PDA

View Full Version : உதவி

rjau
04-03-2007, 05:05 PM
ஒரு விடியோகிளிப்பின் (video clip) பின்னனி காட்சிகளை எப்படி மாற்றுவது இதைப்பற்றி
தெரிந்தவர்கள் உதவி செய்யுங்கள்

விகடன்
08-03-2007, 03:46 PM
சாதாரணமாக செய்ய முடியாது. எடுக்கப்படும்போதே பின்னால் இருக்கும் பொருட்களை ஒரு குறிப்பிடப்பட்ட நிறத்தில்(உதாரணத்திற்கு நீலம்) வைத்து எடுத்தால் அதை மாயா போன்ற சில மென்பொருள்களை வைத்து நீக்கிவிடலாம். அப்போது நடிப்பவர்களும் மற்றய நிறங்களுமே மிஞ்சும். பின்னர் பிறிதொரு கிளிப்பை சேர்ப்பதன் மூலம் புது கிளிப்பை உருவாக்கலாம்.

உதாரணம்: அ..ஆ.. திரைப்படத்தில் ஒரு பாடல் காட்சி.

rjau
09-03-2007, 08:07 PM
இதற்கு பயன்படுதும் மென்பொருலின் பெயர்களை தருவிர்களா

ஓவியா
09-03-2007, 08:25 PM
இதற்கு பயன்படுதும் மென்பொருலின் பெயர்களை தருவிர்களா

வணக்கம் நண்பரே,
உங்கள் வரவு நல்வரவாகுக. :)

இங்கே உலாவிடவும் :)
http://www.tamilmantram.com/vb/forumdisplay.php?f=38

தங்களை பற்றி ஒரு அறிமுகம் தாருங்களேன்.

அதன் பின் உங்களுக்கு அனைத்து நண்பர்களும் தோள் கொடுத்து உதவுவார்கள்

நன்றி
வணக்கம்

அரசன்
12-04-2007, 09:50 AM
ஜி-மெயிலில் எனது யூசர் நேமும், பாஸ்வேர்ட்டும் நான் ஜி மெயிலுக்கு போகும்போது ஆட்டோமேட்டிக்காக அதிலேயே இருக்கிறது. இதனால் என்னுடைய மெயிலை ம்ற்றவர் பார்க்க முடியும். ஒவ்வொரு முறையும் யூசர் நேம், பாஸ்வேர்ட் அடித்து செல்ல என்ன செய்ய வேண்டும்.

அரசன்
12-04-2007, 04:13 PM
உதவுங்கள்

உதயா
14-04-2007, 04:16 AM
ஜி-மெயிலில் எனது யூசர் நேமும், பாஸ்வேர்ட்டும் நான் ஜி மெயிலுக்கு போகும்போது ஆட்டோமேட்டிக்காக அதிலேயே இருக்கிறது. இதனால் என்னுடைய மெயிலை ம்ற்றவர் பார்க்க முடியும். ஒவ்வொரு முறையும் யூசர் நேம், பாஸ்வேர்ட் அடித்து செல்ல என்ன செய்ய வேண்டும்.

username and password டைப் செய்தபிறகு அதன் கீழே Remember me on this computer என்ற ஒரு வாக்கியம் உள்ளது அல்லாவா? அதன் பக்கத்தில் பாருங்கள் ஒரு புள்ளிபோல் ஒரு இடம் இருக்கும், அதன்மீது ரைட் போட்டிருந்தால், அதை மீண்டும் சொடுக்கி, அந்த ரைட் இல்லாமல் ஆக்கி லாக் இன் செய்யுங்கள்.

அரசன்
29-04-2007, 10:05 AM

ஜிமெயில் பிரச்சனை சரியாகிவிட்டது. நன்றி