PDA

View Full Version : ''அன்புடன்'' - ஆண்டு விழா 2 - கவிதைப் போட்டிப்ரியன்
08-03-2007, 11:22 AM
இனிய இணைய நெஞ்சங்களுக்கு வணக்கம்!

"இதயம் மீறும் எண்ணங்களால் நாம்
எழுந்து பறப்போமே
இதய நிழலில் இதயம் கிடத்தி
இன்னல் துறப்போமே"

எனப் பாடி, சிறகடித்துப் பறக்கத் தொடங்கியது ஒரு சின்னஞ்சிறு இணையப்பறவை... சிறகை அகலமாய் உயரமாய் விரித்து அன்பால் உலகத்தை அளந்திட்டேன்... இதோ, வானம் விரைவில் என உற்சாகமாய்த் தன்னைச் செலுத்தியபடி இருக்கிறது...

உலகெலாம் அலைந்து தமிழ்ப் பருக்கை கொத்தி, கூடு அடையும் இதயங்களுக்கு ஊட்டியபடி இருக்கும் நம் அன்புடனின் ஈராண்டு நிறைவையும் மூன்றாம் ஆண்டின் தொடக்கத்தையும் ஆனந்தமாய் ஆடலுடன் பாடலுடன் மன நிறைவாய்க் கொண்டாடிட 'அன்புடன்' கவிதைப் போட்டி நிகழ்த்த முடிவு செய்துள்ளது.


போட்டி விபரம்:

கவிதைப் போட்டி ஐவகைச் சுவையின் கீழ் நடத்தப்பட உள்ளது.

1. இயல்கவிதை - வாசிக்கச்சுவை

வழமையான வடிவம் தான். படைப்பாளி தன் கவிதையை யுனித்தமிழில்(Unicode) தட்டச்சு செய்து அனுப்பவேண்டும்.(யுனித்தமிழில் தட்டச்ச இயலாதவர்கள் 'அன்புடன்' உதவியை அணுகலாம் மின்னஞ்சல் : anbudansupport@gmail.com)

2. இசைக்கவிதை* - பாடச்சுவை

சில பாடல்கள் இசையோடு கேட்க இன்பம் கூட்டும். அவ்வகைக் கவிதைகளுகான (பாடல்களுக்கான) பிரிவு இது. படைக்கப்பட்ட கவிதை பாடலாக இசையோடு பதியப்பட்டு அனுப்பப்படவேண்டும்.

3. ஒலிக்கவிதை - கேட்கச்சுவை

சில கவிதைகள் படைப்பாளியின் உணர்வோடு கேட்க நம்மை உலுக்கியெடுக்கும்.அவ்வகைக் கவிதைகளுக்கான பகுதி இது. படைக்கப்பட்ட கவிதை படைப்பாளியின் குரலில் பதியப்பட்டு அனுப்பப்படவேண்டும்.

4. படக்கவிதை** - பார்க்கச்சுவை

புகைப்படங்களுடக்கான கவிதை. பார்வைக்கு வைக்கப்படும் சில புகைப்படங்களுக்குப் படைப்பாளியின் கற்பனை வடிக்கும் கவிதையைத் தரவேண்டும்.

5. காட்சிக்கவிதை* - இயக்கச்சுவை

இது ஒலி - ஒளி கவிதை. கவிதையைக் காட்சியாக்கித் தரவேண்டும்.

* இசைக்கவிதை, காட்சிக்கவிதை பிரிவுகள் புது முயற்சி என்பதால் பங்கேற்பு குறைவாய் இருக்கும் என்றெண்ணுகிறோம். எனவே அவற்றில் பங்கேற்கும்
படைப்புகளுக்கு வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம்.

** படக்கவிதைக்கான படங்கள் இப்பதிவுடன் இணைக்கப்பட்டுள்ளது.

விதிமுறைகள்:

1. எந்தப் பிரிவுக்கும் தலைப்பு கிடையாது. எந்தத் தலைப்பின் கீழ் எழுதுவது என்பது படைப்பாளியின் விருப்பத்திற்கு விடப்படுகிறது.

2. ஒவ்வொரு பிரிவின் கீழும் ஒரு படைப்பாளி அதிகபட்சமாக நான்கு படைப்புகளை மட்டுமே அனுப்பலாம்.

3.படக்கவிதைக்கான படைப்பை அனுப்புவோர்,எந்த படத்திற்கான கவிதை எனக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டுகிறோம்.அப்படிக் குறிப்பிடி படாத படைப்புகள் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டா.

4. படைப்பு முழுக்க முழுக்கப் புதியதாய் இருக்க வேண்டும். முன்னரே எந்த ஒரு ஊடகத்திலும் வெளிவந்த படைப்பாய் இருத்தல் கூடாது.முடிவுகள் அறிவிக்கப்படும்வரை எங்கும் படைப்பை பிரசுரித்தல் கூடாது.முடிவுகள் வெளியானதும் தாங்கள் தங்கள் கவிதைகளை பிரசுரம் செய்துக் கொள்ளலாம்.

5. படைப்பாளியின் பெயர் , தொடர்பு எண் & முகவரி ஆகியவை ஒவ்வொரு படைப்பு அனுப்பப்படும் போதும் குறிப்பிடப் பட வேண்டும்.அவை எக்காரணம் கொண்டும் எங்கும் பொதுவில் வைக்கப்பட மாட்டாது என்று உறுதி அளிக்கின்றோம்.

6. படைப்புகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 14-04-2007 (சனிக்கிழமை ஏப்ரல் 14, 2007 - சித்திரை மாத முதல்நாள்) இந்திய நேரம் இரவு 12.00 மணி க்குள்.

7. போட்டிக்கு வரும் படைப்புகளைப் போட்டி முடிந்ததும் அன்புடன் குழுமத்தில் பிரசுரிக்கும் அனுமதியை இப்போதே பெற்றுக் கொள்கிறோம்.

8. படைப்பை anbudan.pootti@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மட்டுமே அனுப்ப வேண்டுகிறோம். அன்புடன் குழுமத்துக்கு நேரடியாய் அனுப்பப்படும்
படைப்புகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா.

9. ஒலிக்கவிதை, இசைக்கவிதை, காட்சிக்கவிதை போன்றவற்றில் கோப்பின் பருமளவு (file size) அதிகமாகும் பட்சத்தில் ஏதாவது ஒரு கோப்பு மாற்று (File Share) இணைய தளத்தில் ஏற்றிவிட்டு அதைத் தரவிறக்கத் தேவையான (link) சுட்டியை மட்டும் anbudan.pootti@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்தால் போதுமானது.

10. நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.

பரிசு:

மொத்த பரிசு மதிப்பு : ரூ. 10,000/-
ஒவ்வொரு பிரிவிற்கும்:

முதல் பரிசு: ரூ. 1000/-
இரண்டாம் பரிசு: ரூ. 500/-
ஆறுதல் பரிசு: இருவருக்குத் தலா ரூ. 250/-

எனப் பகிர்ந்தளிக்கப்படும்.பரிசுகள் பணமாக வழங்கப்பட மாட்டாது. அத்தொகைக்கு ஈடான புத்தகங்களாக வழங்கப்படும். பரிசுப் புத்தகங்கள்,பரிசு பெறும் படைப்பாளின் தேர்வு. பரிசு பெறும் படைப்பாளி வெளிநாட்டில் வசிப்பவராக இருந்தால், பரிசுப் புத்தகங்களைப் பெற்றுக்கொள்ள அவர் தமிழக முகவரி ஒன்றைத் தரவேண்டியிருக்கலாம்.

முடிவுகள்:

சித்திரைத் திங்கள் இறுதியில் அறிவிக்கப்படும்.

வாருங்கள் இணையத் தமிழ் மக்களே! இனி இது உங்கள் களம். பங்கேற்று மகிழுங்கள். பரிசுகளை வென்றிடுங்கள். கவிதைச் சாரலால் நனைத்திடுங்கள்.

நன்றி.

**படக்கவிதைக்கான படங்களுக்கு இணைப்பை காண்க.

மேலும் தகவலுக்கு : அன்புடன் ஆண்டு விழா 2 - கவிதைப்போட்டி (http://groups.google.com/group/anbudan/msg/57dea74c316e2126)

படம் : 01

http://anbudanpages.googlepages.com/Padam01.jpg

படம் : 02

http://anbudanpages.googlepages.com/Padam02.jpg

படம் : 03

http://anbudanpages.googlepages.com/Padam03.jpg

படம் : 04

http://anbudanpages.googlepages.com/Padam04.jpg

படம் : 05

http://anbudanpages.googlepages.com/Padam05.jpg

படம் : 06

http://anbudanpages.googlepages.com/Padam06.jpg

படம் : 07

http://anbudanpages.googlepages.com/Padam07.jpg

படம் : 08

http://anbudanpages.googlepages.com/Padam08.jpg

படம் : 09

http://anbudanpages.googlepages.com/Padam09.jpg

படம் : 10

http://anbudanpages.googlepages.com/Padam10.jpg

இளசு
09-03-2007, 05:46 AM
ப்ரியன்,
மிக விலாவாரியான போட்டி.

நல்லமுறையில் நடைபெற்று, வெற்றிவிழா காண வாழ்த்துகள்..

ப்ரியன்
09-03-2007, 05:49 AM
நன்றி இளசு நம் தமிழ்மன்ற நெஞ்சங்கள் பெருவாரியாக கலந்து பரிசினை பெறவேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்...

இதை Sticky ஆக மாற்ற முடியுமா?தமிழ்மன்றத்தின் அறிவிப்புகளில் இட்டாலும் சுகம்

இளசு
09-03-2007, 05:56 AM
தமிழ்மன்ற அறிவிப்புகள் பகுதிக்கு மாற்றி, விழா முடிந்து அறிவிப்பு வரும்வரை ஒட்டி வைக்கப் பரிந்துரைக்கிறேன்..

அறிஞர்
09-03-2007, 01:43 PM
மன்றத்து உறுப்பினர்கள் எல்லாரின் மகிழ்ச்சியே எங்கள் மகிழ்ச்சி....

இந்த அறிவிப்பை பார்த்து... மன்றத்து சொந்தங்கள்.. கவிதைகளை கொடுத்து.. வெற்றி பெற வாழ்த்துக்கள்...

இளசு
14-03-2007, 12:17 AM
நன்றி இளசு நம் தமிழ்மன்ற நெஞ்சங்கள் பெருவாரியாக கலந்து பரிசினை பெறவேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்...ப்ரியன்,

போட்டி நல்லபடி போகிறதா?

மன்றச்சொந்தங்கள் உற்சாகமாய்க் கலந்துகொள்ளுங்கள்..

அங்கே முடிவுகள் தெரிந்தபின் படைப்புகளை இங்கே மன்றத்தில் இடுங்கள்.. வாழ்த்துகள்!

மன்மதன்
14-03-2007, 07:45 AM
அன்புடன் கவிதைப்போட்டி பெரிய அளவில் வெற்றிபெற வாழ்த்துகிறேன்..

அமரன்
14-03-2007, 04:05 PM
யாரங்கே. அழைத்துவாருங்கள் நம் மன்றத்துக் கவிப்பேரரசுகளை.

ப்ரியன்
04-04-2007, 01:14 PM
மன்ற உறவுகளே எங்கே உங்களது கவிதைகள்

அறிஞர்
04-04-2007, 05:06 PM
மன்ற உறவுகளே எங்கே உங்களது கவிதைகள்
நண்பரே.. நம் கவிஞர்களின் பட்டியலை கண்டு தனி மடலில் அன்பாக மீண்டும் முழுவிவரத்துடன் அழைப்புக்கொடுங்களேன்.

இளசு
04-04-2007, 09:43 PM
பூ, ஆதவா, ஓவியா, ஷீ, லெனின்,மோகன், பிச்சி - இப்படி எத்தனை நல்ல கவிஞர்கள்
நம் மன்றத்தில்..

ஆர்வமாய்க் கலந்து வெற்றிபெற வாழ்த்துகிறேன் நம் நண்பர்களை!

ஷீ-நிசி
05-04-2007, 04:36 AM
நம் மன்ற உறவுகள் கலந்துகொண்டு வெற்றி வாகை சூடவேண்டும் என்று விரும்புகிறேன்.. ஓவியா... வாழ்த்துக்கள்..

ஓவியா
08-04-2007, 02:54 PM
பூ, ஆதவா, ஓவியா, ஷீ, லெனின்,மோகன், பிச்சி - இப்படி எத்தனை நல்ல கவிஞர்கள்
நம் மன்றத்தில்..

ஆர்வமாய்க் கலந்து வெற்றிபெற வாழ்த்துகிறேன் நம் நண்பர்களை!

நன்றி இளசு,

பிரியன்,

அடியேனுக்கு பரிட்சை நேரம். கலந்த்துக் கொள்ள முடியாது. மன்னிக்கவும்.

கலந்து சிறப்பிக்கும் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.

பிச்சி
08-04-2007, 03:06 PM
எனக்கும் பரீட்சை இருப்பதால் கலந்து கொள்ள முடியாது. மன்னிகவும் பிரியன்.

எல்லாரும் கலந்து பரிசு வெல்ல வாழ்த்துக்கள்.

ஓவியா
08-04-2007, 03:07 PM
நம் மன்ற உறவுகள் கலந்துகொண்டு வெற்றி வாகை சூடவேண்டும் என்று விரும்புகிறேன்.. ஓவியா... வாழ்த்துக்கள்..

நன்றி ஷீ.

நானும் நம் மன்ற உறவுகள் கலந்துகொண்டு வெற்றி வாகை சூடவேண்டும் என்று விரும்புகிறேன்.... ஷீ-நிசி... வாழ்த்துக்கள். :sport-smiley-018: :sport-smiley-018:

பாரதியண்ணா, பூ, பெஞ்சு, செல்வன் அண்ணா, கண்ணம்மாராஜா, மீரா, மன்மதன், ஆதவா, பிச்சி, லெனின், ஷி-னிஷி, மோகன், கமல், மதுரகன், மனோஜ், ஆனந்த் மற்றும் அனைத்து மன்ற புது வரவுகள் கலந்து சிறபிக்க வேண்டுகிறேன். :music-smiley-008: :music-smiley-008: :music-smiley-008: :music-smiley-008:

பென்ஸ்
01-05-2007, 12:51 PM
போட்டி நல்ல முறையில் முடிந்ததா ப்ரியன்....
போட்டி கவிதைகளை அனுமதி பெற்று இங்கு பதிக்கலாமே....

ப்ரியன்
15-05-2007, 07:01 AM
இனிய அன்பர்களே,

அன்புடன் இரண்டாம் ஆண்டுவிழாக் கொண்டாட்டங்கள்
மார்ச் 2007 தொடங்கி கோலாகாலமாக நடந்துகொண்டிருக்கிறது.

அதில் இவ்வாண்டின் சிறப்பு அம்சங்களில் ஒன்றான
ஐவகைக் கவிதைப் போட்டிகளின் முடிவுகளை அறிவிக்கும் நேரம்
இதோ இதோ வந்துவிட்டது....

மிகுந்த ஆவலோடு போட்டியில் பங்குபெற்ற அத்தனை கவிதை உள்ளங்களும்
நடுவர்களின் தீர்ப்புகளை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றன.

அதைவிட போட்டிக் கவிதைகளா, அவற்றை வாசிக்கக் கிடைக்கும் சுகமா,
பரிசுக்குரிய கவிதை எது, அதை எழுதியவர் யார், தேர்வு செய்த நடுவர் யார்,
எப்படி அவர் தேர்வு செய்தார், ஏன் அதைத் தேர்வுசெய்தார்
என்று அறியத் துடிக்கும் தவிப்புகளோடு
அன்பர்களின் இதய இழைகள் சுழல்கின்றன.

அன்புடன் உலகின் முதல் யுனித்தமிழ்க் குழுமம்.
அது 2005ம் ஆண்டு மார்ச் மாதம் ஏழாம் தேதி திங்கட்கிழமை தொடங்கப்பட்டது.

இன்று இம்மடல் எழுதும் நேரம்வரை 747 அன்பர்கள் அதில் இணைந்துள்ளார்கள்,
66,393 மடல்களைத் தாண்டி அன்பையே அச்சாணியாகக்கொண்டு
கருத்தாடல்கள் நடந்தி வருகிறார்கள்.

அன்புடன் தமிழில் எழுதுவோருக்கான குழுமம்,
யுனித்தமிழில் மட்டுமே அது இயங்குகிறது.
தமிழ்க் கவிதைகள், கட்டுரைகள், கதைகள், தமிழ் வளர்ச்சி,
தமிழ் உறவுகள் பற்றிய எண்ணங்கள், தமிழ் கற்கும் பயிற்சிகள் போன்று
ஆக்கப்பூர்வமான தலைப்புகள் பலவற்றிலும் அங்கே மடலாடல்கள் நிகழ்கின்றன.

எப்படி யுனித்தமிழில் தட்டச்சுவது என்று அன்பர்களுக்கு
அன்புடன் ஒரு சேவையாகச் சொல்லித்தருகிறது.

அன்புடனின் இரண்டாம் ஆண்டு நிறைவினையொட்டி
பல நிகழ்சிகள் தொடங்கப்பட்டன.
அவை அனைத்தும் அன்பர்களின் ஏகோபித்த வரவேற்புடன்
வெற்றியுடன் முடிந்தும் இன்னும் நடைபெற்றும் வருகின்றன.

அன்புடன் சுடரோட்டம்
- ஆளுனர் அன்பர் முபாரக் - நடந்துகொண்டிருக்கிறது

அன்புடன் தித்திப்பு யுத்தம்
- நடுவர் அன்பர் ஆனந்த குமார் - நடந்து முடிந்துவிட்டது

அன்புடன் பட்டிமன்றம்
- நடுவர் அன்பர் ரசிகவ் ஞானியார் - நடந்துகொண்டிருக்கிறது

அன்புடன் கவிதைப் போட்டிகள்
- இதைப்பற்றித்தானே இப்போது எழுதிக்கொண்டிருக்கிறேன் :)

அன்புடன் ஆண்டுவிழாக் கொண்டாத்தின் தலைவராக
கவிஞர் ப்ரியன் (விக்கி) பொறுப்பேற்று
தன் பணிச்சுமைகளுக்கு இடையிலும் சிறப்பாகச் செய்துவருகிறார்.

துவக்கம் முதலே அனைத்துப் பணிகளையும்
மிக மிக அக்கறையாக வெகு சிறப்பாக அன்புடனின் சேவைக்கரசி
சேதுக்கரசி செய்து வருகிறார்.

முடிவுகளை அறிந்துக்கொள்ள : அன்புடன் கவிதைப் போட்டி முடிவுகள் (http://groups.google.com/group/anbudan/browse_thread/thread/e650dc047b23dadd)படியுங்கள்

பிச்சி
15-05-2007, 07:09 AM
வெற்றி பெற்றவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

Hayah Roohi
18-12-2007, 04:54 AM
இந்தப் பதிவை இப்போது தான் பார்க்கிறேன்.
அன்புடன் போட்டியின் காட்சிக்கவிதைப்பிரிவில் முதற் பரிசு எனக்குக்கிடைத்தது,புகழ் இறைவனுக்கே!

அகதி வாழ்வின் அவலம் காட்டும்'உயிர் வலிக்க வலிக்க'எனும் தலைப்பிலான கவிதை.
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13904

மன்ற உறவுகளின் கருத்துக்களுக்காக என் இதயக்கதவுகள் திறந்திருக்கின்றன.
நன்றிகளோடு.....

அறிஞர்
18-12-2007, 01:59 PM
இந்தப் பதிவை இப்போது தான் பார்க்கிறேன்.
அன்புடன் போட்டியின் காட்சிக்கவிதைப்பிரிவில் முதற் பரிசு எனக்குக்கிடைத்தது,புகழ் இறைவனுக்கே!

அகதி வாழ்வின் அவலம் காட்டும்'உயிர் வலிக்க வலிக்க'எனும் தலைப்பிலான கவிதை.
http://hayah.wordpress.com/2007/08/28/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/

மன்ற உறவுகளின் கருத்துக்களுக்காக என் இதயக்கதவுகள் திறந்திருக்கின்றன.
நன்றிகளோடு.....
வாவ் அருமை நண்பரே... வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்கள்...

தங்களின் கவிதை இங்கும் எங்கும்... வளரட்டும்...

ஓவியன்
18-12-2007, 02:12 PM
வாழ்த்துக்கள் ஹயா ரூஹி..!

நம் மன்றத்து உறவு ஒருவரின் படைப்புக்கு தகுந்த அங்கிகாரம் கிடைத்திருப்பது நம் அனைவருக்குமே கொள்ளை மகிழ்ச்சியே....

மனதாரப் பாராட்டுகிறேன், இன்னும் இன்னும் நிறைய எழுதுங்க சகோதரியே...!! :)

பூமகள்
18-12-2007, 02:29 PM
வாழ்த்துகள் ஹையா ரூகி..!! :)
உங்கள் கவிதைகள் இன்னும் சுவைக்க வேண்டுமென்று விரும்புகிறேன்.
மன்றத்தோடே இணைந்து இருங்கள்.

IDEALEYE
19-12-2007, 04:06 AM
கவிதையும் அதனேடு இணைந்த காட்சி மற்றும் பின்னணிப்பாடல்களை கண்டேன், உயிரோட்டமுடன் இருக்கிறது...
சரியானதேர்வு
வாழ்த்துக்கள்
அன்புடன் ஐஐ