PDA

View Full Version : தமிழ்paramsothi
01-03-2007, 11:24 PM
paramdje@yahoo.comநான் இலங்கையில் பருத்தித்துறையில் கற்கோவளம்
எனும் கிராமத்தை சேர்ந்தவன் தற்போது பெல்ஐியத்தில் உள்ளேன்258

அறிஞர்
02-03-2007, 02:05 AM
பெல்ஜியத்திலிருந்து.. இலங்கை சொந்தத்தை காண்பதில் மிகுந்த மகிழ்ச்சி......

பிடித்தமான பகுதிகளுக்கு சென்று படித்து கருத்துக்களை கொடுங்கள்.

சே-தாசன்
02-03-2007, 03:30 AM
வாருங்கள் அன்பரே உங்கள் வரவு நல்வரவாகுக. உங்களின் பயனுள்ள பங்களிப்பை எதிர்பார்க்கிறோம்.

ஆதவா
02-03-2007, 03:37 AM
வாங்க பரஞ்சோதி... ஏற்கனவே இங்க ஒருத்தர் இருக்க்கார்..... உங்கள் வரவு நல்வரவு

pradeepkt
02-03-2007, 04:49 AM
வணக்கமுங்க.
வரவேற்புகள்.
கலக்குங்க.

ஷீ-நிசி
02-03-2007, 06:07 AM
வாங்க பரம்சோதி..... வரவேற்புகள்! வாழ்த்துக்கள்!

தங்க கம்பி
02-03-2007, 08:34 AM
வாங்க! வாங்க!! அன்புடன் வரவேற்கிறோம்.

அமரன்
02-03-2007, 10:00 AM
பரம்சோதிக்கு அன்பு வணக்கங்கள். இலங்கையின் தலை பருத்தித்துறை. அதுபோல் நீங்களூம் மன்றத்தின் தலைமகனாக முயற்சி செய்யுங்க.

மயூ
02-03-2007, 02:44 PM
அன்பின் பரஞ்சோதி வாங்கோ!!!
நான் கூட பருத்தித்துறைதான்.... எங்கட வீடு பத்திரகாளி கோவில் வீதியல இருக்குது!!! உங்கள சந்ததக்கிறதில மகிழ்ச்சி! :)
மற்றது இங்க பரஞ்சோதி என்ற பெயரில என்னொரு மூத்த உறுப்பினர் இருக்கிறார்.....! :) :)

மன்மதன்
02-03-2007, 07:59 PM
வாங்க பரஞ்சோதி.(எப்படி உங்களை கூப்பிடலாம்..) மன்றத்தில் ஒரு சுற்று படித்துவிட்டு பதிய ஆரம்பியுங்கள்..

இளசு
02-03-2007, 08:38 PM
வாருங்கள் பரஞ்சோதி..

உங்கள் பதிவுகளால் நட்பு அலை பரப்பி
மன்றத் தடாகத்தில் இன்ப உலா வர வாழ்த்துகள்..!

ஓவியா
06-03-2007, 04:39 PM
அன்பரே பரஞ்சோதி,

உங்கள் வரவு நல்வரவாகுக.

ஜோதியுடன் கலந்துருங்க
(மன்றத்திலே ரொம்ப முக்கியமான வார்த்தை இது :D :D )

மனோஜ்
06-03-2007, 04:55 PM
வாருங்கள் பரஞ்சோதி..
தமிழ் மன்றஜோதியில் கலந்து பயன் பெறுங்கள்
வருக வருக வாழ்த்துக்கள்

ஓவியன்
17-03-2007, 11:19 AM
தாயகத்தின் சொந்தமொன்றை சந்திப்பதிலே பெருவுவகை அடைகிறேன்!

வடமராட்சி மண்ணிற்கே உரித்தான புத்திசாலித்தனம் உங்களிடமும் கொட்டிகிடக்கும் என்பதிலே சந்தேகமில்லை - அதனை இந்த மன்றத்திலும் பரப்பி வளம் சேருங்கள்!

ஓவியன்
17-03-2007, 11:24 AM
வாங்க பரஞ்சோதி.(எப்படி உங்களை கூப்பிடலாம்..) மன்றத்தில் ஒரு சுற்று படித்துவிட்டு பதிய ஆரம்பியுங்கள்..

சோதி என்று கூப்பிடுவோமா???

paarthiban
17-03-2007, 12:34 PM
வருக வணக்கம் பரஞ்சோதி சார்

pradeepkt
17-03-2007, 05:42 PM
அன்பின் பரஞ்சோதி வாங்கோ!!!
நான் கூட பருத்தித்துறைதான்.... எங்கட வீடு பத்திரகாளி கோவில் வீதியல இருக்குது!!! உங்கள சந்ததக்கிறதில மகிழ்ச்சி! :)
மற்றது இங்க பரஞ்சோதி என்ற பெயரில என்னொரு மூத்த உறுப்பினர் இருக்கிறார்.....! :) :)அடடே...

சுத்தி முத்திப் பாத்து அவரு உங்க பக்கத்து வீட்டுக்காரரா இருக்கப் போறாரு...
பரஞ்சோதி, நீங்க மயூரேசனுக்குப் பக்கத்து வீட்டுக்காரர் அப்படிங்கறதாலேயே உங்களைத் தப்பா நினைக்க மாட்டோம்... பயப்படாதீங்க... :feiertag014:

மயூ
18-03-2007, 04:58 AM
அடடே...

சுத்தி முத்திப் பாத்து அவரு உங்க பக்கத்து வீட்டுக்காரரா இருக்கப் போறாரு...
பரஞ்சோதி, நீங்க மயூரேசனுக்குப் பக்கத்து வீட்டுக்காரர் அப்படிங்கறதாலேயே உங்களைத் தப்பா நினைக்க மாட்டோம்... பயப்படாதீங்க... :feiertag014:
அறிமுகப்பதிவு போட்டப்புறம் அவர் இங்க வரவெயில்லை போல இருக்குது!!! அவர்கிட்ட கேள்வியெல்லாம் கேட்டு வேஷ்டுங்க!!! :whistling:

அன்புரசிகன்
18-03-2007, 11:33 AM
நான் இலங்கையில் பருத்தித்துறையில் கற்கோவளம் எனும் கிராமத்தை சேர்ந்தவன் தற்போது பெல்ஜியத்தில் உள்ளேன்

வாங்க பரஞ்சோதி. படைத்திடுங்க பல செய்தி.:nature-smiley-008:

மயூ
18-03-2007, 05:40 PM
தாயகத்தின் சொந்தமொன்றை சந்திப்பதிலே பெருவுவகை அடைகிறேன்!

வடமராட்சி மண்ணிற்கே உரித்தான புத்திசாலித்தனம் உங்களிடமும் கொட்டிகிடக்கும் என்பதிலே சந்தேகமில்லை - அதனை இந்த மன்றத்திலும் பரப்பி வளம் சேருங்கள்!
அட நான் கூட வடமராட்சி!!!
அதுதான் எனக்கு இந்தளவு புத்தி!! இதை பிரதீப் அண்ணா மறுத்தாலும் கவலை இல்லை!!!:food-smiley-022:

pradeepkt
19-03-2007, 06:20 AM
அட நான் கூட வடமராட்சி!!!
அதுதான் எனக்கு இந்தளவு புத்தி!! இதை பிரதீப் அண்ணா மறுத்தாலும் கவலை இல்லை!!!:food-smiley-022:
அதெப்படி நான் மறுத்துருவேன்னு உனக்கு அவ்வளவு திட்டமாத் தெரிஞ்சிருக்கு...
அதில பாரு.... இந்த அளவு என்பது எந்த அளவுன்னு தெரிஞ்சுக்கலாமா??? :icon_smokeing:

ஓவியன்
19-03-2007, 07:12 AM
அட நான் கூட வடமராட்சி!!!
அதுதான் எனக்கு இந்தளவு புத்தி!! இதை பிரதீப் அண்ணா மறுத்தாலும் கவலை இல்லை!!!:food-smiley-022:

ஹா,ஹா!

மயூரேசா வடமராட்சி இலங்கைத் தீவின் தலைப் பகுதியில்(மூளை இருக்குமிடம் என்பதால்) உள்ளதால் தான் அந்த பிரேதேசத்து மக்களுக்கு மூளை அதிகம் என்று எனது வடமராட்சி நண்பன் ஒருவன் பகிடியாகக் கூறுவான். என்ன இருந்தாலும் அவர்கள் கணிதத்தில் புலிகள் என்பது ஊரறிந்த உண்மை.

அதுசரி உமக்கு எந்தளவுக்கு புத்தியென்று விளக்கினால் எனக்கும் பிரதீப் அண்ணாவிற்கும் உதவியாக இருக்கும்.

விகடன்
24-03-2007, 05:53 PM
பரஞ்சோதிக்கு எனது வரவேற்பையும் உதிர்க்கிறேன்.

வருக.... வருக....வருக....

மயூ
24-03-2007, 07:12 PM
:icon_shok:
அதெப்படி நான் மறுத்துருவேன்னு உனக்கு அவ்வளவு திட்டமாத் தெரிஞ்சிருக்கு...
அதில பாரு.... இந்த அளவு என்பது எந்த அளவுன்னு தெரிஞ்சுக்கலாமா??? :icon_smokeing:

ஹா,ஹா!

மயூரேசா வடமராட்சி இலங்கைத் தீவின் தலைப் பகுதியில்(மூளை இருக்குமிடம் என்பதால்) உள்ளதால் தான் அந்த பிரேதேசத்து மக்களுக்கு மூளை அதிகம் என்று எனது வடமராட்சி நண்பன் ஒருவன் பகிடியாகக் கூறுவான். என்ன இருந்தாலும் அவர்கள் கணிதத்தில் புலிகள் என்பது ஊரறிந்த உண்மை.

அதுசரி உமக்கு எந்தளவுக்கு புத்தியென்று விளக்கினால் எனக்கும் பிரதீப் அண்ணாவிற்கும் உதவியாக இருக்கும்.
ம்...
ஒருத்தர் அறிவொளியாக இருத்தல் எத்தனை பேருக்கு வயித்தெரிச்சல் பாருங்கோ :icon_shok:

விகடன்
24-03-2007, 07:19 PM
வடமராட்சியா?
பனங் கள்ளுக்கும் பனாட்டிற்கும் பெயர் போன பிரதேஷமே?

நாமெல்லாம் சுற்றுலாப்பயனம் என்று போனால் அங்கு கள்ளடித்து விட்டு மல்லாந்து கிடக்க வேண்டியதுதான். உலகமே எம்மை சுத்தி வரும்.

அதுக்காக புத்தி கூட என்று சொல்வதெல்லாம் அண்டப்புழுகு ஆகாசப்புழுகு மாதிரித்தான் இருக்கும்.

வேண்டாம் மயுரேசா,
சும்மா கிடந்த சங்கை ஊதிய பழி உங்களுக்கு வேண்டாம்.

மயூ
24-03-2007, 07:23 PM
சும்மா கிடந்த சங்கை ஊதிய பழி உங்களுக்கு வேண்டாம்.
அது என்ன எனக்குப் புரியவில்லையே?
ஏன் உங்களுக்கு வடமராட்சி என்றதும் பனங்கூடல்கள் மட்டுமே ஞாபகம் வருகின்றது???
அழகான புகையிலைத் தோட்டங்கள், வெங்காயத் தோட்டங்கள், அருமையான கடற்கரை ஓரம், நாடறிந்த கல்விக் கூடங்கள்.. உளம் அறிந்து உபசரிக்கும் மக்கள்!!! இல்லையா?

அமரன்
24-03-2007, 07:28 PM
இது என்ன அறிமுகப்பகுதியா. இல்லை வேறு ஏதாவதா? அலம்பல் தாங்க முடியவில்லை. இதக் கவனிப்பார் யாருமில்லையா? பிரதீப் அண்ணா நீங்களுமா?

மயூ
24-03-2007, 07:30 PM
இது என்ன அறிமுகப்பகுதியா. இல்லை வேறு ஏதாவதா? அலம்பல் தாங்க முடியவில்லை. இதக் கவனிப்பார் யாருமில்லையா? பிரதீப் அண்ணா நீங்களுமா?
ஆமாமா திரி ஆரம்பீத்தவர் அத்தோடு காணாமல் போக மக்கள் தங்கள் அலம்பலுக்கு இந்தத் திரியை பயன்படுத்துகின்றனர்...
இதை நான் வன்மையாகக் கண்டிக்கீன்றேன்!!!!:icon_clap: :icon_clap:

ஹி.. ஹி...

விகடன்
25-03-2007, 06:22 PM
நாடறிந்த கல்விக் கூடங்கள்.. உளம் அறிந்து உபசரிக்கும் மக்கள்!!! இல்லையா?

சற்று வெளியுலகிற்கும் வாருங்கள்.

வலிகாமத்திலுந்தான்(வடமராட்சியில் இருப்பதையும் ஏற்றுக்கொள்கிறேன்) மிகச் சிறந்த பாடசாலைகள், கல்விக்கூடங்கள் உள்ளன.

கிணற்றுத் தவளை போல் இருக்காதீர்கள்.

ஓவியன்
26-03-2007, 06:08 AM
சற்று வெளியுலகிற்கும் வாருங்கள்.

வலிகாமத்திலுந்தான்(வடமராட்சியில் இருப்பதையும் ஏற்றுக்கொள்கிறேன்) மிகச் சிறந்த பாடசாலைகள், கல்விக்கூடங்கள் உள்ளன.
.

சிறந்த பாடசாலைகள் இருந்தால் மட்டும், அதில் படித்தால் மட்டும் புத்திசாலிகள் என்று அர்த்தமா என்ன?

கத்தி வைத்திருப்பவன் எல்லோரையும் வீரனென்று சொல்லுவீங்க போல?

raj6272
26-03-2007, 08:47 AM
வாங்க வாங்க!

மயூ
26-03-2007, 10:51 AM
சற்று வெளியுலகிற்கும் வாருங்கள்.

வலிகாமத்திலுந்தான்(வடமராட்சியில் இருப்பதையும் ஏற்றுக்கொள்கிறேன்) மிகச் சிறந்த பாடசாலைகள், கல்விக்கூடங்கள் உள்ளன.

கிணற்றுத் தவளை போல் இருக்காதீர்கள்.

சிறந்த பாடசாலைகள் இருந்தால் மட்டும், அதில் படித்தால் மட்டும் புத்திசாலிகள் என்று அர்த்தமா என்ன?

கத்தி வைத்திருப்பவன் எல்லோரையும் வீரனென்று சொல்லுவீங்க போல?
அடடா!
ரொம்பவும்தான் ஆத்திரப் படறீங்க...:icon_hmm:
ஏதோ நான் பிரதேசவாதம் பேசறவன் மாதிரி என்மேல் கோபப்படறீங்க????:icon_v:
கோபப்பட்டாலும் எனக்கு அக்கறை இல்லை... :cool008:

விகடன்
28-03-2007, 05:50 PM
அடடா!
ரொம்பவும்தான் ஆத்திரப் படறீங்க...:icon_hmm:
ஏதோ நான் பிரதேசவாதம் பேசறவன் மாதிரி என்மேல் கோபப்படறீங்க????:icon_v:
கோபப்பட்டாலும் எனக்கு அக்கறை இல்லை... :cool008:

"ஓ" அதுதான் வடமராட்சியோ!

மயூ
31-03-2007, 12:50 PM
"ஓ" அதுதான் வடமராட்சியோ!
ஹி... ஹி... புரிஞ்சா சரி!!!! :icon_good:

விகடன்
31-03-2007, 05:15 PM
.... எங்கட வீடு பத்திரகாளி கோவில் வீதியல இருக்குது!!!

எந்த பத்திரகாளி அம்மன்?
நெல்லண்டைப் பத்திரகாளி அம்மன் கோவிலிற்கருகாமையிலா???

அன்புரசிகன்
31-03-2007, 08:10 PM
சிறந்த பாடசாலைகள் இருந்தால் மட்டும், அதில் படித்தால் மட்டும் புத்திசாலிகள் என்று அர்த்தமா என்ன?
கத்தி வைத்திருப்பவன் எல்லோரையும் வீரனென்று சொல்லுவீங்க போல?

அது தானே. பிறகு ஓவியனையும் புத்திசாலி (சிறந்த பாடசாலையில் கற்றதால்) மற்றும் வீரன் என்றும் கூறவேண்டி (கத்தி வைத்திருப்பதால்) வந்துவிடும்.:tiere025:

மயூ
01-04-2007, 06:04 AM
எந்த பத்திரகாளி அம்மன்?
நெல்லண்டைப் பத்திரகாளி அம்மன் கோவிலிற்கருகாமையிலா???
இல்லை ஓடக்கரைக்கரைக்குப் போற வீதியில்... பஸ் தரிப்பிடத்தில் இருந்து வரேக்க இந்த றோட்டல பல அப்பத் தட்டியெல்லாம் இருக்கும்!!!

ஓவியன்
01-04-2007, 06:19 AM
ஆமா!
நாங்கள் பரஞ்சோதியை வரவேற்றுக் கொண்டிருக்கின்றோம், ஆனால் அவரோ இரண்டு பதிப்புடன் நின்று விட்டார் - ஆளையே காணோம்??

பிச்சி
05-04-2007, 11:07 AM
வாங்க பரஞ்சோதி நல்வரவு