PDA

View Full Version : அறிவியல் இமயம்-நியூட்டன் (அ.மை.-25)இளசு
11-03-2007, 04:38 PM
அறிவியல் இமயம் - நியூட்டன்

அறிவியல் மைல்கற்கள் - 25

வெள்ளிவிழா நாயகர் - சர் ஐசக் நியூட்டன்..

-----------------------------------------
மாறாது எனக்கு என்றும் மன ஊக்கம் தரும்
தம்பி பாரதிக்கு இத்தொடர் அர்ப்பணிப்பு..

------------------------------------------------
தொடரின் இந்த பாகத்துக்கு கைகொடுத்த
டாக்டர் மாசிலாமணி அவர்கள் எழுதிய
'பௌதிகம் என்பது புதுக்கவிதை' நூலுக்கு
என் அன்பான நன்றிகள்.

--------------------------------------------------
அ.மை. 24 - வேதியியல் வேதங்கள் இங்கே -

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6920

----------------------------------------------------காலத்தை கி.மு;கி.பி என பிரிப்பதைப்போல்
அறிவியலை நி.மு; நி.பி என பிரிக்கலாம்.
அந்த பெருமை நியூட்டனுக்குத் தகும்.

இயக்கவியலில் ( mechanism, kinetics) முதன்முதலில்
மூன்று அடிப்படை உண்மைகளை எடுத்துச் சொன்னவர் நியூட்டன்.

ஒன்று :
உலகம், ஏன் முழுப் பிரபஞ்சமே ஒரு 'சும்மா' இருக்கும் சோம்பல் நிலையம்.
அவற்றில் உயிரற்ற ஜடங்களும் உயிருள்ள ஜந்துக்களும் விட்டால்
போட்டது போட்டபடி அப்படியே வாளாவிருக்கும். (State of Inertia)
'இந்த சங்கிலி அநாவசியமாய் போர்வையக் கழட்ட மாட்டான்
அப்படிக் கழட்டினா...?!!!' என்பதுபோல
இப்படி தேமேன்னு கிடக்கும் எதுவும் அசைந்து சலனிக்க ஆரம்பித்துவிட்டால்
ஒரே நேர்க்கோட்டில் அதுபாட்டுக்குத் தொட.....ர்ந்து நிற்காமல் போய்க்கிட்டே இருக்கும்.
(வச்சா குடுமி, அடிச்சா மொட்டை..)
இதில் ஆச்சரியம் என்னவென்றால், அந்த ஜட நிலையும் சலன நிலையும் சமம்.
வேலையில் இருப்பதும் ஓய்வில் இருப்பதும் ஒரே எடை..ஒரே நிறை..
(அரியும் சிவனும் ஒண்ணு). ஒரு சமன்பாட்டில் இரண்டையும் நிறுவலாம்.

இரண்டு:
மோன நிலை (இனெர்ஷியா)-யில் இருந்து அசைவு நிலைக்கு மாற
ஒரு பொருளுக்கு விசை (Force) தேவை. விசையால் தாக்கப்பட்ட பொருளுக்கு
வேகம் கிடைக்கும். அந்த வேகம் - மாறும் வேகம் (Acceleration).
அந்த வேகமாற்றத்தை பொருளின் எடையும் நிர்ணயிக்கும்.
விசை = எடை x வேகமாற்றம்
F = ma

மூன்று:
ஒரு பொருள் (அ) மற்றொரு பொருளின் (ஆ) மேல் விசை செலுத்தினால்
அதே அளவு விசையை எதிர்கொள்ள நேரும்.
(காதலன் -காதலிகளுக்குப் புரியும் விதி இது)
F (ஆxஆ) = F(ஆxஅ)
Every action has an equal and opposite reaction.

தினசரி வாழ்வில் நியூட்டனின் தத்துவங்களைப் பார்ப்போம்.

(1) வெளியூருக்குப்போய், சில நாள் கழித்து வந்த நீங்கள்
உங்கள் அறை மேசை இடம் மாறி இருப்பதைப் பார்க்கிறீர்கள்.
'தேமே'ன்னு இருக்கவேண்டிய மேசை நகர்ந்திருக்கிறதென்றால்
அதை யாரோ 'விசை' கொடுத்துத் தள்ளி வைத்திருக்கிறார்கள்.
ஒரு கோலியை வழவழப்பான பளிங்குத்தரையில் உருட்டுங்கள்.
அது பாட்டுக்கு போயி..ட்ட்ட்ட்டே இருக்கும் -
தரை உராய்வால் அதன் வேகம் குறைந்து நிற்கும்வரை.

(2) ஒரு கல்லை முழுசக்தியுடன் ( யாருமில்லாத இடத்தில்) வீ..சுங்கள்.
பின், அதை விடச் சின்ன கல்லாய் எடுத்து அதே சக்தியுடன் வீ..சுங்கள்.
சின்னக்கல்லின் வேகமாற்றம் அதிகம். அதனால் இன்னும் தூரம் போய் விழும்.

(3) ஒரு பிஸ்கட் டின்னை ஓங்கி முஷ்டியால் குத்தினால்
டின் நெளியும்.. கை வலிக்கும்.
அதிகமாய் குத்தினால் டின் நசுங்கும். கை டாக்டரிடம் போகும்!


அட.. இத்தனை சுளுவான தத்துவம் சொல்ல நியூட்டன் வரணுமா?
எனக்கே இதெல்லாம் தெரியுமே என்கிறீர்களா?

நோவாமல் நோன்பிருக்கும் நமக்கு இப்படித் தோணுவதில் ஆச்சரியமில்லை!
கலிலியோ போன்றவர்களும் அரைகுறையாய் மட்டும் புரிந்தவற்றை
ஐயந்திரிபற ஆராய்ந்து ' முதலில்' நிறுவிய நியூட்டனுக்கு நிகர் நியூட்டன் மட்டுமே..

(ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் உண்டே என ஆரென் குரல் இந்த இடத்தில் கேட்கிறது..)

17ம் நூற்றாண்டிலேயே புதிய அறிவியலில் எவரெஸ்ட்டுகளை எட்டிப்பிடித்த
நியூட்டன் நடிகர் திலகம் என்றால் ஐன்ஸ்டீன் கமல்ஹாசன்..
(என் பார்வையில் ஓர் எடுத்துக்காட்டு இது - அவ்வளவே).

நியூட்டனின் வாழ்க்கையைப் பற்றி இந்த மைல்கல்லின் தொடர்ச்சியில் விரிவாய் பார்ப்போம்.

படித்து பின்னூட்டம் அளித்து ஊக்கம் தரப்போகும்
அனைவர்க்கும் முன்நன்றிகள்.

பாரதி
12-03-2007, 02:47 AM
அன்புள்ள அண்ணா,

நீ.........ண்ட இடைவெளிக்கு பின் உங்கள் தொடரைக் காண்பதில் மகிழ்ச்சி.

ஏற்கனவே படித்திருந்தாலும், எளிய தமிழில் எல்லோருக்கும் விளங்கும் வண்ணம் அருமையான நடையில் தரும் உங்கள் பாங்கு எல்லோருக்கும் பிடிக்கும்.

தொடரப்போகும் பகுதிகளை காண ஆவலாய் காத்திருக்கிறேன்.

எதிர்பார்க்காத அளவு என்னை உங்கள் இதயத்தில் அமர்த்தியிருப்பது அளவில்லா உவகை என்றாலும், கொஞ்சம் பயமும் வரத்தான் செய்கிறது.

aren
12-03-2007, 03:41 AM
அறிவியல் குரு சர். ஐசக் நியூட்டன் அவர்களை 25ஆவது மைல்கல்லாக எடுத்துக்கொண்டு வெள்ளிவிழா நாயகராக ஆக்கியது சாலப்பொருந்தும்.

நீங்கள் அவர்களுடைய நியூட்டன் விதியைப் பற்றி கூறுவீர்கள் என்று நினைத்தேன். அது இனிமேல்தான் வரப்போகிறது என்று நினைத்து சந்தோஷம்.

தொடருங்கள். எங்களுக்கு புரியாத (தெரியாத) பல விஷயங்களை எளிய தமிழில் கொடுத்து எங்களையும் உங்கள் அருகில் கொண்டுசெல்ல முயற்சிக்கிறீர்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

மன்மதன்
12-03-2007, 06:53 AM
எளியநடையில் அனைவரும் படித்து புரிந்த கொள்ளும் வகையில் இருக்கும் கட்டுரை.

காதலருக்கு புரியும் 3வது விதியில் F (ஆxஆ) = F(ஆxஅ) ன்னா என்ன அர்த்தம்??

leomohan
12-03-2007, 08:47 PM
நல்ல தொகுப்பு, தமிழில் இட்டதற்கு மிக்க நன்றி.

pradeepkt
13-03-2007, 06:08 AM
எளியநடையில் அனைவரும் படித்து புரிந்த கொள்ளும் வகையில் இருக்கும் கட்டுரை.

காதலருக்கு புரியும் 3வது விதியில் F (ஆ(அ)xஆ) = F(ஆxஅ) ன்னா என்ன அர்த்தம்??
காதலருக்குப் புரியும் விதின்னா உனக்குத் தெளிவாப் புரிஞ்சுருக்கணுமே... :D

அதாவது எல்லா விசைகளும் ஜோடியாகத்தான் இருக்கும் - ஒரு ஜோடியின் இரண்டு விசைகளும் ஒரே அளவினதாய் எதிர்த்திசை கொண்டதாய் இருக்கும் !

இந்த இரு விசைகளினாலேயே உலகம் ஒரு இடத்தில் "சும்மா" இருக்கிறது.

நியூட்டனின் விதி இதுதான் "
All forces occur in pairs, and these two forces are equal in magnitude and opposite in direction.
"
அதை விளக்கும்போது வெளிவந்ததுதான் "To every action there is always opposed an equal reaction" -- ஆக இதுவே நியூட்டனின் விதி அல்ல!

இப்ப புரிஞ்சுதா?

pradeepkt
13-03-2007, 06:09 AM
இளசு அண்ணா,
மிகச் சரியான வெள்ளி விழாப் பதிவு.
நியூட்டன் பற்றி எங்களுக்கு அறிந்ததையும் அறியாததையும் மீண்டும் விளக்கியமைக்கு மிக்க நன்றி.

mukilan
13-03-2007, 07:16 AM
உங்களுக்கே உரிய நடையில் அறிவியல் மைந்தர்கள் மிளிர்கிறது அண்ணா! ஐன்ஸ்டீன், நியூட்டன் ஒப்பீடு மிக அருமை.

மன்மதன்
13-03-2007, 07:18 AM
புரிஞ்சது பிரதீப்..

இளசு
13-03-2007, 08:39 AM
பாரதி, அன்பின் ஆரென், மன்மதன் ( புரியாது நடித்தவர்),மோகன், முகில்ஸ்-
அனைவர்க்கும் நன்றி.

பிரதிப்பின் விளக்கம் படித்து சொக்கிவிட்டேன்... கட்டிப்பிடி பாராட்டுகள் பிரதீப்..

முகில்ஸ்- அந்த ஒப்பீட்டை சிறு தயக்கத்துடன் பதித்தேன். உன் பாராட்டால் கொஞ்சம் தெளிகிறேன். நன்றி.

மனோஜ்
13-03-2007, 09:18 AM
இப்படி அருமையாக இளசு அண்ணன் மாதிரி ஆசிரியர் படம் நடத்தியிருந்தா கன்டிப்பா 100 க்கு 100 மதிப்பெண் எடுத்திருப்பேன்
உங்களுக்கே உரிய தமிழ் நடையில் அறிவியல் அருமை
இப்படியாக தொடருங்கள்................

pradeepkt
13-03-2007, 11:52 AM
மனோஜ்,
சரியாகச் சொன்னீர்கள். அன்றே நம் அண்ணா போல் யாராவது புரியவைத்துப் பாடம் நடத்தி இருந்தால் நாம் அனைவரும் கலக்கி இருப்போம். என்ன செய்ய? எல்லாருக்கும் அப்படி வாய்ப்பதில்லையே.. எனக்கும் இந்த வருத்தம் நம் கல்வித்துறையின் மீது வெகுநாட்களாய் உண்டு.

இளசு
13-03-2007, 09:57 PM
நன்றி மனோஜ்..


பிரதீப்,

பாடத்திட்டங்கள் பற்றிய உன் பொருமல் எனக்கும் உண்டு..

ஊக்க வார்த்தைகளுக்கு நன்றி..

lolluvathiyar
19-03-2007, 05:12 PM
நுயுட்டன் பற்றி அழகாக விளக்கி
அவருக்கு பெருமை சேர்த்து விட்டீர்கள்
அப்படியே நமது ஆதிகால் தமிழர்களின்
அறிவியல் கண்டுபிடிப்புகளையும்
எடுத்து விட்டால் பெருமையாக இருக்கும்

ஓவியன்
05-04-2007, 10:49 PM
நியூட்டனைப் பற்றி அழகான பதிவொன்று - சுந்தரத் தமிழிலே

தந்த இளசு அண்ணாவிற்கு நன்றிகள்.

பாரதி
06-04-2007, 07:07 PM
நுயுட்டன் பற்றி அழகாக விளக்கி
அவருக்கு பெருமை சேர்த்து விட்டீர்கள்
அப்படியே நமது ஆதிகால் தமிழர்களின்
அறிவியல் கண்டுபிடிப்புகளையும்
எடுத்து விட்டால் பெருமையாக இருக்கும்

நண்பரே,

அறிவியல் மைல்கற்களை முதலில் இருந்து படித்தீர்கள் என்றால் உங்களுக்குப் புரியும். மேலும் உங்களுக்குத் தெரிந்த பழங்கால தமிழர்களின் கண்டுபிடிப்புகளையும் நீங்களும் ஆதாரத்துடன் தந்து உதவலாம். மிக்க நன்றி.

இளசு
07-04-2007, 12:08 AM
நன்றி வாத்தியார் நண்பருக்கும், அன்பு ஓவியனுக்கும்..

பாரதியின் கருத்தை ஆமோதிக்கிறேன். நமக்குத் தெரிந்தவற்றை எல்லாரும் பகிர்ந்து வளரலாம்..


பாரதியின் பின்னூட்டத்தின் பின்னால் இன்னொரு சூட்சுமச்செய்தியும் உண்டு - அது இப்பதிவின் அடுத்த பாகம் எப்போது என்பது...

விரைவில் தருகிறேன்...

பரஞ்சோதி
07-04-2007, 07:04 AM
நன்றி அண்ணா.

நீண்ட நாட்களுக்குப் பின்பு உங்களின் அறிவியல் கட்டுரையை படிக்கிறேன்.

நீங்க கொடுப்பதை எல்லாம் தொகுத்து, பிடிஎப் கோப்பாக மாற்றி பலருக்கும் பயனடைய செய்ய ஆசை.

ஆதவா
06-02-2008, 02:56 AM
நீயுட்ட்டன் பற்றீய தகவல்களை சுவாரசியமாக சொல்லிப் புரியவைத்தீர்கள் அண்ணா...
வச்சா குடுமி, அடிச்சா மொட்டை போன்ற எ:கா கள் இம்மாதிரியான புரியாத அறிவியலை எளிதில் புரியவவக்கும்... சுவாரசியமானவை..

நன்றி அண்ணா

Narathar
01-10-2008, 08:15 PM
நியூட்டன்........
எனக்குத்தெரிந்த ஓரிரு அறிவியலாளர்களில் ஒருவர்!

அவரைப்பற்றி இன்னும் கொஞ்சம் அதிகமாகவே உங்களிடமிருந்து எதிர்பார்த்தேன்...

வெள்ளி விழா நாயகராக அவரை தேர்ந்தது மிக்கச்சரி

poornima
05-10-2008, 07:47 AM
நியூட்டன் பதிவை நிதானமாய் பார்த்தேன்
கியூட்டாய் தந்தமைக்கு நன்றி - பியூட்டியாய்
பின்னூட்டம் தந்திட போறாது வார்த்தைகள்
இன்னும் எழுதி அசத்து.