PDA

View Full Version : பிபிசி பொட்காஸ்டிங்



மயூ
07-03-2007, 12:53 PM
http://www.bbc.co.uk/radio/downloadtrial/images/var_podcast_radiobox.gif (http://www.bbc.co.uk/radio/downloadtrial/images/var_podcast_radiobox.gif)
இது சற்றே பழைய செய்திதான் என்றாலும் விஷயம் தெரியாமல் இன்னும் பலபேர் உள்ளதால் இக்கட்டுரையை எழுதுகின்றறேன்.

முதலில் பொட்காஸ்டிங் என்றால் என்ன என்பதைப் பார்ப்போம். அதாவது அப்பிள் ஐ பொட்டினால் பிரபலமான முறை. அதனால்தான் பொட்காஸ்டிங் என்று அழைக்கப்படுகின்றது. உங்களுக்கு விருப்பமான பொட்காஸ்டிங் செய்பவரை அதற்குரிய மென்பொருள் மூலம் இணைத்துக் கொள்ளலாம். ஒவ்வொரு தடவையும் புதிய ஒலிக் கோப்புகள் பொட்காஸ்டிங் செய்பவரால் இடப்படும் போது அவை தானே உங்கள் கணனிக்கு மென்பொருளால் இறக்கப்படும். பின்பு நீங்கள் அதை உங்கள் ஐ பொட்டில் ஏற்றிக்கேட்கலாம். தற்போது எம்.பி3 வடிவிலேயே பொட்காஸ்டிங் கோப்புகள் வருவதால் அதைப் பதிவிறக்கி சாதாரண எம்பி3 பிளேயரிலும் கேட்கலாம். அல்லது கணனியிலேயே இயக்கிக் கேட்கலாம்.

சில காலங்களுக்கு முன்பு பிபிசியும் இந்த சேவையில் ஈடுபடத் தொடங்கியுள்ளது. அதாவது நீங்கள் பிபிசி வானொலியின் பல்வேறுபட்ட நிகழ்ச்சிகளை உங்கள் கணனிக்கு இறக்கி உங்களுக்கு வசதியான நேரத்தில் கேட்டுக்கொள்ளலாம்.

பிபிசியில் பரிந்துரைத்த மென்பொருள் மூலம் சந்தாக்காரர் ஆகி உங்களுக்குப் பிடித்தமான நிகழ்ச்சிகளை பதிவிறக்கலாம் அல்லது தளத்திற்குச் சென்று இணைப்பைக் சொடுக்கி MP3 கோப்புகளைப் பதிவிறக்கலாம்.

இங்கு அறிவியல் தொடக்கம் பொழுது போக்கு வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நீங்கள் பதிவிறக்குவதற்காகக் காத்துக்கிடக்கின்றன.

நான் வாராவாரம் மறக்காமல் பதிவிறக்குவது Digital Planet எனும் நிகழ்ச்சியே. இதில் கணனி சம்பந்தமான பல்வேறு புதிய தகவல்களை கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். உங்களுக்கு விருப்பமானதை நீங்கள் தெரிவு செய்யுங்களேன்..!

இன்னும் என்ன தாமதம்... இங்கே சுட்டி களத்தில் இறங்கி பதிவிறக்குங்கள் (http://www.bbc.co.uk/radio/downloadtrial/).

leomohan
07-03-2007, 01:01 PM
Trial என்று இருக்கிறதே மயூரேசன்?

மயூ
07-03-2007, 01:47 PM
Trial என்று இருக்கிறதே மயூரேசன்?
எதிர்காலத்தில பணமாக்குவாங்களோ தெரியாது...
இப்போதைக்கு இலவசம்தான்...:D

pradeepkt
08-03-2007, 03:31 AM
நல்ல செய்திதான்.
நேரடியா டிவியிலேயே இதெல்லாம் வராதா?

மயூ
08-03-2007, 03:06 PM
நல்ல செய்திதான்.
நேரடியா டிவியிலேயே இதெல்லாம் வராதா?
றேடியோ பற்றிப் பெசினா டீவி பற்றிப் பேசுறீங்களே???
எல்லாம் குளம்பிப் போய்த்தான் இருக்குது...
பார்ப்பம் எங்க போய் ஐயா நிக்கப் போறார் என்று :rolleyes:

அறிஞர்
08-03-2007, 03:20 PM
நன்றாக உள்ளது.

வியாபர உலகில் பல புது யுக்திகள்....

நன்றி மயூரேசன்..
---

மனோஜ்
08-03-2007, 04:03 PM
நன்றி மயூரரே