PDA

View Full Version : கைப்புள்ள MBBS



வெற்றி
05-03-2007, 11:46 AM
''உமக்கு சுகர் இருக்கா?''
''இருக்கு டாக்டர்!''
''வீட்டுல எப்படி?''
''இல்லே டாக்டர்... ரேஷன்லே நாளைக்குத்தான் வாங்கணும்!'
''வீட்டுலேன்னா... உம்ம பொஞ்சாதிக்கு இருக்கான்னு கேக்கறேன்யா!''

வெற்றி
05-03-2007, 11:47 AM
"உங்களுக்குச் செய்யப் போற ஆபரேஷன் ரொம்ப ஆபத்தானது.."

"நீங்க செய்றதா சொன்னவுடனேயே நான் புரிஞ்சிகிட்டேன் டாக்டர்?"

drjperumal
05-03-2007, 12:33 PM
நல்ல நகைசுவை டொடர்ந்து கொடுங்கள் ரசிக்கலாம்

leomohan
05-03-2007, 01:32 PM
''உமக்கு சுகர் இருக்கா?''
''இருக்கு டாக்டர்!''
''வீட்டுல எப்படி?''
''இல்லே டாக்டர்... ரேஷன்லே நாளைக்குத்தான் வாங்கணும்!'
''வீட்டுலேன்னா... உம்ம பொஞ்சாதிக்கு இருக்கான்னு கேக்கறேன்யா!''

ரசித்தேன் நண்பரே. இன்னும் தாருங்கள்.

அறிஞர்
05-03-2007, 02:13 PM
மொக்கச்சாமியின் கைப்புள்ள வைத்தியம் சூப்பரப்பு...

தொடருங்கள்...

அமரன்
05-03-2007, 03:42 PM
மொக்கச்சாமி கலக்கப்பு. சிரிகாலனாக பெயரெடுக்க வாழ்த்துக்கள்.

மனோஜ்
05-03-2007, 03:47 PM
மொக்ச்சாமி மொக்கச்சாமிதா போங்க...கலக்கிபுட்டிக

மன்மதன்
05-03-2007, 04:40 PM
உங்க ஸ்டைலிலே படித்தேன்... ரசித்தேன் நண்பரே..

SathishVijayaraghavan
06-03-2007, 06:41 AM
அருமையான படைப்பு... தொடருங்கள்... இன்னும் அதிகமா எதிர்பார்க்கிரேன்... :-)

அன்புரசிகன்
06-03-2007, 09:58 AM
"உங்களுக்குச் செய்யப் போற ஆபரேஷன் ரொம்ப ஆபத்தானது.."

"நீங்க செய்றதா சொன்னவுடனேயே நான் புரிஞ்சிகிட்டேன் டாக்டர்?"

இரண்டு நகைச்சுவையும் சூப்பர்ப்பா... வாழ்த்துக்கள்

மயூ
06-03-2007, 01:16 PM
நன்றி நண்பரே
கலக்கல் பகிடிகள்.

வெற்றி
07-03-2007, 10:08 AM
''ஒரு தடவை ஆபரேஷன் சமயத்துல 'கரண்ட்' கட்டாயிடுச்சு. ஒரு மெழுகுவர்த்தியை வச்சே அந்த ஆபரேஷனை முடிச்சேன்னா பார்த்துக்குங்களேன்!''

"சும்மா ரீல் விடாதீங்க டாக்டர்! கத்தி இல்லாம மெழுகுவர்த்திய வச்சி எப்படி ஆபரேஷன் பண்ணமுடியும்?"
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
''எக்ஸ்ரே படத்தைப் பார்த்துத்தான் ரிசல்ட் சொல்லிட்டேனே... ஏன் அதை திரும்ப கொண்டு வந்திருக்கிறீர்?''

''இவ்வளவு பணம் செலவழிச்சு எடுத்த படத்தை ஏன் அந்த டாக்டர் கலர்லே எடுத்துத் தரலேன்னு எம் பொஞ்சாதி திட்டறா டாக்டர்!''
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
''என்னைச் சீக்கிரம் காப்பத்தணும்னு உங்களுக்கு இருக்கற பொறுப்புணர்ச்சி அந்த நர்சுக்கு இல்லை டாக்டர்!''

''எப்படிச் சொல்றீங்க?''

''பாருங்களேன்... எனக்கு ஏறிக்கிட்டு இருக்கற ரத்தம் சீக்கிரம் ஏறக்கூடாதுன்னு 'சொட்டுச் சொட்டா' விழறமாதிரி திருப்பி வச்சுட்டுப் போயிருக்கு!''

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

praveen
08-03-2007, 12:12 PM
அனைத்தும் சிரிப்பு மயம். இன்னும் தாருங்கள் நண்பரே.

அறிஞர்
08-03-2007, 08:35 PM
"சும்மா ரீல் விடாதீங்க டாக்டர்! கத்தி இல்லாம மெழுகுவர்த்திய வச்சி எப்படி ஆபரேஷன் பண்ணமுடியும்?"
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அதானே... மெழுகுவர்த்தியை வைத்து பத்த வைக்கதான் முடியும்... ஆப்ரேஷன் எப்படி பண்ணுறது?




''இவ்வளவு பணம் செலவழிச்சு எடுத்த படத்தை ஏன் அந்த டாக்டர் கலர்லே எடுத்துத் தரலேன்னு எம் பொஞ்சாதி திட்டறா டாக்டர்!''
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
10ரூபாய்க்கு கலர் போட்டோ எடுத்துக்கொடுக்கறாங்க....
டாக்டர்.. அதிக பணம் பிடிங்கிட்டு.. கருப்பு வெள்ளை படம் கொடுத்தா.. எப்படி....
------
மொக்கு கலக்கல் சிரிப்புக்கள்.. தொடரட்டும்..

pradeepkt
09-03-2007, 05:07 AM
மொக்கச்சாமி...
சாய்ச்சுப்புட்டீரேய்யா... ஹா ஹா ஹாஅ...