PDA

View Full Version : எளிய முறையில் ஜாவா - பகுதி 3.



kavitha
05-03-2007, 09:34 AM
மொழி கட்டமைப்பு:-

http://www.tamilmantram.com/vb/attachment.php?attachmentid=262&stc=1&d=1173090577

Black = SOA
Cyan = Component
Brown = OOPS
Yellow = Structured
Green = Procedural
Orange = Monolithic Concept
Blue = Assembly Language
Pink = Machine Language

சென்ற பகுதிகளில் ஜாவாவின் சிறப்புகளைப்பற்றிப்படித்தோம்.
இந்த பகுதியில் மொழியின் கட்டமைப்பைப்பற்றிக்காண்போம். மேலே உள்ள படம் புரோகிராமிங் லாங்க்வேஜின் கட்டமைப்பை எடுத்துரைக்கிறது.

இ-பிஸினஸ் (எலெக்ட்ரானிக் வணிகம்) -காக வடிவமைக்கப்பட்டது தான் ஜாவா. வணிக இணையத்தை உருவாக்குவதற்காக சிம்பிள் ஆப்ஜெக்ட் ஆக்ஸஸ் கட்டமைவை ஜாவாவில் எழுதமுடியும். காம்போனன்ட் கட்டமைவு என்பது அதற்குள் இருக்கும் சப்-ஆர்க்கிடெக்சர் கும். ஆப்ஜெக்ட் ஓரியண்டட் அமைவு காம்போனண்ட் தயாரிக்க உதவுகிறது. இது போல் ஒவ்வொரு லேயராக பிரிக்க பிரிக்க உட்பொருள் (core) கிடைக்கும்.

தெளிவாக விளக்கவேண்டுமாயின், எடுத்துக்காட்டிற்கு
ஒரு வீட்டைக்கட்டவேண்டும் என்று வைத்துக்கொள்ளுங்கள். வீடு என்பது பல அறைகள் (லேயர்) கொண்டது. அறைகள் கதவு, ஜன்னல், சுவர், கூரை என்ற காம்போனன்ட்களால் னது. சுவரை உருவாக்க செங்கல், சிமெண்ட், காங்கிரீட், பெயிண்ட் முதலானவை தேவை(ஆப்ஜெக்ட்). இவற்றை சரியான விகிதத்தில் கலப்பது எப்படி? அடுத்தடுத்து எந்தெந்த பொருள்களை எவ்விதத்தில் அடுக்கி உருவாக்கவேண்டும் என்பதற்கான வரைமுறையே புரோசிஜீரல், ஸ்ட்ரக்சர் லேயர் ஆகும்.

மோனோலித்திக், அசெம்ப்ளி, மெசின் கோட் என்பது அதனினும் உள்ளார்ந்த மொழி மாற்றங்கள் மட்டுமே!

அதாவது ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு தேசிய மொழி இருக்கும். அதேபோல வட்டார மொழி இருக்கும். அதற்குள் பேச்சு வழக்கு என்ற ஒன்றும் உண்டு. இவற்றுக்கும்மேலாக எளிதான பாஷை செய்கை! இதுபோல மோனோலித்திக் ஒரு குறிப்பிட்ட இன்டர்ப்ரெட்டர் (interpreter - என்பது பயனாளர் மொழியை கணினி மொழியாக மாற்ற உதவும் மொழிமாற்றி) மட்டும் புரிந்துக்கொள்ளக்கூடிய பாஷை.
அசெம்ப்ளி யை புரோசசர்கள் (processor) புரிந்துக்கொள்ளும். மெசின் கோட் என்பது 0 அல்லது 1ல் எழுதப்பட்ட மொழியாகும்.

கம்யூட்டரால் பிட்களை(0,1) மட்டுமே புரிந்துக்கொள்ள முடியும். மிகப்பெரிய கோடிங்கை அவ்வாறு எழுதுவது மிகவும் கடினம். எனவே, பயனாளர்களால் எளிதாக கையாளக்கூடிய வகையில் மொழி அமைவது இன்றியமையாதது. ஒவ்வொரு லேயரும் அதனினும் மேம்படுத்தப்பட்ட ஒரு கட்டமைவை உருவாக்க உதவியிருக்கிறது என்பது உள்ளார்ந்த உண்மை. (இந்தியா இப்படி இருக்கிறதா?)

சரி.. கட்டமைவினைப்பார்த்தாயிற்று. அத்தகைய மொழி மாற்றத்தை ஜாவாவில் செய்வது யார்?

ஜாவா டெவலப்மண்ட் கிட்:-

javac - ஜாவா கம்ப்பைலர் ஜாவா புரோகிராமை பைட் கோடாக மாற்றும்.

java - ஜாவா இன்டர்பெரட்டர் பைட் கோடை எந்திரமொழியாக மாற்றும்.

Javap -ஜாவா டிஸ்அசெம்ப்ளர் பைட் கோடை புரோகிராம் விளக்கியாக மாற்றும்.

Javah - ஹெட் பைல்ஸ் புரொடியூசர்

Javadoc - ஜாவா டாக்குமெண்ட்டேசன் ஹெச்டிஎம்எல் -ஆக மாற்ற

Jdb -ஜாவா டீபக்கர் பிழைகளைக்கண்டறிய

appletviewer - ஜாவா அப்லெட் வீவர் அப்லெட் -ஐக் காண

உதவுகின்றன.

ஜாவா லைப்ரரி பைல்ஸ்:-

http://www.tamilmantram.com/vb/attachment.php?attachmentid=261&stc=1&d=1173090319


ஜாவா கீவோர்ட்ஸ்:-

http://www.tamilmantram.com/vb/attachment.php?attachmentid=260&d=1173089963

மற்றவை அடுத்த பகுதியில்...

paarthiban
05-03-2007, 02:48 PM
உங்கள் தொடரும் பணிக்கு பாராட்டுக்கள் கவிதா அவர்களே

இளசு
05-03-2007, 08:41 PM
மிகக்கடினமான பணியை
எளிமை என நுகர்வோர்
எண்ணும் வகையில் கையாள்பவரே
உண்மையான திறமைசாலி..

வீடு பற்றிய ஒப்புமையும்
இந்தியக்கட்டமைப்பு பற்றிய (ஆதங்கக்) கேள்வியுமாய்
பாடம் சுவைக்கிறது..

பாராட்டுகள் கவீ.. தொடரவும்.. நன்றி..

அறிஞர்
05-03-2007, 09:44 PM
தொடர்ந்து கொடுக்கும் தகவல்... பலருக்கு உபயோகமாக உள்ளது.. நன்றி கவிதா...

kavitha
07-03-2007, 10:13 AM
பார்த்திபன், இளசு அண்ணா, அறிஞர் - ஊக்கப்படுத்தும் உங்கள் அனைவருக்கும் என் உரைக்காத நன்றிகளும் உரித்தாகுக!

AARUL
17-01-2010, 05:09 AM
ஜாவா லைப்ரரி �பைல்ஸ்:-

http://www.tamilmantram.com/vb/attac...1&d=1173090319


ஜாவா கீவோர்ட்ஸ்:-

http://www.tamilmantram.com/vb/attac...0&d=1173089963
இந்த லிங்க் வொர்க் ஆகவில்லை