PDA

View Full Version : வா....வென்று வரலாம்!



டாக்டர் அண்ணாதுரை
02-03-2007, 04:30 AM
கைகளை நீட்டு.......
வானத்தை தொட்டு வர,
உன் மனதை திறந்துவிடு.....
வெளிச்சக் கதிர் வூடுருவ.

வீழ்ந்ததற்கா அழுகிறாய்?
அழுவதற்காகவா வீழ்ந்தாய்?
எழுந்திரு நண்பா......
உன்னையே நீ எழுப்பிடு,
சோகத்திற்கு விடை கொடு,
நம்பிக்கைக்கு உயிர் கொடு.....

யாருமே இல்லை என்பதில்லை....
சுற்றிலும் பார்.....
உன்னை கரை சேர்க்க நீந்தி வரும்
நேசக் கரங்களை பார்!

கைகளை நீட்டு.......
சிந்தனை சமுத்திரத்தில் நீந்தி,
புதிய கரைகளை தொட்டு
சந்தோசத் தீவுகளை சிறைப்படுத்து!

நீ விழுந்தது விதியல்ல.....
உன் மதியின் சருக்கல்...அவ்வளவுதான்!
பல்லத்தில் விழுந்ததால்.....
பல்லமே உன் எல்லையல்ல.....
நீ எழுவதற்காக கிடைத்த சந்தர்ப்பம்!!
நண்பா....விழுந்ததற்காக சிலந்திகள்
தற்கொலை செய்துகொல்வதில்லை!
வலைகளை பின்னி விந்தைகள் செய்வதில்லையா?

கைகளை நீட்டு.......
எண்ணங்களை தீட்டி
வாழ்கையில் வண்ணங்களை பூசு!

சனியையும் விதியையும் அழைத்து
உன் சோகங்களுக்கு விழா எடுக்காதே!
சிந்தனை தெளிவில் முடிவுகளை எடு.
அதிஷ்டம் இல்லை என்பதில்லை....
அது முயற்சியின் முக்தி நிலை.
முயற்சியால் அதை நீ தேடவில்லை.....
அதனால் அது உனை நாடவில்லை!

கைகளை நீட்டு......
உனது கண்ணீர் கனவுகளை மீண்டும் கழுவு!

வீழ்வது பாவமல்ல...
வீழ்ந்தே கிடப்பதுதான் பாவம்!
எழுந்திரு நண்பா.....வா வென்று வரலாம்!

ஷீ-நிசி
02-03-2007, 04:41 AM
வீழ்ந்ததற்கா அழுகிறாய்?
அழுவதற்காகவா வீழ்ந்தாய்?
எழுந்திரு நண்பா......

நான் ரசித்த வரிகள்... சிந்தனைகளை தட்டி எழுப்பும் அழகு கவிதை.. வாழ்த்துக்கள் நண்பரே!

Mano.G.
02-03-2007, 05:19 AM
தன்முனைப்புக்கு
மற்றுமோர் கவிதை

"சனியையும் விதியையும் அழைத்து
உன் சோகங்களுக்கு விழா எடுக்காதே!"
அருமையான வரிகள்
காரணங்கள் கூறுவோருக்கு இது காரணங்கள்அல்ல
அருமை தோழரே அருமை

மனோ.ஜி

poo
02-03-2007, 09:28 AM
படிக்கும்போதே நெஞ்சு உயர்கிறதே....

- சரளமாய் வந்திருக்கிறது வரிகள்.. வரிக்கு வரி தன்னம்பிக்கை டானிக்..

உற்சாகக் கவிதைகளோடு வலம்வர வேண்டுகிறோம்...

வாழ்த்துக்கள் இன்னும் படைப்பதற்கு!!

அமரன்
02-03-2007, 10:01 AM
ஆனந் அவர்களின் கவிதை கலக்கல்.

kavitha
02-03-2007, 10:07 AM
சந்தோசத் தீவுகளை சிறைப்படுத்து
தீவுகள்..அருமையான உவமை! முடங்கிக்கிடப்போர்க்கு நல்ல முடுக்குமருந்து இந்தக்கவிதை...தொடர்ந்து எழுதுங்கள். (ல, ள கவனத்தோடு)

பென்ஸ்
02-03-2007, 02:51 PM
ஆனந்த்..
இறந்து இருப்பவனை எழுப்ப மந்திரம் இருக்கிறதா....
இந்த கவிதையை வாசித்து காட்டும்... புரியும்...
தலைப்பு ஒன்று போதுமே....

அறிஞர்
02-03-2007, 03:37 PM
தோல்வியில் தவிப்பவனை...
வெற்றிக்கு கொண்டு செல்ல
உற்சாக டானிக்...

அருமை.. ஆனந்த்.

தங்க கம்பி
02-03-2007, 04:35 PM
[QUOTE=Anand;178176]கைகளை நீட்டு.......
யாருமே இல்லை என்பதில்லை....
சுற்றிலும் பார்.....
உன்னை கரை சேர்க்க நீந்தி வரும்
நேசக் கரங்களை பார்!

ஓ...நீச்சல் தெரியாதோ?

கைகளை நீட்டு.......
சிந்தனை சமுத்திரத்தில் நீந்தி,
புதிய கரைகளை தொட்டு
சந்தோசத் தீவுகளை சிறைப்படுத்து!

பின்பு எப்படி நீந்துவான்?

இளசு
02-03-2007, 07:39 PM
சிலந்தி உதாரணம் மிக அருமை..

ராபர்ட் புரூஸை எழுப்பிய நிகழ்ச்சி அல்லவா..

புத்துணர்ச்சியூட்டும் ஊக்கக்கவிதைக்கு பாராட்டுகள் ஆனந்த்..

டாக்டர் அண்ணாதுரை
05-03-2007, 12:11 AM
வணக்கம் நண்பர்களே,
தெம்பூட்டும் உங்களது பாராட்டுகளுக்கு நன்றி.
உற்சாகத்துடன்
ஆனந்த்.