PDA

View Full Version : நீ ஹாவ்...!! ஐ யாம் சாரி....!! பாகம்-1பென்ஸ்
03-03-2007, 10:14 AM
பெஞ்ச் இன்னை க்கு சாயும்காலத்துக்குள்ளால எல்லா ரிப்போட்டையும் தந்திடுங்க இல்லைனா அடுத்த வாரம் முளுவதும் நீங்க இங்க இருக்க மாட்டிங்க அப்புறம் நான் எதாவது தேவைனா உங்களை பிடிக்க கஷ்டமாயிடும்

என்னயா நான் என்ன சந்திர மண்டலத்துக்கா போறென் பக்கத்து நாட்டுக்குதானே போறென், போன் பன்னினா தெரிய போகுது.

சர்ரி இன்னாமோ பண்ணீகோ பத்திரமா போயீக்கினு வா.. அங்கிட்டு போயி உன் கில்மா வேலையை காட்டாத. J..

எல்லா மனேஜரும் இப்படிதான், ரொம்பதாம் அட்வைஸ் கொடுப்பாங்க.. இங்க என்னடானா இன்னும் டிக்கட் வரலை, போரக்ஸ் வரலை என்ன பன்னுறங்க??? எல்லா அலுவலகமும் இப்படிதானா??? போறதுக்குள்ள எல்லாத்தையும் சரி பண்ணிடலாம் என்று நினைத்து மீட்டிங், போன் என்று மட்டுமே அன்றைய தினம் போனது
நாளை காலையில 3:00 மணிக்கு சீனா போகனும் , அவசரமாக டிக்கட் போட வேண்டி வந்ததால நல்ல விமான சேவைகளில் கிடைக்கல என்று சொல்லிட்டாங்க, கிடைத்த டிக்கட் பெங்களுர் மும்பை, மும்பை- பெங்காங், பெங்காங்- ஷாங்காய்.. இது-ல மும்பை ஷாங்காய் ஒரே விமானம் தானாம்

அலுவலகத்தில் இருந்து வீட்டிற்க்கு வழக்கம் போல் இரவு 12 மணிக்கு வந்து அந்த ஒரு வாரத்திற்க்கான தேவையான துணி மணிகளை ஒரு பையில் திணிக்க ஆரம்பித்தேன்.
டாக்ஸி புக் பண்ணுனியா??? இது அறை தோழன்
இன்னும் இல்லைடா
நீ இன்னும் கூறு கெட்டவன் தான், நானே பன்னுறேன்....
டேய் 2 மணிக்கே வர சொல்லிரு..
நீ முதலில் 2 மணிக்கு கிளம்புறதுக்கு வழியை பாரு

அவசர குளியல், அவசர பேக்கிங்.. அவசரமற்ற ஜெபம் என்று 2 மணிக்கு ரெடியாகிவிட்டது.
மனோஜ், டாக்ஸி வரைலைடா இன்னும் நான் அவசர படுத்த அவன் மீண்டும் டாக்ஸி அலுவலகத்தை அலைபேசியில் அழைத்தான்
முன்னாலையே அனுப்பியாச்சே சார் பதில் வந்தது
வீட்டின் கதவை திறந்து அங்கு நின்று கொண்டிருந்த மாருதி வேனை பார்த்து ஏண்டா கதவை திறந்து டாக்ஸி வந்திருக்கன்னு பாக்க மாட்டியா?? என்று திட்ட ஆரம்பித்தான்
அடடா இனிய காலை பொழுது சுப்பிரபாதத்துடன் துவங்குகிறதே என்று மனதுக்குள் நினைத்து கொண்டேன்

15 நிமிட பயணம்- விமான நிலையம்- செக்-இன் செக்கூரிட்டி செக் பயணம்- குட்டி தூக்கம் மும்பை விமான நிலையம்.

அடுத்த விமானத்துக்கு இன்னும் 3 மணி நேரம் இருந்தது.. பெங்களுர் விமான நிலையத்தி விட கொஞ்சம் நன்றாக இருந்தாலும் ஒரு பேச்சுலர் ரூமை விட கேவலமாக இருந்தது. வாசிக்கும் பழக்கம் இல்லை என்றாலும் எதோ பெரிய ஆளுமாதிரி இப்படிதான் காதல் கவிதை புத்தகத்தை எடுத்து வாசிக்க துவங்கினேன் மனம் சில நேரங்களில் ஒத்து கொடுப்பதில்லை. புத்த்கத்தி மூடி வைத்து விட்டு பக்கத்தில் இருந்த காப்பி கடையில் காசு கொடுத்து ஒரு காபே மோக்கா வாங்கி கொண்டேன்.
நேரம் போக்க வழி தெரியவில்லை அங்கு இருந்தவர்களை அலச ஆரம்பித்தேன் அதிகம் பேர் மத்திய கிழக்கு ஆசியா செல்பவர்கள், சிலர் சிங்கபூர், மலேசியா செல்பவர்கள். சிலர் வெள்ளையர்கள். மத்திய கிழக்கு ஆசிய செல்பவர்களில் பலர் மும்பை விமான் நிலையத்தை சுற்றி பார்த்து கொண்டிருந்தார்கள்.

இயற்கை உபாதை வர சுற்றி பார்த்தேன் எங்கும் எந்த அடையாள குறியீடுகளும் இல்லை. அங்கு இருந்த போலிஸ்காரரிடம் ஒற்றிவிரலை காண்பிக்க அவரும் ஒரு மூலையை நோக்கி ஒற்றி விரலை காட்டினார். வாசலில் மட்டும் ஆண்/பெண் என்று பிரித்து படம் போட்டு இருந்தார்கள். உள்ளே போனால் இருந்த இரண்டு யூரினலையும் இரண்டு வெள்ளையர்கள் ஆக்கிரமித்து இருந்தார்கள். நான் அவசரத்துக்காக அறக்குள் அவசரமாக நுளைந்தேன், நுளைந்த வேகத்தில் திரும்ப வந்து விட்டேன். பாவம் எவனே ஒருவன் தண்ணீர் இல்லாமல் பிளஸ் அவுட் பண்ணாமல் போயிருக்கிறான். (மற்றதுக்கு பேப்பர் யூஸ் பண்ணி இருப்பானோ). வேளியே வந்த என்னை பாத்து ஒரு வெள்ளையன் என்ன உபயோகிக்க முடியலையா?? என்று நக்கலாக கேட்டதும் எனக்கு பதில் வரவில்லை. ஆனால் ராகவன் தன்னுடைய பயண கட்டுரையில் விண்வெளி வீரன் உடை என்று ஒரு கழிப்பறை நினைவை கூரையதை நினைத்து சிரித்து கொண்டேன்

சிறிது நேரத்தில் மீண்டும் போர்டிங் அழைப்பு வர நான் சேக்கூரிட்டி சேக் வரிசையில்.. எதோ துபாயிலிருந்து மலேசியா போகும் ஒரு பாவத்திடம் நீங்கள் துபாயில் வாங்கிய டூட்டி பிரீ பிராந்தி எல்லாம் மும்பை வழியாக கொண்டு செல்ல கூடாது என்று வழிப்பறி செய்து கொண்டிருந்தார்கள். என் முறை வந்ததும் ஒரே ஒரு கேரி பேக் தான் அனுமதிப்போம் என்ரு அந்த போலிஸ் என்னை தடுக்க, வழக்கம் போல் நாம் சவுன்ட் கொடுக்க.. ஒரு இன்ஸ்பெக்டர் வந்தார்
லேப்டாப் மற்றும் ஒரு கேரி பேக் வைத்திருக்கிறேன் இவர் அனுமதிக்க மாட்டேன் என்கிறார், நான் பெங்களுரில் இருந்து வருகிறென் அங்கு அனுமதி கிடைத்ததே என்று முறையிட
அவரும் அனுமதிக்க முடியாது, நீங்கள் ஏர்லைனிடம் பேசி கொள்ளுங்கள் என்றார்
நான் ஏர்லைனிடம் வந்து முறையிட, இவர்களும் அது என்னவோ இவர்களுக்கு ஒன்னும் முடியாதது போல் பேசினார்கள் ஒருவர் வந்து சார், இவர்களிடம் லேப்டாப் என்ன என்று சொன்னாலும் புரியாது, தயவு செய்து நீங்க எல்லாததியும் ஒரு பையில் வையுங்கள் என்றார் என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை.
நான் அவர்களிடமே பேசி கொள்கிறென் என்று சேக்குரிடி சேக் நாக்கி நடந்தேன்.

நான் அவர்களை நோக்கி நடக்க என்னை திருப்பி அனுப்பிய போலிஸ் என்னை எதோ கோபத்துடன் பார்த்து கொண்டிருந்தான்.

தொடரும்.

மயூ
03-03-2007, 10:56 AM
அப்புறம் என்னாச்சு செக்குரீயிட்ட முறையாப் பேச்சு வாங்கினீங்களா?? அவனுகளுக்குத்தானே தமிழ் தெரிஞ்சிருக்காது.?? எப்படி சமாளிச்சீங்க?

இளசு
03-03-2007, 11:02 AM
மும்பை விமானநிலையம் என்றாலே எனக்கு நெஞ்சு கசக்கும் பென்ஸ்..

இப்போதெல்லாம் முற்றிலும் தவிர்த்துவிடுகிறேன் அந்த வழி பயணங்களை..

ஏனோ தெற்கத்தியவர்களை அவர்கள் மிக மிக அந்நியமாய் நடத்துவதாய் எனக்கு படுகிறது..

சுவையான பென்ஸ் பாணி நொறுக்ஸ் பதிவு..

சுவையாய்க் கொறித்தேன்..நாக்கு இன்னும் நமநமக்கிறது..

இன்னும் ப்ளீஸ்...

மனோஜ்
03-03-2007, 03:25 PM
மனோஜ், டாக்ஸி வரைலைடா இன்னும் நான் அவசர படுத்த அவன் மீண்டும் டாக்ஸி அலுவலகத்தை அலைபேசியில் அழைத்தான்
முன்னாலையே அனுப்பியாச்சே சார் பதில் வந்தது
வீட்டின் கதவை திறந்து அங்கு நின்று கொண்டிருந்த மாருதி வேனை பார்த்து ஏண்டா கதவை திறந்து டாக்ஸி வந்திருக்கன்னு பாக்க மாட்டியா?? என்று திட்ட ஆரம்பித்தான்
வினா ஏகிட்ட எதுக்கு திட்டு வாங்குறிங்க கதவ தொறந்து பாத்திருக்கலாமுல எப்படியே நல்லபடியா போயிட்டு வாங்க

mukilan
04-03-2007, 05:50 AM
நீ ஹாவ் அப்படீன்னா, மாண்டரீன் மொழியிலே ஹலோ அப்படீங்கற அர்த்தத்தில வர்ற சொற்றொடர்தானே? எனக்கும் சைனீஷ் தெரியும் (நிஜமாவே நம்புங்கப்பா, சைனீஷ் சாப்பாட்டைச் சொன்னேன்). ஏற்கனவே உங்களூர் கால்வாயில் பச்சை நண்டு பிடித்துண்ட கதையைப் படித்திருக்கிறேன். இங்கே பாம்புண்ணும் கதை உண்டோ? ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்.

மன்மதன்
04-03-2007, 07:21 AM
லேப்டாப்பையும் ஒரு லக்கேஜ் என்று சொன்னார்களென்றால், அந்த லக்கேஜில் என்னென்ன வைத்திருந்தீர்கள் :D :D ??

பயண கட்டுரை என்றாலே அலாதி பிரியம்.. தொடருங்க உங்க அட்டகாசத்தை...

பென்ஸ்
04-03-2007, 10:22 AM
அப்புறம் என்னாச்சு செக்குரீயிட்ட முறையாப் பேச்சு வாங்கினீங்களா?? அவனுகளுக்குத்தானே தமிழ் தெரிஞ்சிருக்காது.?? எப்படி சமாளிச்சீங்க?

அட போங்கையா.. அவனுவளுக்கு சரியா இங்கிளிஸே வராது... பின்னையாக்கும் தமிழ்...

பென்ஸ்
04-03-2007, 10:27 AM
மும்பை விமானநிலையம் என்றாலே எனக்கு நெஞ்சு கசக்கும் பென்ஸ்..

இப்போதெல்லாம் முற்றிலும் தவிர்த்துவிடுகிறேன் அந்த வழி பயணங்களை..

ஏனோ தெற்கத்தியவர்களை அவர்கள் மிக மிக அந்நியமாய் நடத்துவதாய் எனக்கு படுகிறது..

சுவையான பென்ஸ் பாணி நொறுக்ஸ் பதிவு..

சுவையாய்க் கொறித்தேன்..நாக்கு இன்னும் நமநமக்கிறது..

இன்னும் ப்ளீஸ்...

வரபோகும் பயணத்துக்கும் எனக்கு சில பாதைகள் கொடுக்கபட்டது இளசு... மும்பை வழி பயணத்தை தவிர்த்து விட்டேன்.... இவர்கள் தெற்க்கத்தியர்கள் மட்டுமல்ல அவர்கள் இல்லாதவர்களில் யவரையும் மதிப்பதில்ல்... வெள்ளையர்கள் உட்பட...

இந்த மாதிரி பொது இடங்களில் கொஞ்சம் படித்தவர்கள் யாரயாவது வேலைக்கு அமர்த்த்லாம்... இல்லை அடுத்தவரிடம் எப்படி பழகுவது என்று டிரேனிங் கொடுக்கனும்....

பெங்களுர் விமான நிலையமும் பெரிய விஷேஷம் இல்லை....

பென்ஸ்
04-03-2007, 10:28 AM
வினா ஏகிட்ட எதுக்கு திட்டு வாங்குறிங்க கதவ தொறந்து பாத்திருக்கலாமுல எப்படியே நல்லபடியா போயிட்டு வாங்க

திட்டுவாங்குறதுன்னு முடிவெடுத்துதான் இப்படி செய்திருப்பேன்னு நினைக்கிறேன்....

பென்ஸ்
04-03-2007, 10:30 AM
நீ ஹாவ் அப்படீன்னா, மாண்டரீன் மொழியிலே ஹலோ அப்படீங்கற அர்த்தத்தில வர்ற சொற்றொடர்தானே? எனக்கும் சைனீஷ் தெரியும் (நிஜமாவே நம்புங்கப்பா, சைனீஷ் சாப்பாட்டைச் சொன்னேன்). ஏற்கனவே உங்களூர் கால்வாயில் பச்சை நண்டு பிடித்துண்ட கதையைப் படித்திருக்கிறேன். இங்கே பாம்புண்ணும் கதை உண்டோ? ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்.

அப்படியா.... அப்படியேல்லாம் பொருள் இருக்கா??? நானும் நீ ஹாவ்-ன்னா ஏதோ சைனீஸ் டிஸ் என்ரு இல்லையா நினைத்தேன்..:rolleyes: :rolleyes: :D :D :D

பென்ஸ்
04-03-2007, 10:31 AM
லேப்டாப்பையும் ஒரு லக்கேஜ் என்று சொன்னார்களென்றால், அந்த லக்கேஜில் என்னென்ன வைத்திருந்தீர்கள் :D :D ??

பயண கட்டுரை என்றாலே அலாதி பிரியம்.. தொடருங்க உங்க அட்டகாசத்தை...

ஒருவேளை நான் ஒரே ஒரு டிக்கட் மட்டும் எடுத்து ரெண்டு சீட் இடத்தை பிடிக்க போறதை பாத்து பொறாமையா இருக்கலாம்.

மதி
05-03-2007, 02:52 AM
அட்டகாசம் பென்ஸ்..
சீக்கிரமா விமானம் ஏறி சீனா செல்லவும்....!

SathishVijayaraghavan
05-03-2007, 04:12 AM
பென்ஸ் அப்புரம் என்ன நடந்தது???

ஷீ-நிசி
05-03-2007, 04:30 AM
வெளியே வந்த என்னை பாத்து ஒரு வெள்ளையன் என்ன உபயோகிக்க முடியலையா?? என்று நக்கலாக கேட்டதும் எனக்கு பதில் வரவில்லை.

நம்மளை விடுங்க..நமக்கு இதெல்லாம் சகஜம்! ஆனா, பாவம் அவனுங்க நிலைமைய யோசிச்சிப்பாருங்க. ஒருத்தன் கூட மதிக்கமாட்டானுங்க இந்தியாவ... இந்த நிலைமையில் இருந்ததுனா.

சீக்கிரம் தொடருங்க... நல்லாருக்கு உங்க ஸ்டைல் வரிகள்...

மன்மதன்
05-03-2007, 06:33 AM

விமான நிலையத்திலேயே இப்படின்னா.. பேருந்து நிலையத்தில் என்ன பண்ணுவாங்களோ??:D :D

மன்மதன்
05-03-2007, 06:34 AM
ஒருவேளை நான் ஒரே ஒரு டிக்கட் மட்டும் எடுத்து ரெண்டு சீட் இடத்தை பிடிக்க போறதை பாத்து பொறாமையா இருக்கலாம்.

அப்படியா. பரம்ஸ் எடுத்த போட்டோவில் நீங்க ரொம்ம்ம்ம்ப ஒல்லியா இருந்தீங்க...:rolleyes: :rolleyes:

பென்ஸ்
05-03-2007, 07:22 AM
அப்படியா. பரம்ஸ் எடுத்த போட்டோவில் நீங்க ரொம்ம்ம்ம்ப ஒல்லியா இருந்தீங்க...:rolleyes: :rolleyes:

பரம்ஸ் என்னுடைய போட்டோவை கிராபிக்ஸ் பண்ணி உங்களை ஏபாத்திட்டார் போல...:rolleyes: :rolleyes:
இது திட்டமிட்ட சதி... சத்தியமா நான் சென்ச்சுவரி அடிக்க இன்னும் கொஞ்ச நேரம்தான் பாக்கி...:D :D :D

மதி
05-03-2007, 07:47 AM
அடடா...
நேரக்கணக்கில் வெயிட் ஏறுது போலருக்கு..!

சேரன்கயல்
05-03-2007, 10:56 AM
அடடே...
ஒருவழியா கிளம்பத் தயாராயிட்டீங்க...
சீக்கிரம் ஷாங்காய் வந்து சேருங்க...

மன்மதன்
05-03-2007, 05:59 PM
சத்தியமா நான் சென்ச்சுவரி அடிக்க இன்னும் கொஞ்ச நேரம்தான் பாக்கி...:D :D :D

சின்ன ஸ்பெல்லிங் மிஸ்டேக்.. கொஞ்ச கிராம்தான் பாக்கி.:D :D ஹ்ம்ம் பிரதீப் எல்லாம் உங்க கிட்ட நெருங்க முடியாதுன்னு நினைக்கிறேன்..:rolleyes: :rolleyes:

mukilan
06-03-2007, 04:11 AM
சின்ன ஸ்பெல்லிங் மிஸ்டேக்.. கொஞ்ச கிராம்தான் பாக்கி.:D :D ஹ்ம்ம் பிரதீப் எல்லாம் உங்க கிட்ட நெருங்க முடியாதுன்னு நினைக்கிறேன்..:rolleyes: :rolleyes:

பிரதீப் இல்லைன்னா என்ன. நாங்கள்லாம் இருக்கிறோம்ல:D :D

Mano.G.
06-03-2007, 04:22 AM
நீ ஹாவ் மா? என்றால்
சௌக்கியமா என கேட்பது

ஹென் ஹாவ் என்றால்
சௌக்கியம்.

செக் ஃபான் மெ என்றால்
சோறு சாப்பிட்டாச்சா ?

ஃன் காவ் என்றால்
தூங்கு

ஃஉ ச்சு தாவ்

எனக்கு தெரியாது

போ - இல்லை

ச்சியாம்
கையெழுத்து

பைத்தூய்
வரிசை
எனக்கு தெரிந்த மாண்டரின்

மேலும் தெரிந்துகொள்ள இந்த சுட்டியை தட்டுங்கள்
http://ezinearticles.com/?Learn-to-Speak-Basic-Chinese-(Mandarin)-Words-and-Phrases&id=60907#

மனோ.ஜி

gragavan
06-03-2007, 05:45 AM
மும்பை ஏர்ப்போர்ட்டா? வேண்டவே வேண்டாம் சாமி. டெல்லி வழியாவோ, சென்னை, பெங்களூர், கொல்கத்தா வழியாவோ போகத் தயார். மும்பை வேண்டவே வேண்டாம். எல்லாம் பணம் பிடுங்கிப் பயலுக. அடுத்தவன மதிக்க மாட்டானுக. அதுலயும் இந்தி பேசலைன்னா.....முடிந்த வரையில் மும்பை அயலக விமானநிலையத்தைத் தவிர்ப்பது மிக நல்லது. மிக மிக நல்லது.

gragavan
06-03-2007, 05:45 AM
பென்சிடம் இருந்து ஒரு பயணத் தொடர்.....தொடரட்டும். காத்திருக்கிறோம்.

பாரதி
06-03-2007, 03:17 PM
நல்ல துவக்கம் நண்பரே...
தொடருங்கள். தொடர்ந்து படிக்க நண்பர்களுடன் நானும் ஆவலாய் காத்திருக்கிறேன்.

ஓவியா
06-03-2007, 03:26 PM
வெளியூர்னாலே இப்படிதான் எதாவது வந்து மாட்டுது, கத நல்லதான் போகுது.

தொடருங்க பென்சு.

இலங்கை விமான நிலயத்தில் என்னை இப்படிதான் காரணமில்லாமல் டெக்ஸ் கட்ட சொல்லி அடம் பிடித்தார்கள்.நான் என்றுமே விதிமுறையை தவறுவதில்லை. கடசிலே நான் தான் ஜெச்சேன். :D

அறிஞர்
06-03-2007, 05:04 PM
அசத்தல் ஆரம்பம்.. இப்படி ஏர்லைன்ஸ் காரங்க தொல்லை பண்ணின்னா.. நம்மாளு பாதிபேர் ஏர்போர்ட்டில் தகராறு பண்ணி.. குடியிருக்க வேண்டியது தான்...

அறிஞர்
06-03-2007, 05:08 PM
செக் ஃபான் மெ என்றால்
சோறு சாப்பிட்டாச்சா ?

சூ ஃபான் மே என்று சொல்வர்...ஃஉ ச்சு தாவ்

எனக்கு தெரியாது

ஃவோச்சு தாவ் என்றால் எனக்கு தெரியும்.

ஃவோ புஜுதாவ் என்றால் தான் எனக்கு தெரியாது என அர்த்தம்.

தெரிந்தால் மற்றவர்களிடம் விசாரித்துச் சொல்லுங்கள்போ - இல்லை

பொதுவாக இல்லை என்பதற்கு "மெய்யோ" என பயன்படுத்தவர்.

இளசு
06-03-2007, 08:43 PM
மும்பை ஏர்ப்போர்ட்டா? வேண்டவே வேண்டாம் சாமி. டெல்லி வழியாவோ, சென்னை, பெங்களூர், கொல்கத்தா வழியாவோ போகத் தயார். மும்பை வேண்டவே வேண்டாம். எல்லாம் பணம் பிடுங்கிப் பயலுக. அடுத்தவன மதிக்க மாட்டானுக. அதுலயும் இந்தி பேசலைன்னா.....முடிந்த வரையில் மும்பை அயலக விமானநிலையத்தைத் தவிர்ப்பது மிக நல்லது. மிக மிக நல்லது.

ராகவனும் நம்ம கழக உறுப்பினர்தானா?

அண்மையில் என் நண்பரை உள்நாட்டு நிலையத்திலிருந்து சர்வதேச நிலையம் அழைத்துச் செல்ல 200 கேட்டு, வழியில் அதை 200 டாலர் என்றாக்கி... இருட்டு சந்தில் நிறுத்தி, அவரின் நேரமின்மை, பயத்தை பயன்படுத்தி பணம் பறித்து, பின் சாலையில் வேறொரு டாக்சியில் ஏற்றிய சம்பவம் நிகழ்ந்தது.....

மும்பை விரும்போர் கழகத்தின் ஆயுள் அங்கத்தினர் ஆயிட்டேன்...

Mano.G.
06-03-2007, 11:48 PM
சூ ஃபான் மே என்று சொல்வர்...

ஃவோச்சு தாவ் என்றால் எனக்கு தெரியும்.

ஃவோ புஜுதாவ் என்றால் தான் எனக்கு தெரியாது என அர்த்தம்.

தெரிந்தால் மற்றவர்களிடம் விசாரித்துச் சொல்லுங்கள்

பொதுவாக இல்லை என்பதற்கு "மெய்யோ" என பயன்படுத்தவர்.

இங்கு மலேசியாவில் ஹாக்கியான், கான்டனீஸ், காங்ஃபு மற்றும் மெண்டரின் மொழிகளை கலந்து பேசுவதால் இருக்கும் போல.

மனோ.ஜி

சேரன்கயல்
07-03-2007, 10:03 AM
பொதுவாக இல்லை என்பதற்கு "மெய்யோ" என பயன்படுத்தவர்.

அறிஞரே...
தைவான் நினைவுகள் அலைமோதுகிறதா...
நீங்கள் சொன்ன அனைத்தும் சரியே..

ஆமாம், பென்ஸ் எங்கப்பா...??

பென்ஸ்
07-03-2007, 10:13 AM
அறிஞரே...
தைவான் நினைவுகள் அலைமோதுகிறதா...
நீங்கள் சொன்ன அனைத்தும் சரியே..

ஆமாம், பென்ஸ் எங்கப்பா...??
ஏன் அந்த அம்மணியவிட்டு இன்னும் தமிழ் பேச சொல்ல போகிறீரா????:D :D :D
எப்படியோ.. தமிழ் வளர்ந்தால் சரி :rolleyes: :rolleyes: :rolleyes:

சேரன்கயல்
07-03-2007, 02:06 PM
ஏன் அந்த அம்மணியவிட்டு இன்னும் தமிழ் பேச சொல்ல போகிறீரா????:D :D :D
எப்படியோ.. தமிழ் வளர்ந்தால் சரி :rolleyes: :rolleyes: :rolleyes:

ஊரிலிரிந்து நம்ம பக்க ஊருக்கு (ஷாங்காய்) வந்து ஊர்வன பற்றிக் கேட்டீரேன்னு, அந்த பக்கத்து ஊரு அம்மணியை பேசவிட்டால்...லொள்ளடிக்கிறீகளேய்யா...:mad: :angry:
(அந்த அம்மணி என்னைய பார்த்து சில வாரங்களுக்கு முன்னே கேட்டாய்ங்க, உங்க ஊர் ஆளுக்கு எங்க ஊர்ல ஊர்வன கிடைச்சுதாமான்னு:D :D )

அறிஞர்
07-03-2007, 08:31 PM
இங்கு மலேசியாவில் ஹாக்கியான், கான்டனீஸ், காங்ஃபு மற்றும் மெண்டரின் மொழிகளை கலந்து பேசுவதால் இருக்கும் போல.

மனோ.ஜி
இருக்கலாம் ஜீ... பொதுவாக பலரால் பேசப்படுவது மாண்டரீன் சைனீஸ்.. அதில் சில சொற்கள் மாத்திரம் நான் அறிந்தது.

சேரன் இங்கு வகுப்பு நடத்தலாம்.

அறிஞர்
07-03-2007, 08:32 PM
அறிஞரே...
தைவான் நினைவுகள் அலைமோதுகிறதா...
நீங்கள் சொன்ன அனைத்தும் சரியே..

தற்போதைய வாழ்க்கையில் 25% வருடங்களை, சீனர்களுடன் கழித்துள்ளேன்.. எப்படி மறக்க இயலும். ஒன்றோடு ஒன்றாக கலந்தது.

அறிஞர்
07-03-2007, 08:34 PM
சேரனும், பென்ஸூம் அம்மிணி.. அம்மிணி எனப்பேசுகிறீர்கள்... ஆனால் அடுத்த பாகம் வருவதற்குரிய அறிகுறியை காணோம்.

pradeepkt
08-03-2007, 06:04 AM
அடங்கொக்காமக்கா
இதை எப்படிய்யா விட்டேன்...
இதற்கு மற்ற பகுதிகளை உடனே தரும்படி மன்றத்தின் சார்பில் கட்டளை பிறப்பிக்கிறோம்.

gragavan
08-03-2007, 12:47 PM
ராகவனும் நம்ம கழக உறுப்பினர்தானா?

அண்மையில் என் நண்பரை உள்நாட்டு நிலையத்திலிருந்து சர்வதேச நிலையம் அழைத்துச் செல்ல 200 கேட்டு, வழியில் அதை 200 டாலர் என்றாக்கி... இருட்டு சந்தில் நிறுத்தி, அவரின் நேரமின்மை, பயத்தை பயன்படுத்தி பணம் பறித்து, பின் சாலையில் வேறொரு டாக்சியில் ஏற்றிய சம்பவம் நிகழ்ந்தது.....

மும்பை விரும்போர் கழகத்தின் ஆயுள் அங்கத்தினர் ஆயிட்டேன்...
ஆமாங்க...அப்பாடியோவ்...படிக்கும் போதே பயங்கரமா இருக்கே. மும்பைன்னாலே இன்னும் கலக்குது. அதுக்கப்புறம் மும்பைக்குப் போகவேயில்லை. விருப்பமும் இல்லை.