PDA

View Full Version : 8ம் பாகம் கள்ளியிலும் பால்



gragavan
07-03-2007, 09:50 AM
அலுவலகத்தில் சந்தியாவிடம் அன்று பேசியவர்கள் எல்லாரும் காயங்களோடு திரும்பினார்கள். அந்த அளவிற்குக் கடித்து வைத்திருந்தாள். விமான நிலையத்தில் இருந்து நேராக அலுவலகத்திற்கு எதிலும் மோதாமல் அவள் வந்து சேர்ந்ததே அதிசயந்தான்.

பெருமாள்சாமி அவளை வீட்டிற்கு அழைத்ததற்கு மறுப்புத் தெரிவித்து விட்டு அவள் அலுவலகம் புறப்பட்டாள். சரவணன் அவளுக்கு விடை கொடுத்து விட்டு பிறகு ஃபோன் செய்வதாகச் சொல்லியிருந்தான்.
அதெல்லாம் அவளுக்கு ஒன்றுமில்லை. ஆனால் சரவணனுக்கு நல்ல வரன் பார்த்திருப்பதாகச் சொன்னதுதான் அவளைக் காக்கை போல கொத்திக் கொண்டிருந்தது. ஒரு செயலை எப்பொழுது செய்வோம்? துணிச்சல் இருந்தால்தானே? அந்தத் துணிச்சல் தன்னம்பிக்கை, கடவுள் நம்பிக்கை என்று பல பெயர்களில் கிடைக்கும். ஆனால் சந்தியாவிற்கு அந்தத் துணிச்சல் வருவதே சரவணனிடமிருந்துதான். அது இனிமேல் இல்லாமல் போகுமென்றால்? ஒருவேளை அவனுக்கு திருமணம் ஆகி விட்டால்? அவளது நிலை? அவளும் திருமணம் செய்து கொள்வதா? அது நடக்குமா? அவன் ஆண். இவளோ பெண். அதிலும் குழந்தை பெற்றவள்? அவளால் எதையும் யோசிக்க முடியவில்லை. யோசித்ததையும் ஒப்புக் கொள்ள முடியவில்லை.

தேன்மொழியைத் தொலைபேசியில் அழைத்தாள். ஆனால் அடுத்த வாரம் இருக்கும் புத்தக வெளியீட்டு வேலையாக அவள் இருப்பதால் இரவில் அழைப்பதாகச் சொல்லி விட்டாள். அடுத்த வார புதனன்று சென்னையில் காமராஜ் மெமோரியல் ஹாலில் வெளீயீடு. பிரபல திரைப்படப் பாடலாசிரியர் என்பதால் பல பிரபலமானவர்கள் வருவார்கள். ஏ.ஆர்.ரகுமான் இந்தியாவில் இருப்பதால் அவரும் வருகிறார். அதுவுமில்லாமல் தேன்மொழியின் ரசிகர்கள் வேறு. அதற்கு அடுத்த நாள் லேண்ட்மார்க்கில் ரசிகர் சந்திப்பு. புத்தகம் வாங்குகின்றவர்களுக்குக் கையெழுத்திட்டுக் கொடுக்கும் விழா. அத்தனைக்குமான ஏற்பாடுகள் ஓடிக் கொண்டிருந்தன. அதனால்தான் அவள் சந்தியாவுடன் சரியாகப் பேச முடியவில்லை.

தேன் மட்டுமா? சரவணனும்தான். ஃபோன் செய்வதாகச் சொன்னவன்...காலையரும்பி பகலெல்லாம் போதாகி மாலையில் மலர்ந்த மலர் இரவில் வாடிய பின்னும் அழைக்கவில்லை. ஒரு குறுஞ்செய்தி கூட இல்லை. அவனை அழைக்கவும் செய்தி அனுப்பவும் சந்தியாவின் மனநிலையும் ஒப்புக் கொள்ளவில்லை. அவள் என்ன மிதமா? அதே போலத் தேன்மொழியும் சொன்னபடி இரவில் அழைக்கவில்லை. காத்திருந்த சந்தியா எப்படியோ ஒரு வழியாகத் தூங்கிப் போனாள்.

ஆனால் விடியல் அவளுக்கு விடியலாகத்தான் இருந்தது. அவளை எழுப்பியதே சரவணனின் குறுஞ்செய்திதான். "de word sweet is obsolete 4m now and further sandhya is what we have to use :-) good morning. vil cal at 10. hv a gud day" படித்ததும் சந்தியாவின் முகத்தில் புன்னகை. படபடவென அவள் கிளம்பி அலுவலகம் வந்து விட்டாள். ஆனால் பத்து மணிதான் வழக்கம் போல வந்தது. அதுவும் சரவணனின் தொலைபேசி அழைப்போடு.

"ஏ! சந்தி! சாரிடா. நேத்து பயங்கர பிசி." மொபைல் வழியாக தேவனின் திருச்சபைச் செய்தி கேட்டுப் பரவசமடைந்தாள்.
"நல்லாயிருக்கேன். இன்னைக்கு நீ என்ன பண்ற? லஞ்சுக்கு இங்க வர்ரியா?"

"லஞ்சுக்கு முடியாது. ஆனா நாலு மணிக்கு மேல ஒன்னால முடியும்னா ஈ.சி.ஆர் ரிசார்ட் போலாம். சரியா?" உண்மையிலேயே சந்தியாவிற்கு அது திருச்செய்திதான். ஒப்புக்கொண்டாள். அதே போல நாலு மணிக்கு இருவரும் சென்றார்கள். Fishermen's Cove என்ற அந்த நட்சத்திர விடுதியின் கடலைப் பார்த்த ஃபிரெஞ்சு ஜன்னல் அறை அவர்களுக்கு உதவியது.

வழியெல்லாம் வெட்டிக் கதை பேசிக் கொண்டு வந்தவர்கள். அறைக்குள் வந்ததும்...கதவை மூடியதும்....ஒருவரையொருவர் மூடிக் கொண்டனர். ஏதோ கின்னசில் முத்த சாதனையெல்லாம் இருக்கிறதாமே...அவையெல்லாம் புறமுதுகிட்டு ஓடின. "பொருத்தம் உடலிலும் வேண்டும். புரிந்தவன் துணையாக வேண்டும்" என்று கண்ணதாசன் சொல்லியிருக்கின்றாரே. அதுதான் அங்கு நடந்தது. எல்லா விரல்களுக்கும் வீணை நாதம் கொடுக்காது. வீணையின் நெளிவு சுளிவுகள் விரலுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அதே நேரத்தில் மீட்டும் விரலுக்குத் தக்க ஒலியை வீணையும் கொடுக்க வேண்டும். அதுதான் அங்கு நடந்தது. எத்தனையோ விரல் மீட்டிய வீணைதான். ஆனால் அப்பொழுதெல்லாம் ஓசையை உண்டாக்கியது இப்பொழுது இசையை உண்டாக்கிக் கொண்டிருந்தது. அந்த இசைதான் விரலுக்குள் ஒளிந்திருக்கும் திறமையையெல்லாம் வெளிக்கொண்டு வந்தது.
இருவரையும் ஒன்றாகக் குளிப்பாட்டிக் கொண்டிருந்த ஷவரும் அந்தக் குளியலறையும் அதிலிருந்த பெரிய கண்ணாடியும் வெட்கப்பட்டுக் கொண்டிருந்தன.

"சந்தி....இதெப்படிடா?"

"எது?"

"உங்கிட்ட மட்டும் ஒன்னு இருக்கே"

"உங்கிட்டயும்தான் ஒன்னு இருக்கு"

"ஏய்ய்ய்ய்ய்ய்ய்...."

"பின்னே என்னவாம்....i love u soooooooooooooooooooo much!" பச்.
"i too da sandhy. நான் முழுமையான நானா இருந்ததும் இருக்குறதும் ஒங்கிட்ட மட்டுந்தான். தெரியுமா?"

"சரி. இருக்கப் போறது?"

"அதுவும் அப்படித்தான். no change at any circumstance." பச்.

"உனக்குக் கல்யாணம் ஆனாக் கூடவா? ம்ம்ம்..."

"எனக்கா? என்ன சந்தி? நீயா இப்பிடிக் கேக்குற?"

"இல்லடா. ஏதோ வரனெல்லாம் வந்திருக்காமே."

"oh myyyyy god. அதையேங் கேக்குற? எல்லாத்தையும் ஒதுக்கியாச்சு. அதுனாலதான் நேத்து ஒனக்கு ஃபோன் பண்ண முடியலை."

"நெஜம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா? promise?"

"bra miss...oooopppps...promise" பச்.

அதற்குப் பிறகு என்ன நடந்தது என்று சொன்னால் இந்தக் கதையை மஞ்சள் பத்திரிகையில்தான் போட வேண்டும். ஏழு மணிக்கு இருவரும் கடற்கரை ஓரத்தில் மெல்லிய விளக்கு வெளிச்சத்தில் சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டே பேசியதைக் கவனிப்போம்.

"அம்மா அப்பா நல்லாயிருக்காங்களா சந்தி? போன தடவ வந்தப்போ பாத்தது. கண்ணனுக்குக் கல்யாணம் ஆயிருச்சுல்ல. எதுவும் விசேஷம்?"

"எல்லாரும் நல்லாயிருக்காங்க. கண்ணனும் நல்லாயிருக்கான். ஒரு பையன் அவனுக்கு. அரவிந்துன்னு பேரு. ஆனா இப்போ டி.நகர் வீட்டுல இருக்கான். அவனோட மாமியார் இப்ப கூடதான் இருக்காங்க. அதுனாலயும் அவங்க வீட்டுக்காரங்க வரப்போக இருக்குறதால டி.நகர் வீடுதான் சரீன்னு முடிவு செஞ்சோம்."

"அதுவும் நல்லதுதான். அவனையும் ஒரு வாட்டி பாக்கனும். போன வாட்டி எப்படியோ முடியாமப் போயிருச்சு. சரி. ஒன்னோட சினிமா ஃபிரண்டு எப்படியிருக்கா?"

"ஹலோ...அதென்ன சினிமாக்கார ஃபிரண்டு. தேன்மொழி ஒனக்கும் தெரியுந்தானே. அவளைப் பேரைச் சொல்லி யாரும் கூப்பிடுறதில்லை. கவிப்பூ தேன்மொழின்னுதான் கூப்புடுறாங்க. அதுவுமில்லாம அவ கள்ளியிலும் பால்னு ஒரு கவிதைத் தொகுப்பு போடுறா. புதங்கிழமை புத்தகவெளியீடு. அதுக்காகக் குழந்தையத் தூங்க வெச்சிட்டு அவளும் அவ வீட்டுக்காரனும் வேலை பாக்குறாங்க." சொல்லி விட்டுக் கிண்டலாகச் சிரித்தாள்.

போலியாகக் கெஞ்சினான் சரவணன். "ஆத்தா! மகமாயி. மன்னிசுரும்மா...அவ உன்னோட ஃபிரண்டாவே இருக்கட்டும். நமக்கும் கவிதைக்கும் ரொம்பத்த்த்த்தூரம். அது இருக்கட்டும். அப்பா அம்மாவைப் பாக்க எப்ப வீட்டுக்கு வரட்டும்?"

"வீட்டுக்கா? நாளைக்கு வாடா. ஆறு மணிக்கு மேல வா. அப்பத்தான் நானும் ஆபீஸ் முடிச்சிட்டு வரச் சரியா இருக்கும். ஒன்னு பண்ணு. நைட் சாப்பாடு வீட்டுலதான். சரியா?"

"நீ சொன்னா சரிதான்."

"அடடே! நான் என்ன சொன்னாலும் சரியா?"

"ஆமாம் மேடம். நீங்க என்ன சொன்னாலும் அது சரியில்லை. ஹா ஹா ஹா"

இருவரும் சேர்ந்து சிரித்தார்கள். வீட்டிற்கு அவன் காற்றில் ஏறிப் போனான். அவள் மேகத்தில் வந்தாள். வந்து சுந்தரைப் பார்த்ததும்தான் அவளுக்குப் பக்கென்றது. நாளை இரவு உணவிற்கு அவனை வீட்டிற்கு வரச் சொல்லியிருக்கின்றாளே!!!!!!!!!!!

தொடரும்.....

mukilan
07-03-2007, 01:59 PM
இப்ப இப்ப இப்பத்தான் மீட்டர் ஓட்டம் எடுக்கிறது. வாங்க! சீக்கிரம் வந்து மிச்சக் கதையையும் கொடுத்தா படிச்சிட்டு எங்க வேலையைப் பார்ப்போமில்லை!

pradeepkt
08-03-2007, 03:29 AM
ம்ம்ம் இப்பத்தானே சூடு புடிக்குது... இந்த அத்தியாயத்தில் பல இடங்களில் வசனங்கள் தேவையில்லாமல் போய் விட்டது பாருங்கள்... அதனால்தானோ என்னவோ அந்தக் கடைசி வரி நிஜமாகவே ஒரு அதீத எதிர்பார்ப்பைத் தூண்டி விட்டுவிட்டது.

பார்ப்போம் சரவணனையும் சுந்தரையும் சந்தியா எப்படிச் சமாளிக்கிறாள் என்று?

மதி
08-03-2007, 03:42 AM
கவனிச்சீங்களா..
முக்கிய கதாபாத்திரங்கள் பெயரெல்லாம் "ச"-வில் ஆங்கில "எஸ்"..ஸில் ஆரம்பிக்குது..!

SathishVijayaraghavan
08-03-2007, 07:35 AM
கவனிச்சீங்களா..
முக்கிய கதாபாத்திரங்கள் பெயரெல்லாம் "ச"-வில் ஆங்கில "எஸ்"..ஸில் ஆரம்பிக்குது..!

மகிழ்ச்சியான விஷயம்... 'ச' வின் முக்கியத்துவம் தெரிகிரது...

மனோஜ்
08-03-2007, 07:51 AM
இனி விறைவு பயணம்தான் தொடருங்கள்.........

gragavan
08-03-2007, 09:21 AM
கவனிச்சீங்களா..
முக்கிய கதாபாத்திரங்கள் பெயரெல்லாம் "ச"-வில் ஆங்கில "எஸ்"..ஸில் ஆரம்பிக்குது..!
அட ஆமாய்யா. நெஜமாத்தான். சந்தியா, சரவணன், சுந்தர், சுந்தரராஜன், சிவகாமி....ம்ம்ம்ம்....அதுலயும் ஒரு வீட்டுக்குள்ளயே இத்தன ச. ம்ம்ம்ம்..

gragavan
08-03-2007, 09:22 AM
மகிழ்ச்சியான விஷயம்... 'ச' வின் முக்கியத்துவம் தெரிகிரது...
அடியாத்தீ! இதென்ன..இப்பிடிச் சொல்லீட்டீங்க! அவசரப்படாதீக. அவசரப்படாதீக.

ஓவியா
08-03-2007, 11:48 AM
வீட்டிற்கு அவன் காற்றில் ஏறிப் போனான். அவள் மேகத்தில் வந்தாள்..............(உணர்வின் வெளிப்படையா...அசத்துங்க ராகவன்.)

சட்டு-புட்டுனு அடுத்த பாகத்தை போடுங்க தேங்காய் பன் புலவரே, காத்து காத்து கண்ணுக்கு கண்ணாடி வாங்கற நிலை வரப்போகுது. :D :D


ஒரு ஐடியா அந்த கடைசி பாகத்த மட்டும் முதலில் போட்டுடுங்களேன்.....:eek: :eek: :D :D :D .