PDA

View Full Version : சம்பாத்தியத்தை என்ன செய்வது?vijayan_t
02-03-2007, 06:59 AM
தற்பொழுது தமிழ் நாட்டின் நகரங்களில் காலியிடங்களின் விலைகள் ஏகத்துக்கும் உயர்ந்து கொன்டே இருக்கின்றன. இதற்க்கு காரனம் வங்கிக்கடனளிப்பின் அளவினை உயர்த்தியது ஒரு காரனமென்றால், இடத்தினை எவ்விலையாவது கொடுத்து வாங்கிவிட துடிக்கும் அளவுக்கதிகமான பனம் வைத்திருப்போர்களே முக்கிய காரனமாகும். வெளிநாடுகளில் பணிபுரிவோர்கள், தாங்கள் வாங்கும் சம்பளத்தில் செலவு போக உபரியை என்ன செய்வது என்று தெரியாமல், முதலீடு செய்கின்றேன் பேர்வழி என்று இடம்வாங்கு வாங்கு என்று வாங்கி தள்ளுகின்றார்கள்.

எனது நன்பன் ஒருவன் அமெரிக்காவில் பணிபுரிகின்றான், சென்னையில் ஏற்கனவே ஒரு வீடு இருக்க இன்னொரு வீடு பர்த்துகொன்டிருப்பதாக சொனான். அதற்கான காரணத்தை கூறியபோது எனக்கு அழுவதா இல்லைசிரிப்பதா என்றே தெரியவில்லை.

அவன் சொன்ன காரனம் இதுதான், இப்பொழுது வாங்கிபோட்டால் பிற்காலத்தில் நல்ல விலைக்கு விற்க்கலாம் என்று சொன்னான். எந்தமாதிரி சூழ்நிலையில் விற்ப்பாய் என்று நான் கேட்டேன். பிற்கலத்தில் எதேனும் நெருக்கடியான சூழ்நிலை ஏற்ப்படலாம், உடம்பு சரியில்லாமல் போகலாம் எலாவற்றுக்கும் மேலாக, பெரிய சொத்து இருக்கிறது என்ற நிம்மதி இருக்கும், இந்தமாதிரி சொத்துகளில் முதலீடு செயாமல் பனத்தை வெறுமெனே வைத்திருப்பது வீண், என்று சொன்னான்.

உன்மையில் சொத்துக்களில் முதலீடு செய்வதுதான் வீண் என்று நான் நினைக்கிறேன்.
இவர் ஒரு ரியல்-எஸ்டேட் வியாபாரியாக இல்லாதவரை இந்தவீட்டை விற்ப்பதற்கான காரனங்கள் மிக மிக குறைவு.

இக்காலங்களில் உடல்நல மற்றும் உயிர் காப்புறுதி சேவைகள் கன்டிப்பாக எல்லோராலும் பயன்படுத்தப்படுகின்றன. இந்தியர்களுக்கு உயிர் காப்புறுதி தவிற உடல்நல-காப்பு குறித்த விழிப்புணர்வு வரவில்லை. ஆனால் வெளிநாடுகளில் எல்லோராலும் பயன் படுத்தப்படுகின்றது. எனவே உடல்நலக்காரனங்களால் வரும் நெருக்கடி மிக மிக மிக சொற்ப்பமே.

இது தவிற பிள்ளைகள் படிப்புக்குண்டான செலவுகள் இவர்கள் வருமானத்தைப்பொறுத்தவரை மிக கம்மிதான். இந்த காரனத்துக்காக யாரும் வீட்டை விற்க்கமாட்டார்கள். (இந்த காலத்தில் ஒன்றுக்கு மேல் யாரும் பெற்றுக்கொள்வதில்லை அதுவும்கூட தாமதமாகத்தான் ).

மகன் மற்றும் மகளின் திருமன செலவு பற்றி கவலை படவேன்டியதே இல்லை எனென்றால் இந்த தலைமுறையினர் எந்தமாதிரியான கலாச்சாரத்தை நோக்கி போய்க்கொன்டிருக்கின்றார்கள் என்று யாருக்குமதெரியவில்லை. ஒருவேளை எந்த ஒரு தவறான கலாச்சாரத்திலும் ஈர்க்கப்பாடாமல் திருமன வயது வரை பெற்றோரிடமே இருந்து பெறோர் சொல்லும் வாழ்கைதுனையே கைப்பிடிப்பரின், கன்டிப்பாக அவர்கள் அந்தநேரம் நன்றாக சம்பாதிக்க ஆரம்பித்துஇருப்பார்கள் சம்பத்தியத்தை பேறோரிடமே கொடுத்திருப்பார்கள். (ஒருவேளை அவர்களும் சொத்து வாங்குவார்களோ????).

தவறான பழக்க வழக்கங்களினால் பண நெருக்கடிக்கு ஆளாகலாம், ஆனால் உன்மையில் இந்த சொத்து இருக்கும் தைரியத்தினால்தான் தவறான பழக்க வழக்கங்களுக்கு போயிருப்பார்கள்.
(நெற்றிக்கண் திரைப்படத்தில் ரஜினிகாந்த் தன் மகனிடம் சொல்லுவது போல "பீடி குடி லேடி இதுதன்டா உன் டாடி" அப்படி சொல்ல நினைப்பவர்களா நீங்கள், சொத்துக்கள் வாங்கலாம்).

கன்டிப்பாக உங்கள் காலத்தில் வீட்டை விற்க்க சந்தர்ப்பமே வரப்போவதில்லை. பரவயில்லை எனது வாரிசுக்கு உதவுமே என்று சொல்லுவார்கள். அதுக்குதான் ஒருவீடு இருக்கே இன்னொன்று கொடுத்து அவர்களையும் சோம்பேரிகளாக்கானுமா?. (நீங்கள்தான் பிள்ளை கூட பெற்றுகொள்ளாமல் சம்பாதிப்பதிலேயே குறியாயிருக்கின்றீர்களே).

இறுதிப்பயனத்தின் போது நீங்கள் வாங்கிய சொத்துக்கள் சேர்த்த பனங்கள்,ஷேர்கள், எப்டிக்கள், எதுவுமே உங்களுடன் சேர்ந்து சொர்கத்துக்கோ அல்லது நரகத்துக்கோ வரப்போவதிலை. (ஆவியாக வந்து "ஐய்யோ நான் வாங்கிய சொத்து சொத்து சொத்து ன்னு அடிச்சுகுவீங்க. ஐய்யோ பொண்டாட்டி, ஆன்டிபட்டி கனரா வங்கியில இரண்டு-லட்சம் ரூபாய் உனக்குதெரியாமல் போட்டேனே யருக்கும் தெரியாமல் போச்சேன்னு கத்துவீங்க உங்க மனைவி, அலட்டிக்காம செல்வி-தொடர் பாத்துகிட்டு இருப்பாங்க).

இயந்திரகதியில் வாழ்ந்து, வாழ்க்கையின் இன்றியமையத சந்தோசங்களை தியாகம் செய்து, மண-அழுத்தத்திலேயே உழன்று, சம்பாதித்த மிதமிஞ்சிய பணத்தை வைத்து வாழ்க்கை வசதிகளை பெருக்கி சந்தோஷமாக அனுபவித்து அதன்மூலம் வாழ்கை மற்றும் தொழில் தரத்தினை உயர்த்தி நல்ல முறையில் வாழாமல், இப்படி பணத்தை வீனடிக்கின்றார்களே ன்னு இருக்கு.

கவிரசரின் வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன.

வீடுவரை உறவு, வீதிவரை மனைவி, காடுவரை பிள்ளை கடைசிவரை யாரோ?

(எல்லாம் சரிதான் விடுங்க சார், அப்பா கோவில்பட்டியிலிருந்து நியூஜெர்ஸி க்கு போன் பன்னி என்னடா, நம்ம சுப்புரமணி மகன், கோவில்பட்டியில இரன்டு வீடு அப்புறம் சென்னையில 1 குடியிருப்பு வாங்கிட்டான், நீ என்னடா அசடாட்டம் இருக்குறன்னா, என்ன செய்ய்யமுடியும்னு நீன்ங்க கேக்குறது புரியுது.).

தங்க கம்பி
02-03-2007, 08:05 AM
இது என்ன மகா புலம்மல்கள். சகிக்கமுடியவில்லை. சேமிப்பை வைத்து சொத்துவாங்குவது தவறா? காகித பணத்தை வெறுமனே பீரோவில் வைப்பதால் என்ன பயன்?இன்றைய நிலைமையில் யாருக்காவது கடனாக கொடுத்தால் திருப்பி வருமா? வங்கியில் வைத்தால் வட்டி குறைவாகவே கிடைக்கும்.ஒரு வீடொ அல்லது காலியிடமாகவோ வாங்கிப்போட்டால் தினம் தினம் விலை எகிறிக்கொண்டே இருக்கும். எப்போ வேண்டுமானலும் உடனே விற்கமுடியும்.மிக கொழுத்த இலாபம் பெற இதுவொன்றே வழி.

ஷீ-நிசி
02-03-2007, 08:11 AM
இன்றைக்கு வீட்டின் மதிப்பு நாளொருமேனி பொழுதொரு வண்ணமாக எகிறிக்கொண்டிருக்கிறது.. எதில் இலாபம் இருக்கிறதோ அதில்தான் மக்கள் முதலீடு செய்வார்கள்.. வீடு வாங்குவது தவறில்லை.. ஆனால் இப்படி கன்னாபின்னாவென்று விலை ஏறுவதை அரசாங்கம் ஏதாகிலும் செய்து முடிவுக்கு கொண்டு வர வேண்டும்... நடுத்தர மக்கள் இப்பொழுது வீடு வாங்குவது என்று கனவு காணக் கூட பயப்படுகின்றனர்..

vijayan_t
02-03-2007, 08:45 AM
ஒரு வீடொ அல்லது காலியிடமாகவோ வாங்கிப்போட்டால் தினம் தினம் விலை எகிறிக்கொண்டே இருக்கும். எப்போ வேண்டுமானலும் உடனே விற்கமுடியும்.மிக கொழுத்த இலாபம் பெற இதுவொன்றே வழி.

சரி நன்பரே வீட்டைவிற்று வரும் பணத்தை என்ன செய்வீர்கள்? இன்னொரு வீடு வாங்குவீர்களா?. அந்த வீட்டை என்ன செய்வீர்கள்?

நீங்கள் ரியல்-எஸ்டேட் வியபாரி என்றால் இது சரிதான், நீங்கள் வீட்டில் முதலீடு செய்யலாம், விற்க்கலாம், வேறு வீடு வாஙலாம்.

lolluvathiyar
02-03-2007, 02:56 PM
உங்கள் நன்பர் பார்ட் டைம்
ரியல் எஸ்டேட் வியாபாரியாக
நினைக்கிறார்.
அவர் யோசனை சரியானதுதான்
நீங்கள் பேசுவதுதான் வியப்பாக இருக்கு

தங்க கம்பி
02-03-2007, 03:08 PM
சரி நன்பரே வீட்டைவிற்று வரும் பணத்தை என்ன செய்வீர்கள்? இன்னொரு வீடு வாங்குவீர்களா?. அந்த வீட்டை என்ன செய்வீர்கள்?

நீங்கள் ரியல்-எஸ்டேட் வியபாரி என்றால் இது சரிதான், நீங்கள் வீட்டில் முதலீடு செய்யலாம், விற்க்கலாம், வேறு வீடு வாஙலாம்.

நண்பரே! தவறாக எண்ணாதீர்கள். ஒரு வீட்டை விற்று இன்னொரு வீடு வாங்குபவனே வியாபாரி. கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை பாதுகாப்பாக வைக்கவும் அது பல மடங்கு பெருகவும் சொத்து வாங்குபவன் வியாபாரி அல்ல. இவந்தான் பிழைக்கத்தெரிந்தவன், பிற்காலத்தில் வாழ்க்கையில் குடுப்பத்துடன் சந்தோசமாக கழிக்கபோகிறவன்.

ஆதவா
02-03-2007, 03:10 PM
பேசாமல் எனக்கு கொடுத்து விடுங்கள்..... :D

தங்க கம்பி
02-03-2007, 03:14 PM
பேசாமல் எனக்கு கொடுத்து விடுங்கள்..... :D

எதை கொடுக்க சொல்லுகிறீர்கள்?

அறிஞர்
02-03-2007, 03:14 PM
அன்பரே எவ்வளவு நாளாக சென்னையில், நிலங்கள் விலையை தாங்கள் கூர்ந்து கவனிக்கிறீர்கள் எனத்தெரியவில்லை....

8 வருடம் முன் சோழிங்க நல்லூரில் இடம் 1 லட்சம். இன்று 40 லட்சம்.

கிழக்கு தாம்பரத்தில்.... 6 வருடம் முன் 2 இலட்சம்... இன்று 35 லட்சம்.

3 மாதம் முன் வாங்கிய 17 லட்சம் இடம் இன்று 22 இலட்சம்.

அமெரிக்காவில் 2 கோடி கொடுத்து வீடு வாங்கலாம். 5 வருடம் அந்த வீட்டில் குடி இருந்தால் தான், வாங்கிய மதிப்பிற்கு வீட்டை விற்று.... பணம் பார்க்கலாம். 5 வருடம் முன் விற்றால் உங்களுக்கு நஷ்டம்.

ஆனால் சென்னை, பெங்களூர், ஹைதராபாத்தில் நிலத்தில் இடும் பணம், கண்டிப்பாக பலனை தரும். ஒரு சில சதவீத லாபத்தை இடைத்தரகர்களுக்கு கொடுத்தால்... நமக்கு எஞ்சி இருப்பது.. மிகப்பெரிய லாபமே.

வரும் பணத்தை நிலத்தில் போடுவதே இன்றைய சூழ்நிலையில் சிறந்த வழி... (நிலத்திற்கு அங்கீரிக்கப்பட்ட பட்டா வேண்டும், மற்றவர்கள் வளைத்து போடாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.)

ஷீ-நிசி
02-03-2007, 03:18 PM
3 வருடத்திற்கு முன்பு என் நண்பர் மறைமலை நகர் (செங்கல்பட்டு போகும் பாதை) 3,00,000-க்கு வாங்கி 2,00,000 செலவு செய்து புதுப்பித்தான்... போன வாரம் 18,00,000-க்கு விற்றான்.. 10,00,000-ல் தாம்பரம் அருகில் வீடு வாங்கி மீதி பணத்தை புது பிஸினஸில் போட்டுவிட்டான்... புரியுதுங்களா? வீடு விற்று என்ன பன்னூவீர்கள் என்று கேட்டீர்களே!

என்ன பன்ன முடியாது சொல்லுங்கள் நண்பரே!

அறிஞர்
02-03-2007, 03:25 PM
ஷீ-நிசி... 8 வருடம் முன் மறைமலை நகர் எப்படி இருந்தது தெரியுமா... அப்ப ஒரு பத்து கிரவுண்ட் வாங்கி போட்டிருந்தா.. இப்ப படுத்துக்கொண்டே சம்பாதிக்கலாம்.

தங்க கம்பி
02-03-2007, 03:26 PM
அன்பரே எவ்வளவு நாளாக சென்னையில், நிலங்கள் விலையை தாங்கள் கூர்ந்து கவனிக்கிறீர்கள் எனத்தெரியவில்லை....

8 வருடம் முன் சோழிங்க நல்லூரில் இடம் 1 லட்சம். இன்று 40 லட்சம்.

கிழக்கு தாம்பரத்தில்.... 6 வருடம் முன் 2 இலட்சம்... இன்று 35 லட்சம்.

3 மாதம் முன் வாங்கிய 17 லட்சம் இடம் இன்று 22 இலட்சம்.

அமெரிக்காவில் 2 கோடி கொடுத்து வீடு வாங்கலாம். 5 வருடம் அந்த வீட்டில் குடி இருந்தால் தான், வாங்கிய மதிப்பிற்கு வீட்டை விற்று.... பணம் பார்க்கலாம். 5 வருடம் முன் விற்றால் உங்களுக்கு நஷ்டம்.

ஆனால் சென்னை, பெங்களூர், ஹைதராபாத்தில் நிலத்தில் இடும் பணம், கண்டிப்பாக பலனை தரும். ஒரு சில சதவீத லாபத்தை இடைத்தரகர்களுக்கு கொடுத்தால்... நமக்கு எஞ்சி இருப்பது.. மிகப்பெரிய லாபமே.

8 வருடம் முன் வங்கியில் 1 லட்சம் போட்டிருந்தால் இன்று வெறும் 2 லட்சம் மட்டுமே கிடைத்திருக்கும் 40 லட்சத்துக்கு எங்கே போவது.
3 மாதம் முன் வங்கியில் 17 லட்சம் பொட்டிருந்தால் இன்று ரூ.17,25,500/-இலட்சம் மட்டுமே கிடைத்திருக்கும்,22 லட்சம் கிடைக்குமா?
யோசியுங்கள்.

அறிஞர்
02-03-2007, 03:28 PM
8 வருடம் முன் வங்கியில் 1 லட்சம் போட்டிருந்தால் இன்று வெறும் 2 லட்சம் மட்டுமே கிடைத்திருக்கும் 40 லட்சத்துக்கு எங்கே போவது.
3 மாதம் முன் வங்கியில் 17 லட்சம் பொட்டிருந்தால் இன்று ரூ.17,25,500/-இலட்சம் மட்டுமே கிடைத்திருக்கும்,22 லட்சம் கிடைக்குமா?
யோசியுங்கள்.
தாங்கள் சொல்வதே.. சரியே......
சிலர் இப்பொழுதாவது யோசித்து செயல்படவேண்டும்.
என்னுடைய முதல் சேமிப்பு.. நிலம் தான்.

ஷீ-நிசி
02-03-2007, 03:28 PM
ஷீ-நிசி... 8 வருடம் முன் மறைமலை நகர் எப்படி இருந்தது தெரியுமா... அப்ப ஒரு பத்து கிரவுண்ட் வாங்கி போட்டிருந்தா.. இப்ப படுத்துக்கொண்டே சம்பாதிக்கலாம்.

நான் அதைநினைத்து இன்றளவும் யோசிப்பேன் அறிஞரே! 7 வருடமாய் இந்த இடத்தில் வேலை பார்க்கிறேன். எத்தனையோ இடங்கள் வந்தன.. நாம் இங்கு இருக்கபோவதில்லை.. எதற்கு என்று யோசித்தேன்? இன்றும் யோசிக்கிறேன். ஏன் அப்படி அன்று யோசித்தேன் என்று...

அறிஞர்
02-03-2007, 03:31 PM
நான் அதைநினைத்து இன்றளவும் யோசிப்பேன் அறிஞரே! 7 வருடமாய் இந்த இடத்தில் வேலை பார்க்கிறேன். எத்தனையோ இடங்கள் வந்தன.. நாம் இங்கு இருக்கபோவதில்லை.. எதற்கு என்று யோசித்தேன்? இன்றும் யோசிக்கிறேன். ஏன் அப்படி அன்று யோசித்தேன் என்று...
ரொம்ப யோசிக்காதீங்க... சீக்கிரம் இறங்குங்க..... முடிந்தால்... ரியல் எஸ்டேட் பிஸினஸ் கற்று சைடில் பாருங்கள்...

ஷீ-நிசி
02-03-2007, 03:41 PM
too late.... தாமதிச்சாச்சு அறிஞரே நிறைய

மன்மதன்
02-03-2007, 06:04 PM
சென்னையில் சொந்தமாக ஒரு இடம் இருந்தாலே பணக்காரர்தான். எங்குமே இடம் கிடைக்கமாட்டேங்குது. அதாவது இடம். அடுக்குமாடி குடியிருப்பு இல்லை. அதுவே பல லட்சங்கள் வருகிறது. ரியல் எஸ்டேட் சென்னையில் தாறுமாறாகத்தான் செல்கிறது...

அமரன்
02-03-2007, 06:10 PM
ஆம். அனைவருக்கும் முக்கியம் இருக்க ஒரு வீடு. ரியல் எஸ்டேட்டில் கண்ணியமாக நடந்தால் மற்றவர்களுக்கு உதவி செய்வதாகக்கூட அமையும்.

vijayan_t
05-03-2007, 12:43 PM
நண்பரே! தவறாக எண்ணாதீர்கள். ஒரு வீட்டை விற்று இன்னொரு வீடு வாங்குபவனே வியாபாரி. கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை பாதுகாப்பாக வைக்கவும் அது பல மடங்கு பெருகவும் சொத்து வாங்குபவன் வியாபாரி அல்ல. இவந்தான் பிழைக்கத்தெரிந்தவன், பிற்காலத்தில் வாழ்க்கையில் குடுப்பத்துடன் சந்தோசமாக கழிக்கபோகிறவன்.

வீடு வாங்கிய பிறகு அதன் விலை ஏறிக்கொன்டேதானே போகின்றது. அதை ஏன் விற்க்கவேன்டும்? அதை விற்று வேறு வீடு வாங்குவதற்க்கு இதையே வைத்திருக்கலாமே?

drjperumal
05-03-2007, 01:26 PM
நமக்கு வேண்டியதை சேர்த்த பிறகு நமக்கு ஆசை அதிகம் புத்தர் சொல்வது ஆசையே துக்கக்கு காரனா என்று ஆகையினால் மீதம் தர்மம் செய்யுங்கள் சிறந்தவழி இதனால் சந்ததி வளரும்.எனன்றால் கர்னனை காப்பாற்ரியது (மோட்சம் அளித்தது) தர்மம் தான்

அறிஞர்
05-03-2007, 01:39 PM
நமக்கு வேண்டியதை சேர்த்த பிறகு நமக்கு ஆசை அதிகம் புத்தர் சொல்வது ஆசையே துக்கக்கு காரனா என்று ஆகையினால் மீதம் தர்மம் செய்யுங்கள் சிறந்தவழி இதனால் சந்ததி வளரும்.ஏனென்றால் கர்ணனை காப்பாற்றியது (மோட்சம் அளித்தது) தர்மம் தான்
நடைமுறை வாழ்க்கையை பாருங்கள் டாக்டர்.

பிற்காலத்தில் குழந்தைகள் வளர்ந்து வரும்பொழுது.. அவசரத்திற்கு பணம் தேவையென்றால்.... உங்கள் தர்மம் கண்டு சிறிய தொகை கடனாக கொடுப்பார். பெரும் தொகைக்கு தர்மம் உதவுமா என்பது சந்தேகமே.

இடத்தையும் வாங்கி போடுங்கள், தர்மம் செய்யுங்கள்.. இரு உலகிலும் பலன் உண்டு.

பெங்களூரில் எத்தனை நிலங்கள் தங்களுக்கு உள்ளது டாக்டர்.

drjperumal
05-03-2007, 02:48 PM
தர்மம் அதைதான் செய்கிறேன் நான் என்னை பற்றி பெருமையக சொல்ல வேண்டியது தேவையில்லை எனக்கு எவ்வளவு......இறைவன் கொடுப்பதை மனிதனால் தடுக்கமுடியாது,மனிதன் தடுப்பதை இறைவனால் கொடுக்கமுடியும்,எது ஒன்றும் இறைவன் ஆசீர்வாதத்தால் வந்தால் தான் நிலைக்கும்,நாம் நினைப்பது நடந்தால் இறைவன் எதற்க்கு,இதற்க்கு திருக்குரல் நிறய உல்லது,எதையும் நாம் தேடி போகவேண்டியதில்லை நம்மை தானகவேதேடிவரும் சிலர் கூறுகிறார்கள் அப்போது 10 ருபாய்க்கு இருந்தது இப்போது 10 கோடி என்று ஏன் அப்போது 10 ரூபாய்க்கு வாங்கவில்லை ஏன் பணம் இல்லயா அல்லது இறைவன் அருள் அதாவது அதிர்ஸ்டம் இல்லயா அல்லது நம் மூலை புத்தி ஒழுங்காக வேலைசெய்யவில்லையா,அல்லது யாராவது தடுத்தார்களா ஏன் அவர்களாள் 10 ரூபாய்க்கு வாங்க முடியவில்லை,உங்களாள் நம்பமுடியவில்லையா,அதுதான் சூட்ஸ்மம்,
பலவற்றை நீங்கள் அனுபவத்தில் உனரலாம்

நீங்கள் சொல்வது உண்மை தற்போது நிலத்தில் முதலீடு தான்
சிறந்தது

சென்னை, பெங்களூர், ஹைதராபாத்தில் நிலத்தில் இடும் பணம், கண்டிப்பாக பலனை தரும். ஒரு சில சதவீத லாபத்தை இடைத்தரகர்களுக்கு கொடுத்தால்... நமக்கு எஞ்சி இருப்பது.. மிகப்பெரிய லாபமே.

வரும் பணத்தை நிலத்தில் போடுவதே இன்றைய சூழ்நிலையில் சிறந்த வழி... (நிலத்திற்கு அங்கீரிக்கப்பட்ட பட்டா வேண்டும், மற்றவர்கள் வளைத்து போடாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.)

மிக மிக சறியான தீர்வு

march
24-03-2007, 05:10 PM
வீடு வாங்குவேன்,கார் வாங்குவேன்,துனி வகைகள், நகை வகைகள் வாங்குவேன் நன்றாக சாப்பிடுவேன்,

வித் லவ்
மார்ஷ்

karikaalan
26-03-2007, 08:24 AM
விஜயன் டிஜி

தங்களது பதிவு வியப்பாக இருக்கிறது. உலகத்தைப் புரிந்துகொண்டவராகத் தெரியவில்லை.

வள்ளுவரே சொல்லியிருக்கிறார் -- இலம் என்று அசைஇ இருப்பாரைக் காணின், நிலம் என்னும் நல்லாள் நகும் -- என்று.

ஒருவன் தனது எதிர்காலப் பாதுகாப்புக்கு, முதல் முதலீடு தலை மீது ஒரு கூரை.

மற்ற முதலீடுகளும் செய்யலாம். பங்குகளில் முதலீடு செய்தால், விலை ஏறும், இறங்கும். விற்க நினைக்கும் நேரத்தில் வாங்குவதற்கு ஆளில்லாமல் போகலாம்.

தங்கத்தில் முதலீடு செய்யலாம். திருடு கொடுக்காத வரை.

காசாகவே வைத்திருக்கலாம். மதிப்பு குறைந்துகொண்டே வரும். திருடும் போகலாம்.

நிலம்/வீடு/அபார்ட்மெண்ட் இவைதான் மெய்யான முதலீடு -- ஆங்கிலத்தில் Real Estate --. விலை சரிய வாய்ப்பில்லை.

ஏனென்றால், கடவுள் நிலம் படைப்பதை நிறுத்திவிட்டான்!

அதனால்தான் கம்பெனிகள் முதற்கொண்டு எங்கெக்குக்காணிலும் காணி நிலமாக வாங்கித்தள்ளிக்கொண்டிருக்கிறார்கள் -- Land Bank -- ஏற்படுத்துகிறார்கள்.

நண்பரே! தற்காலத்துக்குத் தயவுசெய்து வாருங்கள்.

===கரிகாலன்

ஓவியன்
26-03-2007, 08:31 AM
கஸ்ரப் பட்டு சம்பாதித்ததை நல்ல வழியில், நல்ல முறையில் உபயோகித்து எங்களுக்கும் எங்களைச் சூழ உள்ளவருக்கும் நன்மை பயக்கும் வழியில் பயன்படுத்த வேண்டும்.

vijayan_t
26-03-2007, 12:09 PM
விஜயன் டிஜி
நிலம்/வீடு/அபார்ட்மெண்ட் இவைதான் மெய்யான முதலீடு -- ஆங்கிலத்தில் Real Estate --. விலை சரிய வாய்ப்பில்லை.

கரிகாலன் அவர்களே,
நீங்கள் ரியல் எஸ்டேட் வியாபாரியாக இல்லதவரை, வீட்டை விற்கும் சூழ்நிலை 99 சதவீதம் வரப்போவது இல்லை. இருப்பதற்கு ஒருவீடு போதுமென்றுதான் சொல்லுகிறேன்.

march
26-03-2007, 03:41 PM
நல்ல தீர்ப்பு சொல்கிறீர்

வித் லவ்
மார்ஷ்

karikaalan
26-03-2007, 05:28 PM
கரிகாலன் அவர்களே,
நீங்கள் ரியல் எஸ்டேட் வியாபாரியாக இல்லதவரை, வீட்டை விற்கும் சூழ்நிலை 99 சதவீதம் வரப்போவது இல்லை. இருப்பதற்கு ஒருவீடு போதுமென்றுதான் சொல்லுகிறேன்.

விஜயன் டிஜி

வீடு, மனை விற்க நீங்கள் வியாபாரியாக இருக்கத் தேவையில்லை.

அது ஒரு முதலீடு. பங்குகள் வாங்கி விற்போர் அனைவரும் வியாபாரிகள் இல்லை. அவர்கள் முதலீட்டாளர்களே. இன்னோர் வீடு இருந்தால் அதனை வாடகைக்கு விட்டு வரும் பணத்தில் காலம் கழிப்பது கசக்கிறதோ!! அல்லது ஏதாவது திடீர் முடை ஏற்பட்டால் அதனைச் சந்திப்பதற்கு இது போன்ற முதலீடுகள் கை கொடுக்கும்.

விழித்துக்கொண்டிருப்பவர்களை எழுப்ப முடியாது.

===கரிகாலன்

vijayan_t
26-03-2007, 11:56 PM
திடீர் முடை ஏற்பட்டு அதன் காரனத்தால் விற்றால் பரவாயில்லை. நல்ல விலைக்கு விற்க்கலாமென்ற எண்ணத்தில் வாங்குகிறேன் என்கின்றவர்களுக்குதான் சொல்லுகின்றேன். உபரியாக உள்ள பனத்தை என்ன செய்வது என்றுதெரியாமல்தான் ஒன்றுக்குமேற்பட்ட வீடு வாங்குகின்றீர்கள், அதிக விலைக்கு போகின்றதே என்று வீட்டைவிற்றுவரும் பனத்தை என்ன செய்வீர்கள், இந்தவீடுதான் விலை கூடிக்கொன்டேசெல்கிறதே அதை ஏன் விற்கின்றீர்கள்? பின்நாளில் ரெம்ப ரெம்ப விலை கூடுமே?

உண்மையை சொல்லுங்கள் திடீர் முடை வரும்போது யாராவது உடனே விற்றிருக்கின்றார்களா? அதன் பேரில் கடன் வாங்கி, வட்டி கட்டி, வட்டியின் குட்டிக்கு வட்டி கட்டி, வீனாக்கியதுதானே இதுவரை நடந்திருக்கின்றது. திடீர் முடை வருவதன் முக்கிய காரனமே இந்த வீடு இருக்கும் தைரியம்தான்.

வாடகை வருமானம் என்பது வீட்டின் முதலீட்டைபொறுத்தவரை மிக சொற்பம்தான். என்ன சமுதாயத்திந் மத்தியில் பெருமைபட்டுக்கொள்ளலாம்.

இந்த ஒருவருடத்தில் இடங்களின் விலை இப்படி கூடிப்போனதன் காரணமென்ன வென்று நினைக்கின்றீர்கள்?
மக்களின் வாங்கும்சக்தி அதிகரித்துவிட்டது என்ற பா.சிதம்பரம் அவர்களின் சல்ஜாப்பு மட்டும் நிச்சயமாக இல்லை. இதுகுறித்த விளக்கமான விவாதத்துக்கு தனிப்பட்ட திரிதான் ஆரம்பிக்க வேன்டும்.

karikaalan
27-03-2007, 04:35 AM
திடீர் முடை ஏற்பட்டு அதன் காரனத்தால் விற்றால் பரவாயில்லை. நல்ல விலைக்கு விற்க்கலாமென்ற எண்ணத்தில் வாங்குகிறேன் என்கின்றவர்களுக்குதான் சொல்லுகின்றேன். உபரியாக உள்ள பனத்தை என்ன செய்வது என்றுதெரியாமல்தான் ஒன்றுக்குமேற்பட்ட வீடு வாங்குகின்றீர்கள்,

உண்மையை சொல்லுங்கள் திடீர் முடை வரும்போது யாராவது உடனே விற்றிருக்கின்றார்களா? அதன் பேரில் கடன் வாங்கி, வட்டி கட்டி, வட்டியின் குட்டிக்கு வட்டி கட்டி, வீனாக்கியதுதானே இதுவரை நடந்திருக்கின்றது.விஜயன் டி ஜி

தனியொரு வீடு மட்டும் இருக்கும்போது, முடைக்கு அதனை யாரும் விற்பதில்லைதான்.

எந்த முதலீடுமே லாபம் சம்பாதிப்பதற்குத்தான். வங்கியில் போட்டுவைத்தாலும் ஏதோ வட்டி வருகிறதே தவிர, பெரிதாக லாபம் வரப்போவதில்லை.

உபரியாக இருக்கும் பணத்தை -- ஒரு வீடு/மனை வாங்கும்படியாக உள்ள உபரி -- அதில் போட்டால் தவறேதும் இல்லை.

மற்றவர்களுக்கு அது பாதிப்பு ஏற்படுத்தும் என்று நான் ஏன் நினைக்க வேண்டும்? என்னைப் பொறுத்த வரை எனக்கு லாபம் வரவேண்டும். Survival of the fittest! நிலைமை அவ்வாறிருக்க ஒரு மாதிரியான சோஷலிச/கம்யூனிச சித்தாந்தங்கள் இந்நாளில் பேசுவது, பயனற்ற சொற்கள்.

===கரிகாலன்

ராஜா
27-03-2007, 04:48 AM
இந்த விஷயத்தில் இரு வேறு கூறுகள் உள்ளன.

மன்னையில் பேருந்து நிலையத்துக்கு அருகில் என் நண்பனுக்கு பூர்வீக சொத்து உள்ளது. தற்போதைய மதிப்பு சுமார் 1 கோடி ரூபாய்.

ஆனால் அதை விற்க மனமின்றி இருக்கும் அவன் செய்யும் வேலை என்ன தெரியுமா..?

வானொலிப் பெட்டி பழுதுபார்க்கும் கடையில் தினம் 75 ரூபாய் கூலிக்கு நாள் முழுதும் அல்லல் படுகிறான்..

சில வருடங்களாகவே அவனிடம் " இந்த இடத்தை விற்றுவிட்டு வரும் பணத்தில் வேறு ஒரு இடத்தில் ஒரு வீட்டை வாங்கிப் போட்டு, மிகுதிப் பணத்தில் ஒரு தொழில் செய்யலாமே" என்று கேட்டதற்கு, அவன் சொன்ன பதில்...

"வித்துட்டா அப்புறம் இதுபோல இடம் வாங்க முடியுமா..?"

கோடீசுவர ஏழை...!

vijayan_t
27-03-2007, 10:15 AM
விஜயன் டி ஜி
உபரியாக இருக்கும் பணத்தை -- ஒரு வீடு/மனை வாங்கும்படியாக உள்ள உபரி -- அதில் போட்டால் தவறேதும் இல்லை.
===கரிகாலன்
உபரியாக உள்ள பனம்தானே என்று எண்ணி இண்ணொரு வீட்டில் முதலீடு செய்தால் அந்தப்பணம் முடங்கிவிடும். அதை விற்ப்பதற்க்கான சந்தர்ப்பமே வராது. விலை அதிகமாகி மதிப்பு உயர்ந்தாலும் யாரும் விற்க்கவே மாட்டார்கள். ஏனென்றால் மீன்டும் கையில் உபரி பணம் வந்துவிடும், மீன்டும் உபரி பணத்தை வைத்து இருக்க முடியாது, நீங்கள் கண்டிப்பாக வீடு வாங்கியாகவேன்டும், அப்பொழுது இந்த வீடே நன்றாக மதிப்பு கூடிகொன்டு வருகின்றதே இதை விட்டுட்டு வேறொன்றை வாங்குவதா என்று என்னி விற்க்கவே மாட்டீர்கள்.

march
27-03-2007, 10:22 AM
கடலளவு கிடைத்தாலும் மயங்கமாட்டேன். அது கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன் உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கன்னா. இதை உணர்ந்துகொன்டேன் துன்பமெல்லாம்

நீங்க என்ன சொல்லவர்றீங்க, சொத்து வாங்க வேண்டுமா, வேண்டாமா,பணம் சேர்க்க வேண்டுமா, வேண்டாமா.மயங்கமாட்டேன்,
கலங்க மாட்டேன் என்று சொல்றீங்க,
வித் லவ்
மார்ஷ்

பரஞ்சோதி
27-03-2007, 10:23 AM
ராஜா அண்ணா சொன்னதை படித்து சிரிப்பு பிச்சிக்கிட்டு வருது. என்ன செய்ய இப்படிப்பட்டவர்கள் இருக்கத் தான் செய்றாங்க.

வாழும் காலம் கொஞ்சம், அதன் பின்னர் நாம் எதையும் கையில் எடுத்துட்டு போவதில்லை.

அறிஞர்
27-03-2007, 12:30 PM
"வித்துட்டா அப்புறம் இதுபோல இடம் வாங்க முடியுமா..?"

கோடீசுவர ஏழை...!
இது மாதிரியான ஆட்களை திருத்த முடியாது....
வேறு யாரும் அபகரிக்கும் முன், செயல்படுவது முக்கியம். :engel016:

march
27-03-2007, 12:47 PM
என்னங்க நானும் தெற்யாமதான் கேட்கிறேன் இது என்ன கேள்வி
இருப்பதை வைத்து சந்தோசமாக வாழவேண்டும்

வித் லவ்
மார்ஷ்

adisar2000
28-09-2007, 05:48 PM
அதுவும் இப்போது சென்னையில் ஒரு சென்ட் நிலம் இருந்தால் கூட அவர் பெரிய பணக்காரர். அதனால் பணத்தை நிலத்தில் போடுவது புத்திசாலித்தனம்

நேசம்
30-09-2007, 08:22 AM
பணம் அதிகமாக வைத்தி இருப்பவர்கள் பல வழிகளில் முதலீடு செய்வது புத்திசாலிதனம்.அதில் இடம் வாங்குவது ஒன்று. ரியல் எஸ்டெட் செய்பவர்கள் மட்டும் இடம் வாங்க வேண்டும் என்று இல்லை.