PDA

View Full Version : கவலை எதற்கு இவர்களுக்கு?ஆதவா
06-03-2007, 05:36 PM
என்றோ ஒரு நாள்
கீறிவிட்ட உடலாலும்
அன்றே திணிக்கப்பட்ட
ஒரு விதையாலும் மனம்
கோளாறுகள் நோண்ட
வீதியில் திரிகிறேன்

என் கண்களுக்குத் தெரிவது
ஒரு குழந்தையின்
ஐஸ் குச்சியும்
அவள் கையிலிருக்கும் பலூனும்

என்னைச் சுற்றி
மடையர்களாய் நிற்கும்
இந்தக் கூட்டங்களைக்
கேவலமாக மதிக்கிறேன்

இந்த தெருவே என் வீடு
சாக்கடைகள் என் குளியலறை
குப்பைத் தொட்டி என் சாதஅறை

நினைவுகளின் பிணைப்புகளினால்
என் மேனியில்
படர்ந்து கொண்டிருக்கும்
செயற்கைத் தோல்களை
அங்கங்கே கிழிக்கிறேன்.
என் வீட்டில்
குழந்தையைத் தவிர
கூட்டத்திற்கு குறைவில்லை

பெளர்ணமியின் வேதனையை
முழுமையாக ரசிக்கிறார்கள்
பூலோகக் காவியர்கள்
கலைந்து போன மேகங்களை
எடுத்து போர்த்திவிட
கவலை எதற்கு இவர்களுக்கு?

இளசு
06-03-2007, 06:53 PM
பசி படத்தில் ஒரு காட்சி..

நாயகியின் பாவாடை கிழிந்து தொடை தெரிய
அதை வெறிக்கும் நிழற்குடைப் பயணி..

இன்னும் கிழித்து, ''பார்த்துக்கோ' என உமிழ்வாள்..

-------------------------------------

பிச்சைக்காரியாய், சித்தம் 'சிதைந்தவளாய்'
குழந்தை மனம் கொண்டவளாய்..
ஆனாலும் பருவம் விளைந்தவளாய்
இந்தக் கவிதை நாயகி..

அவள் பிறப்பை விவரிக்கும்
நாசூக்கான ரௌத்ரம் அற்புதம்..

உடை = செயற்கைத் தோல்..
உருவகம் அருமை!

பௌர்ணமி - நிர்வாணம்..
மேகம் - ஆடை..

விவரிக்க இயலா உணர்வுளைக் கிளப்பின இறுதி வரிகள்..

நண்பன், ராம்பால் கண்டால் இன்னும் மெச்சி விமர்சன
முத்தமிடுவார்களே என்ற ஆதங்கத்துடன்..

ஒரு புதிய தளத்தை எட்டிய
இக்கவிதைக்கு சிறப்பு வாழ்த்துகள் ஆதவா..

அறிஞர்
06-03-2007, 07:06 PM
என் கண்களுக்குத் தெரிவது
ஒரு குழந்தையின்
ஐஸ் குச்சியும்
அவள் கையிலிருக்கும் பலூனும்

.....
பெளர்ணமியின் வேதனையை
முழுமையாக ரசிக்கிறார்கள்
பூலோகக் காவியர்கள்
கலைந்து போன மேகங்களை
எடுத்து போர்த்திவிட
கவலை எதற்கு இவர்களுக்கு?
சிதைந்தவளின் பார்வையில்....
ஒரு கவிதை...
ஏழ்மை எத்தனையாய்
ஆட்டிப்படைக்கிறது...

அருமை.. வாழ்த்துக்கள் ஆதவா...
இளசுவின் விமர்சனத்தால்... கவிதை இன்னும் அழகு பெறுகிறது.

ஆதவா
07-03-2007, 04:42 AM
நன்றி அறிஞர் மற்றும் இளசு அவர்களுக்கு... உங்கள் விமர்சனத்தினால் கவிதை மேலும் அழகு பெறுகிறது என்ற பெருமை எனக்குண்டு..

நன்றி

Mano.G.
07-03-2007, 05:00 AM
என்னைச் சுற்றி
மடையர்களாய் நிற்கும்
இந்தக் கூட்டங்களைக்
கேவலமாக மதிக்கிறேன்அருமை ஆதவா,
சந்தர்ப்ப வாதிகளை
விமர்சித்த முறை
"மடையர்கள்"

அருமை

மனோ.ஜி

ஷீ-நிசி
07-03-2007, 06:02 AM
என்றோ ஒரு நாள்
கீறிவிட்ட உடலாலும்
அன்றே திணிக்கப்பட்ட
ஒரு விதையாலும் மனம்
கோளாறுகள் நோண்ட
வீதியில் திரிகிறேன்

எனக்கு புரிந்ததில்...
பிறப்பினைப் பற்றி முதல்
இருவரியில் அடக்கிவிட்டு
அலையும் பிச்சைக்காரனை உருவகபடுத்துவதாய் உள்ளது...

என் கண்களுக்குத் தெரிவது
ஒரு குழந்தையின்
ஐஸ் குச்சியும்
அவள் கையிலிருக்கும் பலூனும்

அவன் மனம் பிள்ளையாய் மாறியதை
உணர்த்துகின்றன அவனின் பார்வைகள்!

என்னைச் சுற்றி
மடையர்களாய் நிற்கும்
இந்தக் கூட்டங்களைக்
கேவலமாக மதிக்கிறேன்

மனிதர்களோடு அவன் கண்ட
அனுபவங்கள் அவர்களை மடையர்களாய்
எண்ணிட வைத்தது அவனை...

இந்த தெருவே என் வீடு
சாக்கடைகள் என் குளியலறை
குப்பைத் தொட்டி என் சாதஅறை

நான் ரசித்த வரிகள்..
அவனுக்கு அது குளியலைறைதான்
அவனுக்கு அது சாத அறைதான்...

நினைவுகளின் பிணைப்புகளினால்
என் மேனியில்
படர்ந்து கொண்டிருக்கும்
செயற்கைத் தோல்களை
அங்கங்கே கிழிக்கிறேன்.

அவன் அவனின் போலி எண்ணங்களை
கிழித்து செயற்கைத்தனமில்லாமல்
இருந்திட ஆசைப்படுகிறான்...

என் வீட்டில்
குழந்தையைத் தவிர
கூட்டத்திற்கு குறைவில்லை

இது புரியவில்லையே ஆதவா.. விளக்குங்கள்!

பெளர்ணமியின் வேதனையை
முழுமையாக ரசிக்கிறார்கள்
பூலோகக் காவியர்கள்
கலைந்து போன மேகங்களை
எடுத்து போர்த்திவிட
கவலை எதற்கு இவர்களுக்கு?

மனிதர்களின் வேதனையை புரிந்து கொள்ள இயலாதவர்கள், பெளர்ணமியைக் குறிந்து என்ன கவலை... இதை சொல்ல வருகிறீர்களா??

இந்த வரிகளின் அர்த்தமும் எனக்கு விளங்கிடவில்லை.. விளக்குங்கள் ஆதவா...

சமூகத்தினைப் பற்றின ஒரு ஆழமான கவிதையாகத்தான் நான் உணர்கிறேன்.. வரிகள் சில இடங்களில் மீண்டும் மீண்டும் ரசித்திட வைக்கிறது.. குளியலறை, சாத அறை..
வாழ்த்துக்கள் ஆதவா. என் சந்தேகங்களை நிவர்த்தி செய்யுங்கள்!

RRaja
07-03-2007, 06:28 AM
கவிதை அருமை

மனோஜ்
07-03-2007, 07:01 AM
ஆதவா கவிதை அருமை முதலில் படித்தது நான் தான் எனக்கு சில வரிகள் புரியவில்லை ஆதனால் பின்னுட்டம் இடவில்லை தற்பொழது இளசு அன்னா அறிஞர் ஷி நிசியின் உதவியால் உமது கவிதையின் சிறப்பு மெளிர்கிறது நன்றி தல;)

ஆதவா
07-03-2007, 07:44 AM
முதலில் நன்றி ஷீ!! என் எல்லா கவிதைகளிலும் 'என் பாணியிலேயே விமர்சனமிட்டு கலக்குகிறீர்கள்.. இந்த கவிதை எழுத உங்கள் பிளாட்பாரமும் ஒரு காரணம்.. நல்ல சமூகக் கருத்துள்ள கவிதை அதிலும் யாரும் எழுதாத கரு ஒன்றைத் துலாவி கடைசியில் கிடைத்ததுதான் இது.. (யாராவது ஒருவர் எழுதியிருக்கலாம்). இது ஒரு பெண்ணின் பார்வையில் எழுதப்பட்டது..

என்றோ ஒரு நாள்
கீறிவிட்ட உடலாலும்
அன்றே திணிக்கப்பட்ட
ஒரு விதையாலும் மனம்
கோளாறுகள் நோண்ட
வீதியில் திரிகிறேன்

எனக்கு புரிந்ததில்...
பிறப்பினைப் பற்றி முதல்
இருவரியில் அடக்கிவிட்டு
அலையும் பிச்சைக்காரனை உருவகபடுத்துவதாய் உள்ளது...

பிச்சைக்கான்(ரி) என்று கூட சொல்லலாம். சித்தம் குறைந்து காணப்படுகிறாள்.

என் வீட்டில்
குழந்தையைத் தவிர
கூட்டத்திற்கு குறைவில்லை

இது புரியவில்லையே ஆதவா.. விளக்குங்கள்!

அவள் வீடு தெரு.. அந்த தெருவில் குழந்தையைத் தவிர மற்ற கேவலமானவர்கள் இருக்கிறார்கள்.. அதாவது வேடிக்கை பார்க்கும் ஈன மனிதர்கள்.. (குழந்தையாவது நல்ல வெள்ளை மனம் கொண்டவர்கள்..)

பெளர்ணமியின் வேதனையை
முழுமையாக ரசிக்கிறார்கள்
பூலோகக் காவியர்கள்
கலைந்து போன மேகங்களை
எடுத்து போர்த்திவிட
கவலை எதற்கு இவர்களுக்கு?

மனிதர்களின் வேதனையை புரிந்து கொள்ள இயலாதவர்கள், பெளர்ணமியைக் குறிந்து என்ன கவலை... இதை சொல்ல வருகிறீர்களா??

இந்த வரிகளின் அர்த்தமும் எனக்கு விளங்கிடவில்லை.. விளக்குங்கள் ஆதவா...

பெளர்ணமி = முழுநிலவு = நிர்வாணப் பெண். அதை முழுமையாக ரசிக்கிறார்கள் இந்த ஈனத்தவர்கள். மேகமானது ஆடை. அதை போர்த்திவிட கவலை இல்லாமல் நிற்கிறார்கள்>..

சமூகத்தினைப் பற்றின ஒரு ஆழமான கவிதையாகத்தான் நான் உணர்கிறேன்.. வரிகள் சில இடங்களில் மீண்டும் மீண்டும் ரசித்திட வைக்கிறது.. குளியலறை, சாத அறை..
வாழ்த்துக்கள் ஆதவா. என் சந்தேகங்களை நிவர்த்தி செய்யுங்கள்

மிக்க நன்றி ஷீ! நான் மிகவும் உங்கள் விமர்சனம் எதிர்பார்த்தேன். நான் ரசித்து எழுதிய அதே வரிகளை நீங்களும் ரசித்தது நமக்குள் இடைவெளி குறைந்த நட்பாக உணர்த்தியது..

ஆதவா
07-03-2007, 07:47 AM
அருமை ஆதவா,
சந்தர்ப்ப வாதிகளை
விமர்சித்த முறை
"மடையர்கள்"

அருமை

மனோ.ஜி

மிக்க நன்றி மனோஜி அவர்களே!

கவிதை அருமை

நன்றி ராஜா!! உங்களை அடிக்கடி பார்க்க முடிவதில்லையே! மன்றத்திற்கு சூரியனாய் வாருங்கள்.....

ஆதவா கவிதை அருமை முதலில் படித்தது நான் தான் எனக்கு சில வரிகள் புரியவில்லை ஆதனால் பின்னுட்டம் இடவில்லை தற்பொழது இளசு அன்னா அறிஞர் ஷி நிசியின் உதவியால் உமது கவிதையின் சிறப்பு மெளிர்கிறது நன்றி தல;)

நன்றி மனோ!! நம்மைப் போன்றவர்கள் இளசு அறிஞர் மற்றும் ஷீ ஆகியோரிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ளவேண்டி இருக்கிறது. அவர்களின் பின்னூட்டத்தில் மிளிர்வதாய் கூறியது நிஜமான உண்மை... :)

மீண்டுமொருமுறை அனைவருக்கும் நன்றி..:)

poo
16-03-2007, 09:41 AM
உண்மையில் நான் மிகவும் ரசித்து படித்தேன் ஆதவன்...

பாராட்டுக்கள்..

ஆதவா
19-03-2007, 05:31 PM
நன்றிங்க பூ!!

பென்ஸ்
19-03-2007, 06:21 PM
ஒரு கவிதையை வாசித்து விமர்சனம் எழுதுவது என்பது கடினமான விஷயம்...
அதிலும் இளசு, ஷீ, ஆதவன் போன்றவர்கள் விமர்சனம் எழுதிய பிறகு எழுத என்ன இருக்கும்...???

என்றோ ஒரு நாள்
கீறிவிட்ட உடலாலும்
அன்றே திணிக்கப்பட்ட
ஒரு விதையாலும் மனம்
கோளாறுகள் நோண்ட
வீதியில் திரிகிறேன்

இது பெண்ணிற்கும், ஆணிற்கும் சொல்லலாம் ...
நேரடி பாதிப்பாயிருந்தால் - பெண்
பதிப்பினால் பிறந்த குழந்தையானல் - ஆண் (அல்லது பெண்)
இந்த சமுதாயத்தில், குறிப்பாக தென்தமிழ் நாட்டில்... ஒரு பெண் கற்பளிக்கபட்டுவிட்டால் அவளது வாழ்க்கை அதோடு முடிந்து விட்டதாக நினைக்கிறார்கள்....
பெஉத்திவீரன் பார்த்துவிட்டு அதில் வரும் கடைசி காட்சியை சுட்டி காட்டி, அதில் அந்த பெண்ணின் தவறு என்ன???
அவள் கற்பழிக்கபட்டால் அவள் வாழ்க்கை முடிந்து விட்டதா...???
அவள் இதை ஒரு முடிவாக நினைக்கவேண்டிய அளவுக்கு ஒரு மனநிலையை உருவாக்கியது எது???
என்று கேள்விகளை அடுக்கி கொண்டு போன என் தோழிக்கு பதில் சொல்லமுடியாமல் போனேன்...
ஆம்....

ஒரு பெண் மானபங்கபடுத்தபட்டால் அவள் வாழ்க்கைமுடிந்துவிட்டது என்று ஒரு "மாயையை" உருவாக்கி வைத்திருப்பது ஒரு தவறில்லையா????

இவ்வாறு பாதிக்கபட்ட பெண்ணுக்கு ஊக்கமும் , நீதியும், பாதுகாப்பும் கிடைக்க பெறுவதை செய்யாமல் இன்னும் ஏன் பரிதாப படமட்டும் செய்கிறோம்....????

ஒரு பெண் மானபங்கபடுத்தபட்டால் அவள் வாழ்க்கை முடிந்துவிட்டது என்ற மனநிலை மாறவேண்டாமா????

மற்றபடி கவிதையில் அவள் வாழ்க்கை முறையையும், நிலையையும் சொல்லியிருப்பது அருமை...

கடைசி வரிகள்.... சாட்டையடி... நெத்தியடி...

------------------------------------

இளசு ..
உள்ளங்களை விமர்சனத்தால் கொள்லை அடிக்கும் வித்தையை எனக்கு சொல்லி கொடுங்கள்.... நீங்கள் மட்டும் இந்த பாக்கியத்தி பெற்று செல்வது கண்டிக்க தக்கது...

ஷீ,
அது எப்படியப்பா.... முழுகவிதையையும் நிதானமாய் விமர்சிக்க முடிகிறது.... கலக்குறிங்க... பாராட்டுகள்...
உங்கள் கவிதைகள் பலவற்றியும் குறித்து வைத்திருக்கிறேன்... இன்னும் வாசித்து எழுத வேண்டி இருக்கு.
அப்படியே பெப் - 14 கவிதைக்கு நன்றி...

ஆதவா
19-03-2007, 06:31 PM
இது பெண்ணிற்கும், ஆணிற்கும் சொல்லலாம் ...
நேரடி பாதிப்பாயிருந்தால் - பெண்
பதிப்பினால் பிறந்த குழந்தையானல் - ஆண் (அல்லது பெண்)
இந்த சமுதாயத்தில், குறிப்பாக தென்தமிழ் நாட்டில்... ஒரு பெண் கற்பளிக்கபட்டுவிட்டால் அவளது வாழ்க்கை அதோடு முடிந்து விட்டதாக நினைக்கிறார்கள்....
பெஉத்திவீரன் பார்த்துவிட்டு அதில் வரும் கடைசி காட்சியை சுட்டி காட்டி, அதில் அந்த பெண்ணின் தவறு என்ன???
அவள் கற்பழிக்கபட்டால் அவள் வாழ்க்கை முடிந்து விட்டதா...???
அவள் இதை ஒரு முடிவாக நினைக்கவேண்டிய அளவுக்கு ஒரு மனநிலையை உருவாக்கியது எது???
என்று கேள்விகளை அடுக்கி கொண்டு போன என் தோழிக்கு பதில் சொல்லமுடியாமல் போனேன்...
ஆம்....

ஒரு பெண் மானபங்கபடுத்தபட்டால் அவள் வாழ்க்கைமுடிந்துவிட்டது என்று ஒரு "மாயையை" உருவாக்கி வைத்திருப்பது ஒரு தவறில்லையா????

இவ்வாறு பாதிக்கபட்ட பெண்ணுக்கு ஊக்கமும் , நீதியும், பாதுகாப்பும் கிடைக்க பெறுவதை செய்யாமல் இன்னும் ஏன் பரிதாப படமட்டும் செய்கிறோம்....????

ஒரு பெண் மானபங்கபடுத்தபட்டால் அவள் வாழ்க்கை முடிந்துவிட்டது என்ற மனநிலை மாறவேண்டாமா????

மற்றபடி கவிதையில் அவள் வாழ்க்கை முறையையும், நிலையையும் சொல்லியிருப்பது அருமை...

கடைசி வரிகள்.... சாட்டையடி... நெத்தியடி...மிகவும் நன்றிங்க பெஞ்சமின்..

எல்லா (மானபங்கப்படுத்தப்பட்ட) பெண்களும் அவ்வாறில்லை என்றாலும் சிலர் அதையே நினைத்து நினைத்து சித்தம் கலங்க திரிவார்கள்.. இவர்களில் சதவீதம் மிக மிக குறைவு.. அத்தகைய ஒருவரைத்தான் இங்கே கொண்டு வந்திருக்கிறேன்..

உங்கள் கருத்துக்கள் சிந்திக்கும்படி இருந்தது.. நன்றிகள் பல.............

கீதம்
28-04-2011, 08:11 AM
சிவப்பியில் உங்கள் பின்னூட்டத்தில் ஆடிய ஊஞ்சல் என்னை இங்கே அழைத்துவந்தது.

சிவப்பியின் நேரடி வாக்குமூலமாய் இந்தக்கவிதையைக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது ஆதவா. அந்த அளவுக்கு என் மனதைப் பாதித்துள்ளது. இவர்களைப் போலத் திரியும் பெண்களுக்கு என்றுமே சமூகத்தில் பாதுகாப்பில்லை. நான் சொல்லவந்ததும் இதைத்தான்.

ஒரு அபலையின் தன்னிலை விளக்கமென எழுதப்பட்ட இக்கவிதை அருமை.