PDA

View Full Version : ஞாபக சக்தி மாத்திரைகள்



ро╡рпЖро▒рпНро▒ро┐
11-03-2007, 10:42 AM
நன்றி: குமுதம் (ஹெல்த்)

ССஎன் பையன் படிச்சு பெரிய ஆளாகி டாக்டராகணும், ஐ.ஏ.எஸ். ஆகணும்ТТ என்று எல்லோருடைய பெற்றோர்களும் எதிர்பார்க்கிறார்கள், ஆசைப்படுகிறார்கள். அதற்காக, அவனுடைய படிப்பில் அதிக அக்கறை செலுத்துகிறார்கள். டியூசன், கோச்சிங் கிளாஸ் என்று அவனை ஆண்டுத் தேர்வுக்கும், பொதுத் தேர்வுக்கும் தயார்படுத்துகிறார்கள்.

ஆனால், பையனுக்குச் சரியாக படிப்பு வரமாட்டேங்குது. மணிக்கணக்கில் சாப்பிடாம, தூங்காம கண் விழித்துப் படித்தும், தேர்வில் மட்டும் குறைந்த மதிப்பெண்களே வாங்குறான். அவனுக்கு ஞாபகசக்தி கொஞ்சம் கூட இல்ல. இப்படிப் படிச்சா பொதுத்தேர்விலும் மார்க் குறைஞ்சிடும். அதனால அவனுடைய எதிர்காலமே பாழகிடுமேТТ என்று பதறும் பெற்றோர்கள், கடைசியாக இந்த முடிவை எடுக்கிறார்கள். அது என்ன?

தேர்வுக்கு படிக்கும் பையனுக்கு ஞாபக சக்தி அதிகரிக்க வேண்டும், அவன் படிக்கும் அத்தனையும் விரல் நுனியில் வைத்திருக்க வேண்டும் என்று எண்ணும் பெற்றோர்கள், அவனுக்குச் சந்தையில் விற்கப்படும் மாத்திரைகளை வாங்கிக் கொடுக்கிறார்கள்.

தேர்வுக்கு ஒரு வார காலமே உள்ள நேரத்தில், இப்படி ஞாபக சக்தி மாத்திரைகளைக் கொடுத்துப் படிக்க வைப்பது நல்லதா? என்று பதில் தேடும் போது, நமக்குக் கிடைத்த தகவல் அதிர வைத்தது.

ССஓட்டப் பந்தயங்களிலும், கால் பந்துப் போட்டிகளிலும் ஊக்கமருந்துகள் பயன்படுத்துவதைப் பற்றி அறிந்திருப்போம். ஊக்க மருந்துகளைப் பயன்படுத்து பவர்களுக்கு, அவர்களை அறியாத அபார சக்தியோடு, ஒரு வெறித்தனம் தோன்றுகிறது அல்லவா. அதற்குச் சமமானது தான், இந்த ஞாபக சக்தி அதிகப்படுத்தும் மாத்திரைகளும்ТТ என்பது தான் உண்மை.

ஞாபக சக்தியை அதிகப்படுத்த பரிந்துரைக்கப்படும் மாத்திரை, மருந்துகள், லேகியங்கள்:

ஆயுர்வேதம்

வேதிக் புரோட்டின் (மூன்று ஃப்ளவரில் கிடைக்கிறது. ஐஸ்கிரீம், ஸ்டாபெரி, வெண்ணிலா)

அஸ்வ கங்கா லேகியம்.

கேனிதோஸ்.

தூதுவளை லேகியம்.

கோனா தெர்மோ (காளானில் இருந்து தயாரிக்கப்படுகிறது ஞிஙீழி தயாரிப்பு).

குரோபில் (மூளைக்கு ஆக்ஸிஜன் அதிகமாகச் செல்ல உதவுகிறது).

சோயா கண்டென்ட்ஸ்.

பாதாம் பருப்பு பவுடர்.

மற்றும் புரோட்டீன் மருந்துகள்.

ஆங்கில மருந்துகள்

வைட்டமின் பி_காம்ப்ளக்ஸ் _ஒரு நாளைக்கு ஒன்று என்கிற விகிதத்தில்.

ஃப்ரமி

டி பிரைன் க்யூக்கன் 110% உத்திரவாதம். ஒரு மணி நேரத்தில் பலனை எதிர்பார்க்கலாம் என்கிறார்கள். ஓட்டப் பந்தயத்திற்கும் பயன்படுத்துகிறார்கள்.

மெமரி விட்டா
மற்றும் ஸ்லோசெட்டின்

இமிப்ரமின்
குளோமிப்ரமின்
அல்ப்ரசோளம்

செர்ட்ரலைன்
போன்ற ரசாயனங்களை வைத்து நிறைய ஞாபக சக்தி மாத்திரைகளைத் தயாரித்து சந்தையில் விற்கப்பட்டு வருகிறது.

நாட்டு மருந்து வைத்திய சாலைகளில்

அரவிந்த் வல்லாரை லேகியம்

விக்ஷிவி சூரணம்/டானிக்.

தாமரை இதழ் பொடி.

ஸ்பெஷல் வல்லாரை லேகியம்.

ஸ்பெஷல் வல்லாரை மாத்திரை/டானிக்

வெண்டைக்காய், வல்லாரை, அமுக்கலாங்கிழங்கு மிக்ஸர் பவுடர்.

இவைகளை பாலிலோ, சுடு நீரிலோ கலந்து குடித்தால் இரண்டு வாரங்களில் ஞாபக சக்தி கூடி விடும், என்ற கூறி கடைகளில் விற்கிறார்கள். சில அங்கீகரிக்கப்பட்ட மாத்திரைகள் சந்தையில் கிடைத்தாலும், அதற்கான அளவோடும், கால அவகாசத்தோடும் உட்கொள்வதே நன்மை.

மாத்திரைகள் உண்ணுவதால் உடனே ஞாபக சக்தி வந்துவிடும் என்பது தெளிவான கட்டுக்கதை.

தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தோடும், மனநிலையோடும் படித்தாலே போதும். நிச்சயம் நீங்கள் வெல்வீர்கள். அதை விட்டுவிட்டு மாத்திரைகள் எதற்கு?

எழுதியவர்: கே.சி.பிரபாகரன்

aren
11-03-2007, 11:42 AM
இவ்வளவு சாப்பிட்டும் மக்கள் படிக்க வேண்டுமே. படிக்காமல் பரிட்சை எழுத ஏதாவது மாத்திரைகள் உள்ளனவா?

நான் படிக்கும் காலத்தில் மக்னீசியம் கலந்த மாத்திரைகளை கிடைக்கும்.

நன்றி வணக்கம்
ஆரென்

роУро╡ро┐ропро╛
23-03-2007, 01:10 AM
இவ்வளவு சாப்பிட்டும் மக்கள் படிக்க வேண்டுமே. படிக்காமல் பரிட்சை எழுத ஏதாவது மாத்திரைகள் உள்ளனவா?

நான் படிக்கும் காலத்தில் மக்னீசியம் கலந்த மாத்திரைகளை கிடைக்கும்.

நன்றி வணக்கம்
ஆரென்

ஆரேன் அண்ணா
படிக்காமல் பரிட்சை எழுதும் மாத்திரைகள் கிடைத்தவுடன் இந்த பாச மலரை மறக்க வேண்டாம்.
எனக்கும் அனுப்பி வைய்யுங்கள்.......
அச்சச்சோ எனக்கு புத்த்கம் பார்க்காமல் எழுது பரிட்சையாவும் முடிந்து விட்டாதே.......:sport-smiley-007:

பதிவிற்க்கு மிக்க நன்றி மொக்க அண்ணன்

நன்றி: குமுதம் ஹெல்த் .

march
23-03-2007, 01:58 PM
இதை எல்லாம் சாப்பிட்டால் நிஜமாக நாபகம் வருமா, நாபகம் போய்விடுமா,

வித் லவ்
மார்ஷ்.

роЕро▒ро┐роЮро░рпН
23-03-2007, 04:07 PM
மாத்திரையை சாப்பிட யார் நியாபக படுத்துவார்கள்... :1: :1:

роЕрооро░ройрпН
23-03-2007, 04:09 PM
மாத்திரையை சாப்பிட யார் நியாபக படுத்துவார்கள்...


சபாஷ் சரியான கேள்வி

роЖродро╡ро╛
23-03-2007, 04:14 PM
ஆரேன் அண்ணா
படிக்காமல் பரிட்சை எழுதும் மாத்திரைகள் கிடைத்தவுடன் இந்த பாச மலரை மறக்க வேண்டாம்.
எனக்கும் அனுப்பி வைய்யுங்கள்.......
அச்சச்சோ எனக்கு புத்த்கம் பார்க்காமல் எழுது பரிட்சையாவும் முடிந்து விட்டாதே.......:sport-smiley-007:

பதிவிற்க்கு மிக்க நன்றி மொக்க அண்ணன்

நன்றி: குமுதம் ஹெல்த் .

ஞாபக மறதி உள்ளவர்கள் மட்டுமே மாத்திரை சாப்பிடவேண்டுமென்பதால் அக்காவுக்கு மாத்திரை அவசியமில்லை என்பதை பெருமையோடு சொல்லிக்கொள்கிறேன்..:medium-smiley-029:



மாத்திரையை சாப்பிட யார் நியாபக படுத்துவார்கள்... :1: :1:


அறிஞரே!!! அசத்தீட்டீங்க போங்க... :1:

march
23-03-2007, 05:05 PM
அப்படி யென்றால் எனக்கு மாத்திரை வேண்டாம்

வித் லவ்
மார்ஷ்

рооройрпЛроЬрпН
24-03-2007, 02:34 PM
:fragend005: :wub: மாத்திரை சாப்பிட்டும் ஞாபகசக்தி வறவில்லையென்றால் என்ன பன்றது

march
24-03-2007, 02:48 PM
:fragend005: :wub: மாத்திரை சாப்பிட்டும் ஞாபகசக்தி வறவில்லையென்றால் என்ன பன்றது

மொக்கை தொகுப்பாளறை பதம் பார்க்கவேண்டும் ஏன் பொய் செய்தி கொடுத்தீர் என்று.

வித் லவ்
மார்ஷ்

srimariselvam
12-04-2007, 01:54 PM
இவ்ளோ மருந்துகளை எப்படி ஞாபகம் வைச்சுக்கறது......?

ஹோமியோபதியில் கேபி(பயோ)
அனாக்
அப்டினு 2 மாத்திரை இருக்குங்கோ