PDA

View Full Version : முதல் வேலை



franklinraja
02-03-2007, 07:58 AM
http://www.geocities.com/franklinonnet/share/velai.jpg

அறிஞர்
02-03-2007, 04:01 PM
வேலை பற்றிய கவிதை அருமை..

தாய்நாட்டில் கற்றதை..
வெளிநாட்டில் அடகு வைக்கும் வேலை....

"திறமைக்கு எங்கு மதிப்பு இருக்குதோ...
அங்குதான் தொடர்கிறது. நம் வேலை....." - பலரின் வாதம்.

முதல் மாத சம்பளத்தை கொடுக்கும் போது
தாயின் முகத்தில் தெரியும் பூரிப்பை..
காணக் கோடி கண்கள் வேண்டும்.

ஓவியன்
03-03-2007, 07:12 AM
தன் மகனின் முதல் சம்பளத்தை ஒரு துளிக் கண்ணீருடன் வரவேற்கும் தாய்.............

அருமையான வரிகள்!

இளசு
03-03-2007, 07:37 AM
பல வலிகளை ஈடுகட்டும்
சில கண்ணீர்த் துளிகள்..

சில இழப்புகள் = சில ஈடுகள்..
வாழ்வியல் சமன்பாடு விதிகள்..
பல சமயம் விளங்காதவை..
பலர் வாழ்வை நிர்ணயிப்பவை..


நல்ல கவிதை..
இங்கே வழங்கிய ராஜாவுக்கு நன்றி..

படைப்பாளியை இங்கே அறியத்தாருங்கள்..

மனோஜ்
03-03-2007, 08:35 AM
ரோம்ப சந்தோசாமா இருக்குடா
முதல்மாச சம்பளத்தை நீட்ட
தாயின் கண்ணில் தோன்றிய
ஒரு துளி
உன்மையில் மனதை வட்டமிடும் வார்த்தைகள்
இதை தான் பலர் எதிர்பாக்கின்றனர்

மயூ
03-03-2007, 10:46 AM
நல்ல கவிதை
நாகரீகத்துடன் இப்போது இந்த வேலையும் எங்களை தாய் மொழியில் இருந்து அங்குலம் அங்குலமாக அந்நியப் படுத்துவது வேதனையையெ தருகின்றது! :(

வெற்றி
05-03-2007, 11:25 AM
வெளிநாட்டில் இருந்து வந்ததும் அனேகர் கேட்கும் முதல் கேள்வி
"எனக்கு என்ன வாங்கீட்டு வந்தே....???."
சொற்ப சிலர் மட்டும் கேட்கும் கேள்வி "நல்லா இருக்கீயா??"