PDA

View Full Version : வழி



மனோஜ்
06-03-2007, 07:22 PM
பொன் கொண்டுவா
பொருள் கொண்டுவா
என்னைப் பின் தொடர
என்று அழைப்பர்
உலக மாந்தர்



நின்று அழைக்கிறார்
சிலுவை நாதர்.



உன்னை வெறுத்திடு, உன்
சிலுவை எடுத்திடு
என்னைத் தொடர்ந்திடு
என் வழி இது என்றார்.



வெறுக்க முடியுமா உன்னை?
சுமக்க முடியுமா சிலுவை?
இடுக்க வழிதான் இயேசுவழி
இதுதான் ஜீவ வழி



இன்னல் நிறைந்ததாயினும்
இடுக்கண் நிறைந்தாயினும்
இறை இன்பம் ஈடில்லா
நிறை இன்பம் தரும்
நித்திய வழி இயேசு வழி

பாவலர் கிரான் ஜீவன்

இளசு
06-03-2007, 07:35 PM
நன்றி மனோஜ்..

நேர்வழி - கடினவழிதான்..
ஆனாலும் அதுவே மேலான வழி..

நல்ல நம்பிக்கைகள் அவ்வகைப் பயணங்களை
சாத்தியமாக்குகின்றன.. சாசுவதமாக்குகின்றன..

அறிஞர்
06-03-2007, 09:39 PM
பொன் கொண்டுவா
பொருள் கொண்டுவா
என்னைப் பின் தொடர
என்று அழைப்பர்
உலக மாந்தர்

உலக மாந்தருக்கும்..
இணையில்லா நேசருக்கும்
இது தான் பெரிய வித்தியாசம்.

உன்னை வெறுத்திடு, உன்
சிலுவை எடுத்திடு
என்னைத் தொடர்ந்திடு
என் வழி இது என்றார்.
சுயம் நம்மில் மறையட்டும்.
அவர் நம்மில் வெளிப் படட்டும்.


இன்னல் நிறைந்ததாயினும்
இடுக்கண் நிறைந்தாயினும்
இறை இன்பம் ஈடில்லா
நிறை இன்பம் தரும்
நித்திய வழி இயேசு வழி
நித்திய ஜீவ வழியில்
எல்லாரும் நடக்கும்போது
இன்பமே..

நன்றி மனோஜ்.... எழுதியவருக்கு வாழ்த்துக்கள்.. இன்னும் சிறப்பாக எழுதலாம்.

ஓவியா
08-03-2007, 01:46 PM
என்னை இனிப்பில் இட்ட பாகம்

மனோஜ் கவிதை மிகவும் அருமையாக இருக்கின்றது.

படிக்கும் பொழுதே எண்ணத்தில் கரும்பாக இனிகின்றது.

தங்களின் பக்தி என்னை வியக்க வைகின்றது.

கர்த்தா என்றும் உலகை காக்க என் அவா.

............................................................................................................................................................................................

என்னை சுட்ட பாகம்

பொன் கொண்டுவா
பொருள் கொண்டுவா
என்னைப் பின் தொடர
என்று அழைப்பர்
உலக மாந்தர்



மனோஜ்,
இதை நான் எழுத வில்லையென்றால் நான் தங்களுக்கு ஒரு உண்மை தோழியல்ல......:)

அனைவரும் இப்படி பொன்னுக்கும் பொருளுக்கு ஆசை படுவதில்லை.

கர்த்தாவின் இதயத்தில் ஆண்/பெண் என்று பாகு பாடு கிடையாது.

நாமே என் இப்படி ஒரு வெற்றுமையை அவருக்கு உரைக்க வேண்டும்!!!!!


நின்று அழைக்கிறார்
சிலுவை நாதர்.

இங்கிருந்து கவிதையை தொடர்ந்தால்,
பல லட்சம் மாந்தர்கள் தங்களை கை கூப்பி வணங்குவார்கள்.

...............................................................................................................................................................................................................

மீண்டுமொருமுறை கூறுகிறேன்
தங்களின் கவிதையில் கரைந்தேன்

மிக்க நன்றி

உண்மையாய் ஒரு தோழி :)

மனோஜ்
08-03-2007, 02:06 PM
தாங்கள் கவிதையை உனர்ந்த படித்தமைக்கு மிக்க நன்றி

நாமே என் இப்படி ஒரு வெற்றுமையை அவருக்கு உரைக்க வேண்டும்!!!!!
இது கவிதையில் குறிப்பிட படவில்லையே ஓவி

ஓவியா
08-03-2007, 02:13 PM
தாங்கள் கவிதையை உனர்ந்த படித்தமைக்கு மிக்க நன்றி

நாமே என் இப்படி ஒரு வெற்றுமையை அவருக்கு உரைக்க வேண்டும்!!!!!

இது கவிதையில் குறிப்பிட படவில்லையே ஓவி

அட சொல்ல வந்ததே வேறபா.
தப்பாக பொருள் விளங்கி கொண்டேன் :)


நிஜத்திலே ஒரு சிலரே பொன்னும், பொருளையும் ஆதிக்கம் செய்ய ஆசப்படுகின்றனர்.....ஒரு சிலரே :D .

மனோஜ்
08-03-2007, 02:18 PM
ஐயே ஓவி அது மக்கள் என்று பொருள்படுபா

ஓவியா
08-03-2007, 02:28 PM
ஐயே ஓவி அது மக்கள் என்று பொருள்படுபா


அடபாவமே....:eek: :eek:

தப்பு பன்னிட்டேன் மக்கா

சரி மன்னிக்கவும் :D

மனோஜ்
08-03-2007, 02:41 PM
சரி சரி பெலச்சு பேங்க:D :D :D :D :D

ஆதவா
08-03-2007, 02:52 PM
சரி சரி பெலச்சு பேங்க:D :D :D :D :D

ஓவிக்கு அடுத்து பிழையாசிரியர் (பட்டமே கொடுக்கலாம் போங்க)..

கவிதை பொறுத்தவரையில் ஓவி அக்கா என்ன சொல்கிறார் என்று புரியவில்லை. கவிதை அருமையாக இருக்கிறது. தவறுகள் ஏதுமின்றி உங்கள் மதப்பற்று வியக்கவைக்கிறது.

இயேசுவின் மீது எனக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு.. நான் படித்த பள்ளி கிறித்துவப் பள்ளீ என்பதால் கிறித்துவ ஆலயம் அங்குண்டு. தினமும் ஜெபம் செய்யும் பழக்கம் எனக்குண்டு (அப்போது) கிறித்துவ நண்பர்கள் மட்டும் கிடையாது. ஒரே சாந்தியாக ஜெபத்தில் ஈடுபடும் பிற கிறித்தவர்களைப் பார்க்கும்போது எனக்கு பொறாமையாக இருக்கும். நம் இந்துக் கோவில்களின் தூய்மையின்மை நினைவுக்கு வரும்.. ஆலயம் தொழுவது சாலவும் நன்று.. அதினினும் நன்று ஆலயத்தின் தூய்மை காத்தல்.

பைபிள்களில் புதிய ஏற்பாடு மட்டுமே அங்கங்கே படித்திருக்கிறேன். பெரும்பாலும் பொருள் விளங்காமல் போய்விடுவதால் படிக்க விருப்பமில்லாமல் போய்விடுகிறது.. இருப்பினும் எங்கள் எல்லாருக்கும் இலவசமாக கொடுக்கப்பட்ட சிறுவர் விவிலியம் என்ற நூல் பயனுள்ளதாக இருந்தது. அதோடு பெந்தகொஸ்தே என்ற திருச்சபைக்கு இரண்டு மூன்றுமுறை சென்றிருக்கிறேன்.. தற்சமயம்கூட (ஜன 1) அங்கொரு பிரார்த்தனை நடந்ததை சிலமணித்துளிகள் கேட்டேன். இனிமையிலும் இனிமை..

மதத்தை மீறி எனக்கு பிடித்தது அதன் தூய்மை.. மெழுகுவர்த்திகளின் கரைதல் போல் சர்ச் வளாகத்தில் வந்ததும் மனம் கரைந்துபோகும்/.

என்ன இருந்தாலும் இயேசு இன்னும் சிறிது காலம் இருந்திருக்கலாம். மக்களை நல்வழிப்படுத்த...

ஆமென்/
ஆதவன்

மனோஜ்
08-03-2007, 02:59 PM
உங்கள் கருத்துக்கு நன்றி ஆதவா

leomohan
08-03-2007, 05:54 PM
பொன் கொண்டுவா
பொருள் கொண்டுவா
என்னைப் பின் தொடர
என்று அழைப்பர்
உலக மாந்தர்



நின்று அழைக்கிறார்
சிலுவை நாதர்.



உன்னை வெறுத்திடு, உன்
சிலுவை எடுத்திடு
என்னைத் தொடர்ந்திடு
என் வழி இது என்றார்.



வெறுக்க முடியுமா உன்னை?
சுமக்க முடியுமா சிலுவை?
இடுக்க வழிதான் இயேசுவழி
இதுதான் ஜீவ வழி



இன்னல் நிறைந்ததாயினும்
இடுக்கண் நிறைந்தாயினும்
இறை இன்பம் ஈடில்லா
நிறை இன்பம் தரும்
நித்திய வழி இயேசு வழி

பாவலர் கிரான் ஜீவன்

அற்புதமான கவிதை. நன்றி மனோஜ்.

மனோஜ்
09-03-2007, 05:14 PM
நன்றி லியே சார்
தேனிக்கு வரமுடியல லியே சார்