PDA

View Full Version : நல்ல செய்தி



leomohan
07-03-2007, 12:03 PM
வெகு நாட்களின் போராட்டத்திற்கு பிறகு, என்னுடைய குறைவான மென்பொருள் ஞானத்தை வைத்துக் கொண்டு Php Chat மற்றும் Ajax module-ஐ Higopi தமிழ் கருவிகளின் உதவியுடன் இணையத்தில் தமிழில் விரைவு அரட்டை மற்றும் தூதூவன் -Messenger மென்பொருட்களை வெற்றிகரமாக அமைத்து முடித்தேன்.

இது எனது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது.

பென்ஸ்
07-03-2007, 01:48 PM
மோகன்...

எப்படி உங்களால் மன்றம், பணி, புத்தகங்கள், கணிபொறி சாதனைகள்
என்று எல்லாம் ஒரே நேரத்தில் செய்ய முடிகிறது.....

புத்தகம் வாசிப்பது எப்படி என்று எங்களுக்கு சொல்லி தந்தது போல்
இந்த ரகசியத்தையும் சொல்லி தரலாமா????

மயூ
07-03-2007, 01:52 PM
மதன் உங்களுக்கு எவ்வாறு இவ்வளவு நேரம் கிடைக்கின்றது என்றே தெரியவில்லை...
வாழ்க நின் பணி!!!

அறிஞர்
07-03-2007, 02:11 PM
அருமை மோகன் வாழ்த்துக்கள்..
இதை எப்படி பயன்படுத்த போகிறீர்கள்.. என்று விளக்கம் கொடுத்தால்.
பயன்படுத்தி மகிழ்வோம்.

leomohan
07-03-2007, 02:39 PM
ஊக்குவித்த நண்பர்களுக்கு நன்றி.

http://www.etheni.com/chat

இதில் நீங்கள் பதிவு செய்யாமல் துரித அரட்டை செய்யலாம். இது phpFreeChatல் அமைந்துள்ளது. இதில் HiGopi யின் தமிழ் மாற்றியை பயன்படுத்தி அங்கும் இங்கும் கோடுகளை (code) தூக்கி பிழிந்து வேலை செய்ய செய்துவிட்டேன்.

http://www.etheni.com/chat3

இது Ajax module, Web 2.0 வில் அமைந்துள்ளது. இதிலும் கோடுகளுடன் சற்ற நேரம் மண்டை பிய்த்துக் கொண்டு ஒருவழியாக தமிழுடன் இணைத்துவிட்டேன்.

இதற்கு பதிவு செய்துக் கொள்ள வேண்டும். MSN Messenger போன்றது. விரைவாக Load ஆகும்.

என்னுடைய ஐடி leomohan

நண்பர்களும் பதிவு செய்து ஐடி கொடுத்தால் கதைக்கலாம்.

leomohan
07-03-2007, 02:44 PM
Http://www.etheni.com/chat3/help/im1.jpg

Http://www.etheni.com/chat3/help/im2.jpg

Http://www.etheni.com/chat3/help/im3.jpg

leomohan
07-03-2007, 02:49 PM
Http://www.etheni.com/chat3/help/im4.jpg

தமிழில் கதைக்க கோடு போட்டு காட்டப்பட்டுள்ள buttonஐ தட்ட வேண்டும். பிறகு அது புதிய சாளரத்தை திறக்கும்.

leomohan
07-03-2007, 02:51 PM
மோகன்...

எப்படி உங்களால் மன்றம், பணி, புத்தகங்கள், கணிபொறி சாதனைகள்
என்று எல்லாம் ஒரே நேரத்தில் செய்ய முடிகிறது.....

புத்தகம் வாசிப்பது எப்படி என்று எங்களுக்கு சொல்லி தந்தது போல்
இந்த ரகசியத்தையும் சொல்லி தரலாமா????

உடல் ஒத்துழைக்காவிட்டாலும் உள்ளம் இன்னும் வேண்டும் வேண்டும் என்று கேட்பதால் வந்த வினை :)

leomohan
07-03-2007, 02:51 PM
மதன் உங்களுக்கு எவ்வாறு இவ்வளவு நேரம் கிடைக்கின்றது என்றே தெரியவில்லை...
வாழ்க நின் பணி!!!

நன்றி மயூரேசன். பதிவு செய்து தங்கள் ஐடியை கொடுங்கள்.

leomohan
07-03-2007, 02:52 PM
அருமை மோகன் வாழ்த்துக்கள்..
இதை எப்படி பயன்படுத்த போகிறீர்கள்.. என்று விளக்கம் கொடுத்தால்.
பயன்படுத்தி மகிழ்வோம்.

மிக்க நன்றி அறிஞரே. தாங்கள் பதிவு செய்து ஐடி கொடுங்கள். மேலும் உபயோகப்படுத்த சில படங்களை இணைத்துள்ளேன்.

மன்மதன்
07-03-2007, 04:11 PM
வாழ்த்துகள் மோகன் !!

paarthiban
07-03-2007, 04:12 PM
வாழ்த்துக்கள் நண்பர் மோகன்.

leomohan
07-03-2007, 04:15 PM
நன்றி மன்மதன், பார்த்திபன்.

pradeepkt
08-03-2007, 03:57 AM
மோகன்,
சும்மாச் சொல்லப்படாது... உங்க பல்தொழில் திறமை நிஜமாவே என்னை வியப்படைய வைக்குதுங்க.
உங்க வலைத்தளத்தில் இ - தேனீ ன்னு பேரு வச்சது சாலப் பொருத்தம்.
வாழ்த்துகள்

leomohan
08-03-2007, 10:27 AM
மோகன்,
சும்மாச் சொல்லப்படாது... உங்க பல்தொழில் திறமை நிஜமாவே என்னை வியப்படைய வைக்குதுங்க.
உங்க வலைத்தளத்தில் இ - தேனீ ன்னு பேரு வச்சது சாலப் பொருத்தம்.
வாழ்த்துகள்

நன்றி ப்ரதீப்.

பாரதி
08-03-2007, 11:57 AM
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது மோகன்.
என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

ஓவியா
08-03-2007, 12:02 PM
சபாஷ் மோகன்.

மேலும் பல வெற்றிக் கனிகளை சுவைக்க வாழ்த்துக்கள்.

இளசு
09-03-2007, 05:44 AM
பாராட்டுகள் மோகன்..

உங்கள் முயற்சிகள் வியப்பான மகிழ்ச்சி அளிக்கின்றன.

வெற்றிகள் தொடர வாழ்த்துகள்.

ஷீ-நிசி
09-03-2007, 06:02 AM
வாழ்த்துக்கள் மோகன் அவர்களே! நான் இணைந்துவிட்டேன்.... user name: shenisi

guna
09-03-2007, 06:06 AM
வாழ்துக்கள் மோகன்

மேலும் மேலும் 'வாழ்துக்கள்' சொல்லும் வாய்பை எங்களுக்கு தந்து கொண்டே இருங்கள்.

leomohan
09-03-2007, 07:09 AM
gunaவாழ்துக்கள் மோகன்

மேலும் மேலும் 'வாழ்துக்கள்' சொல்லும் வாய்பை எங்களுக்கு தந்து கொண்டே இருங்கள்.

Today 10:02 AMஷீ-நிசிவாழ்த்துக்கள் மோகன் அவர்களே! நான் இணைந்துவிட்டேன்.... user name: shenisi

Today 09:44 AMஇளசுபாராட்டுகள் மோகன்..

உங்கள் முயற்சிகள் வியப்பான மகிழ்ச்சி அளிக்கின்றன.

வெற்றிகள் தொடர வாழ்த்துகள்.

Yesterday 04:02 PMஓவியாசபாஷ் மோகன்.

மேலும் பல வெற்றிக் கனிகளை சுவைக்க வாழ்த்துக்கள்.

Yesterday 03:57 PMபாரதிமிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது மோகன்.
என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

உற்சாகமூட்டும் மன்ற உறவுகள் உள்ள வரை புது முயற்சிகள் தொடரும். ஊக்கத்திற்கு ஆயிரம் நன்றிகள்.
உங்களை சேர்த்துவிட்டேன் அற்புதராஜ்

மனோஜ்
09-03-2007, 06:20 PM
லியோ மோன் சார் நா உங்க உறுப்பினம் தா வற நேரம் இல்ல
நானும் தமிழ் துர்துவனில் இனைந்து விட்டேன்
user name : manojoalex
மன்றம் வற முயற்சிக்கிறோன்
உங்கள் வெற்றி தொடற வாழ்துக்கள்