PDA

View Full Version : காதலதிகாரம்- நா.முத்துக்குமார்



mukilan
02-03-2007, 05:13 AM
நன்றி: ஆனந்த விகடன் தீபாவளி மலர்-2006

காதல்
ஒரு பப்புள் கம்!
உடைப்பது சுலபம்!
ஊதுவது கடினம்!

காதல்
ஒரு பலூன்!
பெரும்பாலான காதலிகள்
அந்த பலூனுக்குள்
உதடுகளைக் கொண்டு வராமல்
ஊசிகளையே கொண்டு வருகிறார்கள்!

காதல்
ஒரு விநோதமான பரீட்சை அறை!
அது எப்போதும்
தேவதைகளுக்கு பாஸ் மார்க்கையும்
தேவதாஸ்களுக்கு டாஸ் மார்க்கையும் தருகிறது!

காதல்
ஒரு பெருங்கிணறு!
தன்க்குள் விழுந்தவனை
அது மூன்று முறை மேலே அனுப்பி
தப்பிக்கச் சொல்கிறது.
அப்போதும் பிழைக்கத் தெரியாதவன்
மூன்று முடிச்சுப் போட்டு
மூழ்கிப் போகிறான்.

ஆகவே நண்பர்களே
தயவு செய்து காதலிக்காதீர்கள்!
காதல்
நண்பர்களை நாய்க்குட்டியாகவும்
நாய்க்குட்டிகளை நண்பர்களாகவும்
மாற்றி விடுகிறது!

பி.கு: புரியறவங்களுக்கு புரிஞ்சா சரி:D :D

ஷீ-நிசி
02-03-2007, 05:17 AM
அருமையான கவிதை இது....

காதல்
ஒரு விநோதமான பரீட்சை அறை!
அது எப்போதும்
தேவதைகளுக்கு பாஸ் மார்க்கையும்
தேவதாஸ்களுக்கு டாஸ் மார்க்கையும் தருகிறது!

அதிலும் இது ஜோரான கற்பனை....

பாராட்டுக்கள் கவிஞர் முத்துக்குமாருக்கு....

mukilan
02-03-2007, 05:19 AM
பாராட்டை நா. முத்துக்குமார் சாருக்கு யாராவது சொன்னால் தேவலை!

ஷீ-நிசி
02-03-2007, 05:23 AM
பாராட்டை நா. முத்துக்குமார் சாருக்கு யாராவது சொன்னால் தேவலை!

பாராட்டியாச்சு நண்பரே!

மதி
02-03-2007, 07:30 AM
முகிலன்...
அந்த பி.கு. யாருக்குன்னு சொன்னா தேவலை..!

மதி
02-03-2007, 07:31 AM
அருமையாக எழுதியிருக்கிறார் கவிஞர்...!
பாராட்டுக்கள்..!

தங்க கம்பி
02-03-2007, 07:37 AM
கவிஞர் முத்துக்குமாருக்கு காதல் புடிக்காதா? அனுபவபூர்வமாக எழுதியிருகிறாரே.

மன்மதன்
02-03-2007, 07:07 PM
பாராட்டை நா. முத்துக்குமார் சாருக்கு யாராவது சொன்னால் தேவலை!

நான் சொல்லிடுறேன்..;)

மன்மதன்
02-03-2007, 07:08 PM
கவிஞர் முத்துக்குமாருக்கு காதல் புடிக்காதா? அனுபவபூர்வமாக எழுதியிருகிறாரே.

காதலை நிறைய பாடல்களில் வடித்திருக்கிறார்.. கவிதைதானே..எப்படி வேண்டுமானாலும் எழுதலாம். நன்றாக இருக்க வேண்டும்.. அவ்வளவே..

மயூ
03-03-2007, 10:53 AM
கவிரை சிறப்பாக இருக்குது...
ஆனாலும் அளவுவுக்கு மிஞ்சிய ஆங்கிலக் கலப்பு முகம் சுழிக்க வைக்குது!

வெற்றி
03-03-2007, 11:24 AM
வச்சாருங்க பாருங்க ஆப்பு கடைசி பத்தியில்
அதுதான் நா.முத்துக்குமார் பஞ்ச்..

ஓவியன்
04-03-2007, 07:15 AM
அப்ப காதலர்கள் எல்லாம் நாய்க் குட்டீகளா?

மனோஜ்
04-03-2007, 07:20 AM
கவிதை தற்பொழது உள்ள தமிழில் கொடுக்கபட்டுள்ளது

காதல்
ஒரு பப்புள் கம்!
உடைப்பது சுலபம்!
ஊதுவது கடினம்!
ஊதிட்ட பிறச்சனையே அங்கதானே:rolleyes: பதிந்தமைக்கு நன்றி

kavitha
05-03-2007, 09:05 AM
சிரிக்கவைத்தக்கவிதை... நன்றி முகிலன்
கவிதை எழுதுபவர்களெல்லாம் காதலிப்பவர்கள் அல்ல என்பதற்கு இவரும் ஒரு உதாரணம்.

வெற்றி
05-03-2007, 11:17 AM
அப்ப காதலர்கள் எல்லாம் நாய்க் குட்டீகளா?
அவர் அப்படி சொல்ல வில்லை...
மீண்டும் படித்துப்பாருங்கள்..

ஓவியா
28-04-2007, 08:31 PM
நன்றி: ஆனந்த விகடன் தீபாவளி மலர்-2006

காதல்
ஒரு பப்புள் கம்!
உடைப்பது சுலபம்!
ஊதுவது கடினம்!

ஆமாங்க இது காதலில் ஒட்டி வைக்கபட வேண்டிய உண்மை


காதல்
ஒரு பலூன்!
பெரும்பாலான காதலிகள்
அந்த பலூனுக்குள்
உதடுகளைக் கொண்டு வராமல்
ஊசிகளையே கொண்டு வருகிறார்கள்!

அதுசரி, பெரும்பாலான காதலன்களும் ஊசிகளையே கொண்டு வருகிறார்கள்


காதல்
ஒரு விநோதமான பரீட்சை அறை!
அது எப்போதும்
தேவதைகளுக்கு பாஸ் மார்க்கையும்
தேவதாஸ்களுக்கு டாஸ் மார்க்கையும் தருகிறது!


உங்களுக்கு அப்படியே அமைய எனது வாழ்த்துக்கள் (:waffen093: :waffen093: :waffen093:)


காதல்
ஒரு பெருங்கிணறு!
தன்க்குள் விழுந்தவனை
அது மூன்று முறை மேலே அனுப்பி
தப்பிக்கச் சொல்கிறது.
அப்போதும் பிழைக்கத் தெரியாதவன்
மூன்று முடிச்சுப் போட்டு
மூழ்கிப் போகிறான்.

ஆமாம் மூன்று முடிச்சுப் போட்டு அன்புக்கிண்றில் மூழ்கிதான் போகிறான்.


ஆகவே நண்பர்களே
தயவு செய்து காதலிக்காதீர்கள்!
காதல்
நண்பர்களை நாய்க்குட்டியாகவும்
நாய்க்குட்டிகளை நண்பர்களாகவும்
மாற்றி விடுகிறது!

எழுதியவருக்கு என் அனுதாபங்கள்




காதல்
ஒரு பப்புள் கம்!
உடைப்பது சுலபம்!
ஊதுவது கடினம்!

அழகிய வரி. நன்று

பதிபுக்கு நன்றி முகி.