PDA

View Full Version : யார் கடவுள்?



அமரன்
02-03-2007, 09:50 AM
என் தாயகமாம் இலங்கையின் மணிமகுடம் யாழ்ப்பாணம். யாழ்ப்பணத்தின் ஒரு வைரக்கல்தான் எனது ஊர் (மானிப்பாய்). எனது சிறு வயதில் நடந்த ஒரு சம்பவம். 35 வயது மதிக்கத்தக்க ஒருவரை மைக்செட் திருடன் என்று எல்லோருமழைப்பதைக் கேட்டிருக்கிறேன். அதுக்கான காரணத்தைப் பலரிடம் கேட்டும் யாருக்குமே தெரியவில்லை. எனக்கோ ஆச்சரியம்! எப்படித் தெரியாமல் இருக்கும்? பலரிடம் கேட்டுப் பயனில்லை. இறுதியில் எம் ஊரின் 60 வயதுடைய ஓய்வுபெற்ற ஆசிரியரிடம் கேட்டேன். "தம்பி அப்போதெல்லாம் நம்ம ஊர் திருவிழாக் காலத்தில் கல கலன்னு இருக்கும். ஊரில் எல்லா இடமும் ஒலிபெருக்கி வைத்து மைக்செட்டில் பாட்டுப்போடுவார்கள். காலையில் நாலு மணிக்கு போட்டால் இரவு பத்து மணிக்குத்தான் நிறுத்துவார்கள். அப்படி ஒரு கும்மாளம்தான் தம்பி. ஊரில எல்லோருமே சந்தோசமாக இருப்போம். சின்னஞ்சிறுசில இருந்து பெரியவங்க வரை ஆனந்தமாக இருப்பார்கள். மார்கழி மாத்தில்தான் தம்பி திருவிழா நடக்கும். அதே மாதத்தில்தான் பள்ளி இறுதியாண்டுத் தேர்வும் நடக்கும் தம்பி. தேர்வில் தேறாவிட்டால் அவ்வளவுதான். அத்னால திருவிழாக்காலத்தில் மாணவர்கள் படிப்பதில்தான் கவனமாக இருப்பார்கள். அப்போ நான்தான் ஊர்ப் பள்ளியின் தலைமை ஆசிரியர். அவர்கள் படிக்க நினைத்தாலும் மைக்செட் சத்தம் அவர்களைப்படிக்கவிடாது. நான் எத்தனையோ தடவை சொல்லிப்பார்த்தேன். யாரும் கேட்கவில்லை. அப்பதான் ராமச்சந்திரன் என்னைச் சந்திதான். ஊரின்மேல் அக்கறையுள்ளவர்களில் ஒருத்தன்தான் அவன். அவனிடமும் இதுபற்றிப் பேசினேன். கேட்டுவிட்டு ஒரு புன்முறுவலுடன் போனான் தம்பி. அடுத்தநாள் காலையில் பாட்டிச்சத்தம் கேட்கவில்லை. என்னன்னு ஊரே அதிர்ச்சியாயிட்டுது. கோயிக் வாசலில் ஒரே கூட்டம். ஊரில் இருந்த ஒலிபெருக்கி, கோயிலிலிருந்த மைக்செட் ஒன்னையும் காணலை. யாரோ திருடிட்டாங்க.
அப்புறம் ஊரில ஒருத்தன் சொன்னதை வைத்து ராமச்சந்திரன்தான் திருடினத்துன்னு கண்டு பிடிச்சாங்க. அவனைப் பொலிசில் குடுத்தாங்க தம்பி. பொலிசும் கோட்டில் நிறுத்தினாங்க. ஊர்ப்பிள்ளைகளின் படிப்புக்காகத்தான் திருடினேன் என்ற அவன் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி மைக்செட் வைக்கும் நேரத்தை காலை 9 இலிருந்து மாலை 5 வரைன்னு கட்டுப்படுத்தினார். ஆனால் திருடின குற்றத்துக்கு அவனுக்கு ஒரு வாரம் சிறைத்தண்டனை கொடுத்தார். அதற்கு அப்புறம் எல்லோரும் அவனை மைக்செட் திருடன்னுதான் கூப்பிடுறாங்க."
வாத்தியார் சொல்லி முடிச்சதும் ராமச்சந்திரன் எனக்கு சாமியாத் தெரிஞ்சார். ஒவ்வொருத்தனுக்கும் இளவயதில் படிப்புத்தானே சாமி. அந்தப்படிப்பை கொடுக்கிறவனும் சாமிதானே. அப்படிப்பார்த்தால் ராமச்சந்திரனும் சாமிதானே. அன்றிலிருந்து இன்றுவரை அவர் எனக்கு சாமியாத்தான் தெரியுறார். அனால் ஊரிலிருந்து நான் கிளம்பும்வரை அவரை மைக்செட்திருடன்னுதான் கூப்பிடுறாங்க.

அமரன்
02-03-2007, 06:08 PM
நண்பர்களே கதைபற்றிய உங்க கருத்தைக்கூற மறக்காதீர்கள்.

மன்மதன்
02-03-2007, 06:50 PM
ஒரு குறும்படம் பார்த்த திருப்தி ஏற்பட்டது...

அறிஞர்
02-03-2007, 06:55 PM
தன் மீது பழி பொருட்டல்ல என எண்ணி...
செய்த நல்ல காரியம்....
பெருமை பட வைக்கிறது...

இது போல் நல்லவர்கள் பலர் எழும்பினால் நாடு முன்னேறும்...

இளசு
02-03-2007, 07:44 PM
மிக நெகிழ்வான ஒரு நிகழ்வை நேர்த்தியாய் சொன்ன நக்கீரனுக்குப் பாராட்டுகள்..

கல்வி, குழந்தைகள், நோயுற்ற பெரியவர்களை இம்சிக்கும் ஓசைகள்
பக்திக்காக என்றாலும் கண்டித்து விலக்கவேண்டியவை..

அந்த வகையில் ராமச்சந்திரன் ஒரு நாயகர்...மெச்சப்பட வேண்டியவர்..

மனோஜ்
03-03-2007, 07:12 AM
நன்றி நரன்
இததா செல்லுவாங்க நல்லதுக்கு காலமே இல்லை
பாருங்கள் ஊருக்காக தான் செய்தார் கடைசில் ஊரே அவறை அழைப்பது திருடன் இது கொடுமைதானே

வெற்றி
07-03-2007, 10:33 AM
ஒரு குறும்படம் பார்த்த திருப்தி ஏற்பட்டது...

ஆமாம் எனக்கும் அதே போல் ஒரு உணர்வு
மால்குடி டேய்ஸ் போல் ஒரு வித்தியாசமான நிகழ்வு

gragavan
07-03-2007, 10:55 AM
பிறர் உயர்வினிலே தனக்கிருக்கும் இன்பம்
இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்

இது கண்ணதாசன் சொன்னது. அப்படிச் சொன்னதிற்கு இலக்கணம் அவர். அவருக்கு நன்றி பல.

ஓவியன்
12-04-2007, 12:14 PM
இப்படியானவர்கள் ஒரு சிலர் இருப்பதனால் தான் இன்னமும் எல்லோருக்கும் பெய்கிறது மழை.

அன்புரசிகன்
12-04-2007, 12:33 PM
யாரை அடக்கினாலும் ஊர் வம்பளப்பவரை அடக்கமுடியாது. தான் நல்லவரென்று சொல்ல இன்னொருத்தனை கெட்டவனென்று சொல்லிப்பெருமைப்படுவர். இதனை தடுக்கவந்தால் அந்த மருதடியானையே மோதகம் அவிக்க வைத்துவிடுவர் நம்மவர்.

நல்ல ஒரு செய்தியைக்கூறியிருந்தீர்கள். வாழ்த்துக்கள் நரேன்.

ஓவியா
12-04-2007, 02:17 PM
நல்ல சிந்தனை வளர இது ஒரு நல்ல பதிவு.

நன்றி அருன்

ஓவியா
12-04-2007, 02:18 PM
யாரை அடக்கினாலும் ஊர் வம்பளப்பவரை அடக்கமுடியாது. தான் நல்லவரென்று சொல்ல

இன்னொருத்தனை கெட்டவனென்று சொல்லிப்பெருமைப்படுவர். இதனை தடுக்கவந்தால் அந்த மருதடியானையே மோதகம் அவிக்க வைத்துவிடுவர் நம்மவர்.

நல்ல ஒரு செய்தியைக்கூறியிருந்தீர்கள். வாழ்த்துக்கள் நரேன்.


சூப்பர் கருத்து :music-smiley-010: :music-smiley-010:

vijayan_t
12-04-2007, 02:28 PM
ஹூம் ஊரெல்லாம், ஒலிபெருக்கிவைத்து, எல்லோரும் கும்மாளமிடும் காலம் ஊண்மையில் ஒரு வசந்த காலம்தான். அதுவே பள்ளித்தேர்வு இல்லாத காலங்களில் வந்தால் ரெம்ப நல்லா இருக்கும். உங்கள் ஊரிலும் பள்ளி இறுதிதேர்வு நேரத்தில்தான் திருவிழா வருகின்றதா?. எங்கள் மதுரை மாவட்டத்திலும் அப்படித்தான், மாசி மாதம் சிவராத்திரி நேரத்தில் ஒட்டுமொத்த மதுரை மாவட்டமும் திருவிழாக்கோலம் பூன்டுவிடும். அதுவும் எஙகள் உசிலம்பட்டி யில், மாசிப்பெட்டி என்றொரு விழா நடக்கும் பாருங்கள் அப்படி ஒரு பிரமான்டமாயிருக்கும், இப்பொழுது எப்படியிருக்கின்றதோ தெரியவில்லை.
உன்மையில், மாணவர்களுக்கு, வயதானவர்களுக்கு, உடல்நிலைசரியில்லாதவர்களுக்கு எல்லாம் ரெம்ப கஷ்டம்தான், ஆனால் அதைபற்றி என்ன அக்கரை அந்த மைக்-செட் காரர்களுக்கு, அவரகளுக்கு தெரிந்தது எலாம் வியாபாரம்தான். போட்டியில் ஒருவருக்கு ஒருவர் மிக சத்தமாக வைத்து, காது சவ்வை கிழித்துவிடுவர். அதிலும் கடைசிநாளன்று போட்டிபாட்டுகளாக போடுவர்.

நீயா நானா பார்க்கலாம்,
ஓடுரா ஓடுரா
பொடா போடா சின்னப்பயலே

என்று சக மைக்செட் போட்டியாளர்களை கின்டல் பன்னியே பாட்டு போடுவர்.
இதையெல்லாம் விட கொடுமைங்க, ஏதவது சாவு வத்துவிட்டால் போச்சு, சோகப்பாட்டை போட்டு போட்டு ஊரையே சோகத்தில் மூழ்கடித்து விடுவர். மைக்செட் வாடகைக்கு பிடிப்பர்வகளும், முன்பனம் கொடுக்கும்போதே மூன்று ஊருக்கு தான்டி கேக்குமா என்று கேட்டுவிட்டுதான் ஒப்பந்தமே செய்வர். கோவில் விழா, கல்யானம், காதுகுத்து, சடங்கு, சாவு என்று எப்பொழுதும் மைக்செட் அலறிக்கொன்டுதானிருக்கும்.


உங்களுக்கு கிடைத்தது போல எங்களுக்கெல்லாம் ஒரு மைக்செட்-திருடன் கிடைக்கவில்லை, நீங்கள் கொடுத்து வைத்தவ்ர். அப்படியே இருந்தாலும் எங்களுக்கு குறைந்தது, இருபது பேராவது வேன்டும். ராமாச்சந்திரன் வாரிசுகள் இப்பொழுது இருந்தால் எங்க உசிலம்பட்டிக்கு அனுப்பிவிடுங்க, நரன் அவர்களே.

அன்புரசிகன்
12-04-2007, 02:32 PM
சூப்பர் கருத்து :music-smiley-010: :music-smiley-010:

ஏனுங்க... எல்லாம் உங்களிடம் இருந்து கற்றுக்கொண்டவைதானுங்க.:icon_clap: :icon_clap: :icon_clap:

vijayan_t
13-04-2007, 04:31 PM
மன்னிக்கவும் தவறாக பதிந்துவிட்டேன்