரியார் படங்கள், அலிபாபா, அலாவுதீன் மற்றும் தன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை கதைகளாக சொல்வாங்க, பல முறை கேட்டு அழுதிருக்கிறேன். என் அம்மா தன் பேத்திக்கு கதைகள் சொல்ல ஆவலாக இருக்காங்க, கதைகள் கேட்க என் மகள் சக்தி கொடுத்து வைத்தவர் தான்.

http://www.danpoguesculpture.com/storytelling.jpg

நான் சின்ன வயசில் ரொம்ப முரட்டுத்தனமான ஆள், எதுக்கெடுத்தாலும் கோபம், நினைத்ததை சாதிக்கும் வெறி, ஆதிக்க மனப்பான்மை அதிகம் அதனால் தினம் தினம் தெருவில் சண்டை போட்டு வருவேன், எதிர்ப்பவர்களை அடித்து நொறுக்கிடுவேன், அடியும் வாங்கி வருவேன். அப்போ எல்லாம் எங்க அம்மா அடிக்காம, இரவில் கதைகள் வாயிலாக அறிவுரை சொல்வாங்க. என்னிடம் இருந்த சுயநலம் என்ற குணத்தை குறைக்க எங்க அம்மா சொன்ன கதை இன்னும் நினைவில் இருக்குது.

ஒரு ஊரில் ஒரு அம்மா, அப்பா இறந்து போயிட்டார். அவங்களுக்கு இரண்டு பிள்ளைகள், அவங்க ரொம்பவே கஷ்டப்பட்டாங்க (அப்படியே எங்க கதை மாதிரி தான்), அம்மா கடுமையாக உழைத்து, சம்பாதித்து வந்தால் தான் சாப்பாடு.

அப்படி இருந்த வாழ்க்கையில் ஒரு நாள், அந்த அம்மாவுக்கு கடுமையான காய்ச்சல், அந்த அம்மாவால் வேலைக்கு போக முடியவில்லை, வீட்டில் சாப்பிட ஒன்றுமே இல்லாத நிலை. எல்லோருக்கும் கடுமையான பசி.

அப்போ பார்த்து அந்த ஊரில் கோவிலில் அன்னதானம் செய்வதாக செய்தி கிடைத்தது, அந்த அம்மா தன் இரு பிள்ளைகளையும் அழைத்து இன்று என்னால் உங்களுக்கு உணவு கொடுக்க முடியவில்லை, ஆகையால் கோவிலில் கொடுக்கும் சாப்பாட்டை வயிறாற சாப்பிட்டு வாங்க என்று அனுப்பினாராம்.

அண்ணனும், தம்பியும் இருவரும் கோவிலுக்கு போய் வீட்டுக்கு திரும்பினார்கள். மூத்தமகன் அம்மாவை பார்த்து அம்மா! சாப்பாடு எல்லாம் நல்லா இருந்தது, வயிறு நிறைய சாப்பிட்டேன் என்றானாம்.

இளைய மகன் அம்மா! நான் அங்கே சாப்பிடவில்லை என்றாராம்.

அம்மா ஏண்டா மகனே! சாப்பிடலை, வீட்டிலேயும் சாப்பாடு இல்லையே

இளைய மகன் அம்மா! நான் சாப்பாட்டை சாப்பிடாம, உங்களுக்கு கொண்டு வந்திருக்கிறேன், நீங்க பாவம், பட்டினியில் தானே இருக்கீங்க

அம்மா உடனே இளைய மகனை கட்டிபிடித்து கண்ணீர் விட்டார்கள், மூத்த மகனுக்கு அவமானமாக போய் விட்டது.

அந்த இரு மகன்களில் மூத்தவர் சூரியனாகவும், இளைய மகன் சந்திரனாகவும் இப்போவும் இருக்காங்க. அதான் சந்திரன் அழகாகவும், குழந்தைகள் முதல் அனைவரும் விரும்பும் ஒன்றாகவும், குளிர்ச்சியாகவும், தான் வாங்கிய ஒளியை பூமிக்கு இரவில் கொடுக்கிறது, சூரியன் வெப்பமாகவும் இருக்காங்க.

ஆகையால் அடுத்தவர்களைப் பற்றி கவலைப்பட்டு அவர்களுக்கு உதவுபவர்கள் என்றும் சந்திரனைப் போல் வாழ்வாங்கன்னு, எங்க அம்மா அறிவுரை சொன்னாங்க.

அன்று முதல் முடிந்தவரை யார் என்ன கொடுத்தாலும், வீட்டுக்கு கொண்டு வர முயல்வேன். இன்றும் கூட அந்த கதை அடிக்கடி நினைவுக்கு வரும். இது எங்க அம்மா சொன்ன கதைகளில் ஒரு சான்று தான், இது மாதிரி பல கதைகள் இன்றும் எனக்கு நல்ல வழி காட்டுகிறது.

(தொடரும் ..)

aren
12-03-2007, 11:14 AM
அழகான கதை. பல படிப்பினைகளை அள்ளிக் கொடுத்திருக்கிறது. தொடருங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

pradeepkt
12-03-2007, 12:18 PM
பரம்ஸ் அண்ணா,
இத்தனை நாள் எங்கே போயிருந்தீர்கள்?
உங்கள் அனுபவங்கள் அனைத்துமே எங்களுக்குப் படிப்பினைதான்.
தொடர்ந்து தரவும்.

இளசு
12-03-2007, 07:51 PM
விழியோரம் மகிழ்வான நெகிழ்வால் கொஞ்சம் கசிந்தேன்..பரம்ஸ்..

அம்மாவுக்கு என் அன்பான விசாரிப்புகள்.. சக்திக்கும்தான்..

அம்மா போன்றவர்களால்தான் உலகம் இன்னும் அழகாக இருக்கிறது..

என் பெரியம்மா திரைப்பட, புத்தகக்கதைகள் சொன்னால்
படம் பார்க்காதவர்கள், கதை படிக்காதவர்கள் எல்லாம்
சிரித்து, அழுது கதை கேட்ட நினைவுகள் எனக்குள்..

தொடரட்டும் இந்த இலக்கியத் தொடர்..

மனோஜ்
12-03-2007, 08:19 PM
அருமை அருமை என் அம்மா நினைவு வந்தது மிக்க நன்றி தொடருங்கள்.....

ஓவியா
13-03-2007, 12:55 AM
மீண்டும் ஒரு அருமையான பதிவு. பாராடுக்கள் அண்ணா.

இன்னும் அதிகம் கதை பதியுங்கள்.

அந்த கருந்தேள் பதிவு துள்.

ஒரூ முறை என் அப்பா இரவில் பேய் கதை சொல்லி நான் பயத்தில் அழுதே விட்டேன்.
நான் மிகவும் பயந்த சுபாவம்.
(இன்னமும் அப்படிதான் சொன்னால் யாரும் நம்ப மாட்டேன்றாங்க :D )

pradeepkt
13-03-2007, 05:30 AM
(இன்னமும் அப்படிதான் சொன்னால் யாரும் நம்ப மாட்டேன்றாங்க :D )
இல்லையே... உங்க விடுதியில் இருக்கும் பேய்கள் எல்லாம் இதேதான் சொல்றாங்களாம்...

மன்மதன்
13-03-2007, 06:05 AM
கதைக்கு ஏற்ப படங்களும் அருமையா இருக்கு நண்பா..

பரஞ்சோதி
13-03-2007, 11:19 AM
அழகான கதை. பல படிப்பினைகளை அள்ளிக் கொடுத்திருக்கிறது. தொடருங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

நன்றி அண்ணா. இன்னும் வரும்.

பரஞ்சோதி
13-03-2007, 11:21 AM
பரம்ஸ் அண்ணா,
இத்தனை நாள் எங்கே போயிருந்தீர்கள்?
உங்கள் அனுபவங்கள் அனைத்துமே எங்களுக்குப் படிப்பினைதான்.
தொடர்ந்து தரவும்.

தம்பி எங்கேயும் போகலை. அப்போ அப்போ வேலைகள் அதிகமாகுது, கிரிக்கெட் தொடங்கியாச்சு, ஆக ஏகத்துக்கும் பிஸியாக்கும் :D :D

நீங்க சிரிக்கும் முன்பே நானே சிரிச்சிட்டேன்.

பரஞ்சோதி
13-03-2007, 11:21 AM
விழியோரம் மகிழ்வான நெகிழ்வால் கொஞ்சம் கசிந்தேன்..பரம்ஸ்..

அம்மாவுக்கு என் அன்பான விசாரிப்புகள்.. சக்திக்கும்தான்..

அம்மா போன்றவர்களால்தான் உலகம் இன்னும் அழகாக இருக்கிறது..

என் பெரியம்மா திரைப்பட, புத்தகக்கதைகள் சொன்னால்
படம் பார்க்காதவர்கள், கதை படிக்காதவர்கள் எல்லாம்
சிரித்து, அழுது கதை கேட்ட நினைவுகள் எனக்குள்..

தொடரட்டும் இந்த இலக்கியத் தொடர்..

இளசு அண்ணாவின் பின்னோட்டம் படித்தாலே இதயம் நெகிழும். இதை தான் உங்களிடமிருந்து எதிர்பார்த்தேன் அண்ணா.

பரஞ்சோதி
13-03-2007, 11:22 AM
அருமை அருமை என் அம்மா நினைவு வந்தது மிக்க நன்றி தொடருங்கள்.....

நன்றி நண்பரே!

அன்னையை போல் ஒரு தெய்வமில்லை என்பதை நான் உணர்ந்தவன்.

பரஞ்சோதி
13-03-2007, 11:24 AM
மீண்டும் ஒரு அருமையான பதிவு. பாராடுக்கள் அண்ணா.

இன்னும் அதிகம் கதை பதியுங்கள்.

அந்த கருந்தேள் பதிவு துள்.

ஒரூ முறை என் அப்பா இரவில் பேய் கதை சொல்லி நான் பயத்தில் அழுதே விட்டேன்.
நான் மிகவும் பயந்த சுபாவம்.
(இன்னமும் அப்படிதான் சொன்னால் யாரும் நம்ப மாட்டேன்றாங்க :D )

நன்றி சகோதரி.

பட்டினத்து பிள்ளையான நீங்க வியக்கும் வண்ணம் கிராமிய பாணியில் என் கதைகள் சொல்கிறேன், படித்து மகிழுங்கள். என்னிடமும் நிறைய பேய்க்கதைகள் இருக்குது.

- பி.டி.சாமி பரஞ்சோதி

பரஞ்சோதி
13-03-2007, 11:26 AM
இல்லையே... உங்க விடுதியில் இருக்கும் பேய்கள் எல்லாம் இதேதான் சொல்றாங்களாம்...

ஏலே தம்பி, புள்ள ஏற்கனவே கண்ணாடியை பார்த்து பேயின்னு பயந்து போயிருக்குது, நீங்க வேற, பாவம் தங்கச்சி. பயப்படாதேம்மா.

பரஞ்சோதி
13-03-2007, 11:27 AM
கதைக்கு ஏற்ப படங்களும் அருமையா இருக்கு நண்பா..

நன்றி நண்பா,

உன்னை விடவா நான் சிறப்பா படம் காட்ட முடியும் :)

pradeepkt
13-03-2007, 11:27 AM
தம்பி எங்கேயும் போகலை. அப்போ அப்போ வேலைகள் அதிகமாகுது, கிரிக்கெட் தொடங்கியாச்சு, ஆக ஏகத்துக்கும் பிஸியாக்கும் :D :D

நீங்க சிரிக்கும் முன்பே நானே சிரிச்சிட்டேன்.
அதானே... பிஸி அது இதுன்னு சொல்லித் தப்பிக்காதீங்க...
குறைந்த பட்சம் வாரத்துக்கு ஒரு கதை போடுங்க. நாங்க அதை பின்னூட்டங்களின் மூலம் அடுத்த கதை வரும் வரை பாத்துக்கிருவம்.:D

ஓவியா
13-03-2007, 11:29 AM
சகோதரிய இப்படியா பாராட்டுவது. ரொம்பவே பயந்துட்டேன். :D :D

ஓவியா
13-03-2007, 11:30 AM
அதானே... பிஸி அது இதுன்னு சொல்லித் தப்பிக்காதீங்க...
குறைந்த பட்சம் வாரத்துக்கு ஒரு கதை போடுங்க. நாங்க அதை பின்னூட்டங்களின் மூலம் அடுத்த கதை வரும் வரை பாத்துக்கிருவம்.:D

அதே அதே சபாபதி....:D

பரஞ்சோதி
13-03-2007, 11:32 AM
சகோதரிய இப்படியா பாராட்டுவது. ரொம்பவே பயந்துட்டேன். :D :D

சகோதரி, இப்போ எல்லாம் அட்டகாசமாக சமாளிக்கிறார், வாழ்த்துகள்.

ஓவியா
13-03-2007, 11:36 AM
சகோதரி, இப்போ எல்லாம் அட்டகாசமாக சமாளிக்கிறார், வாழ்த்துகள்.

நன்றி அண்ணா

புகழெல்லாம் என் சகோதரனுங்களுக்கே :D

சக்தியும் அண்ணியும் நலமா?....

பரஞ்சோதி
13-03-2007, 11:59 AM
எல்லோரும் நலம், விரைவில் சக்தியின் குறும்புகள் அடங்கிய பதிவு வரும்.

paarthiban
13-03-2007, 12:15 PM
என் அம்மா. எல்லார் அம்மா பாட்டியயும் நினைவு படுத்தும் பெருமைபடுத்தும் கட்டுரை, அருமை பரஞ்சோதி சார் அருமை.

அறிஞர்
13-03-2007, 11:38 PM
அம்மாவுக்கு இணை யாருண்டு...

பரம்ஸ் தொடர்ந்து வந்து.. கதை கொடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

pradeepkt
14-03-2007, 04:48 AM
எல்லோரும் நலம், விரைவில் சக்தியின் குறும்புகள் அடங்கிய பதிவு வரும்.
எப்போ???
எப்போ???
எப்போ???
ஆமா, நீங்க உங்க ஜிமெயில் எல்லாம் படிக்கிறதே இல்லையா???

பரஞ்சோதி
14-03-2007, 08:57 AM
எப்போ???
எப்போ???
எப்போ???
ஆமா, நீங்க உங்க ஜிமெயில் எல்லாம் படிக்கிறதே இல்லையா???

தம்பி, ஒரு ஜிமெயில் இருந்தால் பரவாயில்லை, ஓராயிரம் இருப்பதால் எல்லா படிக்க முடிவதில்லை. மீண்டும் அனுப்பி வையுங்கள்.

பரஞ்சோதி
14-03-2007, 08:58 AM
என் அம்மா. எல்லார் அம்மா பாட்டியயும் நினைவு படுத்தும் பெருமைபடுத்தும் கட்டுரை, அருமை பரஞ்சோதி சார் அருமை.

நன்றி பார்த்தீ(தி)பன், உங்கள் பின்னோ(னூ)ட்டம் எனக்கு மகிழ்ச்சியை(க்) கொடுக்கிறது, இதோ அடுத்த பகுதி வெளியிட்டுயி(டி)ருக்கிறேன்.

பரஞ்சோதி
14-03-2007, 08:59 AM
அம்மாவுக்கு இணை யாருண்டு...

பரம்ஸ் தொடர்ந்து வந்து.. கதை கொடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

நன்றி நண்பரே!

நீங்க சொல்வது உண்மை தான்.

முடிந்தவரை தொடர்ந்து கொடுக்கிறேன். உங்கள் ஆதரவும் என்றும் இருக்கட்டும்.

pradeepkt
14-03-2007, 10:03 AM
தம்பி, ஒரு ஜிமெயில் இருந்தால் பரவாயில்லை, ஓராயிரம் இருப்பதால் எல்லா படிக்க முடிவதில்லை. மீண்டும் அனுப்பி வையுங்கள்.
சரி உங்க paransothi@gmail.com கு அனுப்பி வைத்திருக்கிறேன்.
இப்பவாவது பார்த்து பதில் போடுங்கள்... இல்லைன்னா சக்தியை விட்டுக் கடிக்கச் சொல்லுவேன். :rolleyes:

மதி
14-03-2007, 10:31 AM
பரம்ஸ்..

தொடக்க கதையிலேயே அருமையான கருத்துக்கள்..மேலும் இது போல் கொடுங்கள்..

இனி அடிக்கடி உங்களை மன்றத்தில் எதிர்பார்க்கிறோம்..!

பரஞ்சோதி
15-03-2007, 06:10 AM
தம்பி பிரதீப்

உங்க மடல் கிடைத்தது, வாழ்த்துகள்.

பரஞ்சோதி
15-03-2007, 06:10 AM
பரம்ஸ்..

தொடக்க கதையிலேயே அருமையான கருத்துக்கள்..மேலும் இது போல் கொடுங்கள்..

இனி அடிக்கடி உங்களை மன்றத்தில் எதிர்பார்க்கிறோம்..!

நன்றி தம்பி ராஜேஷ்,

கட்டாயம், நல்ல பதிவுகள் கொடுக்க கட்டாயம் வருவேன்.

pradeepkt
15-03-2007, 06:23 AM
தம்பி பிரதீப்

உங்க மடல் கிடைத்தது, வாழ்த்துகள்.
அண்ணா உங்க தனிமடலும் கிடைத்தது... நன்றி!
சரி சரி அடக்கி வாசிங்க :D :D :D
ஆமா, அடுத்த கதை எங்கே அண்ணா???

gragavan
16-03-2007, 06:40 AM
நெகிழ வைத்த கதை. ஆனால் அது சொல்லும் அறிவுரை மிகப் பெரியது. நல்லதொரு கதையைப் பகிர்ந்திருக்கிறாய் தம்பி.

மயூ
24-03-2007, 07:23 PM
ஆழமான கருத்துக்கள் உள்ள எளிமையான பதிவு
நன்றி பரஞ்சோதி அண்ணே!

பரஞ்சோதி
26-03-2007, 07:41 AM
நெகிழ வைத்த கதை. ஆனால் அது சொல்லும் அறிவுரை மிகப் பெரியது. நல்லதொரு கதையைப் பகிர்ந்திருக்கிறாய் தம்பி.

நன்றி அண்ணா.

கதை சொல்வதில் உங்களை மிஞ்ச முடியுமா என்ன?

பரஞ்சோதி
26-03-2007, 07:43 AM
ஆழமான கருத்துக்கள் உள்ள எளிமையான பதிவு
நன்றி பரஞ்சோதி அண்ணே!

நன்றி தம்பி.

kavitha
26-03-2007, 10:18 AM
எல்லோரும் நலம், விரைவில் சக்தியின் குறும்புகள் அடங்கிய பதிவு வரும்.
__________________
பரஞ்சோதி

ஆவலோடு காத்திருக்கிறேன் அண்ணா கவிதைகள் எழுத!

பரஞ்சோதி
30-03-2007, 03:50 AM
வாங்க சகோதரி.

உங்க மருமகள் சக்தி இவ்வுலகில் பாதம் பதிக்கும் முன்பே கவிதைகள் பாடி, :icon_rollout: மகிழ்வித்தவராச்சே நீங்க. இத்தகைய அத்தை கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

சக்தி சென்னையில் தான் இருக்கார், நீங்க போனில் பேசலாமே.

ஆதவா
08-04-2007, 04:55 PM
ஓ!!! சூரிய சந்திரக் கதை இதுதானா?...

அருமம அண்ணா! என்னமா இருக்கு கதை.... நானும் கூட ஏதோ அனுபவம் போல இருக்கேன்னு படிச்சேன்..... எழுத்துக்கள் பிரமாதம்....

நல்லதொரு இலக்கியக் கவிதைகள் உங்கள் கதைகள்.....

தொடரட்டும் உங்கள் பணி...