PDA

View Full Version : இலவச குறுந்தகவல்



farhan mohamed
06-03-2007, 07:32 AM
உலகில் எல்லா இடத்துக்கும் இலவசமாக குறுந்தகவல் அனுப்ப இதை பயன் படுத்திப் பாருங்கள் நான் பயன் படுத்திப் பார்த்தேன்.
www.wadja.com

அன்புரசிகன்
06-03-2007, 09:46 AM
உலகில் எல்லா இடத்துக்கும் இலவசமாக குறுந்தகவல் அனுப்ப இதை பயன் படுத்திப் பாருங்கள் நான் பயன் படுத்திப் பார்த்தேன்.
www.wadja.com

நன்றி. இப்பொழுது தான் பதிகிறேன்.

பாரதி
06-03-2007, 01:57 PM
அன்பு நண்பரே,

இந்த தளத்தில் உள்ளவை மோசடியானதாகும். வழக்கமாக குறுஞ்செய்தி அனுப்புவது என்றால் அது கைபேசி வழியாக அனுப்புவதாகும். ஆனால் இது கிட்டத்தட்ட யாஹு மெசஞ்சர் போன்றது அல்லது நமது மன்றத்தில் உள்ள தனிமடல் போன்ற வசதி மட்டுமே... கைபேசி எதற்கும் குறுஞ்செய்தி அனுப்ப இயல வில்லை.

நண்பர்கள் கவனத்துடன் இருக்கவும்.

farhan mohamed
09-03-2007, 04:32 AM
நண்பரே இது கைத்தொலைபேசிக்கும் குறுந்தகவல் அனுப்பலாம்.பல நாட்டு கைத்தொலைபேசிக்கு அனுப்பி எனக்கு பதில் கிடைத்தபின்னே இதில் தெரிவித்தேன்.மோசடியோ இல்லையோ அதைப்பற்றி தெரியாது ஆனால் நான் எனது வீட்டுக்கு கூட இதில் தான் குறுந்தகவல் அனுப்புகிறேன். அவர்கள் பதிலை எனது மொபைலுக்கு அனுப்புவார்கள்.எனது சக நண்பர்கள் கூட இதை பயன்படுத்துகிறார்கள்.

மன்மதன்
09-03-2007, 05:07 AM
நான் சோதனை செய்தேன். குறுந்தகவல் போய்ச்சேரவில்லை..

pradeepkt
09-03-2007, 05:39 AM
ஓ... அப்படியா? எச்சரிக்கைக்கு நன்றி பாரதி அண்ணா!

கணினியில் இருந்து மொபைலுக்குக் குறிப்பாக இந்திய அலைபேசிகளுக்கும் அமெரிக்க அலைபேசிகளுக்கும் இலவசக் குறுந்தகவல் அனுப்ப ஏதேனும் வலைத் தளங்கள் உள்ளனவா?

தமிழ்
09-03-2007, 06:34 AM
இந்தியாவின் நெட்நொர்க் ப்ரிபிக்ஸ் எண் என்ன எனத்தெரியுமா?

pradeepkt
09-03-2007, 07:04 AM
இந்தியாவின் நெட்நொர்க் ப்ரிபிக்ஸ் எண் என்ன எனத்தெரியுமா?
நெட்வொர்க் பிரிபிக்ஸ் என்பது ஒவ்வொரு அலைபேசி சேவை நிறுவனத்திற்கும் மாறுபடும்.
இந்தியாவின் தொலைபேசி இலக்கம் 91

farhan mohamed
09-03-2007, 07:01 PM
நண்பர்களே உங்கள் குறுந்தகவல் ஏன் போவதில்லை எனத்தெரியவில்லை நீங்கள் அதிலுல்ல free text sms என்பதை தெரிவு செய்து அனுப்புங்கள்.உங்களில் யாருக்கவது இதன் உண்மை அறியவேண்டுமெனின் உங்கள் தொலைபேசி இலக்கத்தை தனிமடல் மூலமாவது அனுப்புங்கள் நான் இந்த தளத்திலிருந்து உங்களுக்கு குறுந்தகவலை அனுப்புகிறேன்.ஆனால் இதில் உண்மையிலேயே sms அனைத்துக்கும் செல்கிறது.

பாரதி
10-03-2007, 12:00 AM
நண்பர்களே உங்கள் குறுந்தகவல் ஏன் போவதில்லை எனத்தெரியவில்லை நீங்கள் அதிலுல்ல free text sms என்பதை தெரிவு செய்து அனுப்புங்கள்.உங்களில் யாருக்கவது இதன் உண்மை அறியவேண்டுமெனின் உங்கள் தொலைபேசி இலக்கத்தை தனிமடல் மூலமாவது அனுப்புங்கள் நான் இந்த தளத்திலிருந்து உங்களுக்கு குறுந்தகவலை அனுப்புகிறேன்.ஆனால் இதில் உண்மையிலேயே sms அனைத்துக்கும் செல்கிறது.

அன்பு நண்பரே,
நீங்கள் சொல்வதில் இருந்து செய்தி உண்மையாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். எனது எண்ணை தனிமடலில் அனுப்புகிறேன். என்னுடைய பதிவு பிழையென்றால் அதற்காக வருந்துகிறேன்.

ஜீவா
10-03-2007, 03:15 AM
நானும் முயற்சித்தேன்.. என்னுடைய அபுதாபி நம்பருக்கு கிடைத்தது.. ஆனால் இந்திய மொபைலைக்கு கிடைக்க வில்லை..

நான் பார்த்த வரை, WWW.SMS.AC தளம் மட்டுமே உடனே SMS ஐ அனுப்புகிறது.. ஒரு அக்கவுண்டுக்கு 3 SMS தினம் அனுப்பலாம். அக்கவுன்ட் உருவாக்கும் போது உங்கள் நம்பரை கொடுக்க வேண்டும். அதில் அவர்கள் ஒரு SECRET CODE SMS அனுப்புவார்கள்.. அதை வைத்து உங்கள் ACCOUNT ஐ ACTIVATE செய்ய வேண்டும்.

நான் தினமும் இதை USE பண்ணுகிறேன்..

farhan mohamed
10-03-2007, 04:53 AM
நண்பர் பாரதிக்கு

உங்கள் இலக்கத்துக்கு sms அனுப்பியுள்ளேன் கிடைத்தால் பதிலளிக்கவும்.நான் அனுப்பி இதுவரை அனைத்துக்கும் சென்றது. அடுத்து நண்பன் ஜீவா சொன்ன தளத்தை நானும் ஆரம்பத்தில் உபயோகித்திருக்கிறேன். அது மட்டுப் படுத்தப்பட்ட அளவு உள்ளது உண்மைதான்.இன்னும் ஏதாவது தளங்கள் இருந்தால் நண்பர்களுக்கு எத்தி வைக்கவும்.
நன்றி.:)

மனோஜ்
10-03-2007, 08:45 AM
தாங்கள் குறிய தலத்திற்கு சென்றோன் ஆனால்

If you are seeing this page, we were unable to sign you in. (cookies rejected
இப்படி இருக்கிறது என்ன செய்வது உள்ளே நுழைய முடியவில்லை
அவர்கள் குறியபடியும் செய்து பார்த்துவிட்டேன் என்ன சேய்வது:confused:

saguni
10-03-2007, 09:35 AM
நீங்கள் சொல்வதில் உண்மை இருக்கிறது நான்பல மாதங்களாய் இதுதான் பயன்படுத்துகிறேன்.ஆனால் இரு எண்களும் பதிவு செய்யப்படவேண்டும். சில சமயம் தாமதமாய் வரும் அவ்வளவே..ஆனால் நல்ல சேவை

வெற்றி
10-03-2007, 10:12 AM
தகவலுக்கு நன்றி...அனுப்புகிறேன்
பில் வாராது தானே???

farhan mohamed
10-03-2007, 06:25 PM
இதை ligin பண்ண வேண்டும் அதாவது register பண்ணி எமது email க்கு sms வந்தபிறகு அதிலே click பண்ண சொல்லும் இடத்தில் பண்ணியபின்பே அனுப்ப முடியும் sms charge மிச்சம்.

மயூ
10-03-2007, 06:29 PM
இலங்கைக்கு இலவசமாக அனுப்ப www.wow.lk (http://www.wow.lk) பயன்படுத்தலாம். சன்டெல் டெலிக்கொம்மின் உத்தியோக பூர்வத் தளம்.

farhan mohamed
11-03-2007, 05:25 AM
நானும் நண்பன் மயுரேசன் சொன்ன தளத்தை ஏற்கனவே பயன்படுத்துகிறேன்.அதிலும் சேவை நன்று.அது இலங்கைக்கு மட்டும் என்பதால் தான் நான் தெரிவிக்கவில்லை.நண்பருக்கு எனது நன்றிகள்.

மனோஜ்
14-03-2007, 09:37 AM
நண்பர் ஜுவா சொன்ன தளத்தை பயன்படுத்துகிறேன் சேவை நன்று

அன்புரசிகன்
14-03-2007, 11:03 AM
wadja நன்றாக வேலைசெய்கிறது. இங்கிலாந்து கனடா ஆஸ்திரேலியா இலங்கை கத்தார் துபாய் இந்தியா இங்கெக்லாம் பரீட்சித்து பார்த்துவிட்டேன். 5 நிமிடம் வரை செல்கிறது. மற்றப்படி வேலை செய்கிறது.

அன்புரசிகன்
14-03-2007, 11:11 AM
இன்னும் ஏதாவது தளங்கள் இருந்தால் நண்பர்களுக்கு எத்தி வைக்கவும்.
நன்றி.[/SIZE]:)

இது ஒரு பொதுவான செய்தி. அனேகமாக கையடக்க தொலைபேசி வழங்குனரின் இணையத்திலிருந்து அந்தந்த நாடுகளுக்கு அனுப்பமுடியும். கனடாவிற்கு இம்முறையில் செய்யலாம். bellmobility, telus ...
அவுஸ்திரேலியாவிற்கு smspup.com எனும் இணையம் உண்டு. ஆனால் பதியும் போது அந்நாட்டு கையடக்க தொலைபேசி இலக்கம் கேட்கும். (Activation ற்காக) நண்பர்கள் இருந்தால் செய்யமுடியும்.

pradeepkt
14-03-2007, 01:26 PM
இலங்கைக்கு இலவசமாக அனுப்ப www.wow.lk (http://www.wow.lk) பயன்படுத்தலாம். சன்டெல் டெலிக்கொம்மின் உத்தியோக பூர்வத் தளம்.
இந்தியாவுக்கு இப்படி ஏதாச்சும் இருந்தாச் சொல்லுங்கப்பா...
எஸ் எம் எஸ் அனுப்புறதுக்குள்ள பெரிய ரோதனையா இருக்கு... காப்பாத்துங்கய்யா...
முதல்ல சிக்கா chikka மெசெஞ்சர் உபயோகித்துக் கொண்டிருந்தேன். அது இப்ப விஸ்டாவில் வேலை செய்யலை :angry: