PDA

View Full Version : நீ ஹாவ்...!! ஐ யாம் சாரி....!! பாகம்-2பென்ஸ்
10-03-2007, 11:50 AM
ஒரு லேப்டாப் பேக், ஒரு கேரி பேக் இதை மட்டும் தூக்கிட்டு போறதுக்கே எனக்கு கொஞ்சம் கஷ்டமாதான் இருந்துச்சு. எப்படிதான் நம்ம தாய்குலங்கள் வயத்துல ஒன்னு, இடுப்புல ஒன்னு , கையில ஒன்னு என்று ஒரு குருப்பாவே போவங்களே ஒரு புட்பால் டீமே இருக்கனும்னு நினைப்பு இருக்கிறதால சரி இத எல்லாம் தூக்குறதுன்னு முடிவேடுத்தேன்.

இப்ப சேக்கூரிட்டி சேக்-இன்ல கொள்ளகூட்டமில்ல (நன்றி: மதுரை தமிழ்) வருசை அப்படியே நம்ம மண்ணென்னை லைன்னுமாதிரி இருந்த்து நானும் அப்ப்டியே போயி வாலில் ஒட்டி கொண்டேன் அது என்னமோ பாருங்க நான் போயி நின்னதும் இன்னொரு வருசையை உருவாக்கிடாங்க அதுலையும் நான் தான் கடைசி. அதுலையும் மர்பீஸ் லா எனக்கு சரியா வேலை செய்யும். நான் முதலில் நின்ன வருசை என்னா வேகமா போகுது!!!! எல்லாம் நன்மைக்கே..
அது அவங்களுக்கு பணி நேரம் முடிந்து அடுத்த ஷிப்ட் ஆட்க்கள் வந்து கொண்டிருந்தார்கள். என்னை முறைத்து கொண்டிருந்த அந்த போலிஸ்காரனும் போயிட்டான். அப்படா இந்த முறை வந்த போலிஸ்காரன் காலையிலே பெண்டாட்டிகிட்ட சண்டை போடல போல சிரித்த முகத்தோடயே உள்ள போக சொன்னான்.

அப்படியே நடந்து விமானத்துக்காக காத்திருக்கும் இடத்தில் போயிருந்தேன். ஒரு பாட்டி வந்து பேச்சு கொடுக்க ஆரம்பித்தாங்க அவங்க மகள் டெல்லியில் வேலை செய்யுறாளாம், இப்போ குழந்தை பிறந்து இருக்காம் அதனால பாக்க போறாங்களாம். (இவங்க பாட்டி, அவங்க மகளுக்கு இப்பதான் குழந்தை பிறக்குதா??.. இப்படியெல்லாம் கேள்வி வந்தாலும், வாயை மூடிட்டு கேட்டுடே இருந்தேன்.

வழக்கம் போல தாமதமான போர்டிங் எனக்கு விமானத்தில் கடைசி இருக்கைக்கு முந்தைய இருக்கை. கடைசி இருக்கை விமான பணி பெண்களுக்கு உள்ளதாம். விமான எப்போ எழும்பியது என்று கூட எனக்கு தெரியாமல் உள்ளே உறங்கிபோயிருந்தேன். தோளில் எதோ பட திடீர் என்று எழும்பினேன். விமான பணிபெண் சிரித்த பெண்
உணவு பரிமாற போகிறேன், முகம் கழுவ விரும்புகிறீர்களா???
சரி
ஆச்சரியமாக இருந்தது, உறங்கி கொண்டிருப்பவனின் முன்னாலையே உணவை எறிந்து கொண்டுபோகும் மற்ற விமானசேவையை விட இது என்னவோ வித்தியாசமாக பட்டது.

முகம்கழுவி உக்கார்ந்த போதுதான் கவனித்தேன் மும்பையில் ஏறிய அனேகர் இல்லை (முக்கியமா நீல ஸ்கேர்ட்டும், வெள்ளை டாப்சும் போட்ட அந்த பொண்ணு) டெல்லி கடந்தாச்சு எனது பக்கத்து இருக்கையும் காலியாகி இருந்தது. சுற்றி இருப்பவங்களை ஆராய துவங்கினேன். ஒரு பத்து பசங்க அப்படியே கலகல என்று , விசாரித்தேன் சீனாவில் எதோ ராக் ஷோ கொடுக்க போகிறார்களாம் அது என்னமோ தெரியலை ராக் குரூபில் இருந்தால் முடியெல்லாம் வளத்து, கழுத்துல எக்கசக்கத்துக்கு இரும்பு பட்டை எல்லாம் தொங்கவிட்டு, கிழிந்த ஜீன்ஸ், அழுக்கி சட்டை இது எல்லாம் எழுதாத விதிகளோ என்னவோ இவங்களும் அப்படிதான் இருந்தார்கள். ஒரு வெள்ளையன் ஒருவன் என் பின்னால் இருந்த பணிபெண்கள் இருக்கையை ஆக்கிரமிக்க, ஒரு பணிபெண் வந்து மருயாதையுடம் அவருடைய சீட்டில் இருக்கும் படி வேண்டினார்
நான் ஏன் இதுல இருக்க கூடாது
இது எங்களுக்காக கொடுக்க பட்ட சீட்..
அதனால் என்ன..?? நீ என் சீட்ல உக்காரு..
நாங்கள் பயணிகளுடன் இருக்க கூடாது..
சரி.. மற்ற காலி சீட்டில் உக்காரு நான் இதில் இருக்க வேண்டும்..
நீங்கள் இதில் விதிமுறைகள் படி இருக்ககூடாது மேலும் இந்த இருக்கைகளுக்கு இன்ஸ்சிரன்ஸ் இல்லை
இப்படியே இவர்களது பேச்சு தொடர்ந்தது. கடைசியில் வெள்ளையன் தன் இருக்கைக்கு திரும்பினாலும் இந்திய விமானக்கள் என்றால் எல்லோருக்கும் ஒரு இளக்காரம் நம்மவர்களே மற்ற விமானக்களில் வருபோது அமைதியாக வருவார்கள், இந்திய விமானக்களில் ஏறும்போது இவர்களின் நடவடிக்கை மாறிடுது், நம்மவர்களே இப்படி இருக்கையில் அடுத்தவர்களை குறைகூறுவதில் என்ன இருக்கு.
சாப்பிட்டு மீண்டும் உறங்கி போனேன் கண்விழித்து பார்த்த போது எல்லோரும் இறங்கி கொண்டிருந்தார்கள்
இது எந்த ஏர்போட்?? என்று பணிபெண்ணிடம் கேக்க
பாங்காக் என்று பதில் சொல்லிவிட்டு இறங்குபர்களுக்கு உதவி செய்து கொண்டிருந்தார்.
நான் மீண்டும் உறக்கதில் இருந்தேன். எதோ கிர்..கிர் என்று சத்தம் கேக்க லேசா விழித்து பார்த்தேன் விமானத்தை கிளீன் செய்து கொண்டிருந்தனர் கண் சொக்க , நான் மீண்டும் உறங்கி போனேன்

மீண்டும்.
தோளில் எதோ பட திடீர் என்று எழும்பினேன். வேறு ஒரு விமான பணிபெண்
உணவு பரிமாற போகிறேன், முகம் கழுவ விரும்புகிறீர்களா???
சரி ம் ம் பாங்காகில் விமானம் எவ்வளவு நேரம் நின்றது
மூன்று மணி நேரம்..
ஷாங்காய் செல்ல இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு?
உத்தேசமாய் இரண்டு மணி நேரம்

முகம் கழுவி கொண்டு, சாப்பிட ஆரம்பித்தேன் இன்னும் இந்திய சுவை சாப்பாட்டில் ஒட்டி இருந்தது. நேரத்தை எப்படி சொல்லுவது என்ரு எனக்கு புரியலை லேப்டாப்பை எடுத்து அலுவலக வேலையை செய்ய ஆரம்பித்தேன் நேரம் போயிடுச்சு

இறங்கபோவதாக சொல்ல லேப்-டாப்பை மூடி வைத்து பெல்டை கட்டி கொண்டேன்
ஒரு புத்தகத்தை அதன் அட்டையை வைத்து மதிப்பிட முடியாது, ஆனா ஷாங்காயை அதன் விமானநிலையத்தை வைத்து மதிப்பிட முடிந்தது பெங்களூரில் இப்போது கட்டும் விமான நிலையம் கூட இந்த அளவு வரவே வராது அது என்னமோ தெரியலங்க நம்ம நாட்டில மட்டும் எந்த வேலையும் உலக தரத்தில் இல்லவே இல்லை. இறங்கி இமிகிரேசனில் முத்திரை குத்தி கொண்டேன் இமிகிரேசனில் இருப்பவரும் எதற்க்காக வருகிறென் என்றும் அலட்டி கொள்ளவில்லை.
அப்படியே வந்து எனது பைகளை எடுக்க போனேன் அடடே என் கூட இவ்வளவு இந்தியர்கள் சீனா வாறாங்களா.விமானத்தில் வந்ததில் அனேகர் இந்தியர்தான். நான் எவரையும் கண்டு கொள்ளவில்லை, என்னையும் எவரும் கண்டு கொள்ளவில்லை. நான் எனது பையை எடுத்து கொண்டு கஸ்டம்ஸ் டிக்லரேசன் பாரம் பூர்த்தி செய்ய ஆரம்பித்தேன் எனக்கு என்னுடைய பாஸ்போட் எண் எப்பவும் மறக்கதான் செய்யும், அல்லது சரியா என்ரு ஊர்ஜித படுத்தி கொள்ள, பாஸ்போர்ட்டை எடுத்து அதை பார்த்து தாண் எழுதுவேன் நான் எழுதுவது வரை காத்திருந்து, என்னுடைய பேனாவை பக்கத்தில் இருந்த இந்திய பெண் கேக்க
இந்தாங்க என்று பெரிய மனதுடன் கொடுத்தேன் திரும்ப வாங்கி திரும்புகையில் எதோ ஒன்று குறைவது போல் ஒரு உணர்வு

பாஸ்போர்ட்

தேட ஆரம்பதேன்.. சட்டை பை, கேட் பை, பேண்ட் பை.. லேப்டாப் பை.. பக்கத்தில் இருந்த பெண்ணும் அவரமாக தேடினார் அவர் கைபையில் அவர் பாஸ்போட் இருப்பது கண்டு அவர் கஸ்டம்ஸ் நோக்கி நடக்க, நான் என் பாஸ்போட்டை மீண்டும் தேட ஆரம்பித்தேன்

எங்கும் இல்லை


பாஸ்போர்ட் தொலைந்து போயிருந்தது

ஓவியா
10-03-2007, 12:01 PM
அருமையான அனுபவ பதிவு....

ரசித்து படிதேன்...(இன்னொருவர் வேதனை இவளுக்கு வேட்டிக்கைனு பாட்டு பாடதீக :D )

இருந்தாலும் ஒரு புது பாட்டி தோழியாகிட்டாள்....:)

சுவாரஸ்யமா படிசுட்டு வர்றயிலே இப்படி ஒரு குண்டு போடுறீகலே பென்சு....பாஸ்போர்ட் தொலைந்து போயிருந்தது:eek:

அச்சச்சொ...

மனோஜ்
10-03-2007, 01:51 PM
என்னது பாஸ்போர்ட் இல்லைய :eek: :eek:
அட டா இத செல்லமா விட்டுடனே ரும்ல இருக்கும் பொழது... :rolleyes:
இப்பெ செல்லிர்லாம் பெஞ்ஜமின் சார் பாஸ்போட்ட பாத்தறமா பாத்துக்கோங்க சரியா;) ;) :D

leomohan
10-03-2007, 01:53 PM
ஒரு லேப்டாப் பேக், ஒரு கேரி பேக் இதை மட்டும் தூக்கிட்டு போறதுக்கே எனக்கு கொஞ்சம் கஷ்டமாதான் இருந்துச்சு. எப்படிதான் நம்ம தாய்குலங்கள் வயத்துல ஒன்னு, இடுப்புல ஒன்னு , கையில ஒன்னு என்று ஒரு குருப்பாவே போவங்களே

தலைவரே கொஞ்ச நாள்ல பாருங்க கங்காருமாதிரி எல்லாரும் வயித்துல லாப்டாப்பை கட்டிகிட்டு அலையப்போறாம்.

gragavan
11-03-2007, 10:52 AM
என்னது பாஸ்போர்ட்டக் காணோமா? அடக்கொடுமையே. பாஸ்போர்ட்டே ஒரு கரச்சல் பிடிச்ச விசயமாச்சேய்யா. எந்த ஊரு பாஸ்போர்ட்டு? திருச்சியா? சென்னையா?

சேரன்கயல்
11-03-2007, 11:32 AM
இப்பத்தான் சூடு பிடிக்குது கதையில்...
இந்தியன்னு என்கிட்ட சொன்னீரே பென்ஸ்...இந்தியள்னு சொல்ல மறந்தீட்டிகளோ)

மன்மதன்
11-03-2007, 11:42 AM
ஹ்ம்ம்.. சாப்பிடறது தூங்கறது என்ற டூட்டியை விமானத்தில் கூட விடலையா..:D :D பாஸ்போர்ட் போனா என்ன, ரேசன் கார்டு கொண்டு போயிருந்தீங்கள்ளே......!!

இளசு
11-03-2007, 10:44 PM
இனிய பென்ஸ்

தொடர்தூக்கத்தை ஊக்குவித்து
நற்சேவையைச் சிலாகித்து
சிலர் நடத்தையை சேர்ந்து கோபித்து
ரசித்துப் படித்து வருகையில் -

கடவுச்சீட்டு தொலைந்தது தெரிந்ததும்
பகீர் பயமும்... உன்மேல் சுரீர் கோபமும் வந்தது
எதிரில் இருந்திருந்தால் கடுமையாய்த் திட்டி இருப்பேன்..

எக்காலத்திலும் எல்லாரும் சர்வ ஜாக்கிரதையாய்க் காப்பாற்றவேண்டிய
ஒரே பயண ஆணவம் - கடவுச்சீட்டு.

இ-டிக்கட்டால் பயணச்சீட்டு கூட தொலைந்தால் சமாளிக்கலாம்.

பொதுவாய் பயண ஆவணங்களில் சிறு துரும்பைக்கூட முழு பயணமும்
முடியும் முன்னே எறியக்கூடாது என்பதை
ஒரு சின்ன கஸ்டம்ஸ் துண்டுச்சீட்டை குப்பையில் எறிந்துவிட்டு
அமெரிக்கா விமான நிலையம் ஒன்றில் நான் பட்ட அவஸ்தை இருக்கே......போதும்பா போதும்!

சீக்கிரம் இந்தப் பிரசினை தீர்ந்த விதம் சொல்லி
என் கோபம், பதற்றம் தணிக்கவும்..

மதி
12-03-2007, 04:27 AM
அண்ணாத்த..
அப்புறம் என்னாச்சு...
பாஸ்போர்ட்டை எங்க தான் வச்சிருந்தீரும்...

எப்பவுமே இப்படி தான்....
எல்லாத்தையும் பத்திரமா ஒரு இடத்தில வச்சிகிட்டு அந்த பத்திரமான இடத்த மட்டும் மறக்க வேண்டியது...ஹ்ம்ம்ம்

அடுத்து என்னாச்சுன்னு சீக்கிரமா எழுதவும்...

pradeepkt
12-03-2007, 01:16 PM
அடங்கொக்காமக்கா...
பாஸ்போர்ட்டையா காணோம்...
அப்புறம் என்ன பண்ணீக??? இப்ப இங்க வந்துருக்குறது பென்ஸூதானா? இல்ல வேற யாராவதா?

பென்ஸ்
12-03-2007, 02:17 PM
அருமையான அனுபவ பதிவு....

ரசித்து படிதேன்...(இன்னொருவர் வேதனை இவளுக்கு வேட்டிக்கைனு பாட்டு பாடதீக :D )

இருந்தாலும் ஒரு புது பாட்டி தோழியாகிட்டாள்....:)

சுவாரஸ்யமா படிசுட்டு வர்றயிலே இப்படி ஒரு குண்டு போடுறீகலே பென்சு....பாஸ்போர்ட் தொலைந்து போயிருந்தது:eek:

அச்சச்சொ...

அந்த வானம் அழுதாதான் இந்த பூமியே சிரிக்கும்....
ரொம்ப சிரிச்சுட்டா பூமிக்கு ஆனந்த கண்னிர் வரும்முன்னு சொல்லகூடாது...

பென்ஸ்
12-03-2007, 02:19 PM
என்னது பாஸ்போர்ட் இல்லைய :eek: :eek:
அட டா இத செல்லமா விட்டுடனே ரும்ல இருக்கும் பொழது... :rolleyes:
இப்பெ செல்லிர்லாம் பெஞ்ஜமின் சார் பாஸ்போட்ட பாத்தறமா பாத்துக்கோங்க சரியா;) ;) :D

இல்லை... சொல்லிதான் விட்டீங்க.... (அந்த மனோஜை சொல்லுறேன்)...

"பத்திரமா வச்சுக"... என்று சொல்லிதான் கொடுத்ததே...

பென்ஸ்
12-03-2007, 02:20 PM
இப்பத்தான் சூடு பிடிக்குது கதையில்...
இந்தியன்னு என்கிட்ட சொன்னீரே பென்ஸ்...இந்தியள்னு சொல்ல மறந்தீட்டிகளோ)
நான் பொய் சொல்லுறது இல்லையே சேரன்...:rolleyes: :rolleyes: :D :D

பென்ஸ்
12-03-2007, 02:22 PM
தலைவரே கொஞ்ச நாள்ல பாருங்க கங்காருமாதிரி எல்லாரும் வயித்துல லாப்டாப்பை கட்டிகிட்டு அலையப்போறாம்.
ஆமா மோகன்...
இப்பவே மனசுக்குள்ள அதை எதோ "கவச குண்டலம்" என்றுதான் நினைப்பு...

பென்ஸ்
12-03-2007, 02:23 PM
என்னது பாஸ்போர்ட்டக் காணோமா? அடக்கொடுமையே. பாஸ்போர்ட்டே ஒரு கரச்சல் பிடிச்ச விசயமாச்சேய்யா. எந்த ஊரு பாஸ்போர்ட்டு? திருச்சியா? சென்னையா?

திருச்சிதேன்.... :D

பென்ஸ்
12-03-2007, 02:26 PM
ஹ்ம்ம்.. சாப்பிடறது தூங்கறது என்ற டூட்டியை விமானத்தில் கூட விடலையா..:D :D பாஸ்போர்ட் போனா என்ன, ரேசன் கார்டு கொண்டு போயிருந்தீங்கள்ளே......!!


ரேசன் காடா.....
எதோ கிரடி கார்ட் வாங்குற விஷயம் மாதிரி ஏசியா சொல்லுறிங்க.... நான் ரேசன் கார்ட் வைக்குற அளவுக்கு எல்லாம் பெரிய ஆளு இல்லைங்க...

மயூ
12-03-2007, 02:46 PM
அந்தத் தோளை ஒருக்கா காட்டுங்க பென்ஸூ அண்ணா தொட்டுக் கும்பிடனும்... குடுத்து வைத்த தோள் அல்லவா :) :)

பாஸ்போட் இல்லாமல் சீனாவில் பென்ஸூ அண்ணா... ஒரு திரைப்பட டைட்டிலெ வந்திட்டுது. அப்புறம் என்னாச்சு... டர்மினல் படத்தில் வந்த டாம் ஹாங் மாதிரி ... க்ரொகேஷியா.... என்று சொல்லிக்கொண்டு திரிந்தீர்களா?? :) :) :) :)

பென்ஸ்
12-03-2007, 02:56 PM
சீக்கிரம் இந்தப் பிரசினை தீர்ந்த விதம் சொல்லி
என் கோபம், பதற்றம் தணிக்கவும்..

உங்ககிட்ட இருந்து அடியே வாங்கியிருந்தாலும் தகும் இளசு...
பொறுப்பாய் இருக்கு விரும்புவேன்...
பெரிய பருப்பாய் நடந்து கோட்டைவிடுவேன்...
எத்தனை பிரச்சினை வந்தாலும் கடவுள் புண்ணியத்தில் தப்பி வருவதால் வரும் திமிர் என்று நினைக்கிறென்...

அடுத்த பதிவில் என்ன நடந்தது என்று....

பென்ஸ்
12-03-2007, 02:57 PM
எப்பவுமே இப்படி தான்....
எல்லாத்தையும் பத்திரமா ஒரு இடத்தில வச்சிகிட்டு அந்த பத்திரமான இடத்த மட்டும் மறக்க வேண்டியது...ஹ்ம்ம்ம்..


நீயும் ஒரு முறை பாஸ்போர்ட்டை தொலைந்து பார் அப்ப புரியும்...

பென்ஸ்
12-03-2007, 03:00 PM
அடங்கொக்காமக்கா...
பாஸ்போர்ட்டையா காணோம்...
அப்புறம் என்ன பண்ணீக??? இப்ப இங்க வந்துருக்குறது பென்ஸூதானா? இல்ல வேற யாராவதா?
இல்லை...
இது என்னோட ஜெராக்ஸ்...
நான் இன்னும் சீனா ஜெயிலில் தான் இருக்கிறேன்...

அறிஞர்
12-03-2007, 03:22 PM
பயங்கர தூக்கப்பிரியராக இருப்பீர் போல.. இப்படியா தூங்குவது... இது மாதிரி நான் தூங்கினது இல்லை...

பாங்காக் ஏர் போர்ட்டில் இறங்கி சுற்றியிருக்கலாம் அல்லவா.. அங்கு ஸ்பா மசாஜ் ரொம்ப பிரசித்தம்.

சீனாவில் பாஸ்போர்ட் காணோமா... நல்ல கதைதான்...

சுவாரசய்மாக செல்கிறது.. தொடருங்கள்.

பென்ஸ்
12-03-2007, 04:52 PM
பயங்கர தூக்கப்பிரியராக இருப்பீர் போல.. இப்படியா தூங்குவது... இது மாதிரி நான் தூங்கினது இல்லை...

பாங்காக் ஏர் போர்ட்டில் இறங்கி சுற்றியிருக்கலாம் அல்லவா.. அங்கு ஸ்பா மசாஜ் ரொம்ப பிரசித்தம்.

சீனாவில் பாஸ்போர்ட் காணோமா... நல்ல கதைதான்...

சுவாரசய்மாக செல்கிறது.. தொடருங்கள்.
அட நீங்க வேற .... வாரநாட்க்களில் 5 முத 6 மணிநேரம் மட்டுமே என் தூக்கம்..... :mad: :mad:
உறங்கவேண்டும் என்று தோன்றினாள் லீவு போட்டு தூங்குவேன்.... ஒரே சமயத்தில் தொடர்ந்து 36 மணி நேரம் தூங்கி இருக்கிறேன்...:rolleyes: :rolleyes: :p :p

பாங்காக் சுத்தி பாத்தேனே...:rolleyes: :rolleyes: :D :D :D

ஓவியா
13-03-2007, 12:55 AM
:D
அந்த வானம் அழுதாதான் இந்த பூமியே சிரிக்கும்....
ரொம்ப சிரிச்சுட்டா பூமிக்கு ஆனந்த கண்னிர் வரும்முன்னு சொல்லகூடாது...

:D :D :D

ஆதவா
13-03-2007, 03:51 AM
நன்றாக போய்க்கொண்டு இருக்கிறது.

பாஸ்போர்ட் தொலைஞ்சு போச்சா? சீனாக் காரங்க சும்மாவா வுட்டாங்க?

pradeepkt
13-03-2007, 06:31 AM
நான் பொய் சொல்லுறது இல்லையே சேரன்...:rolleyes: :rolleyes: :D :D
இதே ஒரு பெரிய பொய்! :D

மன்மதன்
13-03-2007, 06:59 AM
அந்தத் தோளை ஒருக்கா காட்டுங்க பென்ஸூ அண்ணா தொட்டுக் கும்பிடனும்... குடுத்து வைத்த தோள் அல்லவா :) :)

பாஸ்போட் இல்லாமல் சீனாவில் பென்ஸூ அண்ணா... ஒரு திரைப்பட டைட்டிலெ வந்திட்டுது. அப்புறம் என்னாச்சு... டர்மினல் படத்தில் வந்த டாம் ஹாங் மாதிரி ... க்ரொகேஷியா.... என்று சொல்லிக்கொண்டு திரிந்தீர்களா?? :) :) :) :)டைமிங் ஜோக்.. கொஞ்சம் நினைச்சு பாருங்க.. சீன ஏர்போர்ட்டில் நம்ம பென்ஸ், டாம் ஹேங்க்ஸ் போல டர்க்கி டவலைக் கட்டிக்கொண்டு உலா வந்தால்..:rolleyes: :rolleyes:

மன்மதன்
13-03-2007, 07:02 AM
ஒரே சமயத்தில் தொடர்ந்து 36 மணி நேரம் தூங்கி இருக்கிறேன்..


மெய்யாலுமா????? இல்லை கனவிலா??:D :Dபாங்காக் சுத்தி பாத்தேனே...:rolleyes: :rolleyes: :D :D :D

ஸ்பெல்லிங் கரெக்ட்தானே.. சித்தி இல்லையே..:rolleyes: :D

mukilan
13-03-2007, 07:09 AM
பாங்காக் சித்தியைப் பார்க்கிற அளவுக்கெல்லாம் பென்ஸூக்கு வயசாகலை. அதனால நம்பிடுவோம். பாஸ்போர்ட் தொலைச்ச கதையை அநிருத்கிட்ட சொல்லி சொந்த செலவில சூன்யம் வச்சிக்காதீரும்.

pradeepkt
13-03-2007, 11:40 AM
மெய்யாலுமா????? இல்லை கனவிலா??:D :D
ஸ்பெல்லிங் கரெக்ட்தானே.. சித்தி இல்லையே..:rolleyes: :D
ஏய்யா 36 மணி நேரம் தூங்குறது ஒரு பெரிய விசயமா??? ஹூம், நாங்கல்லாம் ஆபீசிலேயே... ஹி ஹி... அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா :rolleyes: :rolleyes:

pradeepkt
13-03-2007, 11:41 AM
பாங்காக் சித்தியைப் பார்க்கிற அளவுக்கெல்லாம் பென்ஸூக்கு வயசாகலை. அதனால நம்பிடுவோம். பாஸ்போர்ட் தொலைச்ச கதையை அநிருத்கிட்ட சொல்லி சொந்த செலவில சூன்யம் வச்சிக்காதீரும்.ஏன் பென்ஸூக்குச் சித்தப்பா ஆக உரிமை இல்லையா? அப்படி உரிமை மறுக்கும் முகிலனைக் கடுமையாகக் கண்டிக்கிறேன் :rolleyes: :D

ஓவியா
13-03-2007, 11:45 AM
ஏய்யா 36 மணி நேரம் தூங்குறது ஒரு பெரிய விசயமா??? ஹூம், நாங்கல்லாம் ஆபீசிலேயே... ஹி ஹி... அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா :rolleyes: :rolleyes:

ஆமாமா உலக சாதனையெல்லாம் ஊங்களுக்கு சகஜமான விசயம்தான்......:D

கன்னியில் கடைக்கனண் பார்வை கண்ட மச்சானுக்கு
கடலலையும் சுண்டு விரல் அளவுதானாம்

கவிஞசர் ஓவியா
(பட்டத்தை பயன்படுத்த ஒரு வாய்ப்பு :D )

pradeepkt
13-03-2007, 12:16 PM
ஆமாமா உலக சாதனையெல்லாம் ஊங்களுக்கு சகஜமான விசயம்தான்......:D

கன்னியில் கடைக்கனண் பார்வை கண்ட மச்சானுக்கு
கடலலையும் சுண்டு விரல் அளவுதானாம்

கவிஞசர் ஓவியா
(பட்டத்தை பயன்படுத்த ஒரு வாய்ப்பு :D )
கவிஞரே,
அடுத்த போட்டிக்குத் தயாராகிற வழியப் பாருங்கம்மா... கடல் அலை சுண்டுவிரல் அளவு ஆறதுனால நமக்கு என்ன பிரயோசனம்?? ஹி ஹி
தூங்கணும்னு வந்துட்டா நாங்கல்லாம் மொரட்டுத்தனமாத் தூங்குவோம்.. .நினைப்பிருக்கட்டும்...

ஓவியா
13-03-2007, 12:26 PM
கவிஞரே,
அடுத்த போட்டிக்குத் தயாராகிற வழியப் பாருங்கம்மா... கடல் அலை சுண்டுவிரல் அளவு ஆறதுனால நமக்கு என்ன பிரயோசனம்?? ஹி ஹி
தூங்கணும்னு வந்துட்டா நாங்கல்லாம் மொரட்டுத்தனமாத் தூங்குவோம்.. .நினைப்பிருக்கட்டும்...

பொண்ணுக்க ஓகேனு சொன்னவுடன், பசங்களுக்கு இப்படிதான் வீரம் வருமாம்...:D ..முரட்டு தூக்கத்த எப்படி விரட்டி அடிப்பதுனு யோசிச்சு ஒரு வழி கண்டாச்சு போல.....:D

மதி
13-03-2007, 01:21 PM
இதே ஒரு பெரிய பொய்! :D
இதை நானும் வழிமொழிகிறேன்..
இவரை கூப்பிட்டால்..
"பொய் சொல்லப்போறேன்..பொய் சொல்லப்போறேன்.."னு
பாட்டு பாடறார்..:eek: :eek: