PDA

View Full Version : மொஜில்லா ஃபயர்ஃபாக்ஸ்

மன்மதன்
04-03-2007, 09:54 AM
மொஜில்லா ஃபயர்ஃபாக்ஸில் தமிழில் தட்டச்சு செய்தால் ஒவ்வொரு எழுத்தும் பின்னோக்கி சென்று மறைந்துவிடுகிறதே..?? தமிழில் எழுத்துரு கூட சரியாக தெரியவில்லை. ஏன்? எப்படி சரிசெய்வது?

மயூ
04-03-2007, 02:38 PM
மொஜில்லா ஃபயர்ஃபாக்ஸில் தமிழில் தட்டச்சு செய்தால் ஒவ்வொரு எழுத்தும் பின்னோக்கி சென்று மறைந்துவிடுகிறதே..?? தமிழில் எழுத்துரு கூட சரியாக தெரியவில்லை. ஏன்? எப்படி சரிசெய்வது?
எனக்குப் பிரைச்சனை இல்லாமல் வேலை செய்கின்றது.

மனோஜ்
04-03-2007, 02:40 PM
முதலில் இதை உபயேகித்து பிரைச்சனை அனதால் தமிழ்நா ஐயி தா இப்ப

சுபன்
04-03-2007, 02:46 PM
எனக்குப் பிரைச்சனை இல்லாமல் வேலை செய்கின்றது.

எனக்கும் தான்.

ஈ கலப்பையை கொண்டு தட்டச்சு செய்கிறேன்! யுனிகோடில் அமைந்த எந்த தளத்தையும் என்னால் படிக்க முடிகிறது!! என்னை பொறுத்த வரை ஃபயர்ஃபொக்ஸ் சிறந்த உலாவி!! :)

மன்மதன்
04-03-2007, 02:48 PM
முதலில் இதை உபயேகித்து பிரைச்சனை அனதால் தமிழ்நா ஐயி தா இப்ப

என்ன சொல்ல வர்ரீங்க.. தமிழிலே சொல்லுங்க..:D

மன்மதன்
04-03-2007, 02:50 PM
எனக்கும் தான்.

ஈ கலப்பையை கொண்டு தட்டச்சு செய்கிறேன்! யுனிகோடில் அமைந்த எந்த தளத்தையும் என்னால் படிக்க முடிகிறது!! என்னை பொறுத்த வரை ஃபயர்ஃபொக்ஸ் சிறந்த உலாவி!! :)

அதனால்தான் நான் அதை உபயோகிக்கிறேன்.. தமிழ் தளத்திற்கு மட்டுமே நான் இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் உபயோகிக்கிறேன்.. ஃபயரில் தமிழ் எழுத்துகள் சரியாக தெரிவதில்லை.

praveen
05-03-2007, 04:45 AM
அதனால்தான் நான் அதை உபயோகிக்கிறேன்.. தமிழ் தளத்திற்கு மட்டுமே நான் இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் உபயோகிக்கிறேன்.. ஃபயரில் தமிழ் எழுத்துகள் சரியாக தெரிவதில்லை.
உண்மை தான் பயர்பாக்ஸில் தமிழ் தளங்களின் வரிகள் அதிக இடம் விட்டு தெரிகிறது.

ஏன் இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரருக்கு மாற்றாக ஒப்பேரா பயண்படுத்தி பாருங்களேன். எனக்கு அதில் ஒரு பிரச்சினையும் தெரியவில்லை.

மன்மதன்
05-03-2007, 05:14 AM
முயற்சி செய்து பார்க்கிறேன் அசோக்.

மன்மதன்
05-03-2007, 06:20 AM
ஓப்பரா சூப்பரா இருக்கு. டைப் செய்ய முடியுது. ஒரே பிரச்சனை.
எங்கெல்லாம் 'ஒ' வருகிறதோ (உ.தா) சொ.கொ அந்த எழுத்து மட்டும் உல்டாவா தெரியுது... மத்தபடி ஒழுங்காத்தான் இருக்கு!

ஷீ-நிசி
05-03-2007, 06:27 AM
மன்மதன், இண்டர்னெட் எக்ஸ்புளோரர் 7 உபயோகிக்கிறேன் நான்.. மிகச் சிறப்பாஅக இருக்கிறது.. அதையே முயற்சிக்கலாமே....

மன்மதன்
05-03-2007, 06:34 AM
எக்ஸ்ப்ளோரர்தான் நானும் உபயோகிக்கிறேன்.. ஒரு மாறுதலுக்காகத்தான் வேற ஏதாவது ஒன்று தேடுகிறேன்... மற்ற தளங்களை பார்வையிடுகையில் எக்ஸ்ப்ளோரரில்தான் வைரஸ் அதிகம் தாக்கும் அபாயம் இருக்கிறது..

ஷீ-நிசி
05-03-2007, 06:42 AM
எக்ஸ்ப்ளோரர்தான் நானும் உபயோகிக்கிறேன்.. ஒரு மாறுதலுக்காகத்தான் வேற ஏதாவது ஒன்று தேடுகிறேன்... மற்ற தளங்களை பார்வையிடுகையில் எக்ஸ்ப்ளோரரில்தான் வைரஸ் அதிகம் தாக்கும் அபாயம் இருக்கிறது..

நான் ட்ரெண்ட் மைக்ரோ ஆஃபீஸ் ஸ்கேன் உபயோகிக்கிறேன். (சிஃபி பிராட்பேண்ட் கனெக்ஷன் இருப்பதால் அவர்கள் இலவசமாக வழங்கியுள்ளார்கள்) எனக்கு வைரஸ் பிரச்சினைகள் ஒன்றும் இல்லை...

மனோஜ்
05-03-2007, 06:59 AM
என்ன சொல்ல வர்ரீங்க.. தமிழிலே சொல்லுங்க..:D

முதலில் இதை உபயோகித்து பிரச்சனை வந்ததும் தற்பொழது இன்டாநேட் எக்ஸ்ளேரற்தான் பயன்படுத்துகிறோன் ;) புரிஞ்சதா வறலநா விட்டுடுங்க:D

மன்மதன்
05-03-2007, 05:11 PM
முதலில் இதை உபயோகித்து பிரச்சனை வந்ததும் தற்பொழது இன்டாநேட் எக்ஸ்ளேரற்தான் பயன்படுத்துகிறோன் ;) புரிஞ்சதா வறலநா விட்டுடுங்க:D

560 பதிவுகள் போட்டும் இப்படி பதித்தால் எப்படி??

முதலில் இதை உபயோகித்து பிரச்சனை வந்ததும் தற்பொழுது இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்தான் பயன்படுத்துகிறேன் ;) புரிஞ்சதா வரலேன்னா விட்டுடுங்க :D

இப்படி மாத்தி எழுதுனாதான் எல்லோருக்கும் புரியும்..:D

மயூ
06-03-2007, 12:48 PM
560 பதிவுகள் போட்டும் இப்படி பதித்தால் எப்படி??

இப்படி மாத்தி எழுதுனாதான் எல்லோருக்கும் புரியும்..:D
தூக்கக் கலக்கத்தில ஏதோ உளறிற்றார் விட்டுடுங்க!!! :D

அறிஞர்
06-03-2007, 03:10 PM
நான் எக்ஸ்ப்ளோரர் 6.0 தான் உபயோகிக்கிறேன்.. எந்த பிரச்சனையும் இல்லை... 7.0க்கு விரைவில் மாறனும்.

மனோஜ்
12-03-2007, 08:49 AM
560 பதிவுகள் போட்டும் இப்படி பதித்தால் எப்படி??

இப்படி மாத்தி எழுதுனாதான் எல்லோருக்கும் புரியும்..:D

நன்றி :mad: :mad: :mad: :mad: :mad: :mad:

pradeepkt
12-03-2007, 10:31 AM
நான் எக்ஸ்ப்ளோரர் 6.0 தான் உபயோகிக்கிறேன்.. எந்த பிரச்சனையும் இல்லை... 7.0க்கு விரைவில் மாறனும்.
மாறுங்க மாறுங்க...
நான் 7.0 தான் உபயோகிக்கிறேன். பிரச்சினை எதுவும் இல்லை.

மயூ
29-11-2007, 06:51 AM
மாறுங்க மாறுங்க...
நான் 7.0 தான் உபயோகிக்கிறேன். பிரச்சினை எதுவும் இல்லை.

அட நான் கூட 7தான்... ஃபயர் பாக்சை அப்படியே காப்பி அடித்துவிட்டார்கள்!!!! :sprachlos020:

சூரியன்
29-11-2007, 09:16 AM
எனக்கும் இது போன்ற பிரச்சனை உள்ளது.

வெற்றி
01-12-2007, 11:40 AM
நான் ஓபிரா..மற்றும் AVANT உபயோகிக்கிறேன்....
நோ பிராபள பைக் மாதிரி....பிரச்சனை இல்லா உலாவிகள்,,,மற்றும் வேகமானது கூட...
ஓபிரா பயன் படுத்தி பாருங்கள்....அதன் விசிறி ஆகிவிடுவீர்கள்..

பகுருதீன்
01-12-2007, 12:35 PM
உண்மை தான் பயர்பாக்ஸில் தமிழ் தளங்களின் வரிகள் எனக்கு கொஸ்டின்(??????) மார்க்தான் வருகிறது.
அதனால் எக்ஸ்ப்ளோர்7தான் உபோயோகிக்கிறேன். ஆண்டி வைரஸுக்கு அவிரா ஆண்டி வைரஸ் உபோயோகியுங்கள் இதை இலவசமாக தரவிரக்கம் செய்து இன்ஸ்ட்டால் செய்து அப்டேட் கொள்ளுங்கள்
http://www.antivir-pe.com/freet/index.php?id=9&domain=free-av.com
http://www.antivir-pe.com/freet/index.php?id=10&domain=free-av.com
http://www.antivir-pe.com/freet/index.php?id=25&domain=free-av.com

அறிஞர்
06-12-2007, 07:54 PM
எனக்கு மொஜில்லாவில் பாண்டுகள் சரியாக தெரியவில்லை...

ஆனால் எக்ஸ்போலரில் நன்றாக இருக்கிறது.

சாம்பவி
06-12-2007, 08:01 PM
எனக்கு மொஜில்லாவில் பாண்டுகள் சரியாக தெரியவில்லை...

ஆனால் எக்ஸ்போலரில் நன்றாக இருக்கிறது.

மொஜில்லா... எந்த வெர்ஷன்.... உபயோகிக்கிறீர்கள்... ?...

அறிஞர்
06-12-2007, 08:51 PM
மொஜில்லா... எந்த வெர்ஷன்.... உபயோகிக்கிறீர்கள்... ?...
2.0.0.11 இன்று தான் இறக்கி.. டெஸ்ட் பண்ணி பார்த்தேன்.

அன்புரசிகன்
07-12-2007, 04:06 AM
எதற்கும் உங்கள் உலாவியின் Encoding UTF8 ற்கு உள்ளதா என்று பாருங்கள். எனக்கு இரண்டிலும் சரிவர தெரிகிறது. ஆனால் நெருப்பு நரியில் ஒவ்வொரு வசனவரிகளுக்கான இடைவெளி அதிகமாக தெரியும். ஒருமுறை Enter KEY அழுத்தினால் பெரிய இடைவெளி வந்துள்ளது போல் தோன்றும். அவ்வளவே... எதற்கும் உங்களின் Multilanguage settings enable ஆகியிருக்கிறதா என்று பாருங்கள். (Control pannel ல்)

அறிஞர்
07-12-2007, 01:37 PM
IE நன்றாக இருக்கிறது.. மன்றம் தவிர மற்ற எல்லா தளங்களுக்கும் நரியை உபயோகிக்க வேண்டியது தான்.

சாம்பவி
07-12-2007, 06:19 PM
:(

அனுபவிக்கிறேன் நானும்.... !!!!!!
அடுத்த அப்டேட் வரும் வரை
காத்திருக்கத்தான் வேண்டு,ம்.... !
இல்லையேல்..,
old is gold... !!!!!!!!!!!