PDA

View Full Version : சொர்க்கத்தில் ஒரு காதல் - பகுதி 6



ஆதவா
02-03-2007, 02:45 AM
பகுதி 1 (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=176990&postcount=1)பகுதி 2 (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=177033&postcount=1) பகுதி 3 (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=177173&postcount=1) பகுதி 4 பகுதி 5 (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=178001&postcount=1)

பகுதி 6

கலங்கிப்போயிருந்த
கதிரவனுக்கு
கண்களாலேயே மன்னிப்பு கேட்டாள்..
கதிரவன் தண்சுடர்..
ஒரு பெண், அதிலும்
அழகிய பெண், அதிலும்
இறந்து போன பெண், அதிலும்
கலங்கிய விழிகளோடு வந்தால்,
கல்லும் கரையாதா?

குழலியின் நண்பனாகிப் போனான்
கதிரவன்..

அவளைப் பற்றி
அக்கம் பக்கம் விசாரித்தான்...
(குழலி வசித்த வீட்டில் அல்லவா
கதிரவன் இடம் பிடித்திருக்கிறான்....)
விடைகள் இல்லை.
கூடவே அவளும் வந்தாள்..
கதிரவன் கண்களுக்கு மட்டும்
தெரியும் வண்ணம்........

குழலியின் நண்பியான
தேன்மொழி இல்லத்தை
இறந்த காரணத்தினால்
மறந்து போனாள்.
சற்று விசாரிக்கையில்
தெரிந்து கொண்டார்கள் இல்லத்தை...
ஆனால் அங்கே அவளில்லை..
அதற்கு எதிரே அவள்
குடி மாறியதைப் பாராமல்
மெளனமாக கலைந்து சென்றார்கள்
ஆவியும் பாவியும்....

மெல்ல நாட்கள் கரைந்தன,
ஆதவனின் ஒவ்வொரு எழுச்சியிலும்
நாட்கள் நகர்ந்து கொண்டு
இறுதியில் இறந்துபோக வேண்டும்..
எழுச்சி மட்டும்
என்றும் வீழ்ச்சி இல்லை.

ஓர் நாள்...
கதிரவன் கைபிடித்து (?)
நகர் வலம் வந்தாள் பூங்குழலி..
பூங்காவில் விளையாடும் சிறு குழந்தைகள்
சர்க்கஸில் சறுக்கும் பிஞ்சுகள்
அதனை ஆவலோடு பார்க்கும்
மற்றைய பிள்ளைகளுக்கு மத்தியில்
முக மலர்ச்சியாக
பூங்காவின் வழி
ஒரு ஓட்டலுக்குள் சென்றார்கள்,,
அங்கே அச்சமயம்.....

தொடரும்..........

இளசு
02-03-2007, 08:26 PM
ஏற்கனவே தண்சுடர் ...குழலியால்
இன்னும் குளிர்ந்து போனதில் வியப்பென்ன..?

நன்றாகப் போகிறது..தொடருங்கள் ஆதவா..

poo
03-03-2007, 09:02 AM
முதலில் மோதல்... --- பின் என்னவாகிறதென பார்ப்போம்.. ,
வழக்கமான வார்த்தையில் எனக்கு அதீத நம்பிக்கையில்லை.. இங்கேயும் பொய்க்கிறதாவென பொறுத்திருந்து பார்க்கிறேன்..

- தொடருங்கள் ஆதவன்,... வாழ்த்துக்களோடு!

ஆதவா
04-03-2007, 04:04 PM
நன்றி அனைவருக்கும்...

ஷீ-நிசி
04-03-2007, 04:05 PM
குழலியின் நண்பனாகிப் போனான்
கதிரவன்..

நண்பனா.?? காதல் வரலியா...

ஆதவா
04-03-2007, 04:08 PM
முதலில் நண்பன்... பிறகு ???? பார்ப்போம்..

ஓவியா
09-04-2007, 01:34 AM
ஒரு பெண், அதிலும்
அழகிய பெண், அதிலும்
இறந்து போன பெண், அதிலும்
கலங்கிய விழிகளோடு வந்தால்,
கல்லும் கரையாதா?
குழலியின் நண்பனாகிப் போனான்
கதிரவன்..

ஆண்களுக்கும் மனது இலகுமா??? கரையுமா??? பெண்ணின் மனச்சுமை புரியுமா??? நேசிப்பானா??? சுவாசிப்பானா.....எல்லாம் கதையில் மட்டும்தானா??????

ஓஓஓஓஓஓஓஓ.........நண்பனா.......ம்ம்ம்ம்ம்ம்

சபாஷ் ஆதவா. இதுவரை கசமுசாவே இல்லாமல் கதையை செலுத்தி வெற்றிகண்டு விட்டாய். சபாஷ் மாப்ளளே


அங்கே அச்சமயம்....என்னா நடந்தது???? ஓவீ ஓடு ஓடு :sport009: :sport009: :sport009: அடுத்த பாகத்தை தேடி ஓவி :sport-smiley-007: :sport-smiley-007: ஓடிங்

ஓவியா
09-04-2007, 01:39 AM
குழலியின் நண்பனாகிப் போனான்
கதிரவன்..

நண்பனா.?? காதல் வரலியா...


அடடா நண்பா, ஆதவா உம்ம ஸ்பீடு இல்ல. சின்ன குழந்தை...:icon_rollout: :icon_rollout: :icon_rollout: :icon_rollout: ..கொஞ்சம் ஸ்லோதான்.

ஆதவா
09-04-2007, 01:51 AM
ஆண்களுக்கும் மனது இலகுமா??? கரையுமா??? பெண்ணின் மனச்சுமை புரியுமா??? நேசிப்பானா??? சுவாசிப்பானா.....எல்லாம் கதையில் மட்டும்தானா??????

ஓஓஓஓஓஓஓஓ.........நண்பனா.......ம்ம்ம்ம்ம்ம்

சபாஷ் ஆதவா. இதுவரை கசமுசாவே இல்லாமல் கதையை செலுத்தி வெற்றிகண்டு விட்டாய். சபாஷ் மாப்ளளே


அங்கே அச்சமயம்....என்னா நடந்தது???? ஓவீ ஓடு ஓடு :sport009: :sport009: :sport009: அடுத்த பாகத்தை தேடி ஓவி :sport-smiley-007: :sport-smiley-007: ஓடிங்

போங்க போங்க!!! ஏமாற்றம் இல்லாம இருந்தா சரி....கசமுசா கதையில் இல்லை.. இருந்தாலும் உங்க தம்பி அதை சரியா சொல்லியிருப்பேன்ல....

நன்றிகள் அக்கா!

ஓவியன்
10-04-2007, 03:28 AM
ஆனால் அங்கே அவளில்லை..
அதற்கு எதிரே அவள்
குடி மாறியதைப் பாராமல்
மெளனமாக கலைந்து சென்றார்கள்
ஆவியும் பாவியும்....


என்ன மாதிரி வசனங்களை குதிரையாக்கி தேரெனும் கவிதைகளை இந்த பாரிலே செலுத்துகிறீர் ஆதவன்!

நான் முன்பே ஏதோ ஒரு திரியில் சொன்ன மாதிரி நீர் ஆண்டவனால் ஆசிர்வதிக்கப் பட்டவன்.

ஆமாம்,
மகா காளியின் அருள் போற்றி-காளி தாசன் காவியம் (பல) படைத்தார்,
மகா கவியின்(பாரதி) வழி பற்றி எங்கள் ஆதவன் காவியனாக.........

ஆதவா
10-04-2007, 04:47 AM
வரிகளில் கவி வரையும் ஓவியரே!!!
பாரதி என்ற வானைத் தொட முயற்சிக்கும் சிட்டுக்குருவி நான்...
நன்றிகள் கோடி

ஓவியன்
10-04-2007, 04:51 AM
வரிகளில் கவி வரையும் ஓவியரே!!!
பாரதி என்ற வானைத் தொட முயற்சிக்கும் சிட்டுக்குருவி நான்...
நன்றிகள் கோடி

அது தெரிந்து தான் அப்படி எழுதினேன் நண்பரே!

ஆதவா
10-04-2007, 04:57 AM
நன்றி ஓவியன்... திகில் குறையாம அடுத்த பாகத்தையும் படியுங்கோவன்

ஓவியன்
10-04-2007, 05:00 AM
இப்ப கொஞ்சம் வேலை ஆதவன் - நாடு மாற வேண்டியிருக்கு(விடுப்புப் பகுதியைப் பார்க்க), அப்புறம் எல்லாம் வடிவாக எழுதுவன்.