PDA

View Full Version : சொர்க்கத்தில் ஒரு காதல்(10) - முடிவு



ஆதவா
07-03-2007, 04:48 AM
பகுதி 10 முடிவு.....

வீட்டை காலி செய்து மனதை கொன்றான்..
அவளோடு அலைந்து திரிந்த கானகங்கள்
பூங்காக்கள், சாலைகள் ஆகிய
எல்லா இடங்களிலும் சோகமாய்
ஒரு பிரிவை உணர்ந்தான்..
அங்கே அவளோ
ஏதோ மறந்த உணர்வோடு
மகிழ்ச்சியாக இருந்தாள்..
அக்காள் குழந்தைகளோடு
விளையாடிக்கொண்டும்,
வீட்டில் அக்காளுடன் சண்டைபோட்டும்
மாமாவைக் கொஞ்சிக்கொண்டும்
மருத்துவத் தொழிலைத் தொடர்ந்தும்..
சாதாரணமாகத்தான் இருந்தாள்..
ஆனால் ஏதோ ஒன்று இழந்த நினைவு.
என்ன என்றுதான் தெரியவில்லை..
அன்றைய ஒரு நாள்..
அவள் வீட்டிற்குச் சென்றான்
அங்கே நினைவுகளைப் படரவிட்டான்..
அவளோடு சண்டையிட்ட இடங்கள்,
கொஞ்சிய இடங்கள்
ஒவ்வொன்றாக கணக்கிட்டான்...
சோகம் மட்டுமே மிஞ்சியது...
அவள் ஆவியாகவே இருந்திருக்கலாம்..
மென் குணம்படைத்தவள்
இன்று இதயத்தைத் தைக்கிறாளே!!
அக்காள் வீட்டிலிருந்து
தன் வீட்டிற்கு வந்தாள் பூங்குழலி.
தன் வீடு சற்றே மாறி இருப்பதை
சந்தேகத்தோடு உணர்ந்தாள்.
ஆவியாக இருந்த காலத்தில்
நடந்த அத்துணைகளும்
நொடியில் மறந்துவிட்டாள்...
ஏதோ மாற்றம் நிகழ்ந்துள்ளது என்று
நினைத்தாளே தவிர,
அது தானிருக்கும்போதுதான் என்று
நினைப்பு வரவில்லை,,,,
இல்ல மாற்றத்தை நோட்டமிட்டே
மெல்ல மாடி ஏறி வந்தாள்..
அங்கே........
கதிரவன் மாடியை
ஒரு பூங்காவாக மாற்றியிருந்தான்..
பூத்துக்குலுங்கும் செண்பகப்பூவும்
கனகம், ரோஜா, செவ்வந்தி ஆகியவையும்
அழகூட்டப்பட்ட தூண்களில்
படர்ந்திருக்கும் முல்லைகளும்
கொடிகளும்
மாடியை வர்ணமயமாக்கின...
அதைப் பார்த்த அவள்
சொக்கிப் போனாள்...
பூக்களுக்கு தண்ணீர் ஊற்றும்
கதிரவனைக் கண்டதும் வணங்கினாள்.
அவனால்தானே இன்று
பூக்களை ரசிக்க முடிகிறது!!
கதிரவன் சோகத்தை மறைத்தான்
ஆதவனை மறைத்து நிற்கும் மேகமாய்..
விளிம்பில் நீர் எட்டிப் பார்த்தாலும்
முகத்திலே சிரிப்பைக் கொண்டு
அவளை அணுகினான்..
பூங்குழலிக்கு ஏதோ
இழந்த மாற்றம்///
அது அவன் கண்களைப் பார்த்ததும் வந்தது..
கதிரவன் விடைபெற முயன்றான்..
காதலி முன்னே நின்றும்-அதிலும்
உடலோடு இணைந்த உயிராக நின்றும்
வேதனை மிஞ்சப் புறப்பட்டான்...
காதல் வெறும் பஞ்சல்ல.
அவள் இல்லத்து சாவியைக் கேட்டாள்.
அவன் மறந்தாற்போல எடுத்துச் சென்றுவிட்டால்??
சாவிக்கொத்தை குழலியின் கைகளில்
திணித்தான் மெல்ல....
அற்புதங்கள் வாழ்க்கையின்
சில நேரங்களில் நிகழும்...
அதோ!!
அவன் ஸ்பரிசம் பட்டதும்
உயிர் விளையாடிய சித்து விளையாட்டுக்கள்
நினைவுக்கு வந்தன.
அவள் இழந்த உணர்வு இவன்தான்.
ஆம்,,
காதல் என்றும் அழியாது.
உணர்ச்சிகள் மேலிட
கட்டி யணைத்தான் கதிரவன்..
பூமித்தாயை அணைக்கும் ஆதவன் போல..
காதலுக்கு முகமில்லை
மோட்சமில்லை
அகமில்லை.
அது ஒரு வெற்றிடம்
காற்று புக முடியாது//
குழந்தைகள் போல
இரண்டு மனங்களின் பிணைப்பே காதல்..
கதிரவனும் பூங்குழலியும் இனி
நிஜக் காதலர்கள்...
ஆவி உலகை வென்ற காதலர்கள்.
காதல் ஒரு மாயை..
உள் நுழைந்து ஆட்டி படைக்கும் தெய்வீகம்..

வாழ்க காதல்
வளர்க தமிழ்...

ஆதவன்..

guna
07-03-2007, 07:09 AM
அருமை ஆதவா, இறந்தவர்களை மீண்டும் உயிற்பிற்க செய்யும் வலிமை நிஜ காதலிலும் இருக்கக் கூடாதா என்ற ஏக்கத்தினை வர வைக்குது..

அழகாக கதை சொன்ன கவிதைக்கு வாழ்த்துக்கள் ஆதவா.

குணா

மனோஜ்
07-03-2007, 07:17 AM
அருமையான முடிவு ஆதவா
ஆழகான காதல்

பூமித்தாயை அணைக்கும் ஆதவன் போல..
கவிதையை கதையால் கொடுத்த ஆதவறுக்கு வாழ்த்துக்கள் மின்டும் கவிதை கதை படைக்க

ஷீ-நிசி
07-03-2007, 08:56 AM
கதை மூன்றாம் பிறை படம் போல சென்று விடுமோ என்று படித்துக்கொண்டிருந்தேன்... அவன் ஸ்பரிசம் பட்டவுடன் அவள் காதல் நினைவுகள் வந்ததென்று பாஸிடிவ் ஆக முடிவடைந்துள்ளது க(வி)தை...

அப்பாடா..... என்றிருக்கிறதா ஆதவா;)

ஆதவா
07-03-2007, 09:07 AM
நன்றிங்க ஷீ!! எல்லா பாகத்திலும் உங்கள் எழுத்து காணமுடிந்தது...
அதிலும் தனிமடலில் தவறு குறித்தது' இன்றும் மறக்கமுடியாதது. :) :)

இனி இம்மாதிரி கவிதை எழுதினால் தவறை திருத்திவிடுகிறேன் நண்பரே!!!....(ஏற்கனவே எல்லாம் எழுதிவிட்டதால் திருத்தமுடியவில்லை./:mad: )

பார்வையிட்ட எல்லாருக்கும் என் நன்றி உரித்தாகுக.. :)

இளசு
10-03-2007, 08:05 AM
ஒரு படம் ஆயிரம் சொற்களை விஞ்சும் என்றால்
ஒரு தொடல் பல்லாயிரம் வரிகளை மிஞ்சும் எனலாம்..

எதிர் சக்திகள் தொட்டால் மின்னோட்டம் முழுமை பெறும்...
இரு பாதிகள் தொட்டால் வாழ்க்கை வட்டம் நிறைவு பெறும்..


நிறைவான முடிவு..
காதலின் சக்தி சொல்ல புதுமையான களம்..

பாராட்டுகள் ஆதவா!

poo
14-03-2007, 08:30 AM
அருமை ஆதவன்... அதன் போக்கிலேயே விட்டுப்பிடிப்பது என்பார்களே.. அதுபோல கவிதை அலைந்து திரிந்து தாய்மடி காதல்மடி சேர்ந்து இனிதாய் முடிந்துவிட்டது..

திறந்து திறந்து படிக்க முடியாமல் பல தடைகள் இரு நாட்களாய்.. அதுவும் ஒருவித நல்ல தவிப்பான அனுபவம்தான்!

இன்னும் நிறைய எழுதுங்கள்.. தொடர்ந்து ஜெயிக்க வாழ்த்துகளும்.. பாராட்டுகளும்!

ஓவியா
09-04-2007, 02:44 AM
மென் குணம்படைத்தவள்
இன்று இதயத்தைத் தைக்கிறாளே!!

ஹி ஹி ஹி

பூக்களுக்கு தண்ணீர் ஊற்றும்
கதிரவனைக் கண்டதும் வணங்கினாள்.
அவனால்தானே இன்று
பூக்களை ரசிக்க முடிகிறது!!

இதில் பல அர்த்தங்கள்.......யப்பாடா


அவன் ஸ்பரிசம் பட்டதும்
உயிர் விளையாடிய சித்து விளையாட்டுக்கள்
நினைவுக்கு வந்தன.
அவள் இழந்த உணர்வு இவன்தான்.
ஆம்,,,,,,,,,காதல் என்றும் அழியாது.

அச்சோ எங்கப்பா புடிகிறே இந்த வார்த்தைகளை...ஒரு வரியில் சொக்கிப் போனேன்.



காதலுக்கு முகமில்லை
மோட்சமில்லை
அகமில்லை.
அது ஒரு வெற்றிடம்
காற்று புக முடியாது//
குழந்தைகள் போல
இரண்டு மனங்களின் பிணைப்பே காதல்..

இதான் காதலா, கேக்க நல்லாதான் இருக்கு....ஆனா.....கப் சிப்.:icon_wink1:


காதல் ஒரு மாயை..
உள் நுழைந்து ஆட்டி படைக்கும் தெய்வீகம்..
இந்த வரியை ரசித்தேன்.



என் அனுபவத்தில் 'சிகரங்களை நோக்கி'தான் நான் படித்த முதல் கதைக்கவிதை. (நன்றி:வைரமுத்து)



மொத்த்தில் ஆதவாவின் சொர்க்கத்தில் ஒரு காதல் கவிதைக் கதை (கதைக் கவிதை) மிகவும் அருமை.

கருக்களை அழகாக கையாண்டு இருகின்றீர்கள். கதை தங்களுடையது இல்லை என்பது மட்டுமே ஒரு குறை. இட்'ஸ் ஓகேபா.

ரசனை அளவுடன் இருந்ததும், வர்ணனையை கச்சிதமாக கையாண்டதும் சிறப்புதான்.

சிறந்த நவரச கவியை, சின்ன பாரதியை பாராட்டுவதில் மகிழ்கிறேன்.

வாழ்த்துக்களுடன் பாராட்டுகள் ஆதவா.

ஆதவா
09-04-2007, 02:49 AM
நன்றிங்க இளசு அண்ணா, பூ மற்றூம் ஓவியா!! ஒரே மூச்சில் எல்லா கவிதையும் சிரமம் பார்க்காது படித்த சகோதரி ஓவியா அவர்களுக்கு என் சிறப்பு நன்றியும் கூட....

என் எல்லா பாகத்தையும் சகிப்போடு படித்து முடித்த அனைவருக்கும் நன்றிகள் பல....

இக்கதை Just Like Heaven என்ற படத்திலிருந்து திருடப்பட்ட கரு..

மீண்டும் ஏதேனும் ஒரு கவிதை கதை கிடைத்தால் எழுதுகிறேன்,,,, கொஞ்சம் பொறுமையாகவும் நேர்த்தியாகவும் எழுத முயல்கிறேன்...

நன்றி அனைவருக்கும்

ஓவியா
09-04-2007, 03:02 AM
இக்கதை Just Like Heaven என்ற படத்திலிருந்து திருடப்பட்ட கரு....

ஆதவரே
மேற்க்கோள் காட்டாத பதிவினை தான் திருட்டு பதிவு என்பது...

மேற்கோள் காட்டிய எந்த பதிப்புமே திருடப்பட்டது அல்ல!!

இங்கே பதிக்கப்பட்ட சொர்க்கத்தில் ஒரு காதல் கவிதை 'Just Like Heaven' (நன்றி:Just Like Heaven) என்ற ஆங்கில படத்தின் கருவை மையமாக வைத்து தமிழில் எழுதிய ஒரு கவிதை.

எழுத்து : கவிஞர் ஆதவன்
பதிவு : தமிழ்மன்றம் மற்றும் முத்தமிழ்மன்றம்.

gayathri.jagannathan
09-04-2007, 07:28 AM
ஆதவா... சொர்க்கத்தில் ஒரு காதல் க(வி)தையை முழுவதுமாகப் படித்து பின்பு பின்னூட்டம் இடலாமே என்ற எண்ணத்தினால் கடைசிப் பகுதியில் இந்தப் பின்னூட்டம்...

மிகவும் அழகாகப் பின்னப்பட்ட சொற்கள்.....க(வி)தை நெடுகிலும் உள்ளோடிய ஒரு சிலிர்ப்பு,

இடையில் துளிர் விட்ட நட்பு....

நட்பை உதவியாகக் கொண்டு செய்த முதலுதவி...(என்னை மிகவும் தொட்ட பகுதி இது தான்)

கடைசியில் காதலாகப் பரிணாம வளர்ச்சி பெற்ற நட்பு...
காதலை நினைக்க மறந்த (அல்லது நினைவழிந்த) மனம்... நினைவூட்டிய ஸ்பரிசம்... அத்தனையும் மனதில் நிற்கின்றது...

வார்த்தைகளைக் கையாண்ட விதம் மிகவும் அருமை.... நன்று நன்று


சிவகாமியின் சபதத்தில் கல்கி அவர்கள் சிவகாமியின் நாட்டியத்தின் போது "சிவகாமி நடனம் ஆடியதாகத் தோன்றவில்லை நடனத் தெய்வமானது அவளை ஆட்டுவித்ததாகத் தோன்றியது" என்று...

இந்தக் கவிதையைப் படிக்கும் போது ஏனோ எனக்கு அந்த வரிகள் நினைவுக்கு வந்தன..

ஆதவா
09-04-2007, 01:09 PM
நன்றிங்க ஓவியா அக்க
-------------
நன்றிங்க காயத்திரி.. என் கவிதை, கதை ஆகியவற்றைத் தேடிப் பிடித்து பின்னூட்டம் இருவது எனக்கு மனதில் மகிழ்ச்சி அளிக்கும் விஷயம்.,..
உங்கள் பின்னூட்டம் என் கவிதைக்கு வெற்றி,
மீண்டும் மீண்டும் cஒல்கிறேன்.. என் கவிதையை விட அருமையாக பின்னூட்டம் இடும் மன்ற சொத்துக்களில் நீங்களும் ஒருவர்

இளசு
09-04-2007, 01:39 PM
சிவகாமியின் சபதத்தில் கல்கி அவர்கள் சிவகாமியின் நாட்டியத்தின் போது
"சிவகாமி நடனம் ஆடியதாகத் தோன்றவில்லை நடனத் தெய்வமானது அவளை ஆட்டுவித்ததாகத் தோன்றியது" என்று...

இந்தக் கவிதையைப் படிக்கும் போது ஏனோ எனக்கு அந்த வரிகள் நினைவுக்கு வந்தன..

விமர்சனம் செய்பவர்களுக்கு ஒரு பாடம்..

கற்றேன் காயத்ரி.. நன்றி!

gayathri.jagannathan
10-04-2007, 04:45 AM
விமர்சனம் செய்பவர்களுக்கு ஒரு பாடம்..

கற்றேன் காயத்ரி.. நன்றி!



ஏதோ எனக்கு தெரிந்த மட்டில் விமர்சனம் செய்தேன்...

இளசு அவர்கள் அதில் இருந்து என்ன கற்றீர்கள் என்று தெரியவில்லை..


எனினும் நன்றி இளசு அவர்களே

என் விமர்சனத்தையும் கருத்தில் கொண்ட ஆதவனுக்கு நன்றிகள் பல உரித்தாகுக....

ஆதவா
10-04-2007, 04:54 AM
ஒவ்வொருவர் எழுத்திலிருந்தும் ஒரு வரியேனும் ஆதவன் கற்பதுண்டு,,,
இங்கே குறிப்பிட்டு சொல்ல முடியாது சிலரை.. கிட்டத்தட்ட எல்லாருமே தான்..
அந்த பட்டியலில் நீங்களும்....
உங்கள் வழி இளசு அண்ணாவும்