PDA

View Full Version : உலக பங்குச் சந்தை சரிவும் அலன் க்ரீன்ஸ்பĬkarikaalan
05-03-2007, 09:28 AM
உலக பங்குச் சந்தை சரிவும் அலன் க்ரீன்ஸ்பானும்!!

கடந்த இரு வாரங்களாக உலகெங்கிலும் பங்குச்சந்தைகள் ஒரேயடியாக சரிவை நோக்கி ஓடிக்கொண்டிருக்கின்றன. மும்பை Sensex மட்டுமே 2000 புள்ளிகள் இழப்பைச் சந்தித்திருக்கின்றது. பல லட்சக்கணக்கான கோடி ரூபாய்கள் நஷ்டம். என்ன காரணம்?

அலன் க்ரீன்ஸ்பான் (Alan Greenspan) என்பவர் அமெரிக்காவின் Federal Reserve System -- இந்தியாவில் ரிஸர்வ் வங்கி போல் -- தலைவராக இருந்தார். 1987 முதல் 2006 ஜனவரி வரை. தமது 70-ம் வயதில் ஓய்வு பெற்றார்.

பதவியில் இருந்த வரை இவரிடம் 200-க்கு மேற்பட்ட டாக்டரேட்டுகள் கைகட்டி சேவகம் புரிந்தார்கள்.

உலகப் பொருளாதார விஷயங்கள் விரல் நுனியில். தீர்க்க தரிசி எனலாம்.

க்ரீன்ஸ்பான் அவ்வப்போது நிகழ்த்தும் உரைகளுக்கு மெத்த மதிப்பு. அவர் சொன்ன, சொல்ல விட்ட விஷயங்களை வைத்தே மார்க்கெட்டுகள் -- பங்குச் சந்தைகள் மட்டுமல்ல -- கரன்ஸி மார்க்கெட்டுகள், Commodity Markets, தங்கம் வெள்ளி மார்க்கெட்டுகள் -- மேலே செல்லும் அல்லது சரியும். மொத்தத்தில் சொல்லப்போனால், க்ரீன்ஸ்பான் தும்மல் போட்டால், ந்யூ யார்க் மார்க்கெட்டுகள் ஜலதோஷம் பிடித்துக்கொள்ளும்.

இந்த மனிதர், ஓய்வு பெற்ற ஆசாமி, சும்மா இருக்கக் கூடாதோ! கடந்த செவ்வாயன்று (27.02,2007) "அமெரிக்கா தேக்க நிலையைச் (Recession) சந்திக்கும் நாட்கள் வெகுதொலைவில் இல்லை", என்று சொன்னார்.

அவ்வளவுதான்... உலகெங்கிலும் சந்தைகளில் ஒரே களேபரம்.

க்ரீன்ஸ்பானுக்குப் பின் பதவியேற்ற Ben Bernanke ஒரு அறிக்கை வெளியிட்டார் -- நிலைமை அவ்வளவு மோசமில்லை என்று. பலரும் க்ரீன்ஸ்பான் கால்களில் விழாத குறை. தன் பங்குக்கு க்ரீன்ஸ்பானும் ஒரு அறிக்கை -- தான் முன்னர் சொன்னதை சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று.

இன்று மும்பை மார்க்கெட் 500 புள்ளிகளுக்கு மேல் சரிவு!

போகிறபோக்கைப் பார்த்தால், அதல பாதாளம் இன்னும் தெரியவில்லை என்கிறார்கள்.

அலன் க்ரீன்ஸ்பான், இளம் வயதில் சங்கீதக் கலைஞராக வேண்டும் என்று பயிற்சி எடுத்துக்கொண்டாராம். நன்றாகவே ஆட்டுவிக்கிறார்!

இவர் பிறந்த நாள் 06 மார்ச் 1936

===கரிகாலன்

இளசு
05-03-2007, 09:46 PM
நன்றி அண்ணலுக்கு

தொடர்ந்து சென்செக்ஸ், நிஃப்டி சரிந்து வருவதன் சூட்சுமம் புரியாமல் இருந்தேன்.. (பட்ஜெட் வந்தபின்னும் நிமிரவில்லை என்று கூடுதல் குழப்பம்)

இப்போ புரியுது.. யார் கையில் கோல் இருக்குன்னு...

ஆலனின் பிறந்த நாளில் அவர் பற்றி அறிந்தேன்.. நன்றி..

(இதனால் ரியல் எஸ்டேட் விலைகள் மீண்டும் எகிறுமா?)

karikaalan
06-03-2007, 03:48 AM
இளவல்ஜி, வணக்கம்.

நிகழ்வுகளும், பின் விளைவுகளும் சிலசமயம் எதிர்மாறாக அமைகின்றன.

பங்குச்சந்தையில் அதிக லாபம் வந்தால், அதை நிலம், வீடு, தங்கம் என்று முதலீடு செய்கிறார்கள். இவைகளுடைய விலையும் ஏறுகிறது.

நஷ்டம் வந்தால், ஈடு செய்ய வேறு முதலீடுகளை அவசரத்தில் விற்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறார்கள். இங்கேயும் விலை சரிவு!!

ஒன்றும் சொல்வதற்கில்லை.

===கரிகாலன்

அறிஞர்
06-03-2007, 12:16 PM
ஒரு தனிமனிதனால் உலக சந்தையில் இவ்வளவு பாதிப்பா.. வியப்பாக உள்ளது.

பிறந்த நாளில் இப்படி ஒரு விளையாட்டா....

அறிஞர்
06-03-2007, 12:17 PM
பங்குச்சந்தையில் அதிக லாபம் வந்தால், அதை நிலம், வீடு, தங்கம் என்று முதலீடு செய்கிறார்கள். இவைகளுடைய விலையும் ஏறுகிறது.

நஷ்டம் வந்தால், ஈடு செய்ய வேறு முதலீடுகளை அவசரத்தில் விற்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறார்கள். இங்கேயும் விலை சரிவு!!

எல்லாவற்றையும் நிர்ணயிக்கும் நிலை, இன்று பங்குசந்தைக்கு உள்ளது.

aren
06-03-2007, 01:28 PM
இந்த ஆள் இப்படி பேசியதைப் படித்த பொழுதே ஏதோ நடக்கப்போகிறது என்று நினைத்தேன்.

நான் அமெரிக்க ஸ்டாக்கில் முதலீடு செய்து அழிந்தபிறகு பங்கு மார்க்கெட் பக்கமே தலை வைக்காமல் இருக்கிறேன். ஆகையால் நான் இதைப் பற்றி கவலைப்படவில்லை.

ஆனால் இப்படி ஒரேயடியாக சரிகிறதே என்ற கவலை இப்பொழுது கொஞ்சம் வந்துவிட்டது.

இன்னும் இரண்டு நாட்களில் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைக்கிறேன்.

இளசு
06-03-2007, 06:33 PM
பங்குச்சந்தையில் அதிக லாபம் வந்தால், அதை நிலம், வீடு, தங்கம் என்று முதலீடு செய்கிறார்கள். இவைகளுடைய விலையும் ஏறுகிறது.

நஷ்டம் வந்தால், ஈடு செய்ய வேறு முதலீடுகளை அவசரத்தில் விற்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறார்கள். இங்கேயும் விலை சரிவு!!

.

===கரிகாலன்

அண்ணலே

நஷ்டம் வந்தால் அவசரத்தில் பங்குகளை விற்றுவிட்டு
பாதுகாப்பான ரியல் எஸ்டேட் பக்கம் வந்து குவிந்துவிடுகிறார்களே..

விற்பதற்கு வாங்குவோர், வாடகை விட வாங்குவோர் முன்
வசிப்பதற்கு வாங்குவோர் போட்டி போட முடியாமல் நொந்து நூலாகிறார்களே...:angry:

இளசு
06-03-2007, 06:36 PM
.

நான் அமெரிக்க ஸ்டாக்கில் முதலீடு செய்து அழிந்தபிறகு பங்கு மார்க்கெட் பக்கமே தலை வைக்காமல் இருக்கிறேன்.

அடடா.. அன்பின் ஆரென்..

உங்களைப்போலவே என் நண்பர் (அமெரிக்காவில் டாக்டர்) பேரழிவான நஷ்டம் கண்டார்..
விரக்தியின் ஆழம் போனார்..இப்போ மெல்ல மீண்டு வருகிறார்..

உழைத்து பொருள் ஈட்டுவது முதல் கஷ்டம்.. அதை
பாதுகாப்பாய் சேமித்து, அதை மேலீட்ட வைப்பது-- இன்னும் கஷ்டம்..

அறிஞர்
06-03-2007, 07:14 PM
ஆனால் இப்படி ஒரேயடியாக சரிகிறதே என்ற கவலை இப்பொழுது கொஞ்சம் வந்துவிட்டது.

இன்னும் இரண்டு நாட்களில் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைக்கிறேன்.
முதலீடு செய்த என் உறவினரும் இந்த நிலையில் தான் இருக்கிறார்...

அறிஞர்
06-03-2007, 07:18 PM
விற்பதற்கு வாங்குவோர், வாடகை விட வாங்குவோர் முன்
வசிப்பதற்கு வாங்குவோர் போட்டி போட முடியாமல் நொந்து நூலாகிறார்களே...:angry:
காலத்தின் சூழ்நிலை அப்படி....
இருப்பவருக்கு இன்னும் ஆசை..
வேண்டுவோருக்கு போட்டியிட வழியில்லை.

karikaalan
07-03-2007, 09:13 AM
http://www.bloomberg.com/apps/news?pid=newsarchive&sid=aPBHXvauhK2U

ப்ளூம்பெர்க் தளத்தில் வந்த ஆர்டிகிள் தங்களது கவனத்திற்கு!

===கரிகாலன்

karikaalan
07-03-2007, 09:19 AM
அண்ணலே

நஷ்டம் வந்தால் அவசரத்தில் பங்குகளை விற்றுவிட்டு
பாதுகாப்பான ரியல் எஸ்டேட் பக்கம் வந்து குவிந்துவிடுகிறார்களே..

விற்பதற்கு வாங்குவோர், வாடகை விட வாங்குவோர் முன்
வசிப்பதற்கு வாங்குவோர் போட்டி போட முடியாமல் நொந்து நூலாகிறார்களே...:angry:

இளவல்ஜி

நஷ்டம் என்று அடியேன் கூறியது சாதாரண நஷ்டம் இல்லை...

சட்டை, பனியன், இத்யாதிகளையெல்லாம் பங்குச்சந்தையில் இழந்துவிட்ட நிலையில், அவனிடம் வேறு என்ன கையிருப்பு இருக்கும்? வீடு, தங்கம் இவைகள்தான். அதனால்தான் அதலபாதாளத்துக்கு சரிவு ஏற்படும் போது, எல்லாவற்றையும் இழக்க நேரிடும்.

என்னுடைய "பங்குச் சந்தையில் 30 ஆண்டுகள்" பதிப்பில் எழுதியிருந்தேன்... எப்படி அநேகமாக எல்லாவற்றையும் இழந்தேன் என்று.

===கரிகாலன்

paarthiban
07-03-2007, 09:33 AM

இதுபோல் அனுபவ பதிவுகளுக்கு ஈடு இணை இல்லை.

வாழ்க கரிகாலன் -ஜி. வாழ்க தமிழ்மன்றம்!!

அறிஞர்
07-03-2007, 02:02 PM
கரிகாலன்ஜி கொடுத்த படம்.
http://i13.photobucket.com/albums/a282/aringar/Greenspan.jpg

pradeepkt
08-03-2007, 03:36 AM
இந்த அதிமுக்கிய பதிவுக்காக கரிகாலன் அண்ணாவுக்குக் கோடி நன்றிகள். இந்த மனுசன் வாயை வச்சிக்கிட்டுச் சும்மா இருந்திருக்கலாம். அமெரிக்கப் பங்குச் சந்தைக்கடுத்து சீனப் பங்குச் சந்தை நம்மைத் தரதரவென்று கீழே இழுத்ததில் மும்பை படுத்து விட்டது.

இப்போதுதான் வெகு நாட்களுக்கப்புறம் நானும் சந்தையில் நுழைந்தேன். ஆனால் ஏற்கனவே பட்ட சூட்டினால் வெந்த கைகளைப் பார்த்து புத்தி வந்து நல்ல வேளையாக SIP எனப்படும் மாதாந்திர பரஸ்பர நிதிச் சேவைகளிலும் இரண்டே இரண்டு IPO க்களிலும் போட்டேன். பங்குச் சந்தை அதல பாதாளத்தில்தான் இருக்கிறது. ஆனாலும் முதலுக்கு அப்படி மோசமில்லை.

கரிகாலன் அண்ணா,
உங்களுக்கு எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் எங்களுக்கு இப்படி தெளிவுறுத்தும்படி உரிமையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

karikaalan
08-03-2007, 03:59 AM
நண்பர்களே

பாருங்கள் ஜனநாயகத்தின் வெற்றியை!

பதவியில் இல்லாத ஒரு மனிதன் மீது எவ்வளவு நம்பிக்கை மக்களுக்கு.

க்ரீன்ஸ்பானுடைய தீர்க்க தரிசனத்துக்கு இது ஒரு மற்றுமோர் சான்று.

அமெரிக்காவின் தேக்க நிலையைப் பற்றிப் பேசப்போக, சீனாவில் Overheat பற்றித் தகவல் வெளியே வந்தது.

பிறகு ஜப்பானில் 1.5%க்கு கடன் வாங்கி, இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்து, விழத் துவங்கியதும், எல்லாவற்றையும்
விற்றுவிட்டு ஒரே ஓட்டம் இந்த FII-கள்.

பிதுங்கிச் சாவது நாம்.

===கரிகாலன்

pradeepkt
08-03-2007, 04:08 AM
இந்த FII சமாச்சாரம் எனக்குப் புரிவதே இல்லை. ஒரு பக்கம் சிதம்பரம் இவர்கள்தான் வேண்டும் என்று தலைகீழாக நிற்கிறார்.

இன்னொரு பக்கம் பொதுவுடைமைக் கட்சிக் காரர்கள் இவர்களை அடக்க வேண்டும் என்று பொருமுகிறார்கள்.

என்னதான் நடக்கிறது இங்கே?

jasmin
08-03-2007, 04:09 AM
நஷ்டம் எனக்கும் தான் (இனி இந்தியாவில் பங்குகளை வாங்கி விற்பதில்லை என்று முடிவு செய்துவிட்டேன்.

srimariselvam
12-04-2007, 05:02 PM
கரடிப்பிடியிலிருந்து மெல்ல மீண்டுவந்து இன்று மீண்டும் கரடிப்பிடிக்கு செல்கிறதோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சிதம்பர ரகசியமாய்த்தான் இருக்கிறது பங்குச்சந்தை நிலவரமும்.