PDA

View Full Version : எந்த மின்னஞ்சல் சேவை சிறந்தது?leomohan
11-03-2007, 08:19 AM
நாம் பல மின்னஞ்சல் சேவைகளை பயன்படுத்துகிறோம். இதில் எந்த மின்னஞ்சல் சேவை சிறந்தது, வசதியானது, வேகமாக தரவிறக்கம் ஆகக்கூடியது. மொத்ததில் உங்களுக்கு பிடித்த சேவை எது? வாருங்கள் வாக்களித்து விவாதிக்கலாம்.

ஷீ-நிசி
11-03-2007, 08:35 AM
google சிறந்தது.... காரணம் அது 2 GB.. நிறைய வசதிகள் புதுப்பிக்கபட்டுக்கொண்டே இருக்கிறது..

வெற்றி
11-03-2007, 09:58 AM
முன்பு வசதி குறைவாக இருந்தாலும் அதிக இடத்துக்காக (2 ஜீ.பி) ஜீ,மெயிலை பிடித்துப்போட்டேன்..
ஆனால் இப்போது வசதிகள் அதிகப்படுத்தப்பட்டு இடமும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது...(2.7 ஜீ.பிக்கு மேல்)
சந்தேகமில்லாமல் கூகுலின் ஜீ மெயில் தான் சிறந்தது

மன்மதன்
11-03-2007, 11:01 AM
ஜீமெயில் நன்றாக இருக்கிறது. நான் உபயோகித்ததில் பிடித்தது ஜிமெயில்.

சேரன்கயல்
11-03-2007, 11:03 AM
என் தேர்வும், ஜி மெயில்...

ஜீவா
11-03-2007, 11:06 AM
சந்தேகமே வேண்டாம்.. GMAIL தான்..

aren
11-03-2007, 11:49 AM
ஜிமெயில் வந்த பிறகு ஹாட்மெயிலும், யாஹீவும் காணாமல் போய்விட்டன. இப்பொழுது அனைவரும் உபயோகிப்பது ஜிமெயில் என்றே நினைக்கிறேன். காரணம் அதிகமான கோப்புகளை ஜிமெயில் மூலம் அனுப்ப வசதியாக இருப்பதால் என்று நினைக்கிறேன்.

நன்றி வணக்கம்
ஆரென்

saguni
11-03-2007, 06:05 PM
திறக்க ரொம்ப நேரம் ஆவதால் எனக்கென்னவே G-மெயில் பிடிப்பதில்லை. யாஹவின் பழைய பிரதிதான் சிறந்ததாக எண்ணுகிறேன்

மனோஜ்
11-03-2007, 07:13 PM
யாமும் யாஹூ தான் மற்றதைவிட இது எனக்கு பழகி போச்சுங்க...அதான்

praveen
12-03-2007, 03:17 AM
எவ்வளவு புதிய சேவைகள் வந்தாலும், நான் பல வருடங்களாக உபயோகித்து வரும் ஹாட்மெயில் தான் எனக்கு சிறந்ததாக படுகிறது.

மன்மதன்
12-03-2007, 05:44 AM
என்னப்பா இது , ஜிமெயில் ஓவியா மாதிரி ஓட்டு வாங்கி குவிச்சிக்கிட்டிருக்கு. மத்ததை கண்டுக்கவே மாட்டேங்குறாங்களே :D

அமரன்
12-03-2007, 10:54 AM
என்னப்பா இது , ஜிமெயில் ஓவியா மாதிரி ஓட்டு வாங்கி குவிச்சிக்கிட்டிருக்கு. மத்ததை கண்டுக்கவே மாட்டேங்குறாங்களே :D


மன்மதன் சார். ஓவியாவும் சிறந்தவர். அவரைப்போல ஜி.மெயிலும் சிறந்தது. சிறந்தவர்கள் ஓட்டு குறைவாக வாங்க இது என்ன வழமையான அரசியம் ஓட்டெடுப்பா? நம்ம மன்றத்து ஓட்டெடுப்பு.

karikaalan
12-03-2007, 11:05 AM
ப்ராட்பாண்ட் இருந்தால் ஜீமெயில் இயங்குகிறது. Datacard-ல் லேசில் இறக்க முடிவதில்லை.

பயன்படுத்துவது எதற்காக? உடனடியாகப் பார்க்க வேண்டும்; செய்தி அனுப்ப வேண்டும். இவைகள் Datacard-ல் முடிகிறது -- யாஹ, ஹாட்மெயில், ரீடிப்மெயில், இன்னபிற.

எனது வாக்கு ஜீமெயிலுக்கு இல்லை.

===கரிகாலன்

pradeepkt
12-03-2007, 12:35 PM
நான் ரொம்ப நாள் யாஹூ விசுவாசி
ஆனாலும் ஜிமெயிலுக்குக் குத்திட்டேன்.

ஓவியா
13-03-2007, 12:07 AM
என்னப்பா இது , ஜிமெயில் ஓவியா மாதிரி ஓட்டு வாங்கி குவிச்சிக்கிட்டிருக்கு. மத்ததை கண்டுக்கவே மாட்டேங்குறாங்களே :D

குவலிட்டி மாமு :D :D


மன்மதன் சார். ஓவியாவும் சிறந்தவர். அவரைப்போல ஜி.மெயிலும் சிறந்தது. சிறந்தவர்கள் ஓட்டு குறைவாக வாங்க இது என்ன வழமையான அரசியம் ஓட்டெடுப்பா? நம்ம மன்றத்து ஓட்டெடுப்பு.

அப்பாடி ஜில்லுனு ஒரு அய்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ். ரொம்ப நன்றிங்கோய்.......:D

அப்படியெல்லாம் ஒன்றுமில்லை நண்பரே. ஏதோ அனைவருடன் ஒற்று போகிறேன். சுயனலவாதியல்ல. நான் சமாதான விரும்பி. :) அன்பு பாசத்திற்க்கு அடிமை. :)

நமது மன்றதின் மேல் தங்கள் கொண்டுல்ல மதிப்புக்கு மிக்க நன்றி. நல்லதே செய்து நல்லதை காப்போம். தமிழ் தொண்டு பெருக பாடு படுவோம். :)

ஓவியா
13-03-2007, 12:11 AM
நான் ரொம்ப நாள் யாஹூ விசுவாசி
ஆனாலும் ஜிமெயிலுக்குக் குத்திட்டேன்.

இங்கேயும் அதேதான்.....இல்ல இல்ல என் ரூட்ட காபி அடிச்சேலா???

இப்ப காப்பி எப்படி போடறதுனு ஒரு பதிவு வறப்போகுதமே...:D

யாஹுவும் அருமைதான்.

ஜீமெய்ல் அதிக வசதி. என் நல்ல ஓட்டு ஜிமெய்லுக்கே

ஓவியா
13-03-2007, 12:16 AM
நாம் பல மின்னஞ்சல் சேவைகளை பயன்படுத்துகிறோம். இதில் எந்த மின்னஞ்சல் சேவை சிறந்தது, வசதியானது, வேகமாக தரவிறக்கம் ஆகக்கூடியது. மொத்ததில் உங்களுக்கு பிடித்த சேவை எது? வாருங்கள் வாக்களித்து விவாதிக்கலாம்.

அப்படியே உங்க பதிவையும் போட்ட சந்தோஷப் படுவோம்.

இந்த பொண்ணு என்னமோ கங்கனம் கட்டிகிட்டு நம்மளையே வலச்சு வலச்சு கேக்குதேனு அழாதீங்க.

உங்க ஆதங்கதயும் கேக்கனும்'னு ஒரு ஆசைதான். அதான்.....

சிரித்து கொண்டே ஒரு பதிவ போட்டுட்டுப் போங்க சார். :)

தமிழ்பித்தன்
13-03-2007, 01:30 AM
எனக்கு பிடித்தது யாகூ காரணம் பயன் படுத்த எளது மற்றும் பைல் தரைவிறக்க வேகம் கூட ஆனாலும் தமிழ் பயன் படுத்த சிறந்தது ஜிமெயில் ஆகவே எனது வேட்டு ஜிமெயிலுக்கே

ஆதவா
13-03-2007, 03:21 AM
ஏற்கனவே ஜிமயிலுக்கு ஓட்டு போட்டுவிட்டேன்.. இதுநாள்வரை யாஹீ மட்டுமே உபயோகித்து வந்தேன். யாஹூவில் எனக்கு கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட முகவரிகள் இருக்கின்றன.. அதிர்ச்சியாக இருக்கிறதா? சும்மா சாதனைக்கு.. என் முகவரி shanrah2002 எனக்கு ஒரு ஆசை.. shanrah1900 லிருந்து shanrah2000 வரைக்கும் கணக்கு ஏற்படுத்தவேண்டுமென்று.. எல்லாம் முடிந்துவிட்டது.இதுபோக தளங்களுக்கு ஏற்ப ஒவ்வொரு கணக்கு ஏற்படுத்தினேன். ஏற்படுத்தியதோடு சரி/ அதன்பிந்தான் தெரிந்தது. உபயோகத்தில் இல்லையென்றால் எடுத்துவிடுவார்கள் என்று/
ஆனாலும் முதன்முதலாக ஏற்படுத்திய கணக்க்கைத் தான் இன்னமும் உபயோகிக்கிறேன்.

யாஹூ விலிருந்து ஜிமயிலுக்கு மாற அழைப்பிதழ்கள் நிறைய வந்தன. ஆனால் நீண்ட நாட்கள் மறுத்துவிட்டேன். எல்லாவற்றிர்கும் யாஹூவே கொடுத்து இருந்தமையாலும் யாஹூ சர்வீஸ் பல (இசை, குழுமம் போன்றவை) உபயோகித்துக்கொண்டிருந்தமையாலும் மறுத்துவந்தாலும் போன வருடம்தான் உபயோகித்துப் பார்க்கலாம் என்ற எண்ணமே வந்தது.

உபயோகத்தில் என்னை பொறுத்தவரை யாஹூவை விட ஜிமயிலே சிறந்தது. இதற்கு பல காரணங்கள் உண்டு. எனக்கு மயில் விரித்ததும் உள்பெட்டி செய்திகள் உடனே படிக்கவேண்டுமென்ற ஆவல் இருக்கும். அதனை பூர்த்தி செய்கிறது ஜிமயில். உனிகோடு சப்போர்ட், நிறைய இடம், குறைவான விளம்பரங்கள். சீக்கிரமே திறந்திடும் நுட்பம். உடனடி அப்டேட், மயிலிலேயே அரட்டை வசதி., இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

நேற்றுகூட யாஹூ திறந்தால் நான்கைந்து பக்கங்கள் சென்று விளம்பரங்கள் படித்து பின் இன்பாக்ஸ் செல்ல வேண்டி இருக்கிறது.
யாஹூ மெல்ல அதன் சாம்ராஜ்யத்தை இழந்துவருகிறது. உடனே விழித்து எழுந்தால்தான் உண்டு.

ஒரு சின்ன குறிப்பு : ஜிமயில் பிராட்பேண்டுக்கு மட்டும் திறக்கும் என்று ஏன் சொல்கிறார்கள் என்று தெரியவில்லை.... என் செல்ஃபோனில் மிக அருமையாக ஜிமயில் வேலைசெய்கிறது யாஹூவைவிட மிக மிக வேகமாக. செல் மூலம் கணிணி இணைத்தாலும் அங்கேயும் வேகம் காட்டுகிறது ஜிமயில்.. ஜிமயிலை இதுவரை பிராட்பேண்ட் 512, 256 மற்றும் ISDN 128 மற்றும் சாதாரண 64 kbps வேகங்களில் உபயோகித்திருக்கிறேன்... எல்லாவற்றிலும் வேகம்........... யாஹூவைவிட

pradeepkt
13-03-2007, 05:33 AM
இங்கேயும் அதேதான்.....இல்ல இல்ல என் ரூட்ட காபி அடிச்சேலா???

இப்ப காப்பி எப்படி போடறதுனு ஒரு பதிவு வறப்போகுதமே...:D

யாஹுவும் அருமைதான்.

ஜீமெய்ல் அதிக வசதி. என் நல்ல ஓட்டு ஜிமெய்லுக்கே
காப்பி பதிவு போட உங்களுக்குச் சொல்லியா தரணும்???
நீங்க ஏன் இந்த முயற்சி எடுக்கக் கூடாது??? :D

மன்மதன்
13-03-2007, 05:56 AM
மன்மதன் சார். ஓவியாவும் சிறந்தவர். அவரைப்போல ஜி.மெயிலும் சிறந்தது. சிறந்தவர்கள் ஓட்டு குறைவாக வாங்க இது என்ன வழமையான அரசியம் ஓட்டெடுப்பா? நம்ம மன்றத்து ஓட்டெடுப்பு.

நெற்றிக்கண்ணை இங்கே ஏன் திறக்கிறீங்க :rolleyes: :rolleyes: வழமையான அரசியம்னா ஓவியா அரசின்னு சொல்ல வர்ரீங்களா?? :D :D

mukilan
13-03-2007, 06:04 AM
எனக்கும் ஜிமெயிலார்தான் தூது போகும் மயிலார்! ஏற்கனவே அலசி ஆராய்ஞ்சிட்டீங்க. இன்னொரு காரணமும் இருக்கு. பிரதீப் போல ஆட்கள் எல்லாம் "வேலைதான் அப்பப்ப லாகவுட் பண்ண மறந்திடுவேன், மன்னிக்க" அப்படின்னு ஸ்டேடஸ் மெசேஜ் வச்சிருப்பாங்களே அதுக்குத்தான்.

pradeepkt
13-03-2007, 10:11 AM
எனக்கும் ஜிமெயிலார்தான் தூது போகும் மயிலார்! ஏற்கனவே அலசி ஆராய்ஞ்சிட்டீங்க. இன்னொரு காரணமும் இருக்கு. பிரதீப் போல ஆட்கள் எல்லாம் "வேலைதான் அப்பப்ப லாகவுட் பண்ண மறந்திடுவேன், மன்னிக்க" அப்படின்னு ஸ்டேடஸ் மெசேஜ் வச்சிருப்பாங்களே அதுக்குத்தான்.ஏய்யா இதுக்கும் நாந்தானா அகப்பட்டேன்??? :angry: :angry:

ஓவியா
13-03-2007, 10:54 AM
காப்பி பதிவு போட உங்களுக்குச் சொல்லியா தரணும்???
நீங்க ஏன் இந்த முயற்சி எடுக்கக் கூடாது??? :D

நீங்கதான் குரு,
குருவை மிஞ்சிய சிஷ்யை ஆனா நல்லா இருக்கதே...;)நெற்றிக்கண்ணை இங்கே ஏன் திறக்கிறீங்க :rolleyes: :rolleyes: வழமையான அரசியம்னா ஓவியா அரசின்னு சொல்ல வர்ரீங்களா?? :D :D

என்ன பார்க்க ராதிகா மேடம் போலாவா இருக்கு...ஓ இது வேற அரசியா :)


எனக்கும் ஜிமெயிலார்தான் தூது போகும் மயிலார்! ஏற்கனவே அலசி ஆராய்ஞ்சிட்டீங்க. இன்னொரு காரணமும் இருக்கு. பிரதீப் போல ஆட்கள் எல்லாம் "வேலைதான் அப்பப்ப லாகவுட் பண்ண மறந்திடுவேன், மன்னிக்க" அப்படின்னு ஸ்டேடஸ் மெசேஜ் வச்சிருப்பாங்களே அதுக்குத்தான்.

அட அவருதான் இப்ப ரோம்ப பீசியாம்.......

மோபைலா மோபைலானு பாட்டு பாடுறாராம்....:)

pradeepkt
13-03-2007, 11:19 AM
ஓவியா,
அதான் குருவே சொல்றேனே... நீங்க என்னை மிஞ்சிட்டீங்க... சீக்கிரம் காப்பி போடும் பதிவைப் போடும்படி தாழ்மையுடன் மிரட்டிக் கொள்கிறேன்.


அட அவருதான் இப்ப ரோம்ப பீசியாம்.......
ஆமா, என்னை பீசு பீசா ஆக்காம விட மாட்டீங்களே... ஆனா இந்த சலசலப்புக்கெல்லாம் நாங்க அஞ்ச மாட்டமக்கோய்!!!

அன்புரசிகன்
13-03-2007, 11:38 AM
என்னதான் சொன்னாலும் folder ஐ create பண்ணி அதனுள் மின்னஞ்சல்களை சேமிக்கும் வசதி gmail இல் இல்லையே.. எல்லா மின்னஞ்கல்களும் inbox ல் அல்லவா தேங்கி நிற்கிநது. filter வசதி gmail ல் உள்ளதா? (ஒருவேளை இவை இருந்தால் கூறிவிடுங்கள்) எனது ஓட்டு hotmail க்கு. ஆனால் gmail ல் பிடித்தது அரட்டை அடித்தவற்றை சேமித்து வைத்துக்கொள்ளலாம். காதலர்களுக்கு மிக உகந்தது. (பின்னால பார்த்து வருத்தப்பட)

ராசுக்குட்டி
13-03-2007, 01:39 PM
என்னதான் சொன்னாலும் folder ஐ create பண்ணி அதனுள் மின்னஞ்சல்களை சேமிக்கும் வசதி gmail இல் இல்லையே.. எல்லா மின்னஞ்கல்களும் inbox ல் அல்லவா தேங்கி நிற்கிநது. filter வசதி gmail ல் உள்ளதா? (ஒருவேளை இவை இருந்தால் கூறிவிடுங்கள்) எனது ஓட்டு hotmail க்கு. ஆனால் gmail ல் பிடித்தது அரட்டை அடித்தவற்றை சேமித்து வைத்துக்கொள்ளலாம். காதலர்களுக்கு மிக உகந்தது. (பின்னால பார்த்து வருத்தப்பட)

என்னன்னே இப்படி சாச்சுட்டீங்க , செட்டிங்ஸ்குள்ள filter இருக்கே அருமையா .

leomohan
13-03-2007, 08:24 PM
அனைத்து மின்னஞ்சல் சேவைகளிலும் ஒரு கணக்கை துவக்கி வைத்திருக்கிறேன்.

அனைத்து மின்னஞ்சல் வசதிகளையும் Outlook Express மூலமே தரவிறக்கம் செய்கறேன்.

Hotmail கணக்குகளை Outlook Expressல் நேரிடயாகவும், Gmail நேரடியாகவும், Yahoo வை Yahoo POPs எனும் மென்பொருள் மூலமாகவும் இறக்குகிறேன்.

அதனால் வலைதளம் மூலம் மின்னஞ்சல் பார்ப்பது குறைவே. அதனால் அதன் வேகபிரச்சனைகளில் மாட்டியது இல்லை.

ஜிமெயிலுக்கு ஓட்டு இட்டதன் காரணம் என்னுடைய Sony Ericsson P900 மூலம் எளிதாக தரவிறக்கம் செய்ய ஒரு மென்பொருள் கொடுத்திருக்கிறார்கள்.

இடம் எத்தனை கொடுத்தாலும் அதை முற்றும் பயன்படுத்துகிறோமோ என்றால் இல்லை. அதனால் விரைந்து தரவிறக்கம் செய்யக்கூடியது மேலும் தேடுவதில் வசதியாக இருப்பது இவை மட்டும் பார்க்கவேண்டும்.

நன்றி

அன்புரசிகன்
14-03-2007, 10:51 AM
இடம் எத்தனை கொடுத்தாலும் அதை முற்றும் பயன்படுத்துகிறோமோ என்றால் இல்லை. அதனால் விரைந்து தரவிறக்கம் செய்யக்கூடியது மேலும் தேடுவதில் வசதியாக இருப்பது இவை மட்டும் பார்க்கவேண்டும்.

நன்றி

இது உண்மை. தவிர இட வசதிகளை மட்டும் கருதுவதாயின் தற்சமயம் பல மின்னஞ்சல் சேவைகள் உண்டு. உ+ம்:

lycos: இதில் 3GB inbox உம் unlimited attachments உம் உண்டு. 8MB இற்கு அதிகமாக அனுப்பினால் அது ஒரு link ஐ அனுப்பும். அதை 1 மாத காலத்தினினுள் தரவிரக்கம் செய்தல் வேண்டும்.

30gigs: இதில் 30GB inbox இடவசதி உண்டு.

ஆகவே இடவசதிகளை மாத்திரம் கொண:டு முடிவெடுத்தல் சரியல்ல. நமது பாவனைக்கேற்றால் போல் தெரிவு செய்ய வேண்டும். உ+ம் இலங்கையில் dial up இல் இணையம் பார்ப்பவராயின் gmail நீண்ட நேரம் எடுக்கும். (loading என்று காட்டிக்கொண்டிருக்கும்) yahoo விரைவில் வந்துவிடும்.

நான் hotmail முதலில் பாவித்ததால் இப்போதும் வைத்திருக்கிறேன். அது நனகு பரீட்சயம் ஆகிவிட்டது.

பிகு: முதலில் 30gigs ல் 3GB இடவசதி என தவறாக கூறிவிட்டேன் . உண்மையில் 30GB இடவசதி உண்டு. தவறுக்கு வருந்துகிறேன். மன்னிக்கவும்.

அன்புரசிகன்
14-03-2007, 10:53 AM
என்னன்னே இப்படி சாச்சுட்டீங்க , செட்டிங்ஸ்குள்ள filter இருக்கே அருமையா .

இருந்தும் எல்லாமே inbox ல்தானே வந்து நிற்கிறது. folder உருவாக்க முடியுமாயின் சொல்லவும்.

அறிஞர்
14-03-2007, 12:54 PM
ஆரம்பம் ஹாட் மெயில், பின் யாகூ, ரெட்டிப் இன்னும் பல..

இப்பொழுது ஜிமெயில்..

ஜிமெயில் நன்றாக உள்ளது.. இன்னும் சில வசதிகள் செய்தால் நன்றாக இருக்கும்.

அன்புரசிகன் கொடுத்த தகவல்கள் அருமை..

அமரன்
14-03-2007, 04:24 PM
அன்பு ரசிகனின் தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது.

ஜெயாஸ்தா
19-03-2007, 01:54 PM
அது என்னமோ என்ன மாயமோ தெரியவில்லை...... நமக்கு யாகூவை விட வேறு எதுவும் வசதியாகயில்லை...!

சூரியன்
20-06-2007, 10:18 AM
யாகூ மெயிலில் தமிழில் அனுப்பும் வசதி கிடையாது ஆனால் ஜீ மெயிலில் அனைத்து புதிய வசதிகளும் உள்ளன அதனால் பெரும்பாலானோர் ஜீ மெயிலை பயன்படுத்துகின்றனர்

அக்னி
20-06-2007, 04:01 PM
gmail சிறப்பாக உள்ளது.

ஆதவா 0 - 2000 வரை yahoo வில் முகவரி திறக்க எண்ணாமல் விட்டதற்கு நன்றிகள்...

greatsenthil
21-06-2007, 07:17 AM
எத்தனை இமெயில் சேவையளிக்கும் நிறுவனங்கள் இருந்தாலும் எனக்கு என்னவோ ஜிமெயில் தான் பிடித்திருக்கிறது. நிறைய இலவசமான சேவைகளையும் அளித்துக் கொண்டுள்ளது. மேலும், ஜிமெயிலில் அக்கவுண்ட் வைத்திருந்தால் நிறைய இணையத்தளத்தில் பயன்படுத்தலாம் போல் உள்ளது.

அன்புரசிகன்
21-06-2007, 07:53 AM
yahoo msn போன்றவற்றிலும் இவ்வாறான வசதிகள் பல உண்டு. அவர்களின் முகப்புப்பக்கங்களிற்கு சென்றுபார்த்தால் புரியும். அவர்கள் அனைத்தையும் ஒரே குடையின் கீழ் தருகின்றனர். (அதாவது sub domine name ல்) ஆனால் google ஆனது வித்தியாசமான இணையத்தளப்பெயரில் தருகிறது. உதாரணம் google.com தேடலுக்கு gmail.com மின்னஞ்சல் சேவைக்கு orkut.com ஒருவகை மின் சமூகத்திற்கு என வெவ்வேறு பெயர்களில் தருகிறார்கள் என நினைக்கிறேன்.

ஆனாலும் சில விஷேட வேவைகள் gmail ல் உண்டு. உதாரணமாக நாம் அரட்டை அடிக்கும் வரிகளானது மின்னஞ்சலில் சேமிக்கப்பட்டிருக்கும். ஆனாலும் இந்த வசதி இப்போது yahoo இலும் வந்துவிட்டது. அதாவது அவர்களின் server ல் உள்ள messenger ஐ பயன்படுத்தவேண்டும். பதிவிறக்கி பயன்படுத்தும் messenger ல் அந்த வசதி இன்னமும் வரவில்லை. ஆனாலும் ஒரே அரட்டை வரிகள் சேமித்துவைக்கலாம். இன்னொரு கணணியில் சென்றோ அல்லது கணணியை format செய்தாலோ அந்த அரட்டை வரிகளை பெறமுடியாது.

தற்சதயம் yahoo மின்னஞ்சல் சேவையில் இடவசதியின் வரையறையை நீக்கியுள்ளனர்.

பார்ப்போம். மாற்றங்கள் மாற்றமில்லாதது. வரும் யுகத்திற்காய் காத்திருப்போம். புது புது அதிசையங்கள் காத்திருக்கிறது என்பது வியப்பிற்குரியதல்ல.

சத்ரியன்
21-06-2007, 10:11 AM
யாகூ அஞ்சல் சிறந்தது

rajaji
07-10-2007, 01:11 PM
தற்போதைக்கு யாகூதான் சிறப்பாகப்படுகிறது....
காரணம் வரையறையற்ற இடவசதி....

ஹாட்மெயில், ஜிமெயில், யாகூ மூன்றையும் பயன்படுத்தியதில் யாகூதான் பிடித்துள்ளது....

மயூ
08-10-2007, 12:21 PM
எனக்குப் படித்தது ஜிமெயில் காரணம் அவர்கள் தரும் புதுமையான வசதிகள்... பல வற்றை யாகூ ஜிமெயிலில் இருந்தே காப்பி அடித்தார்கள்... நான் ஜிமெயிலை சுமார் 3 வருடங்கள் பாவிக்கின்றேன் ஒருநாள் கூடச் சலித்தது கிடையாது... ஆனால் யாகூவில்... அப்பப்பா...

போல்டர் வசதி ஜிமெயிலில் இல்லை ஆனால் அதற்காக்த்தான் லேபிள் வசதி உள்ளது... இதுவும் லேபிள் போலச் செயற்படுமே... பில்டர் மூலம் நீங்கள் குறிப்பிட்ட நபரிடம் இருந்துவரும் மெயில்களுக்கு ஒரு லேபிள் போடலாம்.... அவரிடம் இருந்து வரும் மெயில்களை இலகுவாக அறிய இந்த வசதி பயன்படும்!!!!!!!

ஜிமெயிலில் ஒரு மனத்தாங்கல் உள்ளது அதாவது.. தமிழ் இடைமுகம் வழங்காமல் பின்னடிப்பது!!!! :(

தமிழ் இடைமுகத்துடன் இலங்கை அரசு ஒரு மின்னஞ்சல் சேவை தருகின்றது... பார்க்குக...
http://www.esrilanka.lk

ஆதவா
08-10-2007, 12:28 PM
gmail சிறப்பாக உள்ளது.

ஆதவா 0 - 2000 வரை yahoo வில் முகவரி திறக்க எண்ணாமல் விட்டதற்கு நன்றிகள்...


பழசைக் கிளறாதீங்கப்பூ

க.கமலக்கண்ணன்
08-10-2007, 01:37 PM
என்னுடைய ஓட்டு ஜிமெயிலுக்கு தான்

எப்போதும் வேகமாக இயங்குவது

எத்தனையோ புதுபுது வசதிகளை அறிமுகப்படுத்துவது

எல்லோரும் பயன்படுத்தி பாருங்கள்...

ஓவியன்
26-04-2015, 10:51 AM
இந்த திரியில் முன்பு பதிவிட்டவர்கள், இப்போதும் நீங்கள் முன்பு கூறிய கருத்தில்தானா இருக்கின்றீர்கள்..??

நான் ஜி-மெய்லிருந்து ஐ-குளோவுட்டுக்கும் அவுட்லுக்குக்கும் மாறிவிட்டேன், மாற்றத்துக்கான மிக முக்கிய காரணம், ஸ்பாம், ஸ்பாம் ஸ்பாம் மெயில்கள்..!!

aren
27-04-2015, 09:39 AM
இன்னும் ஜீ மெயில் அக்கெளண்ட் உயிருடன் இருந்தாலும் அதைச் சென்று பார்ப்பதே இப்போது அரிதாகிவிட்டது. காரணம் பல விஷயங்கள் இப்போது வாட்ஸப் மூலமாக நமக்கு வந்துவிடுவதனால் இருக்குமோ என்னவோ?

ஓவியன்
28-04-2015, 10:55 AM
அதுவும் ஒரு காரணமே ஆரென் அண்ணா, இப்போதெல்லாம் பல வசதியுடன் இருக்கும் மெயில் சேவையிலும் இலகுவாக இருக்கும் (உதாரணம் ஐ கிளவுட்) மெயில் சேவைகளே எனக்கு போதுமானதாக மற்றும் தேவையானதாக இருக்கின்றது.

அமரன்
28-04-2015, 12:42 PM
ஐ குளுட் எல்லாருக்கும் கிடைக்குமா பாஸ்.

ஓவியன்
28-04-2015, 01:03 PM
முன்பு கிடைக்காது, ஆனா இப்போது கிடைக்கும் பாஸ், ட்ரை பண்ணிப் பாருங்க.

அமரன்
28-04-2015, 02:27 PM
எங்கிட்ட ஏற்கனவே இருக்கு