PDA

View Full Version : உரிமையுடன் வம்பிழு - பாகம் 3



lenram80
11-03-2007, 12:06 AM
உரிமையுடன் வம்பிழு - பாகம் 3
=======================
என்னங்க!
நம்ம வீட்டு செடியிலே பூத்த பூ
மட்டும் வாடவே மாட்டேங்குது?

எப்படிடி வாடும்?
உன் மூச்சுக் காற்றில் பூத்த பூக்கள் அவை!
உன் வாசம் கண்டு மலர்ந்த மலர்கள் அவை!

கொன்ட்றுவேன்! சும்மா இருடா!

இப்போது தான் நம்புகிறேன்!

என்னத்தை நம்புரே!

ஒரு தேவதையால் தான், நான் வதைப் படபோகிறேன்
என்று ஒரு கிளி ஜோசியக்காரன் சொன்னதை!!

அய்யோ! இவன்கிட்டே இருந்து என்னைக் காப்பாத்துங்களேன்!

அடிப்பாவி! நான் கேக்க வேண்டிய கேள்வியை நீ கேக்குறியே!
இது நியாயமா? நீ தான்டி பிசாசு!

போடா! நீதான்டா இந்த பிசாசை பிடிச்ச பேய்!

ஓ! இப்போது தான் புரிகிறது!
பக்கத்து வீட்டு குழந்தை நம்மை பார்த்ததும்
அன்று ஏன் அலறியது என்று!
பேயையும் பிசாசையும் ஒன்றாகப் பார்த்தால்
அலறாதா பின்னே?

இப்போது சிரித்தாளே என்னவள்!
இதயத்தை கொஞ்சம் உரித்தாளே அன்னவள்!
------------------------------
என்னங்க!
சர்க்கரை தீர்ந்துபோச்சு!
காஃபியிலே எப்படி இனிப்பு போடுறதுன்னு தெரியலெ?

அதுனாலென்னடி!
காஃபி கப்பில் உன் இதழ் பதித்து
ஒரு சிப் குடித்துவிட்டு கொடு!
தனியாத இனிப்பு தானாக வரும்!

(குடித்து விட்டு)

அய்யோ! உண்மையிலேயே இனிக்குதுடி!
நீ ஒன்று செய்யலாம்!
கடல் நீரை குடித்து விட்டு
மீண்டும் கடலுக்குள் துப்பு!
எத்தனை நாள் தான் கடல் தண்ணீர்
உப்பாகவே இருப்பது?

அய்யோ! திருந்தவே மாட்டியாடா நீ?

தப்பு செய்யிரவன் தான்டி திருந்தணும்!
நான் உன்கிட்டே தப்பு செய்யவே பிறந்தவன்!
நான் ஏன்டி திருந்தணும்?
-----------------------------
என்னங்க!
'தண்ணீர் தேசம்' படிக்க கொடுத்தேனே!
படிச்சிங்களா?

எங்கெ! நன்னீர் தேசம் புடிக்கவே நேரம் இல்லை!
இதுலெ எங்க தண்ணீர் தேசம் படிக்கிறது?

அது என்ன நன்னீர் தேசம்?

இந்த காய்ந்த வயலில் தண்ணீர் பாய்ச்சிய
அந்த நன்னீர் தேசம் நீதானடி!

"சீ!!! போடா!"

அய்யோ!
இப்படி ஒரு கவிதை எப்படிடி
உன்னால் உடனே எழுத முடிந்தது?

வான்மறை வள்ளுவனே!
நீ சரியில்லை!
இரண்டு வரிகள் எல்லாம் ரொம்ப அதிகம்!
என்னவளின் இரு வார்த்தைக்கு ஈடாகுமா?
மொத்த தமிழ் இலக்கியத்தையும் உருக்கி
இரு வார்த்தைகளால் ஆபரணம் செய்து
தமிழுக்கு அணிவித்து விட்டாளே, பார்த்தாயா?
அதனால் தான் உன்னது இன்னும் 'திருக்குறள்'!
இவளோடது புவி போற்றும் 'புனிதக் குறள்'! :)
----------------------------------

இளசு
11-03-2007, 08:26 AM
லெனின்

காதல் உற்சவம்
அந்நியோன்ய உச்சம்..

சரியான தருணத்தில்
சரியான உச்சரிப்பில்
சரியான முகபாவத்துடன்
சரியான துணை சொல்லும்
சீ.. போ...என்ற கவிதை

உலகத்தின் மிகப் பிரபலமான கவிதை என்பதில் சந்தேகமில்லை..!

வெற்றி
11-03-2007, 09:50 AM
வாழ்வின் அன்றாட நிகழ்வுகளில் கலந்திருக்கும் காதலை அதன் ஊடலின் வழியாய் வெளிப்படுத்திய விதம் அருமை...

மன்மதன்
11-03-2007, 10:58 AM
கவிதையில் புது பரிணாமம் அற்புதமாக இருக்கிறது..



தப்பு செய்யிரவன் தான்டி திருந்தணும்!
நான் உன்கிட்டே தப்பு செய்யவே பிறந்தவன்!
நான் ஏன்டி திருந்தணும்?



வார்த்தைகள் ஜாலம் செய்யுதே.. பாராட்டுகள் லெனின்..

மனோஜ்
11-03-2007, 04:58 PM
உன்மை சம்பவம் அருமை கவிதையாய் மாறுவது உன்மையில் இனிக்கிறது வாழ்த்துக்கள்

lenram80
15-03-2007, 12:37 AM
நன்றி இளசு, மன்மதன், மொக்கச்சாமி & மனோஜ் அலெக்ஸ்