PDA

View Full Version : சொர்க்கத்தில் ஒரு காதல் பகுதி 5ஆதவா
01-03-2007, 03:12 PM
பகுதி 1 (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=176990&postcount=1) பகுதி 2 (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=177033&postcount=1) பகுதி 3 (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=177173&postcount=1) பகுதி 4 (http://tamilmantram.com/vb/showpost.php?p=177644&postcount=1)

பகுதி 5

அவள் மேஜைக்கு
இடையில் நின்று கொண்டிருந்தாள்.
அவளின் இடை
மேஜைக்கு மேலும்
கால்கள் கீழும்
இருந்தன....
விந்தை...
அவள் இறந்துபோனவள்.
அவள் ஒரு ஆவி...
அது அவளுக்கு விளங்கவில்லை...

சிறிது நாட்கள் நகர்ந்தது,.
அவள் அவனோடே வசித்தலானாள்
அவனின் செயல்களுக்கு
இடைமறித்தாள்...
நன்றாக படியுங்கள்
இடைமறித்தாள்.

தொல்லை காட்சி பார்க்கையில்
தொல்லை கொடுப்பாள்
பாட்டு என்ற பெயரில்
அறை அதிர அலறுவாள்
அழகிய முகம்தான்
அவளுக்கு என்றாளும்
அவதியுறும் செயலால்
அழுகிய முகமாய் தெரியலானாள்
அவனுக்கு...

முடிவு செய்தான்...

சாமியார்களை வரவைத்தான்..
பேயோட்டும் சாமியார்கள்- வெறும்
நாயோட்டும் சாமியார்கள்
அவளுக்கு அருகிலே இருந்தும்
ஓடல் நடைபெறவில்லை.
அவளும் ஓட்டமெடுக்கவில்லை.
மாறாக,
ஏளனமாக பார்வையிட்டாள் குழலி...
பேயோட்டுபவனுக்கு குழலி தெரியவில்லை..
ஆம்... கதிரவன் கண்களுக்கு மட்டுமே
விருந்தாக வந்திருக்கிறாள்.
மற்ற சுடர்களுக்கு வெறும் காற்றுதான்..
அற்புதம் என்பதா இதை?

ஆவியிடம் பேசுபவர்கள்,
சூனியம் செய்பவர்கள்
சாமியார்கள்
இன்னபிற இத்யாதிகள்
எல்லோரையும் வரவைத்து
ஓட்டப் பார்த்தான் குழலியை..
அவனருகேயே அமர்ந்து கொண்டு
அனைத்தையும் கவனித்தாள்
அஞ்ஞானத்தோடு....

பணத்தைக் கொடுத்து
ஏமாற்றம் வாங்கினான்..

குழலி மென்மையானவள்
மருத்துவச்சிகளின் ஆரோக்கிய குணம்
அழகிய விழிகளும்
சோடா குண்டுகள் போல விழிகளும்
நடுப்புற ரோஜா போல நுதல்களும்
பெற்ற பேரழகி....
அவள் க்ஷணநேரம் யோசித்தாள்...
துன்பம் என்று மற்றவர்களுக்கு
கொடுப்பதை என்றாவது யோசித்திருப்போமா?
என்று கலங்கினாள்..
ஒரு முடிவும் எடுத்தாள்.....

தொடரும்....

ஷீ-நிசி
01-03-2007, 03:24 PM
ஆவி! திருந்த ஆரம்பிச்சிடுச்சி.. இனி சுபம் தான்....

ஆதவா
01-03-2007, 03:27 PM
ஆவி! திருந்த ஆரம்பிச்சிடுச்சி.. இனி சுபம் தான்....

சுபத்திற்கு இன்னும் ஐந்து பாகங்கள் இருக்கிறதே!!! பாருங்கள் கதையின் போக்கை...... ஆவியை காதலிக்கும் ஆடவன்... ஆவியான அவள் ஒத்துக்கொள்வாளா?.. பொறுத்திருந்து பாருங்கள்...

இளசு
01-03-2007, 08:41 PM
வித்தியாசக் களன்..
மெய்நிகர் விவரணை..

அசத்துகிறீர்கள் ஆதவா.. தொடருங்கள்!

guna
02-03-2007, 02:12 AM
பொதூவாகவே படிப்பதோடு நிருதிக்கொள்ளும் சுபாவம் குணாவினுடயது...
விமர்சிக்கும் திறமை இல்லாததால்..

இந்த பதிவுக்கு, விமர்சனம் செய்யாமல் போக முடியவில்லை ஆதவா..
அருமையா இருக்கு, தொடருங்கள் ..
அடுத்த பதிவுகளுக்காக ஆர்வமாய் காத்திருக்கும்...

குணா

ஆதவா
02-03-2007, 02:41 AM
மிக்க நன்றிங்க குணா!! சாதாரணமா எல்லாருடையதும் விமர்சியுங்க.... நன்றி,...

poo
03-03-2007, 08:56 AM
எதிரெதிராய் இருந்தாலும் ஒத்த துருவங்கள்...

இனிதான் சூடுபிடிக்கப் போகிறதென உள்ளேயும் உறைக்கிறது..

-பாராட்டுக்கள் ஆதவன்.

ஓவியா
09-04-2007, 01:22 AM
அழகிய முகம்தான்
அவளுக்கு என்றாளும்
அவதியுறும் செயலால்
அழுகிய முகமாய் தெரியலானாள்
அவனுக்கு...

அட்வைசுக்கு நன்றி,
இனி ஆட்டம் கொஞ்சம் அடங்க்கும். :icon_wink1: :icon_wink1: (கண்டுக்காதே தலிவா)


அழகிய விழிகளும்
சோடா குண்டுகள் போல விழிகளும்
நடுப்புற ரோஜா போல நுதல்களும்
பெற்ற பேரழகி....

வர்ணணை தூள்

அசத்துகிறீர்கள் ஆதவா.. :sport-smiley-007:
அசத்துகிறீர்கள் ஆதவா.. :sport-smiley-007:
அசத்துகிறீர்கள் ஆதவா.. :sport-smiley-007:


பாராட்டுக்கள்.

கண்ணில் விளக்கெண்ணை விட்டுக்கொண்டு அடுத்த பதிவை தேடி .....:angel-smiley-026: :angel-smiley-026: :angel-smiley-026: (டூப்பு)ரிவால்வேர் ரீட்டா

ஆதவா
09-04-2007, 01:51 AM
வர்ணணை தூள்

அசத்துகிறீர்கள் ஆதவா.. :sport-smiley-007:
அசத்துகிறீர்கள் ஆதவா.. :sport-smiley-007:
அசத்துகிறீர்கள் ஆதவா.. :sport-smiley-007:


பாராட்டுக்கள்.

கண்ணில் விளக்கெண்ணை விட்டுக்கொண்டு அடுத்த பதிவை தேடி .....:angel-smiley-026: :angel-smiley-026: :angel-smiley-026: (டூப்பு)ரிவால்வேர் ரீட்டா

டூப்பு ரீட்டா??? அருமையா இருக்கு பேரு..............

நன்றி மீண்டும்....

ஓவியன்
10-04-2007, 03:25 AM
ஆதவா!
வித்தியாசமான கருப்பொருளினைப் பற்றி அதன் கரு சிதறாமல் கவனமாகக் கையாண்டிருப்பதனை என்னால் உணர முடிகின்றது. பல வரிகளில் விளக்க வேண்டியவற்றை சில கவி வரிகளில் சொல்லி விடலாமென்பதற்கு உங்கள் கவிதைகளே உதாரணங்கள்

ஆதவா
10-04-2007, 04:45 AM
நன்றிங்க ஓவியன்