PDA

View Full Version : விழா மேடையில் ஜனாதிபதி அப்துல் கலாம் தவறĬ



mgandhi
01-03-2007, 05:01 PM
http://i2.turboimagehost.com/b1/279185/fpn_mix.jpg


விழா மேடையில் ஜனாதிபதி அப்துல் கலாம் தவறி கீழே விழுந்தார்

புதுடில்லி : புதுடில்லியில் நடந்த சங்கீத நாடக அகாடமி அவார்டு வழங்கும் விழா மேடையில் ஜனாதிபதி அப்துல் கலாம் தவறி கீழே விழுந்து விட்டார். இதில் அவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. 2006 க்கான சங்கித நாடக அவார்டு வழங்கும் விழா புதுடில்லியில் நடந்தது. இதில் விருது பெற்ற 87 வயதான மணிப்பூரி கலைஞர் கேல்சந்திர சிங் மேடையின் ஓரத்தில் உட்கார்ந்திருந்தார். ஜனாதிபதி அப்துல் கலாம் பேச வந்தபோது அவர் வைத்திருந்த வாக்கிங் ஸ்டிக் தட்டி கலாம் கீழே விழுந்து விட்டார்.உடனடியாக பாதுகாவலர்களும் மற்ற அதிகாரிகளும் அங்கு பாய்ந்து வரவும், கலாம் எழுந்து விட்டார். இதனால் அவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. தொடர்ந்து விழாவில் கலாம் கலந்துகொண்டு விட்டு ஜனாதிபதி மாளிகைக்கு திரும்பினார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், கலாம் நலமாக இருப்பதாகவும் காயம் ஏதும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்தனர்.

தங்க கம்பி
01-03-2007, 05:06 PM
இது ஒரு சிறிய பரபரப்புதான். பயபடும்படியாக வேறுஏதும்மில்லை.

அறிஞர்
01-03-2007, 05:12 PM
காந்தி போட்டோ தெரியவில்லை...

வேறு இடம் மாற்றி பதியுங்கள்.....
----
கலாம் நலமுடன் இருக்க வாழ்த்துக்கள்.

மன்மதன்
01-03-2007, 05:41 PM
photobucket நல்ல தளம் . அதில் முயற்சி செய்யுங்க காந்தி.

mgandhi
01-03-2007, 06:33 PM
photobucket நல்ல தளம் . அதில் முயற்சி செய்யுங்க காந்தி.

[http://i167.photobucket.com/albums/u125/mgandhi05_2007/fpn_mix.jpg

இளசு
01-03-2007, 07:42 PM
முதிய கலைஞரின் கைத்தடியால் கால் தவறிவிட்ட நிகழ்வு..

உடனே படம் போட்டு பரபரப்பாக்கிவிட்டன - ஏடுகள்..

இப்பதான் தினமலரில் பார்த்தேன்..

ஆனாலும் நம்ம காந்தி செம்ம ஸ்பீடுப்பா..!:)

pradeepkt
02-03-2007, 03:26 AM
ஆனாலும் ஜனாதிபதியின் இரு பக்கமும் செல்ல வேண்டிய காவலர்கள் செல்லாதது தவறே. இன்று ஒரு முதியவர் அறியாமல் செய்தார். நாளை வேறு யாரேனும் வேண்டுமென்றே செய்தால் என்னாவது.

புரோட்டோகால் முறையை மிகக் கவனமாகக் கைக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. அவ்வகையில் இது சிறிய தவறாகப் படவில்லை

Mano.G.
02-03-2007, 04:08 AM
ஆனாலும் ஜனாதிபதியின் இரு பக்கமும் செல்ல வேண்டிய காவலர்கள் செல்லாதது தவறே. இன்று ஒரு முதியவர் அறியாமல் செய்தார். நாளை வேறு யாரேனும் வேண்டுமென்றே செய்தால் என்னாவது.

புரோட்டோகால் முறையை மிகக் கவனமாகக் கைக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. அவ்வகையில் இது சிறிய தவறாகப் படவில்லை

அதிகாரிகளின் கவனக்குறைவை கண்டிக்க வேண்டும்.
நாட்டின் முதல் மனிதர்
அவரை பதுகாப்பதே அவர்களின் வேலை