Log in

View Full Version : இன்றைய தேதியில் அன்றொரு நாள்.......



டாக்டர் அண்ணாதுரை
05-03-2007, 09:53 AM
இன்றைய தேதியில் அன்றொரு நாள்......
நினைக்க நினைக்க நெஞ்சத்தில் சுமை,
நினைக்காமல் இருந்தாலும் சுமை!!

காலங்களில் அது வசந்தம் - இது
காதலிக்கத் தெரிந்தவர்ளுக்கு மட்டும் தெரிந்த வசனம்.
எனக்குமட்டும் வேறு வசனமா என்ன?
'காதல் வசத்தால் உள்ளமெலாம் வாசம்..
எங்கும் எதிலும் அவளது பிம்பம்.
நினைக்காத நாழியில்லை.....
நீ இல்லயெனில்...நாதியேயில்லை'-
அப்படி ஒரு இறுக்கம்!

உன்னை விமர்சிக்கும்போதெல்லாம்
வார்த்தைக்குள் அடங்காத வியாக்கியானங்கள்;
கம்பனும் கூறாத கவிதை வரிகள்...எனக்கு சர்வசாதாரணங்கள்!
மயான அமைதியிலும் மயக்கும் கனவுகள்.....
கடமைகளைக்கூட குப்பையில் எறிய...
மனதிற்குள் அப்படியொரு சக்தி!

களங்கரை விளக்கின் முற்றத்தில்,
இன்றைய தேதியில் அன்றொரு நாள்......
நீ சொன்ன வார்த்தைகள்
நெஞ்சக் கடலின் ஆழத்தில் -இன்னும்
வலம்புரி சங்கின் நாதமாய்!

இன்றைய தேதியில் வித்தியாசம் என்னவெனில்....
நெஞ்சில் விளக்கில்லை,
விளங்காத இருட்டில்
காதல் பாசனப்பாறையின் இடுக்கே மனம்!!
களங்கரை விளக்கின் முற்றத்தில்,
நாம் நின்ற இடத்தில்.......
நான் தனியாக!
நீ மட்டும் ஒளியாக!!

'திரும்பி வா என்னுயிரே' என்று
வானத்தை நோக்கி கதருகிறேன்....
காதில் விழுகிறதா கண்மணி?
நீ இருந்தபோது
நாம் 'ஒருமை' என்றாய்;
நீ இல்லாத போதும்
இன்று நானும் 'ஒருமை' தான்!!
கண்மணி.....
வெறுமையில் 'ஒருமை'....வறுமையிலும் கொடுமை!
சொல்ல சொல்ல வெடிக்குதடி நெஞ்சம்.
'ஈருடல்; ஓருயிர்' என்றாய்,
காரிருளில் மறைந்துகொண்டு சொன்னால் எப்படி?

இன்றைய தேதியில் அன்றொரு நாள்......
நினைக்க நினைக்க நெஞ்சத்தில் சுமை,
நினைக்காமல் இருந்தாலும் சுமை!!

இளசு
05-03-2007, 10:05 PM
வாழ்வான வாழ்வெனக்கு
வந்ததென்று நானிருந்தேன்..

பாழான நாளிதென்று
பார்த்தவர்கள் சொன்னதில்லை..

-- பாவலர் வரதராசன் வரிகள் இவை..


ஆனந்த்,

உங்கள் நாயகி உடனிருந்தபோது
சஞ்சரித்த உயரங்களை நிறுவியதால்

அவளின்றி வீழ்ந்த அதலபாதாளம் புரிகின்றது..

அவள் ஒளியானாள்...
ஆனாலும் இருள்..

மறைந்தாளா...
மனம் கனக்கிறது..

கவிதை போலவே....

Mano.G.
05-03-2007, 10:37 PM
தோழரே உங்கள் கவிதை புலமைக்கு
மற்றுமோர் சான்று,
சோகம் இந்த கவிதையூடே
இழைந்தோடுவதையும் கண்டேன்
வார்த்தைகள் கோர்வையையும் கண்டேன்
தோழரோடு உரையாடிய பிறகு தாங்கள்
சோகத்தையும் உணர்ந்தேன்
நினைவு நாளில் அவர்களுக்காக
வடித்த கவிதையையும் கண்டேன்.


மனோ.ஜி

அறிஞர்
05-03-2007, 11:51 PM
எங்கள் மனதை கனமாக்குகிறது..
தங்கள் கவிதை....

இன்னும் பல கவிதைகளை கொடுங்கள் ஆனந்த்.

டாக்டர் அண்ணாதுரை
06-03-2007, 12:33 AM
நண்பர்கள் இளசு,மனோ மற்றும் அறிஞர்....
இனிய வாழ்த்துகளுக்கு நன்றி
தொடரும்......
அன்புடன் அன்பன்
ஆனந்த்

ஆதவா
06-03-2007, 02:04 AM
பணிச்சுமை காரணமாகவே என்னால் நிம்மதியாக படிக்க முடியவில்லை... இரவு படித்து பதில் எழுதுகிறேன் நண்பரே!

ஆதவா
06-03-2007, 05:25 PM
இன்றைய தேதியில் அன்றொரு நாள்.... அருமையான தலைப்பு. சோகத்தை வார்த்தைகளின் கோர்வையால் கொண்டு சென்று இருக்கிறீர்கள்.. காதலில் இப்படி ஒரு நினைவுகளும் உண்டு..

எளிமையான வார்த்தைகளில் வலிமையான அர்த்தங்கள் புகுத்தியிருக்கிறீர்கள்.. காதல் வலிமையானது; வலியானதும் கூட...

அவளைப் பற்றி கவிதை எழுதும்போதெல்லாம் சொல்ல முடியாத ஆச்சரியங்கள். அவள் இல்லாத உலகில் வாழ்வதும் ஆச்சரியமே!!

காதல் பாசனப்பாரையின் இடுக்கே மனம்!!

அருமையான வரிகள்...... பாறை என்று மாற்றவேண்டும்... அதையும் கவனியுங்கள்...

நினைவுகளின் ஈர்ப்பால் அவளை அழைக்கும் உங்களின் கவிதை வரிகள் மிக அருமை.. தொடர்ந்து எழுதுங்கள்...

மனோஜ்
06-03-2007, 05:33 PM
மனதை ரணமாக்கும் கவிதை
காதலின் பிரிவு - அருமையாக கவிதையாக்கப்பட்டது நன்றி

டாக்டர் அண்ணாதுரை
07-03-2007, 12:40 AM
நண்பர்கள் ஆதவா , மற்றும் மனோஜ்......
உங்களது மனம் திறந்த பாராட்டுகளுக்கு நன்றி.
(ஆதவா, எழுத்துப்பிழை சரி செய்தாகிவிட்டது, நன்றி).

leomohan
07-03-2007, 04:00 AM
அருமை ஆனந்த். தொடருங்கள்.

ஓவியா
08-03-2007, 01:22 PM
இன்றைய தேதியில் அன்றொரு நாள்......
நினைக்க நினைக்க நெஞ்சத்தில் சுமை,
நினைக்காமல் இருந்தாலும் சுமை!!

நினைவுகளை மறக்க வழியே இல்லையா !!!!
ம்ம் மரணம் மட்டும்தானோ


காலங்களில் அது வசந்தம் - இது
காதலிக்கத் தெரிந்தவர்ளுக்கு மட்டும் தெரிந்த வசனம். :D
எனக்குமட்டும் வேறு வசனமா என்ன?
'காதல் வசத்தால் உள்ளமெலாம் வாசம்..
எங்கும் எதிலும் அவளது பிம்பம்.
நினைக்காத நாழியில்லை.....
நீ இல்லயெனில்...நாதியேயில்லை'-
அப்படி ஒரு இறுக்கம்!

அருமையான உணர்வுகள் இது


உன்னை விமர்சிக்கும்போதெல்லாம்
வார்த்தைக்குள் அடங்காத வியாக்கியானங்கள்;
கம்பனும் கூறாத கவிதை வரிகள்...:eek: எனக்கு சர்வசாதாரணங்கள்! :D
மயான அமைதியிலும் மயக்கும் கனவுகள்.....
கடமைகளைக்கூட குப்பையில் எறிய...
மனதிற்குள் அப்படியொரு சக்தி!

உண்மையை புட்டு புட்டு சொல்லறீங்களே


களங்கரை விளக்கின் முற்றத்தில்,
இன்றைய தேதியில் அன்றொரு நாள்......
நீ சொன்ன வார்த்தைகள்
நெஞ்சக் கடலின் ஆழத்தில் -இன்னும்
வலம்புரி சங்கின் நாதமாய்!

இன்றைய தேதியில் வித்தியாசம் என்னவெனில்....
நெஞ்சில் விளக்கில்லை,
விளங்காத இருட்டில்
காதல் பாசனப்பாறையின் இடுக்கே மனம்!!
களங்கரை விளக்கின் முற்றத்தில்,
நாம் நின்ற இடத்தில்.......
நான் தனியாக!
நீ மட்டும் ஒளியாக!!

சில புணித காதலில் இன்னமும் இது நடந்துக் கொண்டுதான் இருகின்றது


'திரும்பி வா என்னுயிரே' என்று
வானத்தை நோக்கி கதருகிறேன்....
காதில் விழுகிறதா கண்மணி?
நீ இருந்தபோது
நாம் 'ஒருமை' என்றாய்;
நீ இல்லாத போதும்
இன்று நானும் 'ஒருமை' தான்!!
கண்மணி.....
வெறுமையில் 'ஒருமை'....வறுமையிலும் கொடுமை!
ஆழமான சிந்தனை, அப்பட்டமான உண்மை

சொல்ல சொல்ல வெடிக்குதடி நெஞ்சம்.
'ஈருடல்; ஓருயிர்' என்றாய்,
காரிருளில் மறைந்துகொண்டு சொன்னால் எப்படி?

இன்றைய தேதியில் அன்றொரு நாள்......
நினைக்க நினைக்க நெஞ்சத்தில் சுமை,
நினைக்காமல் இருந்தாலும் சுமை!!

கவிதை மிகவும் அருமை.

சோகத்தினை ரசிக்க வில்லை
கவிதையை கவிதையாய் ரசித்தேன்.

பாராட்டுக்கள் :)

டாக்டர் அண்ணாதுரை
09-03-2007, 12:47 AM
இனிய ஓவியா,
உங்களின் இனிய விமர்சனத்திற்கு நன்றிகள்.
இந்த கவிதைக்குள் உண்மைகள் உணர்வுகளெ அதிகம். மனப்பூர்வமாக எழுதிய வரிகள், மனதில் விழுந்த கீறல்களின் குருதியின் வேதனைக்கோலங்கள் இவை. இன்றைய தேதியில் அன்றொரு நாள்.....நடந்தவை இவை! மறந்ந்து (மறைந்து) விட்டது போல் இருந்தாலும்.....நாள் காட்டி காட்டிக்கொடுக்கிறதே..என்ன செய்ய!

ஓவியா
09-03-2007, 12:58 AM
உலகத்தில் வாருத்தமில்லா மனிதனே இல்லை சார்,

உயர்ந்த சிந்தனை படைத்த சில மக்கள்
தடுமாறலாமா??? :)

சில இழப்புகள் நம்மை உயிருடன் எரித்ததே விடும்.

கடவுள் அளித்ததை அவரிடமே கொடுத்து விட்டதுபோல் எடுத்துகொள்வோம். :)

அருமையான நன்னாள் தங்களை அரவணைக்க காலை வணக்கம்.

டாக்டர் அண்ணாதுரை
09-03-2007, 03:04 AM
அந்த ஒரு நாளில் மட்டும் தான் வலுக்கட்டாய நினைவுகள்...! அது தடுமாற்றமா என்பது விவாதத்திற்குறியதுதான்...வாழ்க்கை எனும் பூங்காவனத்தில் அது ஒரு இலையுதிர் காலம். தேதிகள் நடக்க வேண்டியதை திட்டமிட மட்டுமல்ல..நடந்தவற்றையும் சற்று பின்னோக்கி பார்ப்பதற்கும்தானே? படிப்பினை இந்த மாதிரியான விசயங்களில்தான் அதிகமாக கிடைக்கின்றன என்பது அடியேனின் கருத்து.
அதற்கென்று நீங்கள் சொன்னது போல் அதிலேயே முடங்கிகிடப்பதும் சரியில்லைதான்.
இனிய கருத்துகளுக்கு இனிய காலை வணக்கத்துடன் நன்றிகள்.
'வாழ்க்கையில் சோகம் இருக்கலாம், ஆனால் சோகமே வாழ்க்கையாக இருக்கக்கூடாது'!

Mano.G.
09-03-2007, 03:58 AM
'வாழ்க்கையில் சோகம் இருக்கலாம், ஆனால் சோகமே வாழ்க்கையாக இருக்கக்கூடாது'!

தோழரிடமிருந்து மற்றுமோர்
பஞ்ச் டைலாக்




மனோ.ஜி