PDA

View Full Version : லட்சாதிபதி ஏழைv.pitchumani
03-03-2007, 11:38 PM
எனக்கு தெரிந்த சமையல் வேலை செய்யும் ஒருவர் , கொஞ்சம் தன்னை சமையல் வேலை செய்பவர் வெளியே சொல்ல விரும்ப மாட்டார். ரொம்ப வலியுறுத்தினால் உணவுசாலையில் மாஸ்டராக இருப்பதாக கூறுவார். கொஞ்சம் தாழ்வுமனப்பாண்மை உள்ளதால் சக தொழிலாளிகளிடம் சச்சரவு செய்து இருக்கிற வேலையும் துறந்து வேலையில்லாமல் இருக்கிறார். யாராவது வீடு தேடி வந்து கூப்பிட்டால் வேலைக்கு செல்வார். தன் குழந்தைகளுக்கு படிப்பு மற்றும் இதர செலவுகளக்கு ரொம்ப கஷ்டப்படுவார் எனத்தான் நினைக்கிறேன்.ஆனாலும் யாரிடமும் கடன் கேட்க மாட்டார். எப்படி குடும்பத்தை சமாளிக்கிறார் என்று தெரியவில்லை.ஆனால் அவரது வீடு மற்றும் கட்டப்படாத இடத்தையும் சேர்த்து ரூ18 20 லட்சம் வரை மதிப்பு இருக்கும். அவரை லட்சாதிபதி என்று செல்லுவதா, இல்லை ஏழை என்று சொல்லுவதா என தெரியவில்லை. சரி இடத்தை விற்றால் பணக்காராக ஆகலாமென்றால் இப்பொழுது இருக்குமிடத்தில் அதிகமான வாடகை கொடுத்து அவருக்கு இருக்க மனம் வராது.திரிசங்கு சொர்க்கம் என்பார்களே அது இதுதான் போலும் . இந்திய பொருளாதாரமும் இப்படித்தான் இருக்கிறது. ஒரு பக்கம் தகவல் தொழில்நுட்பத்தில் கோடிகோடியாய் சம்பாதிக்கும் இளைய சமுதாயம். மற்றொரு பக்கம் தற்கொலை செய்யும் விவசாயிகள், இன்னொரு பக்கம் எப்பொழுதும் புலம்பி கொண்டு இருக்கும் நடுத்தரமக்கள். எல்லாமே தன் விதி என்று நினைக்கும் நாட்டில், சமுதாய மாற்றம், புரட்சி ஏற்பட வாய்ப்பு இல்லை எனதான் சொல்லவியலும்.
-----வே.பிச்சுமணி

தங்க கம்பி
04-03-2007, 12:27 AM
இவரால் இவரது குடும்பம் கஷ்டப்படுகிறது.நாம் என்னதான் எடுத்துசொன்னாலும் இந்த மாதிரி ஆளுங்கள் ஒருதுளி கேட்கமாட்டாங்கே.தான் புடித்த முயலுக்கு மூணே கால் என்றுதான் சொல்வார்கள்.

மன்மதன்
04-03-2007, 07:25 AM
இதற்கு அரசாங்கம்தான் எதாவது செய்யவேண்டும்..

மனோஜ்
04-03-2007, 07:32 AM
இதை ஒன்று செய்ய இயலாது
தன் நம்பிக்கையே வாழ்கைஉயர்வு என்பது எனது கருத்து

lolluvathiyar
04-03-2007, 10:53 AM
அரசாங்கம் ஒன்றும் செய்ய முடியாது
செய்யும் தொழிலை தெய்வமாக
மதிக்க தெரியாவிட்டாலும் அதை அவமதிக்காமல்
பழகி கொண்டால் துன்பம் இல்லவே

பென்ஸ்
04-03-2007, 11:02 AM
பிச்சுமணி...

இவரை போல் ஆயிரம் ஆயிரம் மனிதர்கள்.... நம் நடுவிலும்...
இதற்க்கான காரணங்கள் ஆயிரம் ஆயிரம்..

இவர்கள் அடுத்தவர்கள் பாதிப்படைய கூடாது என்று நினைத்து செய்யும் செயல்கள் அடுத்தவர்களை பாதிபடைய செய்வது இவர்களுக்கே தெரியும் ... என்ன செய்வது, இவர்கள் மாற வேண்டும் ,.. மாற்றபட வேண்டும்..

விகடன்
08-03-2007, 03:37 PM
தன்னம்பிக்கையின்மையும் தைரியமின்மையுமே காரணம். இருக்கும் சொத்தை ஏதாவது செய்யப்போய் அதையும் இழந்து நடுத்தெருவிற்கு வந்திடுவோமோ? என்ற பயந்தான் முக்கிய காரணம்!

அறிஞர்
08-03-2007, 03:42 PM
வீட்டை விற்று.. பாதி விலைக்கு மற்றொரு வீடு வாங்கி இருக்கலாம். பாதி பணத்தை பேங்கில் வைத்து வட்டியில் குடும்பம் நடத்தலாம்.
10 இலட்சத்திற்கு மாதம் கிட்டத்தட்ட 8000ரூ கிடைக்கும்.

சும்மா உட்கார்ந்து சாப்பிட மனமில்லாமல் போனால்.. பிஸினஸ் செய்யலாம். வேலை செய்து சாப்பிடலாம்.

அதிகமாய் சம்பாதிப்பவர்களையும், தற்கொலை செய்பவர்களையும் ஒன்றும் செய்ய இயலாது.

காற்றுள்ள போது தூற்றிக்கனும்.

saguni
07-07-2007, 10:01 AM
இவர்களெல்லாம் வசதியிருந்தும் அதை நடைமுறைப்படுத்திப்பார்க்க அறிவோ அல்லது அந்த ஆலோசனை பெறவோ இயலாதவர்கள். நாம் என்ன செய்வது??

namsec
07-07-2007, 11:59 AM
எல்லாம் சரி ஆனால் இந்ததிரிக்கும் பொருளாதாரத்திற்க்கும் என்ன சம்மந்தம்

தங்கவேல்
07-07-2007, 03:08 PM
நாம் திருந்தினால் தான் சமுதாயம் திருந்தும். அதுவரை....???

lolluvathiyar
07-07-2007, 03:23 PM
வீட்டை விற்று.. பாதி விலைக்கு மற்றொரு வீடு வாங்கி இருக்கலாம். பாதி பணத்தை பேங்கில் வைத்து வட்டியில் குடும்பம் நடத்தலாம்.
10 இலட்சத்திற்கு மாதம் கிட்டத்தட்ட 8000ரூ கிடைக்கும்.

சும்மா உட்கார்ந்து சாப்பிட மனமில்லாமல் போனால்.. பிஸினஸ் செய்யலாம். வேலை செய்து சாப்பிடலாம்.

அறிஞ*ரே த*வ*றான* க*ன*க்கு.
அவ*ர் சொத்து 20 ல*ட்ச*ம் வ*ரும் என்றால், ப*த்திர* வேல்யூ 5 ல*ட்ச*ம் தான் வ*ரும், மீதி அனைத்தும் க*ருப்பு ப*ன*மாக* தான் கிடைக்கும். ஆகையால் அதை வ*ட்டிக்கு வ*ங்கியில் போட* முடியாது.
அது மட்டுமல்ல, விற்ற பனத்திற்க்கு வேற இடம் வாங்காவிட்டால் 20 சதவீத வருமான வரி கட்ட வேண்டும்.
பிஸினஸ் செய்ய வேண்டுமானால் வெறும் முதலீடு போட்டால் பத்தாது, அதுக்கு சரியான அனுபவம் வேண்டும். அது ரிஸ்க் அதிகம், ஆகையால் அந்த பனத்தில் சிறு ரூம்கள் கட்டி வாடகைக்கு விட்டால் குடும்பம் வருங்கலாம் தப்பிக்கும். முன்னேற்றதுக்கு அவர் தொழிலையே தொடரலாம்.
முதலில் அவர் தாழ்வு மனப்பான்மையை விட்டொழிய வேண்டும்