PDA

View Full Version : ஹைக்கு - உச்சி வெயில்



வெற்றி
03-03-2007, 10:56 AM
மொட்டை மாடி
வற்றல் வடாம்
ஆண்டனா காக்கை

(நல்லா இருக்கா இது தான் முதல் படைப்பு இங்கு???)

இளசு
03-03-2007, 11:08 AM
நல்லா இருக்கு சாமி..

காட்சிப்பதிவில் ஒரு எளிமை..
ஆண்ட்டெனா வந்த புதுமை..
காலம் மாறினாலும் சில ஆதார தேடல்கள் மாறாத உண்மை..

எல்லாமே அருமை..

பாராட்டுகள்.. தொடருங்கள்..


இங்கே ஒரு கவிதைப்போட்டி இருக்கு... இன்னும் இரண்டு நாள் இருக்கு.. கலந்து கலக்குங்க..
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7997

மயூ
03-03-2007, 11:13 AM
நல்லா இருக்குப்பா!
மேலும் எழுதுங்க

வெற்றி
03-03-2007, 11:26 AM
நல்லா இருக்கு சாமி..


இங்கே ஒரு கவிதைப்போட்டி இருக்கு... இன்னும் இரண்டு நாள் இருக்கு.. கலந்து கலக்குங்க..
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7997

தங்கள் உடனடி பதில் கண்டவுடன் அங்கே பதித்து விட்டேன்
இதோ அதன் நகல்
குருட்டு காதல்
இன்னுமும் நம்பிக்கை இருக்கிறது எனக்கு!!!
ஒரே போல் பேசி, சிந்தித்து....
சில பல இரவு பகல்களை கடந்து...
காத்திருப்பதில் கரைந்து போனாலும்
இன்னுமும் நம்பிக்கை இருக்கிறது எனக்கு!!!
அனைவருக்கும் வாய்ப்பு தரும்
இயற்க்கை நம்மை மட்டும்
சேர்க்காமலா போகும்????
இன்னுமும் நம்பிக்கை இருக்கிறது எனக்கு!!!

இளசு
03-03-2007, 11:29 AM
தங்கள் உடனடி பதில் கண்டவுடன் அங்கே பதித்து விட்டேன்
இதோ அதன் நகல்


இது..இது.. இதைத்தான்...

என்ன வேகம் இது?!!!

அசந்துவிட்டேன் சாமி...

நீங்கள் சேலம் புயல் சாமி..

பாராட்டுகள்..

(கவிதை விமர்சனம் 5 ந்தேதிக்கு மேல்...
நிர்வாக நெறிமுறை அப்படி..சரீங்களா?)

மன்மதன்
04-03-2007, 01:50 PM
மொட்டை மாடி
வற்றல் வடாம்
ஆண்டனா காக்கை

(நல்லா இருக்கா???)

நல்லா இருக்கு..

அமரன்
14-06-2007, 09:06 PM
மொக்கைச்சாமி அனுவாக எழுதி இப்போ பரிசுதட்டிச்செல்லும் அளவுக்கு வளர்ந்துவிட்டீரே.

தாமரை
15-06-2007, 04:51 AM
இது..இது.. இதைத்தான்...

என்ன வேகம் இது?!!!

அசந்துவிட்டேன் சாமி...

நீங்கள் சேலம் புயல் சாமி..

பாராட்டுகள்..

(கவிதை விமர்சனம் 5 ந்தேதிக்கு மேல்...
நிர்வாக நெறிமுறை அப்படி..சரீங்களா?)
சேலம் புயலா? நம்ம ஊரு பெருமையைக் காப்பாத்துங்க சாமியோவ்..

தாமரை
15-06-2007, 04:53 AM
மொட்டை மாடி
வற்றல் வடாம்
ஆண்டனா காக்கை

(நல்லா இருக்கா இது தான் முதல் படைப்பு இங்கு???)

நான் வேணும்னா மிச்சத்தைப் பாடவா???

குச்சியில் கட்டப்பட்ட
பாலித்தீன் பேப்பர்
விரட்டப்பட்ட மாமியாருக்குப் பதிலாய்

சுட்டிபையன்
15-06-2007, 05:04 AM
மொக்காசமி ஹைக்கூ அழகு
தாமரை அண்ணாவின் ஹைக்கூ என்னும் சிறப்பு