PDA

View Full Version : தெய்வக் குடிலுக்குள்.....ஆதவா
01-03-2007, 06:20 PM
குளத்துப் படிகளில் மண்டியிட்டு
நீ அள்ளி வீசிய தண்ணீரின்
தெறிப்பை பார்த்து மகிழுவேன்.
குளத்து மீன்கள் வெட்கலாம்
நான் இரைத்த பொரிகளை தின்றுவிட்டு...

கொலுசாணியை சரிபார்க்க
முதல்படியில் நீர் நனைய
கால் பரப்புவாய்.
வெட்கி ஓடும் நீரைக் குடிக்க
அந்த வெட்கமில்லா மீன்கள்
தலைதெறிக்க ஓடும்..

பொரிகளுக்கு ஏங்கிய மீன்கள்
நீ விரித்த
பொறிகளுக்கு மாட்டியது
ஆச்சரியமல்ல...

உன் நனைந்த ஆடைகளைப்
பார்த்து ஏக்கப் பெருமூச்சு விட்டவாறு
சுவாசத்தைப் பருகுவேன்.
பாவாடையை முறுக்கி விட்டு
நான் கவனிக்கிறேனா என்று
சிரிப்பாய் வெட்கம் வழிய.........

உன் தோளணைத்து குளக்கரையில்
அமர்ந்திருப்போம்,
துணிகள் ஆதவனின் கதிர்களால்
உலரும் வரை...
நீயும் நினைவுகளோடு பேசுவாய்
அவன் கதிர் வீசுவதை நிறுத்திவிட்டு
உன்னுடன் உளரும் வரை...

எழுந்தோம்; நடந்தோம்.

ஆன்மீகம் குடிகொண்டிருக்கும்
ஒரு சிலையை வணங்குவதற்கு முன்
ஒரு பூக்கடைக்குப் புறப்படுவோம்
ஒப்பனைகள் புரிய..

வண்டுகள் மொய்த்துக்கொண்டிருக்கும்
பூக்களில் எல்லாம் உன் வாசனை
உன் கூந்தல் சுற்றி இப்போது
வண்டுகளின் கூட்டங்கள்

உன் கூந்தலில் ஏறிவிட்டு
உதிறும் பூக்கள் எல்லாம்
உதிரம் கொட்டிக்கொண்டு செல்லும்
கூந்தல் ஏறிய பூக்களோ
கனத்துப்போய் ஏளனமாய் பார்க்கும்.

என் கரம் பிடித்தவாறு
ஒரு குழந்தையாக தவழ்ந்து வருவாய்.
தரிசன வரிசையில்..
உன் வியர்வைகளை
என் ரேகைகள் ருசிக்கும்
உன் ஈரத்தை என் மனம் ரசிக்கும்

இறுதியாக அந்த சிலை வந்ததும்
நான் வணங்குகிறேன் சிலை நோக்கி
நீ திரும்பி நிற்கிறாய் என்னை நோக்கி,,,

ஒரு தெய்வக் குடிலுக்குள்
உயிருள்ள என்னை
தெய்வமாக்குகிறாய்
நானோ உயிரற்ற ஒரு கல்லை
தெய்வமாக்கப் பார்க்கிறேன்..

இளசு
01-03-2007, 07:53 PM
பொரியை விஞ்சிய பொறி..
துணி பிழிந்தால் வழியும் வெட்கம்..
ஆதவனும் ஆடவனாய் மாறி உளறல்..
இறக்கும் பூக்கள் எல்லாம் இறக்கும்..
வியர்வை ருசிக்கும் ரேகைகள்..
மனிதம் + அன்பு = தெய்வம்
தெய்வம் - மாறும் நம்பிக்கை = சிலை - !

-- காட்சிப்படிமங்கள் கைகோர்த்து விளையாடிய கவிதை!

பாராட்டுகள் ஆதவா ..

அழகிய வாசிப்பனுபவம் ... நன்றி..

ஆதவா
02-03-2007, 07:44 AM
நன்றிங்க இளசு...

தங்க கம்பி
02-03-2007, 07:48 AM
அவளின் இதயத்திலிருந்துகொண்டே கேள்விகளை கேட்கிறீர்கள். கவிதை நன்றாக உள்ளது.

ஓவியன்
02-03-2007, 07:52 AM
[
உன் தோளணைத்து குளக்கரையில்
அமர்ந்திருப்போம்,
துணிகள் ஆதவனின் கதிர்களால்
உலரும் வரை...
நீயும் நினைவுகளோடு பேசுவாய்
அவன் கதிர் வீசுவதை நிறுத்திவிட்டு
உன்னுடன் உளரும் வரை.....[/COLOR][/SIZE][/FONT]


உங்கள் பெயருடன் இணைத்து சிலேடையிலும் விளையாடி இருக்கிறீர்கள்!

வாழ்த்துக்கள்!

poo
02-03-2007, 09:10 AM
என் வாழ்வில் நடந்தவைகள்... என்னால் சொல்ல முடியவில்லை... நீ வடித்துவிட்டாய்...

படிக்கும்போது உள்ளே ஒரு துள்ளல் எட்டிப்பார்க்கிறது.. சிதம்பரத்து நடராஜர் நினைவுக்கு வந்துபோகிறார்... (ஹிஹி.. அப்போதெல்லாம் சிதம்பரம் ரகசியம்!)

பாராட்டுக்கள் ஆதவன்... காதலில் நிச்சயமாய் அனுபவம் இல்லாமல் காதலியோடு காலாறாமல் இப்படி எழுதமுடியாதென்பது என் எண்ணம். அப்படித்தானே!!?

-விரைவில் காலம் கைகொடுத்தால் நான் என் காதல் க(வி)தைகளை தொடராக்கலாமென நினைத்திருக்கிறேன் பார்ப்போம்!!

ஆதவா
03-03-2007, 03:08 AM
என் வாழ்வில் நடந்தவைகள்... என்னால் சொல்ல முடியவில்லை... நீ வடித்துவிட்டாய்...

படிக்கும்போது உள்ளே ஒரு துள்ளல் எட்டிப்பார்க்கிறது.. சிதம்பரத்து நடராஜர் நினைவுக்கு வந்துபோகிறார்... (ஹிஹி.. அப்போதெல்லாம் சிதம்பரம் ரகசியம்!)

பாராட்டுக்கள் ஆதவன்... காதலில் நிச்சயமாய் அனுபவம் இல்லாமல் காதலியோடு காலாறாமல் இப்படி எழுதமுடியாதென்பது என் எண்ணம். அப்படித்தானே!!?

-விரைவில் காலம் கைகொடுத்தால் நான் என் காதல் க(வி)தைகளை தொடராக்கலாமென நினைத்திருக்கிறேன் பார்ப்போம்!!

நன்றி நண்பரே!
ஒருதலையாய் நோண்டிய அனுபவம் மட்டுமே உண்டு.. நான் யாரையும் காதலிக்கவில்லை பூ அவர்களே!! இன்று நிழல் போல ஒரு தோழி இருந்தாலும் காதல் இல்லை (சொல்லப்போனால் தடுக்கிறது/) பின் விரிவாக கவிதையாகவே எழுதலாமென இருக்கிறேன். உங்கள் காதல் கதைகளை எப்போது தருவீர்கள்...?

ஷீ-நிசி
03-03-2007, 04:18 AM
குளத்துப் படிகளில் மண்டியிட்டு
நீ அள்ளி வீசிய தண்ணீரின்
தெறிப்பை பார்த்து மகிழுவேன்.
குளத்து மீன்கள் வெட்கலாம்
நான் இரைத்த பொரிகளை தின்றுவிட்டு...

குளத்துப் படிகளில் மண்டியிட்டு
நீ அள்ளி வீசிய தண்ணீரின்
தெறிப்பை பார்த்து மகிழுவேன்.

காதலர்களின் சந்தோஷத்திற்கு வானமே எல்லை.. சின்ன சின்ன நிகழ்வுகளில் கூட எத்துணை ஆனந்தம்...

கொலுசாணியை சரிபார்க்க
முதல்படியில் நீர் நனைய
கால் பரப்புவாய்.
வெட்கி ஓடும் நீரைக் குடிக்க
அந்த வெட்கமில்லா மீன்கள்
தலைதெறிக்க ஓடும்..

குளத்து நீரிலிருந்து அவள் இரண்டாம் படியில் அமர்ந்துக்கொண்டு முதல் படியில் தன் கால்களில் உள்ள கொலுசின் ஆணியை.. கொஞ்சம் திருகி விட்டுக்கொண்டிருக்கிறாள்.. அவள் காலிலிருந்து வழிந்து விழும் நீரினைக் குடிக்க அந்த குளத்து மீன் கள் ஓடுகின்றதாம்! அடடா! என்ன கற்பனை.. வார்த்தைகளில் எளிமை! அழகான கற்பனை..

பொரிகளுக்கு ஏங்கிய மீன்கள்
நீ விரித்த
பொறிகளுக்கு மாட்டியது
ஆச்சரியமல்ல...

பொரிகளுக்கு ஏங்கியது மீன்கள் சரி! அவள் என்ன பொறி வைத்தாள்??
பொரிக்கும் பொறிக்கும் வார்த்தை விளையாட்டா??

உன் நனைந்த ஆடைகளைப்
பார்த்து ஏக்கப் பெருமூச்சு விட்டவாறு
சுவாசத்தைப் பருகுவேன்.
பாவாடையை முறுக்கி விட்டு
நான் கவனிக்கிறேனா என்று
சிரிப்பாய் வெட்கம் வழிய.........

நீர் பட்டதும், எல்லா ஆண்களும் படும் மூச்சுதான்..... நீர் பட்டதும்!

காதலர் கவனிக்கதானே காதலர் முன்னாடி வெட்கம் வழிய நீரை வழியனுப்பினாள்!

உன் தோளணைத்து குளக்கரையில்
அமர்ந்திருப்போம்,
துணிகள் ஆதவனின் கதிர்களால்
உலரும் வரை...
நீயும் நினைவுகளோடு பேசுவாய்
அவன் கதிர் வீசுவதை நிறுத்திவிட்டு
உன்னுடன் உளரும் வரை...

காதலின் கண்ணியம்....
தோள் மட்டும் அணைத்து குளக்கரையில் அமர்ந்தனர், அந்த ஆதவன் மறையும் வரை, அவள் இந்த ஆதவனோடு உரையாடிக்கொண்டிருக்கிறாள்!

எழுந்தோம்; நடந்தோம்.

ஆன்மீகம் குடிகொண்டிருக்கும்
ஒரு சிலையை வணங்குவதற்கு முன்
ஒரு பூக்கடைக்குப் புறப்படுவோம்
ஒப்பனைகள் புரிய..

அடடா, இப்பொழுது பக்தியா?!
ஒப்பனைகள் புரிந்திட
சாமியை தரிசிக்கவும் ஒப்பனை தேவைதானே?!

வண்டுகள் மொய்த்துக்கொண்டிருக்கும்
பூக்களில் எல்லாம் உன் வாசனை

உன் வாசனை இருப்பதால்தான் வண்டுகள் கூட பூக்களை மொய்க்கிறதா??

உன் கூந்தல் சுற்றி இப்போது
வண்டுகளின் கூட்டங்கள்

மேடையில் இருந்த பூக்குவியல்
உன் கூந்தலில் ஏறின, கூடவே வண்டுகளும்

உன் கூந்தலில் ஏறிவிட்டு
உதிறும் பூக்கள் எல்லாம்
உதிரம் கொட்டிக்கொண்டு செல்லும்
கூந்தல் ஏறிய பூக்களோ
கனத்துப்போய் ஏளனமாய் பார்க்கும்.

எடுத்துச் சூடும்போதும், நடக்கும் போதும், கூந்தல் ஏறிய பூக்களுக்குள் சிறு யுத்தம் ஒன்று நடந்து பூமியில் வீழ்ந்திடும் பூக்களைக் கண்டு நாளை மொத்தமாய் விழுந்திடும் பூக்கள் எல்லாம் ஏளனமாய் சிரித்திடுமாம்...

என் கரம் பிடித்தவாறு
ஒரு குழந்தையாக தவழ்ந்து வருவாய்.
தரிசன வரிசையில்..
உன் வியர்வைகளை
என் ரேகைகள் ருசிக்கும்
உன் ஈரத்தை என் மனம் ரசிக்கும்

அருமை...
அவளும், அவனும் கைபிடித்து நடக்கிறார்கள்.. குழந்தைப் போல அவள் அவன் கையைப் பிடித்து!

இரு கரங்களும் சேர்ந்ததால் உண்டாகும் ஈர வியர்வைகளை அவன் உள்ளங்கை ரேகைகள் ருசிக்குமாம்.... உள்ளங்ககை ரேகைகளின் தாகத்தை தீர்த்த ஜீவ நதி! அவள் உள்ளங்கைகளின் ஈர வியர்வைகள்!

இறுதியாக அந்த சிலை வந்ததும்
நான் வணங்குகிறேன் சிலை நோக்கி
நீ திரும்பி நிற்கிறாய் என்னை நோக்கி,,,

அவன் அவன் கடவுளை நோக்குகிறான்!
அவள் அவள் கடவுளை நோக்குகிறாள்!

ஒரு தெய்வக் குடிலுக்குள்
உயிருள்ள என்னை
தெய்வமாக்குகிறாய்

அவளின் தெய்வம்தானே அவன்...
அவள் அவனை தெய்வமாக்கிவிட்டாள்!

நானோ உயிரற்ற ஒரு கல்லை
தெய்வமாக்கப் பார்க்கிறேன்..

இவனோ அந்த கல்லை
தெய்வமாக்கப் பார்க்கிறான்
கவனியுங்கள்! தெய்வமாக பார்க்கவில்லை, தெய்வமாக்கப் பார்க்கிறான்.. இது பிழையா என்று தெரியவில்லை..

அருமை ஆதவா.. எளிமையான வார்த்தைகளில் எழுத முயற்சித்ததின் விளைவே இந்த அற்புதமான கவிதை...

ஒரு காதல் காட்சி கண் முன் நடந்தது போல் உள்ளது!

raj6272
03-03-2007, 04:23 AM
ஒருதலையாய் நோண்டிய அனுபவம் மட்டுமே உண்டு.. நான் யாரையும் காதலிக்கவில்லை பூ அவர்களே!! இன்று நிழல் போல ஒரு தோழி இருந்தாலும் காதல் இல்லை (சொல்லப்போனால் தடுக்கிறது/) பின் விரிவாக கவிதையாகவே எழுதலாமென இருக்கிறேன். உங்கள் காதல் கதைகளை எப்போது தருவீர்கள்...?


நூற்றுக்கு நூறு உண்மை, சொன்னாலும் என்ன கிண்டல் பண்றியா என்று கேட்கிறார்கள். கவிதை சூப்பர்.

ஆதவா
03-03-2007, 05:29 AM
ஷீ!! உங்கள் அலசல் வெகு பிரமாதம்.. நானும் உங்களைப் போல ஒரு எளிமையான கவிதை எழுதவேண்டுமே என்ற துடிப்பில் எழுதியதுதான். என்ன செய்தாலும் சற்று வார்த்தைகளில் கடினம் வந்துவிடுகிறது... இக்கவிதையில் அந்த குறை நிவர்த்தி செய்தாகிவிட்டது... ஒவ்வொருவரிக்கும் புதுப்புது அர்த்தமிட்டு அசத்தி இருக்கிறீர்கள்...

ஆதவா
03-03-2007, 05:29 AM
ஒருதலையாய் நோண்டிய அனுபவம் மட்டுமே உண்டு.. நான் யாரையும் காதலிக்கவில்லை பூ அவர்களே!! இன்று நிழல் போல ஒரு தோழி இருந்தாலும் காதல் இல்லை (சொல்லப்போனால் தடுக்கிறது/) பின் விரிவாக கவிதையாகவே எழுதலாமென இருக்கிறேன். உங்கள் காதல் கதைகளை எப்போது தருவீர்கள்...?


நூற்றுக்கு நூறு உண்மை, சொன்னாலும் என்ன கிண்டல் பண்றியா என்று கேட்கிறார்கள். கவிதை சூப்பர்.

நன்றிங்க.... ராஜ்