PDA

View Full Version : இதய நோயாளிகளுக்கு புதிய வரம்வெற்றி
11-03-2007, 10:35 AM
நன்றி:குமுதம்(ஹெல்த்)

உலகம் முழுக்க இருதய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. வயதானாலே ஏதோ இருதய நோய் வந்துவிடும் போல என்று நினைக்கிற அளவுக்கு இந்த பிரச்னை அதிகரித்துக் கொண்டே போகிறது. நோய் வருவது மட்டும் அல்லாமல் இந்த நோயாளிகளுடைய மிக முக்கியமான பிரச்னை மாத்திரைகளைச் சாப்பிடுவது. ஒவ்வொரு வேளைக்கும் நான்கு அல்லது ஐந்து மாத்திரை என ஒரு நாளில் ஏகப்பட்ட மாத்திரைகளைச் சாப்பிட வேண்டி இருக்கிறது. நிறைய மாத்திரைகளைச் சாப்பிடுவதாலேயே இம்மாதிரி இருதய நோயாளிகள் மனதளவில் மிகவும் சோர்ந்து போகிறார்கள். என்ன இவ்வளவு மாத்திரைகளைச் சாப்பிட வேண்டி இருக்கிறதே?! என்கிற சலிப்பும் வேதனையும் ஒவ்வொரு முறை டப்பாவைத் திறந்து ஒவ்வொரு மாத்திரையாக எடுக்கும் போதும் தோன்றுவது இயல்பு. இதனால் ஏற்படுகிற மனச் சங்கடம், கசப்பு, அழுத்தம், வருத்தம் எல்லாம் சேர்ந்து மேலும் இருதயத்தைச் சோர்வடையச் செய்யக்கூடும். இவர்களுக்கு, இப்போது ஒரு ஆறுதலான செய்தி வந்திருக்கிறது.

பாலிபில் (றிஷீறீஹ்ஜீவீறீறீ) என்ற ஒரு மாத்திரையை வடிவமைத்திருக்கிறார்கள். என்ன இது? ஒன்றுமில்லை மாத்திரைதான்.

இருதய நோயாளிகள் சாப்பிடுகிற எல்லா மாத்திரைகளையும் சேர்த்து
ஒரே மாத்திரையாக வடிவமைத்திருக்கிறார்கள்.

ஒரு மாத்திரையில் நான்கு, ஐந்து மாத்திரை இருக்கும். சாப்பிடும்போது சிரமம் தெரியாது. ஒரே ஒரு மாத்திரைதான். ஒரு வேளைக்கு என்பதில் மனசு லேசாகிவிடும். நோயாளிகளுக்கு மனதளவில் தெம்பைக் கூட்டி, நோயின். தீவிரத்திலிருந்து விடுபட இந்த நான்கும் ஒன்றில் வழி நல்ல வழியாக இருக்கிறது.

முதன் முதலில் 2003_ல் வால்ட் மற்றும் லா என்கிற இரண்டு இருதய நோய் சிகிச்சை மருத்துவர்கள் இந்த பாலிபில் என்கிற கருத்தை முன்மொழிந்தார்கள். அது பிரிட்டிஷ் மெடிகல் ஜர்னலில் வெளிவந்தது. அதன்பிறகு 2004_ல் பீட்டர் ஸ்லைட் என்கிற இருதய நோய் மருத்துவர் இதை ஒரு சரியான வடிவத்திற்குத் திருத்தி ஒரு மருத்துவர்கள் மாநாட்டில் உரையாற்றினார். அவருடைய கருத்துப்படி ஒரு பாலிபில் மாத்திரையில் ஆறு மாத்திரைகளும், வைட்டமின்களும் இருக்கும். ஒரு மாத்திரை நான்கு விதமான இருதய நோய் பிரச்னைகளைத் தீர்க்கக் கூடியதாக இருக்கும். இதனால் இருதய இரத்தக் குழாய்களில் ஏற்படுகிற அடைப்புகள் பிரச்னை மற்றும் ஸ்ட்ரோக் என்கிற திடீர் செயலிழப்பு இரண்டும் 80 சதவிகிதம் குறைக்க பயன்படும் என்கிறார்.

யாருக்குக் கொடுக்கலாம்?

55 வயதுக்கு மேல் இருக்கிறவர்களில். இவர்களுக்கு இருதய நோய்கள் வரலாம் என்று கணிக்கப்படுகிறவர்களுக்கு இந்த பாலிபில் உதவும்.

இருதய நோய் சம்மந்தமாக நடத்தப்பட்ட ஆய்வுகளில் கிட்டத் தட்ட 52 நாடுகள் இணைக்கப்பட்டிருந்தன. எல்லா நாட்டிலும் ரிஸ்க் காரணிகள் சம அளவில்தான் இருக்கின்றன. ரிஸ்க் என்று அடையாளப்படுத்தப் படுகிற மக்கள் அதிகம் இருக்கிற நாடுகளில் பாலிபில் முக்கியமாக உதவும் என்பது டாக்டர் பீட்டர் ஸ்லைட்டின் கருத்து. ஜெர்மனியில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் இருதய நோயாளிகள் நான்கு, ஐந்து மாத்திரை சாப்பிடுகிறவர்களைவிட, அவை கலந்து ஒரே மாத்திரையாக இருக்கும் பாலிபில் சாப்பிடுகிறவர்கள் விரைவாக முன்னேற்றம் அடைந்தார்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. நோயாளியும், ஒரு மாத்திரைதான் என்பதில் பதட்டம் இல்லாமல் இருக்க முடிகிறது. டாக்டருக்கு ஒரு பெரிய மருத்துவச் சீட்டில் ஒரே ஒரு மாத்திரையை எழுதுவது சுலபமாக இருந்தது. தவிர, ஒரு டாக்டர் விரும்பும் பதட்டமற்ற நோயாளியை, அவரால் இந்த பாலிபில் மூலம் கொண்டுவர முடிந்தது.

ஆறு மருந்துகளை ஒன்றாகச் சேர்த்து ஆறும் சரியான அளவில் வேலை செய்யும் என்று சொல்வதை உடனே ஏற்றுக்கொள்ள முடியாது என்று சில மருத்துவர்கள் தயக்கம் காட்டுகிறார்கள். பாலிபில் பற்றி இன்னும் சரியான ஆய்வுகள் நடத்தப்படவேண்டும் என்பது அவர்களது வாதம். ஸ்வீடனின் கரோலின்ஸ்கா பல்கலைக்கழக மருத்துவ மனையின் டாக்டர் லார்ஸ் ரைடன் பாலிபில்_ன் ஷிணீயீமீtஹ் பாதுகாப்புப் பற்றி இன்னும் விரிவான ஆய்வுகள் நடத்தப்படவேண்டும் என்று வற்புறுத்துகிறார். புகைபிடிப்பது, உடல் உழைப்பு இல்லாததால் ஏற்படுகிற இருதயப் பிரச்னைகளுக்குக்கூட பாலிபில் பக்கம் போக வேண்டுமா? இவற்றை நோயாளிக்குப் புரியவைத்து தவிர்க்கமுடியுமே? என்கிறார். இவர் தனது சமீபத்திய கட்டுரை ஒன்றிற்கு கிறீtமீக்ஷீஸீணீtவீஸ்மீ றிஷீறீஹ்ஜீவீறீறீ என்று தலைப்பு வைத்திருக்கிறார். இதில் அவர் பரிந்துரைக்கிற மாற்று பாலிபில் என்ன தெரியுமா? உடற்பயிற்சி. நீங்கள் தொடர்ந்து செய்கிற உடற்பயிற்சிதான் உங்கள் இருதயத்துக்கு நல்ல தோழன் என்கிறார். ஒரு வாரத்திற்கு குறைந்தது 3கிலோ மீட்டர் நடந்தால் கூட உங்கள் எடை கூடுவது குறைக்கப்படுகிறது என்கிறார். இது இருதயத்திற்குப் பலம்.

ஆனால், பிரச்னையில் சிக்கி இருதய நோய்களுக்காக ஒவ்வொரு வேளையும் கை நிறைய மாத்திரைகளை அள்ளவேண்டியவர்களுக்கு, மெல்லப் பறித்துச் சூடிக்கொள்கிற ஒற்றைப் பூ மாதிரி வருகிற பாலிபில் நிச்சயம் வரம்தான்.

டாக்டர்ஜி. செங்கோட்டுவேலு
இருதயநோய் சிகிச்சை நிபுணர்,
ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி.

இப்போது இரண்டு மருந்து கம்பெனிகள் பாலிபில் மாத்திரைகளை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றன. இதில் ஆஸ்பிரின், ராமிபிரில், அட்ரோவாஸ் டேட்டின் என்கிற மூன்று மாத்திரைகள் கலந்து வந்திருக்கிறது. ஆஸ்பிரின் இரத்தக்குழாய்களில் அடைப்புகள் உருவாவதைத் தடுக்கிறது. அட்ரோவாஸ்ட்டேடின் முக்கியமாக கொலஸ்டிராலைக் குறைக்க உதவுகிறது. ராமிபிரில் அடைப்புகள் உருவாவதைத் தடுத்து இருதய இரத்தக்குழாய்களின் பாதுகாப்புக்கு உதவுகிறது. கூடவே அட்ரோவாஸ்டேடின் அடைப்புகள் உடைந்து சட்டென்று ஹார்ட் அட்டாக் வருவதைத் தடுக்கிறது. பாலிபில் விற்பனைக்கு வந்து விட்டாலும், இது மிக அதிக ரிஸ்க் என்று கருதப்படுகிறவர்களுக்கும், ஏற்கெனவே இருதயநோய் முற்றிலுமாக வந்துவிட்டவர்களுக்கும் உதவக்கூடும். ஆனால் இதில் மருந்துகள் அளவு முன்பே தீர்மானிக்கப் பட்டுவிடுவதால் ஒவ்வொரு நோயாளிக்கும் ஏற்ற முறையில் ஒவ்வொரு தனி மருந்தின் அளவைத் தீர்மானிக்க முடிவதில்லை. இது பாலிபில் மருந்தின் முக்கிய பிரச்னை. தற்சமயம் பெரிதாக டாக்டர்களால் இன்னும் பயன்படுத்தப் படவில்ல.

பாதுகாப்பு, பயன், தடுப்பு மருந்தாகப் பயன்படுத்தப்படும் நபர்களின் எண்ணிக்கை என ஒவ்வொன்றும் மேலும் நிறைய ஆய்வு முடிவுகளால் நிரூபிக்கப்படும் போது, பாலிபில் தேவை அதிகரிக்கலாம்.

இருதய நோய்களைப் பொறுத்தவரை நான் சொல்கிற முக்கியத் தடுப்பு நடவடிக்கை ஒன்றே ஒன்று தான். எக்ஸர்சைஸ்!

aren
11-03-2007, 11:55 AM
நம் மன்ற மருத்துவர் இளசு அவர்கள் இதற்கு பதில் சொல்கிறார் என்று பார்க்கலாம்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சினை இருக்கும். ஆகையால் நான்கு அல்லது ஐந்து மாத்திரைகளை ஒரு மாத்திரையாக மாற்றி சாப்பிட்டால் அதில் பக்க விளைவுகள் வரும் வாய்ப்பு இருக்கிறது என்றே தோன்றுகிறது.

இன்னும் ஆராய்ச்சி தேவை என்று நினைக்கிறேன்.

நன்றி வணக்கம்
ஆரென்

மனோஜ்
22-03-2007, 08:32 AM
உடற்பயிற்சி எல்லா வித நோயாளிகளுக்கும் அருமருந்துதான்

poo
22-03-2007, 09:07 AM
பார்க்கலாம்.. வரமா சாபமாவென?!..

செய்தியை பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே.

vijayan_t
20-04-2007, 06:38 AM
பிறப்பிலேயமைந்த குறையொன்றின் காரணமாக இருதயத்தில் உள்ள துளைமேவும் பொருட்டு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள நேர்ந்தது, இரண்டு மாதங்களாக நான் பட்ட சிரமங்கள் சொல்லிமாளாது, அப்பொழுது டாக்டர் புகை பிடிக்கும் பழக்கம் எப்படி இருதயத்தை பாதிக்கின்றது என்று விளக்கினார், அதை பகிர விருப்பம்.

நமது உடம்பில் உள்ள ரத்தங்களில் ஒருவகையான பாக்டீரியாக்கள் உள்ளன அவைகள் ரத்தத்தில் உள்ள கொழுப்பை உண்டு உயிர்வாழ்கின்றன, இதனால் ரத்தத்தில் கொழுப்பின் அளவானது கட்டுப்படுத்தப்படுகின்றன. கொழுப்பு அதிக அளவிலிருந்தால், ஒன்று அல்லது மேற்பட்ட இடங்களில் படிந்து சீரான ரத்த ஓட்டத்தினை தடைசெய்து, இருதயத்தின் செயல்பாட்டை பாதிக்கின்றன. இப்படியான நன்மைகளை செய்யும் அந்த பாக்டீரியாவின் விரோதிதான், சிகரெட்டில் உள்ள நிக்கோடின் எனும் நச்சு. நிகோட்டினானது அந்த நன்மைபயக்கும் பாக்டீரியாக்களை கொன்று விடுகின்றன, விளைவு ரத்தத்தில் கொழுப்பு அதிகம் சேர்கின்றது.

இதைக்கேட்ட பிறகு, எனது 12 வருட புகைப்பழக்கத்தினை நிறுத்திவிட்டேன். எவ்வளவோ முயன்றும் இப்பழக்கத்தினை விடமுடியாமலிருந்த நான் இதை விட்டது தெய்வச்செயல்தான். ஒருவேளை மீண்டும் 2 மாதங்கள் படுக்கையிலிருக்க நேரிடுமோ எனும் பயம் கூட காரணமாக இருக்கலாம். எனவே புகைபழக்கமுள்ள நன்பர்கள், இதை உடனே விட்டுவிடுங்கள்.

இளசு
20-04-2007, 10:08 PM
நம் இளசு அவர்கள் இதற்கு பதில் சொல்கிறார் என்று பார்க்கலாம்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சினை இருக்கும். ஆகையால் நான்கு அல்லது ஐந்து மாத்திரைகளை ஒரு மாத்திரையாக மாற்றி சாப்பிட்டால் அதில் பக்க விளைவுகள் வரும் வாய்ப்பு இருக்கிறது என்றே தோன்றுகிறது.

இன்னும் ஆராய்ச்சி தேவை என்று நினைக்கிறேன்.

நன்றி வணக்கம்
ஆரென்


அன்பின் ஆரென்

தாமதமாய் இதைக் கண்ணுற்றதற்கு மன்னிக்கவும்..

கொழுப்பைக் ( இரத்த லோ -டென்ஸிட்டி கொலஸ்ட்ராலைக்) குறைக்கும் ஸ்டாட்டின் வகை மாத்திரைகள்
இரத்த உறைவைக் கட்டுப்படுத்தும் குறைந்த டோஸ் ஆஸ்பிரின்,
(மற்றும் க்ளோபிடோக்ரெல்)
இவை மருத்துவர் பரிந்துரையில் தனித்தனியாய் எடுத்துக்கொள்வது
நல்லது... ஸ்டாட்டின் டோஸ் போதவில்லை என்றால் அதை மட்டும் கூட்ட இது வசதி.. பர்ஸூக்கும் உடலுக்கும் கூடுதல் பாதுகாப்பு!

பாலிபில்லில் (Poly-pill) ' ஒரே பெரிய' மாத்திரை விழுங்கும் வசதி நமக்கு!
கூட்டு மாத்திரையை வைத்து மார்க்கெட்டை தனியாளாய் சில வருடம் கோலோச்சி பில்லியன்கள் கூட்ட கம்பெனிகளுக்கு வசதி!


எனது 12 வருட புகைப்பழக்கத்தினை நிறுத்திவிட்டேன். .

அன்பு விஜயன்,
என் மனமார்ந்த வாழ்த்துகள்!

புகை பிடிப்பவர்கள் தாம் விரும்பியவர்களுக்கு கொடுக்கக்கூடிய
மிகப்பெரிய பரிசு இதுதான்..

சிகரெட்டில் நிகோட்டினை மீறி தார், கார்பன் மோனாக்ஸைடு போல
பல நூறு நச்சுகள் உண்டு..

இவை கெட்ட கொலஸ்ட்ராலைக் கூட்டி தமனிகளை அடைக்க
இந்த நச்சுகளே போதும்... இடையில் பாக்டிரீயாக்களின் பணி இல்லை..
(அது உங்கள் மருத்துவர் தந்த தவறான இடைசெருகல்).

தினமும் அரை மணி நேரம் வேகமாய் நடந்தால் நல்ல கொலஸ்ட்ரால் கூடும்.. கெட்ட கொலஸ்ட்ரால் குறையும்..

சிகரெட்டை விட்டால், நடை வேகம் கூடும்!

ஓவியா
22-04-2007, 06:22 PM
அருமையான செய்தி, நன்றி:குமுதம்(ஹெல்த்)
நன்றி மொக்க அண்ணா.

புகை பிடிப்பதை கை விட்டதற்க்கு விஜயன் அண்ணாக்கு ஒரு பாராட்டு.

அறிய தாகவல் அளித்த டாக்டர் இளசுக்கு நன்றி.


ஒரு கேள்வி டாக்டர், புகை பிடிப்பதை நிருத்திய பின், அதுவரை ரத்ததில் கலந்த நிகோட்டினை சுத்தப்படுத்த குறந்தது எத்தனை வருடங்கள் வேண்டும்???

உடல் உணமுற்ற குழந்தைகள் பிறக்க இந்த புகைபழக்கமும் ஒரு காரணமா?