PDA

View Full Version : தமிழா விழித்துக் கொல்...



மன்மதன்
28-02-2007, 06:09 PM
எனக்கொரு
சந்தேகம்

உன்னை
எங்கள் மூச்சு
என்றார்

அப்படியென்றால்
நாம் செத்துப்போனது
எப்படி

உன்னை
வாங்கிய நாம்
பிறகு
விட்டு விட்டோமா

மேல்வாய்
பிரசவித்த
மெல்லிய ஒலி

வளர்ந்து
பருவமுற்றபோது
பைந்தமிழே
நீ பிறந்தாய்

முப்பதே
ஒலிகளுக்குள்
முழு உலகம்
அளப்பவளே

உன்னைப்போல்
எப்போதும்
உயிர் மெய்யோடு
இயங்குகின்ற மொழி எது?

குறிஞ்சியிலே
வாழைக்குமரியாய்
உதித்தவளே

முல்லையிலே
மலர்ந்து
முழுமலராய்
சிரித்தவளே

மருதத்தில்
போகத்தால்
மசக்கை
கொண்டவளே

நெய்தலிலே
காவியங்கள்
நெய்தவளே

ஈரமற்ற
பாறையிலும்
பூத்த மணிமலரே


பாடயிலே
தேவர்களின்
பாடைகள்
போனபின்னும்

உன் செய்
பாடயிலே
ஆடயிலே
படிப்படியாய்
வளர்ந்தவளே

வாயின்
சுவாசமே
வயிறார
தித்திக்கும்
கனிச்சுவையே

எங்கள்
காதருந்தும்
கள்ளே

எம்மொழி
செம்மொழி
எனக்கேட்டால்

தலைநிமிர்ந்து
எம்மொழி
செம்மொழி
எனச்சொல்லும்
புகழ் கொடுத்தாய்

செத்த மொழிகள்
எல்லாம் இங்கு
சிம்மாசனம் ஏற
உயிர் மெய்யோடு
இருந்த உயர்ந்த மொழி
தமிழ்மொழிக்கோ
தாமதமாகவே
செம்மொழி
சிம்மாசனம் கிடைத்தது

இதற்கு
தமிழன்
தூங்கி
கிடந்ததுதான்
காரணம்


தமிழே
நீ
தீயாலே
கொஞ்சம்
தீந்தாய்

கடல்
என்னும்
பேயாலே
பேரழிவை
பெற்றாய்

கரையானின்
வாயாலே
கொஞ்சம்
கரைந்தாய்

வத்தவந்த
அயல்மொழியின்
நோயாலே
நலம்
கெட்டு
நொந்தாய்

இன்றோ
உன்
சேயாலே
சீரழிந்து
தேம்பி
அழுகின்றாய்

தமிழே
உன்னிடத்தில்
உயிரெழுத்தை
கற்றோமே
உயிர் பெற்று
எழுந்தோமா

மெய்யழுத்தை
கற்றோமே
மெய்யெழுத
கற்றோமா

நீ
ஆயுதமும்
உயிர்
என்றாய்

அதை
மறந்து
போனதனால்
பகைவர்களிடம்
தோற்றுவிட்டோம்

பத்துப்பாட்டு
என்றால்
பதறுகிறோம்

திரைப்படத்தில்
குத்துப்பாட்டு
என்றால்
குதூகலமாய்
ஆடுகிறோம்

எட்டுத்தொகை
பெற்று
இறுமாந்து
இருந்த
இனம்

சுற்றுத்
தொகைக்கு
எல்லாம்
தொலைத்து
விட்டு
இருக்கின்றோம்

அன்றோ
குரல் என்ற
உன்
ஈரடியை
வணங்கியது
உலகம்

இன்றோ
யார் என்ற
விவஸ்தை கூட
இல்லாமல்
இனப்பகைவர்
காலடியில்
விழுவதுதான்
தமிழரின்
கலாச்சாரம்

உன்
சிலம்பம்
அதிகாரம்
செய்தது
அன்று
இன்றோ
அதிகாரக்கால்களில்
சிலம்பாகி
கிடக்கிறான்
தமிழன்

பரன்குணம்
படைத்த
பரம்பரை
இன்று
உன்னை
பரணிலே
போட்டுவிட்டு
பாதையெல்லாம்
நடக்கிறது

பிள்ளைத்தமிழ்
பேச பேரின்பம்
கொண்டவளே
இன்று
உன்
பிள்ளைகள்
பேசும் பேச்சிலே
நீ இல்லை

இமயத்தில்
கொடியேற்றி
இறுமாந்து
நின்றவனோ
சமயக்கொடியேற்றி
சகதியிலே
விழுந்துவிட்டான்

புலிக்கொடியை
பறக்கவிட்டு
புகழோடு
வாழ்ந்தவன்தான்

புலியென்று
சொன்னாலே
புளியமரம்
ஏறுகின்றான்

மூதறிஞர்
தந்த
முப்பால்
இருக்க

நாற்பால்
என்ற நச்சுப்பால்
குடிக்கின்றான்

நெற்கொடியை
பறக்கவிட்ட
வீரன்தான்

இன்று
வில்லுப்பாட்டு
பாடி வீணர்களை
புகழுகின்றான்

கங்கைகொண்டவன்தான்
இன்று
காவிரியையும்
இழந்துவிட்டு
கையை
பிசைந்து
நிற்கிறான்

முப்படையால்
நான்கு
திசைகளையும்
வென்றவன்

சாதி
சமயம்
கட்சி
என்ற
முப்படையால்
தோற்று
முகவரியை
இழந்துவிட்டான்

தாய்ப்பாலுக்கு
அப்பால்
உன்
தனப்பாலை
குடித்ததொரு
ஒரு
வாய்ப்பால்
வளர்ந்த மகன்

வஞ்சகப்
போதையின்
நோய்ப்பால்
அருந்தி
நூதனமாய்
சாகின்றான்

உன்னை
மொழிகளுக்கெல்லாம்
முதன் மொழி என்றாய்
அதனால்
உன்னை முதலாக
போட்டு வியாபாரம்
தொடங்கிவிட்டான்

தமிழன்
சீழ்பிடித்த
கொப்புளங்களை
எல்லாம்
தாயின்
மார்பகங்களாய்
நினைக்கிறான்

அன்று நீ
சங்கப்பலகை என்னும்
அரியாசனத்தில் அழகியாய்
வீற்றிருந்தாய்
இன்றோ
எங்கள்
கடைப்பலகையில் கூட
நீ கால்வைக்க
இடமில்லை

கோயிலுக்குள்ளே
நீ குடியேற
முடியவில்லை

வாயிலுக்கு
வெளியே
உன்னை
வைத்துவிட்டு
செல்கின்றார்
செருப்பை போல

வழக்காடு
மன்றத்தில்
குற்றவாளிகளுக்கு
கூட
கூண்டுகள்
உண்டு
நீ
நுழையமட்டும்
அனுமதியில்லை

அம்மா தாயே
என்னும்
பிச்சைகாரர்
வாயில்
மட்டும்தான்
நீ இருக்கின்றாய்

தெருவெங்கும்
தமிழ் முழக்கம்
செழிக்கச்செய்வோம்
என்ற பாரதியே

உன் கனவை
நாங்கள்
நிறைவேற்றி
வைத்துவிட்டோம்
வந்து பார்
இப்போது
தமிழ்
தெருவில்தான்
நிற்கிறது

தமிழனுக்கு
தேசிய
கீதமே
தாலாட்டுதான்
மதம்
சாதி
திரைப்படம்
என்று
இவனுக்குதான்
எத்தனை
படுக்கைகள்

தமிழன்
ஒன்று
கும்பகர்ணனாக
இருக்கிறான்
இல்லையென்றால்
வீடணாக
இருக்கிறான்

இளைஞனிடம்
விழிப்புணர்ச்சி
வேண்டுமென்றால்
நாங்கள்தான்
பெண்களை
கண்டால்
விழி புணர்ச்சி
செய்கிறோமே
என்கிறான்

தமிழன்
விழித்திருக்கும்
போது கூட
திரைப்பட அரங்குகள்
என்ற இருட்டறையிலேயே
இருக்கின்றான்

இவனுக்கு
பெரியதிரை
பெரிய வீடு
சின்னத்திரை
சின்ன வீடு

இந்த வீடுபேற்றிற்காக
இவன்
அறத்தையும்
இழந்துவிட்டான்
பொருளையும்
இழந்துவிட்டான்

அகமிழந்தான்
பொருளிழந்தான்
ஆன்மாவை
விற்றுவிட்டான்
முகமிழந்தான்
தன்னுடைய
முகவரியையும்
இழந்துவிட்டான்
எனக்கு
வீடெங்கே
வினையெங்கே
எனக்கேட்டு நின்ற
ஏடெங்கே
எழுத்தெங்கே
இன உணர்வு
பெற்றிருந்த நாடெங்கே
வீடெங்கே
உன் புதல்வர்
கண்டிறிந்த
சூடெங்கே
சொரணை எங்கே
சொப்பனமாய் போனதோ

இந்த
நாட்டில்
நடிப்பவர்கள்தான்
தலைவர்களாகிறார்கள்
அல்லது
தலைவர்களாக
இருப்பவர்கள்
நடிக்கிறார்கள்

தமிழா
விழித்துக்கொள்
இல்லையென்றால்
வெள்ளித்திரைக்கென்று
உன் வேட்டியை
உருவி கொண்டு
சென்றுவிடுவார்கள்...

------------------------------------------------------------------------------------------------------------------------


இந்தக்கவிதையை எழுதியது யார் என்று கண்டுபிடியுங்க! இது ஒரு கவியரங்கத்தில் கேட்டது. அதை நான் என் கைப்பேசியில் பதிவும் செய்துவைத்துள்ளேன். வேண்டுபவருக்கு அனுப்பி வைக்கிறேன்.

ஆதவா
28-02-2007, 06:12 PM
9000 மாவது பதிவாக.. மிக நீளமான கவிதை.... எழுதியவர் யாரென கண்டுபிடிக்கும் முன் பொறுமையாக படிக்கவேண்டும்.. தமிழா விழித்துக் கொல்லாதேபா!!!! விழித்துக் கொள்..

aren
28-02-2007, 06:13 PM
கவிஞர் பா. விஜய் என்று நினைக்கிறேன்.

aren
28-02-2007, 06:14 PM
9000 பதிவுகள். வாழ்த்துக்கள் மன்மதன்.

மன்மதன்
28-02-2007, 06:20 PM
9000 மாவது பதிவாக.. மிக நீளமான கவிதை.... எழுதியவர் யாரென கண்டுபிடிக்கும் முன் பொறுமையாக படிக்கவேண்டும்.. தமிழா விழித்துக் கொல்லாதேபா!!!! விழித்துக் கொள்..

தலைப்பு நான் கொடுத்தது. நான் வேணுமின்னேதான் அது மாதிரி கொடுத்தேன்.

கவிதை நீளம்தான். ஒரேயொருமுறை வேகமாக படிங்க. மிகச்சிறிய கவிதை அது.

மன்மதன்
28-02-2007, 06:27 PM
9000 பதிவுகள். வாழ்த்துக்கள் மன்மதன்.

நன்றி ஆரென்ஜி. அது விஜய் அல்ல..

ஷீ-நிசி
01-03-2007, 03:46 AM
தமிழன்
சீழ்பிடித்த
கொப்புளங்களை
எல்லாம்
தாயின்
மார்பகங்களாய்
நினைக்கிறான்

மேற்கூரிய வரிகள் என்னை பிரமிக்க வைத்தன...

அன்று நீ
சங்கப்பலகை என்னும்
அரியாசனத்தில் அழகியாய்
வீற்றிருந்தாய்
இன்றோ
எங்கள்
கடைப்பலகையில் கூட
நீ கால்வைக்க
இடமில்லை

கவிதை நீளமானது என்றாலும், கொஞ்சமேனும் சலிக்கவில்லை..

பா.விஜய்-ன் சாயலில் உள்ளது. உள்ளத்தில் உண்டான தமிழ் மீது கொண்ட அதிகபட்ச வலியே இத்தனை அழகான கவிதைக்குக் காரணம்...
மன்மதன் நீங்கள்தான் எழுதியது என்று நினைத்தேன்..

விழிப்புணர்ச்சியில் கவிஞர் விளையாடியிருக்கிறார்...

அற்புதமான படைப்பு இது.. தமிழா இனியேனும் யோசிப்பாயா?!

pradeepkt
01-03-2007, 04:51 AM
ஹேய் ... நீதான் பொங்கி எழுந்து இதை எழுதி இருக்கிறாயோன்னு நினைச்சேன். கைபேசியில் அனுப்பி வைக்கவும்.

மயூ
01-03-2007, 02:39 PM
அருமையான கவிதை...
உண்மை உண்மை அத்தனையும் உண்மை!!!

ஆதவா
01-03-2007, 03:00 PM
கவிதை அருமை.. கைப்பேசியில் பதிந்ததை எனக்கு அனுப்புவீர்களா?... என் முகவரி shanrah2006@gmail.com

மனோஜ்
01-03-2007, 03:12 PM
ஆக ஒரு பெரும் கவிஞர் ஆயிட்டாரு இவ்வளவு அழகாக கவிதை எழதி உள்ளாரே என்று நினைத்து படித்து கொன்டிருக்கும் பொழுது பின் குறிப்பு கொடுத்து விட்டீர்கள் மன்மதன் அவர்களே

படித்த பொழுது உனர்வுகள் வெளிப்பட்டது அருமையான கவிதை அல்ல காவியம் பதிந்தமைக்கு நன்றி மன்மதன் அவர்களே

மன்மதன்
01-03-2007, 04:43 PM
அனைவருக்கும் நன்றி..


இது கவிக்கோ அப்துல் ரகுமான் எழுதிய கவிதை.

இந்த கவியரங்கத்தில் இவர் தலைமை தாங்க, இன்குலாப், அறிவுமதி, நா.முத்துகுமார், கபிலன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

யாருப்பா அது.. இதை நான் எழுதினதுன்னு நினைச்சது.. கைப்புள்ள ஆக்கிட்டிங்களே நம்மை..அய்யோ அய்யோ :D

ஆதவா
01-03-2007, 05:03 PM
அனைவருக்கும் நன்றி..


இது கவிக்கோ அப்துல் ரகுமான் எழுதிய கவிதை.

இந்த கவியரங்கத்தில் இவர் தலைமை தாங்க, இன்குலாப், அறிவுமதி, நா.முத்துகுமார், கபிலன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

யாருப்பா அது.. இதை நான் எழுதினதுன்னு நினைச்சது.. கைப்புள்ள ஆக்கிட்டிங்களே நம்மை..அய்யோ அய்யோ :D

நினைத்தேன்....

அறிஞர்
01-03-2007, 05:15 PM
வாவ் அருமையான கவிதை..
அர்த்தங்கள் பல பொதிந்து உள்ளது.

மன்றத்தில் கொடுத்த மன்மதனுக்கு நன்றி...

மன்மதன்
01-03-2007, 05:40 PM
நினைத்தேன்....

கவிதையை கொஞ்சம் பிரித்து மேயுங்களேன்..

ஓவியன்
01-03-2007, 09:12 PM
கவிக்கோவின் வரிகளா இவைகள்!

ஒரு வார்த்தையில் சொல்வதாயின் "அருமை".

மன்மதன்
02-03-2007, 07:18 PM
ஆமாம் நண்பரே.. எனக்கு ரொம்ப பிடித்த கவிதையாகி போனது இது..

lolluvathiyar
16-08-2007, 12:02 PM
அப்பப்ப கவிதை அருமையா இருந்தது.
மன்மதரே ஒரு சந்தேகம், கவிதையை கவிஞர் எப்படி படிச்சாரு. நீங்க எல்லாத்தையும் ரைட் சைடல போட்டீங்க. கழுத்து வலி பிடிச்சிருச்சு

மன்மதன்
16-08-2007, 12:29 PM
அப்பப்ப கவிதை அருமையா இருந்தது.
மன்மதரே ஒரு சந்தேகம், கவிதையை கவிஞர் எப்படி படிச்சாரு. நீங்க எல்லாத்தையும் ரைட் சைடல போட்டீங்க. கழுத்து வலி பிடிச்சிருச்சு

LEFT சைடுல மாத்திட்டேன்.. இப்ப சரிதானே வாத்தியார்.. கவிதைய எப்படி படிப்பாங்க.. வாயாலதான்... :icon_shades:

இதயம்
16-08-2007, 01:41 PM
கவிதைய எப்படி படிப்பாங்க.. வாயாலதான்... :icon_shades:

அடடா..! எப்படீங்க.. இப்படி...?!! யோசிச்சி பேசறீங்களா.. இல்லை தானா வருதா...?!!

அப்படியே தமிழர்களை கொல்லாமல் "கொள்" மாற்றி அவர்களை காப்பாற்றுங்கள்..!!:icon_shades:

ஓவியன்
16-08-2007, 08:43 PM
அடடா..! எப்படீங்க.. இப்படி...?!! யோசிச்சி பேசறீங்களா.. இல்லை தானா வருதா...?!!

ஆமா!
இன்று நீண்ட காலத்தின் பின்னர் நம்ம மன்மி கலக்கோ கலகென்று கலக்கிட்டாரில்லே − இது தொடர வேண்டும் என்பதே என் ஆசையும்...............:sport-smiley-018:

சுகந்தப்ரீதன்
26-08-2007, 04:28 AM
அகமிழந்தான்
பொருளிழந்தான்
ஆன்மாவை
விற்றுவிட்டான்
முகமிழந்தான்
தன்னுடைய
முகவரியையும்
இழந்துவிட்டான்
எனக்கு
வீடெங்கே
வினையெங்கே
எனக்கேட்டு நின்ற
ஏடெங்கே
எழுத்தெங்கே
இன உணர்வு
பெற்றிருந்த நாடெங்கே
வீடெங்கே
உன் புதல்வர்
கண்டிறிந்த
சூடெங்கே
சொரணை எங்கே
சொப்பனமாய் போனதோ

கவிக்கோவின் கனல்கக்கும் வரிகள்.....
நிஜம் சுடுகிறது...நினைத்து பார்க்கையில்...
எத்தனை எத்தனை இழப்பு என் அன்னைக்கு?
இருந்தும் இன்றைக்கும் மன்னிக்கிறாள்
தன்மாக்களை என்றைக்காவது மாறுவார்கள்
தன் மக்களாக என்ற தாய்மனப்பான்மையுடன்!

மன்மதனுக்கு என் நன்றிகள்....தொடரட்டும் உங்கள் சேவை...!

மன்மதன்
27-08-2007, 01:24 PM
அடடா..! எப்படீங்க.. இப்படி...?!! யோசிச்சி பேசறீங்களா.. இல்லை தானா வருதா...?!!

அப்படியே தமிழர்களை கொல்லாமல் "கொள்" மாற்றி அவர்களை காப்பாற்றுங்கள்..!!:icon_shades:

முந்தைய பின்னூட்டத்திலேயே சொல்லியிருக்கேன் இதயமே என் இதயமே....:grin: