PDA

View Full Version : மெளனமான நேரம்



ஷீ-நிசி
07-03-2007, 12:00 PM
உன் உதடுகளின் ரேகைளில்
ஜாதகம் பார்த்திட,
என் உதடுகள் பிரியப்படுகின்றன!

உன் காதின் வளைவுகளை
கொஞ்சம் வருடி விட,
என் விரல்கள் பிரியப்படுகின்றன!

உன் கன்னங்களால்....
என் மார்பின் ரோமங்களை!
முத்தமிடு முழுமதியே -நீ
என் இதயத்தின் நிம்மதியே!

இதோ!
உன் இதயம் துடிக்கின்ற சத்தம்
என் இதயத்தில் நீ கேட்கின்றாய்!

எனக்காய் மட்டுமே துடித்திடுமா
என்று என்னை நீ கேட்கின்றாய்!

சீ! என்று

உன் முதுகினை சற்றே
என் கரங்களினிடையில்
சிறையிலிடுகிறேன்...

விந்தை!!
உன்னை சிறையிலிட்டு
உன்னிடமே கைதியானேன்..

உன் கன்னங்கள்
என் இரு உள்ளங்கைகளில்
தஞ்சமடைந்தன!

தலை சாய்த்து
பார்க்கும் என்னை,
தலை உயர்த்தி
பார்க்கிறாய் பெண்ணே!

நம் இரு விழிகளும
பேசிக்கொள்கின்றன!

நம் இரு உதடுகளும்
பார்த்துக்கொள்கின்றன!

நொடியின் கால அளவென்பது
ஒரு சிட்டிகையின் நேரம்!
ஒரு கண்ணிமைக்கும் நேரம்!

இனி
நம் உதடுகள் நெருங்கி
வந்துக்கொண்டிருக்கும்
நேரங்களையும்
சேர்த்துக்கொள்ளலாம்!

இதழ்களுக்கு
இடையிலான இடைவெளி
குறைந்துக்கொண்டேயிருக்கிறது!

இதயத்தில் உண்டான
இதமான வலி
கூடிக்கொண்டேயிருக்கிறது!

சட்டென்ற ஓர் கணத்தில்
இதழ்கள் நான்கும்
இணைந்துக்கொண்டன!

வயதுக்கு வராத கண்களை
இமைகள் நான்கும்
மூடிவிட்டன..

கூந்தல்களினிடையில் விரல்களும்,
விரலிகளினிடையில் கூந்தலும்,
சிக்கிக் கொண்டன!

எதையும் தொலைக்காமலே
எதையோ தேடிக்கொண்டிருந்தன!

ஜாதகம் பார்த்த -என்
உதடுகளிரண்டும் சொன்னது,

உன் உதடுகளுக்கும் ஜாதகம்
தெரிகின்றதாம்....

இளசு
07-03-2007, 05:25 PM
நிறைய இனிப்பாய், கொஞ்சம் கூச்ச சிலிர்ப்பாய் கவிதை..
விவரணை அவ்வளவு விஸ்தாரம்.. துல்லியம்..

ஃப்ரேம் பை ஃப்ரேம் என்பார்களே அதைப்போல
அதிலும் ஸ்லோ-மோஷனில்..


வாழ்த்துகள் ஷீ-நிசி

நான்காவது போட்டியில் இடம் பெறவேண்டிய கவிதை..
நீளம் கருதி இங்கா?


------------------

ரேகை ஜோசியத்தில் இது புது அத்தியாயம்..
அவன் அவளை விட உயரம் - சொல்வதில் புதிய உபாயம்..

சிறைப்படுத்தவப் போனவன் சிறையில் - காதல் பொது விதி..
இனம் இனத்தோடு சேரும் ( இரு ஜோசியக்கார ஜோடிகள்) - இதுவும் உலக நியதி..

------------------------------

விழியின் வெளுப்பு இப்போ இதழில்
இதழின் சிவப்பு இப்போ விழியில்..

கண்ணதாசன் அடிக்கடி கையாளும் காதல் காட்சிப்பதிவு இது..

அங்கே நிற மாற்று..

விழி பேச, இதழ் பார்க்க

இங்கே பணி மாற்று..

ஷீ-நிசி
08-03-2007, 02:54 AM
நிறைய இனிப்பாய், கொஞ்சம் கூச்ச சிலிர்ப்பாய் கவிதை..
விவரணை அவ்வளவு விஸ்தாரம்.. துல்லியம்..

ஃப்ரேம் பை ஃப்ரேம் என்பார்களே அதைப்போல
அதிலும் ஸ்லோ-மோஷனில்..


வாழ்த்துகள் ஷீ-நிசி

நான்காவது போட்டியில் இடம் பெறவேண்டிய கவிதை..
நீளம் கருதி இங்கா?


------------------

ரேகை ஜோசியத்தில் இது புது அத்தியாயம்..
அவன் அவளை விட உயரம் - சொல்வதில் புதிய உபாயம்..

சிறைப்படுத்தவப் போனவன் சிறையில் - காதல் பொது விதி..
இனம் இனத்தோடு சேரும் ( இரு ஜோசியக்கார ஜோடிகள்) - இதுவும் உலக நியதி..

------------------------------

விழியின் வெளுப்பு இப்போ இதழில்
இதழின் சிவப்பு இப்போ விழியில்..

கண்ணதாசன் அடிக்கடி கையாளும் காதல் காட்சிப்பதிவு இது..

அங்கே நிற மாற்று..

விழி பேச, இதழ் பார்க்க

இங்கே பணி மாற்று..


கவிதையை விமர்சிப்பதில் உங்களின் பாணி வெட்டு ஒன்று துண்டு ரெண்டு போல் உள்ளது... கணித சமன்பாடு போல் கருத்துக்களை அலசி சொல்லிவிடுகிறீர்கள்.... அருமை இளசு அவர்களே!

மனோஜ்
08-03-2007, 07:07 AM
ஷி கவிதை அருமை
உன்மையில்:p :p :p :D

ஷீ-நிசி
08-03-2007, 08:08 AM
நன்றி மனோஜ்

ஆதவா
12-03-2007, 06:53 AM
இரவு பார்க்கிறேன் நண்பரே!

poo
12-03-2007, 10:23 AM
படிக்கும்போதே காட்சிகளில் மனம் ஊன்றிவிடுகிறது....

வாழ்த்துக்கள் ஷீ... கொடுத்துவைத்தவரய்யா நீ...

ஷீ-நிசி
12-03-2007, 02:54 PM
நன்றி பூ.. இரவு கண்டிப்பாக விமர்சியுங்கள் ஆதவா...

ஆதவா
12-03-2007, 07:05 PM
முத்தத்தைப் பற்றி எழுதிய கவிதை... சின்ன நிகழ்வு என்றாலும் அதிமுக்கிய நிகழ்வு.. அதை அழகாய் படமாக்கிய விதம் அருமை.

உன் உதடுகளின் ரேகைளில்
ஜாதகம் பார்த்திட,
என் உதடுகள் பிரியப்படுகின்றன!

முற்றிலும் புதிய சிந்தனையாக உதடுகளின் ரேகைகளுக்கு ஜாதகம்... அபாரம். மறைபொருளை ஆழமாக அழுத்தமாக சொல்லும் பாங்கு உங்களுக்கு நிறைய உண்டு.. (கவிச்செல்வன் பட்டம் என்னுடைய சாய்ஸ்.)

உன் காதின் வளைவுகளை
கொஞ்சம் வருடி விட,
என் விரல்கள் பிரியப்படுகின்றன!

காதலுக்கே உரிய இனிமையான வரிகள். இந்த நிகழ்வை கொஞ்சம் கொஞ்சமாக நேரில் எடுத்து வைக்கும் படியான வரிகள்.

உன் கன்னங்களால்....
என் மார்பின் ரோமங்களை!
முத்தமிடு முழுமதியே -நீ
என் இதயத்தின் நிம்மதியே!
இதோ!
உன் இதயம் துடிக்கின்ற சத்தம்
என் இதயத்தில் நீ கேட்கின்றாய்!

ஒரு அருமையான காமத்தை இப்படி மறையாக சொல்லியிருப்பது மிகவும் அழகு...யாவரும் வெட்கும்படி இல்லாமல் படிக்கும்படி அமைத்திருப்பதுவே சிறப்பு.. மார் ரோமங்களை முத்தமிடு பெண்ணே! அப்ப்போது இதயத்தில் அமர்ந்து உன் இதயச் சத்தத்தைக் கேட்பாய்!! அழகான வரிகள்..... அனுபவக் கவிதைதான்...:)

எனக்காய் மட்டுமே துடித்திடுமா
என்று என்னை நீ கேட்கின்றாய்!
சீ! என்று
உன் முதுகினை சற்றே
என் கரங்களினிடையில்
சிறையிலிடுகிறேன்...

கட்டியணைத்தலை சிறைவைத்தலாய் சொன்னது இன்னும் நேர்த்தி.. இம்மாதிரி எழுதவும் பாங்கு வேண்டும்.. சின்ன நிகழ்வை இப்படியும் சொல்லமுடியும் என்று அடித்துச் சொல்லும் பாங்கு..

விந்தை!!
உன்னை சிறையிலிட்டு
உன்னிடமே கைதியானேன்..
உன் கன்னங்கள்
என் இரு உள்ளங்கைகளில்
தஞ்சமடைந்தன!

எல்லா வரிகளும் வித்தியாசமாக அமைந்திருப்பதுதான் கவிதையிலேயே சிறப்பம்சம். கன்னத்தில் கைவைத்து இருப்ப்தை மிக அழகாக சொல்லி அசத்தி இருக்கிறீர்கள்.

தலை சாய்த்து
பார்க்கும் என்னை,
தலை உயர்த்தி
பார்க்கிறாய் பெண்ணே!
நம் இரு விழிகளும
பேசிக்கொள்கின்றன!
நம் இரு உதடுகளும்
பார்த்துக்கொள்கின்றன!

நிகழ்வுகளின் மாற்றங்கள்.. ஒரு முத்தத்திற்கு விழிகள் ஆயத்தமாவதை மெச்சத்தகுந்த வகையில் சொன்னதுதான் அருமை. விழிகள் பேசுகின்றன.. உதடுகள் பார்க்கின்றன... வியக்கிறேன் வரிகளை..

நொடியின் கால அளவென்பது
ஒரு சிட்டிகையின் நேரம்!
ஒரு கண்ணிமைக்கும் நேரம்!
இனி
நம் உதடுகள் நெருங்கி
வந்துக்கொண்டிருக்கும்
நேரங்களையும்
சேர்த்துக்கொள்ளலாம்!

ம்ம்ம்ம்/// புரிந்தது... பேசத்தெரிந்த உதடுகள் இப்போது பார்க்கவும் செய்தால் என்னாவது.. வினாடிகள் தோற்றுவிடும்..

இதழ்களுக்கு
இடையிலான இடைவெளி
குறைந்துக்கொண்டேயிருக்கிறது!
இதயத்தில் உண்டான
இதமான வலி
கூடிக்கொண்டேயிருக்கிறது!

நான் இதுவரை யாருக்கும் முத்தமிட்டது கிடையாது.. (ம்ம் அந்த பாக்கியம் யாருக்கும் கிடைக்கவில்லை..:D ) ஒருவேளை இட்டால் என்னாகும் என்ற அனுபவத்தை அறிந்துகொள்கிறேன் இவ்வரிகளால்.. இதயவலி இதிலும் உண்டா?.. ம்ம்ம் பார்ப்போம்..:)

சட்டென்ற ஓர் கணத்தில்
இதழ்கள் நான்கும்
இணைந்துக்கொண்டன!

முத்தமிட்டாச்சு.. அதை இவ்வளவு தூரம் கொண்டுவந்தது மிக அருமை. இணந்து கொண்ட இதழ்கள் பிரியாமலிரிக்க வேண்டுக.

வயதுக்கு வராத கண்களை
இமைகள் நான்கும்
மூடிவிட்டன..

அந்த சொர்க்கப்பொழுதினில் கண்கள் மூடி கனவாய் இடுவது அழகு.

கூந்தல்களினிடையில் விரல்களும்,
விரலிகளினிடையில் கூந்தலும்,
சிக்கிக் கொண்டன!
எதையும் தொலைக்காமலே
எதையோ தேடிக்கொண்டிருந்தன!

அந்த உஷ்ணத்தில் கைவிரல்கள் எதையோ துழாவாப் போகிறது// அவளின் கூந்தல் முடி சிக்கியதும் மென்மையாக பிராண்டுகிறது. அனுபவத்தின் விளைவா?

ஜாதகம் பார்த்த -என்
உதடுகளிரண்டும் சொன்னது,
உன் உதடுகளுக்கும் ஜாதகம்
தெரிகின்றதாம்

அதாவது உனக்கு மட்டுமல்ல எனக்கும் தெரியும். என்று சொல்கிறது உதடுகள்.. அருமை நண்பரே!

ஆககூடி முத்தக் கவிதைக்கும் பல முத்தமிடலாம். அந்த நிமிட சந்தோசங்கள் எவ்வளவு இருக்கும்? கைகள் இடும் கோலங்கள். கண்களின் பாஷை இடமாற்றங்க்கள். மெளனம். இவையெல்லாம் ஒட்டுமொத்தமாக சேர்ந்து .......... அடாடா!! அருமை ஷீ! நண்பா!

கவிதையில் புது பரிமாணம் தெரிகிறது. மறைத்து எழுதினாலும் பொருள் மாறவில்லை. இன்னும் இங்கே பார்வையிடாதவர்கள் கண்டிப்பாக பார்க்ககூடிய கவிதை.. சிறு நிகழ்வை படம் பிடித்துக்காட்டும் ஷீக்கு சிறப்பு வாழ்த்துக்கள்

நன்றி
ஆதவன்

இளசு
12-03-2007, 07:22 PM
கவிதையை விமர்சிப்பதில் உங்களின் பாணி வெட்டு ஒன்று துண்டு ரெண்டு போல் உள்ளது... கணித சமன்பாடு போல் கருத்துக்களை அலசி சொல்லிவிடுகிறீர்கள்.... அருமை இளசு அவர்களே!

ஷீ-நிசி..

ஆற்றின் குறுக்கே புகுந்து இரண்டு கை அள்ளிப்பருகுபவன்
தரும் விமர்சனம் என்னுடையது..

ஆற்றின் போக்கில் கூடவே போய் அதன் ஆச்சரியங்களை
அப்படியே சொல்லால் அள்ளித்தருவது ஆதவாவுடையது..

வெட்கி விக்க வைக்கும் விரிவான விமர்சனம் தந்த
ஆதவா-வால் மௌனமான நேரம் பொன்னான நேரமாய் கனக்கிறது..

வந்தனங்கள் ஆதவா...

leomohan
12-03-2007, 07:45 PM
விந்தை!!
உன்னை சிறையிலிட்டு
உன்னிடமே கைதியானேன்..

....

அற்புதமான வரிகள்.

ஓவியா
13-03-2007, 12:36 AM
உன் உதடுகளின் ரேகைளில்
ஜாதகம் பார்த்திட,
என் உதடுகள் பிரியப்படுகின்றன!
ஒரு முத்ததிற்க்கு இப்படி ஒரு ரூட்டா......ஆரம்பம் படு தூள்

உன் காதின் வளைவுகளை
கொஞ்சம் வருடி விட,
என் விரல்கள் பிரியப்படுகின்றன!
ஆசை மெல்ல துளிர்க்கின்றது

உன் கன்னங்களால்....
என் மார்பின் ரோமங்களை!
முத்தமிடு முழுமதியே -நீ
என் இதயத்தின் நிம்மதியே!
இத இதத்தான் எதிர்ப்பார்த்தேன்

இதோ!
உன் இதயம் துடிக்கின்ற சத்தம்
என் இதயத்தில் நீ கேட்கின்றாய்!
எனக்காய் மட்டுமே துடித்திடுமா
என்று என்னை நீ கேட்கின்றாய்!
அல்லே அல்லே :)


சீ! என்று

உன் முதுகினை சற்றே
என் கரங்களினிடையில்
சிறையிலிடுகிறேன்...

விந்தை!!
உன்னை சிறையிலிட்டு
உன்னிடமே கைதியானேன்..
சூப்பர் (சும்மா உக்காந்து யோசிப்பேலா :D )

உன் கன்னங்கள்
என் இரு உள்ளங்கைகளில்
தஞ்சமடைந்தன!

தலை சாய்த்து
பார்க்கும் என்னை,
தலை உயர்த்தி
பார்க்கிறாய் பெண்ணே!
அன்பின் எல்லையாமே!! அதுதானோ

நம் இரு விழிகளும
பேசிக்கொள்கின்றன!
நம் இரு உதடுகளும்
பார்த்துக்கொள்கின்றன!
அருமையான சிந்தனை........தூள் கவிஞ்சரே

நொடியின் கால அளவென்பது
ஒரு சிட்டிகையின் நேரம்!
ஒரு கண்ணிமைக்கும் நேரம்!

இனி
நம் உதடுகள் நெருங்கி
வந்துக்கொண்டிருக்கும்
நேரங்களையும்
சேர்த்துக்கொள்ளலாம்!
காலம் பொண்ணாந்தமே...இப்பதான் புரியுது...:)

இதழ்களுக்கு
இடையிலான இடைவெளி
குறைந்துக்கொண்டேயிருக்கிறது!
இதயத்தில் உண்டான
இதமான வலி
கூடிக்கொண்டேயிருக்கிறது!
நினைக்கும் போதே ஆ-ஹா இனிக்குதே

சட்டென்ற ஓர் கணத்தில்
இதழ்கள் நான்கும்
இணைந்துக்கொண்டன!

வயதுக்கு வராத கண்களை
இமைகள் நான்கும்
மூடிவிட்டன..
இச்சிக்கோ இச்சிக்கோ

கூந்தல்களினிடையில் விரல்களும்,
விரலிகளினிடையில் கூந்தலும்,
சிக்கிக் கொண்டன!
யார் யாரை சிறையில்லிட்டது....

எதையும் தொலைக்காமலே
எதையோ தேடிக்கொண்டிருந்தன! :)

ஜாதகம் பார்த்த -என்
உதடுகளிரண்டும் சொன்னது,

உன் உதடுகளுக்கும் ஜாதகம்
தெரிகின்றதாம்....


மிகவும் அருமையான காதல் கவிதை.
அந்த முதல் முதம் கவிதை போட்டிக்கு அனுப்பி வைத்திருந்தால். பரிசு கிட்டி இருக்குமோ!!!!

ஷீ-நிசி, மீண்டும் ஒரு அருமையான படைப்பு :)

பாராட்டுகிறேன்

ஷீ-நிசி
13-03-2007, 04:01 AM
அனுபவம் இல்லாமலே ஆதவாவின் விமர்சனம் அழகு...
விமர்சனத்திற்கு சின்ன விமர்சனம் செய்திட்டார் இளசு..
மோகன் ரசித்த வரியை மேற்கோள் காட்டினார்..
ஓவியா பரிசு கிடைத்திருக்குமே என்று ஆதங்கப்பட்டார்... (கவிதாயினி நீங்க இருக்கும்போது எனக்கு எப்படிங்க பரிசு கிடைக்கும்)... அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றி...